Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சுதந்திர தினவிழா: டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்- பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 04 Aug 2014 11:22 PM PDT

இந்தியாவின் 67–வது சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடெங்கும் வருகிற 15–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று டெல்லியில் நடக்கும் பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்–மந்திரிகள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்கள்.

கடனை திருப்பி கொடுத்துவிட்டால் சோனியா, ராகுல் மீதான வழக்கை கைவிட தயார்: அருண் ஜெட்லி

Posted: 04 Aug 2014 11:16 PM PDT

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு டிரஸ்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகன் ராகுல் இருவரும் பல கோடி முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சோனியா, ராகுல் இருவருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறையும்

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க 122 யாத்ரீகர்களுடன் 40-வது குழு புறப்பட்டது

Posted: 04 Aug 2014 11:15 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கரடு முரடான மலைப்பாதை வழியாக பயணித்து,

காங்கிரசில் என் தந்தைக்கு கடும் எதிர்ப்புகள் இருந்தது: மன்மோகன்சிங் மகள்

Posted: 04 Aug 2014 11:10 PM PDT

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள் தமன்சிங். இவர் தன் பெற்றோர் ''மன்மோகன்சிங் அண்ட் குருசரன்'' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். மன்மோகன்சிங் பற்றி ஏராளமான தகவல்களை அந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:– எனது தந்தையை திடீரென ஒருநாள் நரசிம்ம ராவ் அழைத்தார். மறு நிமிடமே அவர் என் தந்தையை மத்திய நிதி மந்திரி ஆக்கினார். அப்போது மத்திய பட்ஜெட்டை தயார் செய்து தாக்கல் செய்ய என் தந்தைக்கு ஒரு மாதமே அவகாசம் கொடுக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

Posted: 04 Aug 2014 11:08 PM PDT

ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை ஆய்வுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ரெப்கோ 8 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்கோ 7 சதவீதமாகவும், சி.ஆர்.ஆர். 4 சதவீதமாகவும் தொடரும்

கலவர பூமியாக மாறிவிட்ட லிபியாவில் இருந்து 44 நர்சுகள் கேரளா திரும்பினர்

Posted: 04 Aug 2014 10:15 PM PDT

ஈராக்கில் சிக்கித் தவித்த இந்திய நர்சுகள் ஒருவழியாக கடந்த மாதம் பத்திரமாக தாய்நாடு திரும்பிய நிலையில், தற்போது உள்நாட்டு மோதலால் திணறி வரும் லிபியாவில் பணியாற்றும் கேரள நர்சுகளை பத்திரமாக தாய்நாட்டுக்கு அழைத்து வர சிறப்பு விமானம் ஒன்றினை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

திருப்பதி கோவிலில் 8 மாதங்களுக்கு பிறகு எளிதான தரிசனம்

Posted: 04 Aug 2014 09:59 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. இதனால் பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைத்தது. கால்நடையாக வந்த பக்தர்களும், ரூ.300 சிறப்பு கட்டண பக்தர்களும் நேரடியாக ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கூடத்தில் அவர்கள் தடுத்து தங்க வைக்கப்படவில்லை. மாலை வரை இதே நிலை நீடித்தது. தர்ம தரிசன பக்தர்கள் மட்டும் 11 கம்பார்ட்மெண்டுகளில் காத்து நின்றனர். என்றாலும் அவர்களும் 4 மணி நேரத்தல் தரிசனம் முடித்து திரும்பினர்.

இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத்துக்கு நோட்டீஸ்

Posted: 04 Aug 2014 09:50 PM PDT

'டர்ட்டி பாலிட்டிக்ஸ்' என்ற பெயரில் உருவாகி வரும் இந்திப் படத்தின் சுவரொட்டிகள் சமீபத்தில் நாடு முழுவதும் வெளியிடப்பட்டன. அவற்றில், தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் சுழல் விளக்குடன் கூடிய ஒரு காரின் மீது அமர்ந்திருக்கும் காட்சி பலரை திடுக்கிடவும், திரும்பிப் பார்க்கவும் வைத்தது.

உ.பி.க்கு வருண்காந்தி முதல்–மந்திரி ஆக வேண்டும்: மேனகா காந்தி விருப்பம்

Posted: 04 Aug 2014 09:40 PM PDT

உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் பாராளுமன்ற தொகுதியில் உள்ள தாகியா கிராமத்தில் பாரதீய ஜனதா பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அந்த தொகுதி எம்.பி.யான மத்திய மந்திரி மேனகா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– உத்திரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அப்போது தான் இந்த மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும். மாநிலத்தின் நலனுக்காக பா.ஜனதாவால் அதிகாரப்பூர்வமாக பணியாற்ற முடியும். அதிலும் வருண் காந்தி உத்திரபிரதேசத்தின் முதல் – மந்திரி ஆனால் சொல்லவே வேண்டாம். மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால் பிலிபித் தொகுதி மக்கள் நினைப்பது எல்லாம் நிறைவேறும். வருண் காந்தி பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். தொடர்ந்து 2–வது முறையாக எம்.பி. ஆகி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரது செயல்பாடுகள் மிகவும் திருப்தியாக உள்ளன.

தெலுங்கானாவின் முதல் சுதந்திர தின விழா: கோல்கொண்டா கோட்டையில் கொடியேற்றம்

Posted: 04 Aug 2014 09:27 PM PDT

ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் இந்திய சுதந்திர தின விழாவை எங்கே கொண்டாடுவது? என்பது தொடர்பாக அம்மாநில அரசு சில தினங்களாக ஆலோசித்து வந்தது. டெல்லி செங்கோட்டைக்கு நிகராக ஐதராபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கோல்கொண்டா கோட்டையில் சுதந்திர தின விழாவை கொடியேற்றத்துடன் கொண்டாடலாம் என்று முதல் மந்திரி

ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

Posted: 04 Aug 2014 08:47 PM PDT

புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் வரலாற்று பொக்கிஷங்கள் அடங்கிய ஒலி மற்றும் ஒளி அருங்காட்சியகத்தை சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி மாளிகையின் வரலாற்றை விவரிக்கும் காட்சிப்படம் ஒலி, ஒளி காட்சி அமைப்புகள் வழியாக திரையிடப்படும்.

மேற்கு வங்காளத்தில் ஜப்பான் மூளையழற்சி நோய் பலி எண்ணிக்கை 206 ஆக உயர்வு

Posted: 04 Aug 2014 08:42 PM PDT

மூளையழற்சி மற்றும் 'ஜப்பான் மூளையழற்சி' எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்காளம் மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. பாக்டீரியா கிருமிகளின் தொற்றால் ஏற்படும் ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தலைவலி, காய்ச்சல், சோர்வு, களைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த நோய் பரவுவதற்கு

சுஷ்மா சுவராஜுடன் தமிழக பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு

Posted: 04 Aug 2014 08:07 PM PDT

தமிழக பா.ஜனதா தலைவர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ், முன்னணி தலைவர்கள் இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, மோகன்ராஜுலு ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்தனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட

நான்கு வருடங்களுக்கு பின் ஒரே மேடையில் இணையும் முலாயம்-அமர் சிங்

Posted: 04 Aug 2014 04:50 PM PDT

சமாஜ்வாதி கட்சியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட அமர் சிங், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள ஒரு விழாவில் அக்கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுடனும், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுடன் ஒரே மேடையில் இணைந்து பங்கேற்க உள்ளார்

நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்

Posted: 04 Aug 2014 04:42 PM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள நாட்டில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாளத்துக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் சென்ற இந்திய பிரதமர், நரேந்திர மோடி தான். இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது

யு.பி.எஸ்.சி விவகாரம்: மோடியுடன் ராஜ்நாத், ஜிதேந்திர சந்திப்பு

Posted: 04 Aug 2014 04:16 PM PDT

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வுக்கு (சிசாட்) எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு

கர்நாடக மாநில அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

Posted: 04 Aug 2014 03:21 PM PDT

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு (கிருஷ்ணராஜ சாகர்) நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 34 ஆயிரத்து 617 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது

சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட சிண்டிகேட் வங்கி தலைவர் எஸ்.கே.ஜெயின் சஸ்பெண்ட்

Posted: 04 Aug 2014 02:33 PM PDT

சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான எஸ்.கே.ஜெயின், சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள்

மேகாலயாவில் மூளையழற்சி நோயால் ஏழு பேர் பாதிப்பு

Posted: 04 Aug 2014 02:13 PM PDT

'ஜப்பான் மூளையழற்சி' நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்க மாநிலத்தில் பலர் பலியாகி வருகின்றனர். இதுவரை அம்மாநிலத்தில் 121 பேர் பலியாகியுள்ள நிலையில் அதன் அண்டை மாநிலமான மேகாலயாவில் இந்நோயால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது

ம.பி.யில் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளம்: 7 பேர் பலி

Posted: 04 Aug 2014 12:55 PM PDT

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பக்தாரி சுற்றுலா தலத்தில் பாயும் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 11 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் 7 பேரின் உடல்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™