Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்!

Posted: 04 Aug 2014 09:36 PM PDT

gaza

gazaபாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 1800 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 7 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இம்மோதலில் 67 இஸ்ரேலியர்களும் பலியாகி இருக்கின்றனர். இந்நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேர யுத்தம் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் மற்றும் காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர்நேரப்படி அதிகாலை 8 மணி முதல் 72 மணி நேரத்துக்கு இந்த யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டாலும் அதையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட போது, இஸ்ரேல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. எனினும் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் போர் நிறுத்தம் தொடர்பான முடிவை எவ்வித நிபந்தனையுமின்றி தாங்கள் ஒப்புக்கொள்ள தயார் என இஸ்ரேல் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே போல் ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளரான சமி அபு சுக்ரி, எகிப்து முன்வைத்த யோசனையை தாங்களும் ஏற்பதாக தெரிவித்தார். எகிப்து அதிகாரிகளும் இந்த 72 மணி நேர யுத்த நிறுத்தத்தை உறுதிப்படுத்தினர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிந்தவிற்கு சொன்ன இரகசியம்! நிறைவேற்றுகிறது சீனா!

Posted: 04 Aug 2014 09:30 PM PDT

Rajabaksa

Rajabaksaசீனாவுடன் நெருங்கிய உறவை பேணும் இலங்கை அரசாங்கம், திருகோணமலையில் அமைந்துள்ள சீனன்குடாவின் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்க்க தயாராகி வருவதாக கடந்த வாரம் பரவரலாக பேசப்பட்டு வந்தது.

இது பற்றிய திறந்த ஆய்வொன்றை கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியினூடாக பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறிய கருத்துக்களில்,சீனன்குடா விவகாரம் இலங்கையின் வரலாற்றை மாற்றியெழுதப் போகும் சம்பவங்களின் அணிவகுப்பில் ஒரு அங்கமே தவிர.

இதுவே முழுமையாக இலங்கையை மாற்றப் போகும் விடயமல்ல.

சர்வதேசத்தின் பிடியிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இலங்கை சீனாவையும் இந்தியாவையும் வளைத்துப் போடுகின்ற செயற்பாட்டின் ஒரு அங்கமாக, சீனாவின் பிரசன்னத்தை நிரந்தரமாக்குவதன் ஒரு அங்கமாக இந்த சீனன்குடா விவகாரத்தைக் கூறலாம்.

சீனாவின் எப்-7 என்ற சண்டை விமானங்கள் 12ம், இலகு ரக வான்படை போக்குவரத்து விமானங்கள் 21ம், ஆக மொத்தம் 33 விமானங்கள் தற்போது இலங்கையின் பாவனையில் இருக்கிறது. இவற்றை திருத்துவதற்கான நிலையம் என்று கூறியே இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இந்தியா, சம்பூர் அனல் மின்நிலையம், மற்றும் திருமலைத் துறைமுகத்திலுள்ள எண்ணெய் தாங்கிகளில் 15 என திருமலை மாவட்டத்தில் முதலிட்டுள்ளது. எனவே இந்தியாவை பொறுத்தவரை இந்த சீன விமானப் பாராமரிப்புக் குறித்து அக்கறை செலுத்தாது.

இலங்கையில் 2009ம் ஆண்டு போர் முடிவுற்றதில் இருந்து இன்றைய திகதிவரை சீனா 16 ஆயிரம் மில்லியன் டொலர்களை பல திட்டங்களில் நீண்ட கால அடிப்படையாக முதலிட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம், விமான நிலையம் அமைத்தல், பெருந்தெருக்கள் போடுதல் போன்றவையும் இத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

1973ல் எதிர்காலத் தலைவர்கள் என அடையாளம் காணப்பட்ட 10 பேரை சீனா அழைத்தது. அந்தக் குழுவிற்கு மகிந்த ராஜபக்சவே தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தியிருந்தார்.

சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து தங்களது நாட்டின் வளர்ச்சி மற்றும் உலக அரங்கில் தங்கள் நாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்வுகூறல் உள்ளிட்ட இதுவரை ஊடகத்தின் பார்வைக்கு வராத முக்கிய விடயங்களை இந்த நிஜத்தின் தேடல் ஆய்வு நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அகதிகள் சமவாயத்திற்கு தவறான விளக்கம்: மொரிசன் குற்றச்சாட்டு!

Posted: 04 Aug 2014 09:27 PM PDT

morrison

morrisonஅகதிகள் சமவாயத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் விளக்கத்தினை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் விமர்சித்துள்ளார். அகதிகள் சமவாயத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவின் மீது விதிக்கப்படும் கடப்பாடுகளை நீக்க வேண்டுமெனக் கோரி அமைச்சர் மொரிசன் வழக்குத் தொடுத்துள்ளார். இதன்போது, அடுக்கடுக்கான புதிய கடப்பாடுகளை நீதிமன்றம் விதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்கடத்தல்காரர்கள் அகதிகள் சமவாயத்தை தமக்கு சாதமாக பயன்படுத்தி மரணப் பயணங்களை நடத்துகிறார்கள் என்று அவர் கூறினார். நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுங்கக் கப்பலில், இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேர் கடுமையாக நடத்தப்பட்டார்கள் என்று சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் குடிவரவு அமைச்சரின் கருத்து வெளியாகிறது. தம்மை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஸ்கொட் மொரிசன் இந்திய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சமயம், தாம் நாள் முழுவதும் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரு வார காலம் தமக்கு உடைமாற்றக் கூட அனுமதிக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த மொரிசன், இங்கு பிரச்சனையாக இருப்பது அகதிகள் சமவாயம் அல்ல. அதற்கு சட்டத்தரணிகள் பொருள்கோடுக்கும் விதம் தான் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.நா விசாரணைக் குழுவில் 30 பேர் சாட்சியம்!

Posted: 04 Aug 2014 09:20 PM PDT

skype

skypeஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில், இலங்கையைச் சேர்ந்த 30 பேர் வரையில் சாட்சியமளித்துள்ளனர். போர்க்குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினரிடம் இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாட்சியமளித்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாட்டில் வாய்மொழி மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அவசர அவசரமாக இலங்கையர்களிடமிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் அடுத்த வாரம் லண்டன் விஜயம் செய்து சாட்சியங்களை திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விரலை காட்டிய ஆலியா பட்: மூச்சடைத்து போன தனுஷ்!

Posted: 04 Aug 2014 05:10 AM PDT

alia-bhat-dhanush

alia-bhat-dhanushவேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் நடிக்க ஆலியா பட் ரூ.3 கோடி சம்பளம் கேட்டதால் தனுஷ் அதிர்ந்து போனாராம்.

பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோயினாகிவிட்டார் ஆலியா பட்.

பலரின் தூக்கத்தை கலைக்கும் ஆலியா பட்டை கோலிவுட்டில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் ஆலியாவை தனது அனேகன் படத்தில் நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார் ஆலியா.

இந்நிலையில் தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தி ரீமேக்கில் தனுஷே நடிக்கிறாராம். இந்தியில் அமலா பால் கதாபாத்திரத்தில் ஆலியா பட்டை நடிக்க வைக்க நினைத்துள்ளார் தனுஷ்.

இதையடுத்து ஆலியாவை அணுகி விவரத்தை கூற அவரோ நான் நடிக்க ரெடி ஆனால் என் சம்பளம் ரூ. 3 கோடி மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

ஆலியா கூறிய தொகையை கேட்டு தனுஷுக்கு தலை கிறுகிறுத்துவிட்டதாம். பாஸ், பாலிவுட்டில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடவே கோடிக் கணக்கில் சம்பளம் கேட்பார்கள்.

பாலிவுட்டில் நடித்து வரும் போதிலும் இது தனுஷுக்கு தெரியாமல் போய்விட்டதே.

This posting includes an audio/video/photo media file: Download Now

தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் – விஜய், சூர்யா பங்கேற்பு!

Posted: 04 Aug 2014 05:06 AM PDT

vijay-in-proteeat

vijay-in-proteeatதமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தனர். உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை! தேசப் பிதா என்றால் காந்தி பெரியார் என்றால் ஈவெரா அம்மா என்றால் எங்க முதல்வர்தான்! இவ்வாறு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை வைத்துக் கொண்டு, ஒரு பந்தலில் அமர்ந்திருந்தனர் திரையுலகப் பிரமுகர்கள். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், சீமான், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கலைப்புலி தாணு, டி சிவா, மனோபாலா, நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகுமார், ராஜேஷ் உள்பட பலரும் பங்கேற்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜப்பானின் புதிய ரஜினிகாந்த் ஆன நடிகை ஸ்ரீதேவி!

Posted: 04 Aug 2014 04:58 AM PDT

sridevi

srideviபட வசூலில் ஜப்பானின் புதிய ரஜினிகாந்த் நடிகை ஸ்ரீதேவி தான். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து குழந்தை குடும்பம் என்று இருந்த ஸ்ரீதேவி பல ஆண்டுகள் கழித்து இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் ரீஎன்ட்ரி செய்தார். இந்தியில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ், தெலுங்கிலும் வெளியிடப்பட்டது. ஆங்கிலம் தெரியாமல் கணவன் மற்றும் குழந்தைகள் முன்பு அசிங்கப்பட்டு பின்னர் ஆங்கிலம் கற்று அவர்களை அசத்தும் மனைவியாக ஸ்ரீதேவி நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. பல ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி நடிக்க வந்தபோதிலும் அவரது முதல் படமே இப்படி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது பல சீனியர் இந்தி நடிகைகளுக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தியது. இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் ஜப்பான் மொழியில் ஜப்பானில் வெளியிடப்பட்டது. படம் ஸ்ரீதேவி நினைத்து பார்க்காத அளவுக்கு ஹிட்டாகியுள்ளது. ஜப்பானில் ஸ்ரீதேவியின் படம் ரிலீஸான முதல் வாரத்தில் மட்டும் ரூ. 2 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்து 351 வசூல் செய்துள்ளது. கடந்த 28ம் தேதி ஜப்பானில் வெளியிடப்பட்ட இங்கிலிஷ் விங்கிலிஷ் 33 தியேட்டர்களில் ஓடுகிறது. ஜப்பானில் ஒரு இந்திய நடிகரின் படம் வசூலில் சக்கை போடு போடும் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தான். தற்போது இங்கிலிஷ் விங்கிலிஷ் ஜப்பானில் நல்ல வசூல் செய்துள்ளதால் ஜப்பானின் புதிய ரஜினியாக ஸ்ரீதேவி உருவெடுத்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நகைச்சுவை ட்ராக்கிலிருந்து ஆக்ஷனுக்கு தாவிய ஆர்யா!

Posted: 04 Aug 2014 04:53 AM PDT

actor-arya

actor-aryaசில ஆண்டுகள் வரை காதல் ரோமியோவாக வந்து கொண்டிருந்த ஆர்யா, ஒரு மாறுதலுக்கு ஆக்ஷனில் இறங்குகிறார் மீகாமனில். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார்.

'மீகாமன்' கடல் சார்ந்த படம் என்பதால், படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் மற்று கடல் சார்ந்த இடங்களில்தான்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஒரு படத்தில் ஹீரோவுக்கு சரிக்கு சமமாக ஒன்று அல்லது இரண்டு வில்லன்களிருப்பார்கள்.

ஆனால் மீகாமனில் நிலைமை வேறு. இதில் ஏழு வில்லன்களுடன் ஆர்யா மோத வேண்டும். இந்த ஆக்ஷன் காட்சிகளுக்காக முன்கூட்டியே ஒத்திகைப் பார்த்துக் கொள்கிறாராம் ஆர்யா.

கடும் உடற்பயிற்சி, முடிந்தவரை காரைத் தவிர்த்துவிட்டு சைக்கிளில் செல்வது என ரொம்ப மெனக்கெடுகிறாராம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மீன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்ததுண்டா?

Posted: 04 Aug 2014 04:48 AM PDT

Smoking-Fish

Smoking-Fish

This posting includes an audio/video/photo media file: Download Now

அந்தரத்தில் பறந்த பெண்!…. அதிர்ச்சியில் உறைந்த நடுவர்கள்!

Posted: 04 Aug 2014 04:45 AM PDT

Stevie-Pink-master-illusionist-takes-to-the-stage

Stevie-Pink-master-illusionist-takes-to-the-stage

This posting includes an audio/video/photo media file: Download Now

நீரில் மூழ்கி இறந்த மனிதர்: எலும்புக்கூடாக மாற்றிய மீன்

Posted: 04 Aug 2014 04:40 AM PDT

Drowned-Man-Found-Eaten-by-Piranhas

Drowned-Man-Found-Eaten-by-Piranhas

This posting includes an audio/video/photo media file: Download Now

மனைவியை கொன்ற கணவன்: கொலைகாரனை கட்டியணைத்து முத்தமிட்ட போலிஸ்!

Posted: 04 Aug 2014 04:37 AM PDT

Jyoti-murder-case-Kanpur-cop-transferred-for-kissing-accused

Jyoti-murder-case-Kanpur-cop-transferred-for-kissing-accused

This posting includes an audio/video/photo media file: Download Now

வாழை இலையும்… அதன் மகத்துவமும்!

Posted: 04 Aug 2014 03:51 AM PDT

bananaleaffood

bananaleaffood'வாழையடி வாழையாய் வாழ்வுதனை வாழ்ந்திருப்போம்' என்று நீடூழி வாழ்வதற்கு உதாராணமாய் வாழை மரத்தை சொல்வார்கள். புனிதமான இந்த மரத்தின் மையத்தில் உள்ள தண்டு நீளமானதாக இருக்கும். இந்து மத கலாச்சாரத்தின் படி, மக்கள் வாழை இலையில் உணவருந்துவது வழக்கம். திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் என பல்வேறு இடங்களில் பயன்படுத்தும் இலையாக வாழை இலை உள்ளது. வீட்டின் முற்றத்திலும், பின் பகுதியிலும் வாழை மரத்தை நட்டு வளர்ப்பது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. வாழை இலை சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் உள்ளது. உணவை கட்டி வைக்க வேண்டிய தருணங்களில், ஒரு பிளாஸ்டிக் பேப்பரைப் போலவும் மற்றும் அலுமினிய காகிதம் போலவும் வாழை இலை செயல்படுவதால், உணவு காய்ந்து போவதும், சூடு குறைந்து போவதும் தவிர்க்கப்படுகிறது. ஒரு வாழை இலையை தரையில் விரித்து, அதில் நீங்கள் தட்டு அல்லது விரிப்பில் போடுவதைப் போல உணவைப் பரிமாற முடியும். உணவு கெட்டுப் போகாமல் இருக்கவும், சூடு குறையாமல் இருக்கும் கவசமாகவும் பயன்படுத்தும் வாழை இலை, இயற்கையான முறையில் மக்கும் பொருளாகவும் உள்ளது. இந்த மரத்தின் பகுதிகள் அனைத்துமே ஏதாவதொரு வகையில் பயனுள்ளதாக உள்ளன. இம்மரத்தின் மையத்தில் உள்ள தண்டை சாப்பிடலாம். வாழைப்பூவையும் வேக வைத்து சாப்பிடலாம். இலை மற்றும் தண்டினை இந்தியாவின் சில பகுதிகளில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துகிறார்கள். வாழை நாரிலிருந்து கயிறுகள், விரிப்புகள், கடினமான ஃபான்ட் பேப்பர்கள் மற்றும் காகிதக் கூழ் அகியவை தயாரிக்கப்படுகின்றன. வாழை இலையில் பரிமாறப்படும் உணவு ஆரோக்கியமான உணவாகும். சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது, இலையின் முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் உணவு இழுத்துக் கொண்டு விடும். அதேபோல, வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். வாழை இலையில் உணவருந்துவதால், இளைஞர்களுக்கு உள்ள இளநரையை போக்க முடியும். வாழை இலையில் தொடர்ந்து உணவருந்தி வந்தால், இளநரை மறைந்து, கருப்பு முடிகள் வளரத் துவங்கும். எபிகால்லோகேடெசின் கேல்லெட் என்றழைக்கப்படும் பாலிபினைல்கள் பெருமளவில் கொண்டுள்ளதாக வாழை இலை உள்ளது. இந்த சத்து கிரீன் டீயிலும் உள்ளது. பாலிஃபீனைல் என்பது செடியாக வளரும் உணவுகளில் உள்ள இயற்கையான ஆக்சிஜன் எதிர்பொருளாகும். வாழைப்பழத்தை அப்படியே அல்லது சமைத்தோ சாப்பிடலாம். வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வருவது தவிர்க்கப்படும் மற்றும் இரத்தமும் சுத்திகரிக்கப்படும். கனவுகளில் வாழைப்பழம் சாப்பிட்டால், தொழில் கூட்டுறவுகளில் இலாபம் கிடைக்கும். ஒரு வியாபாரத்தில் இருக்கும் மனிதரின் கனவில் வாழை மரம் வந்தால், அது லாபத்தையும் மற்றும் பக்தியையும் மற்றும் சந்நியாசத்தின் மீதுள்ள பற்றையும் குறிக்கும். நோயாளியான ஒரு மனிதரின் கனவில் வாழை மரம் வந்தால், அவருடைய நோய் அதிகரித்துள்ளது அல்லது மரணத்தை தழுவுவார் என்று அர்த்தமாகும்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆதரித்துக் குரல் கொடுக்கும் பிரபல விளையாட்டு வீரர்கள்!

Posted: 04 Aug 2014 03:44 AM PDT

kabaddi

kabaddiநாட்டின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான கபடியைப் பிரபலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாக பழம்பெரும் வீரர்கள் தெரிவித்துள்ளனர். எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட்தான். இது பெரும் சர்ச்சையாகவும் பல சமயங்களில் வெடிப்பதுண்டு. இப்போதுதான் கிரிக்கெட்டைத் தாண்டி டென்னிஸ், பேட்மிண்டன், செஸ் போன்ற விளையாட்டுக்களை மக்கள் ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் கபடி விளையாட்டையும் நாடு முழுவதும் பிரபலப்படுத்தி அதை ஊக்குவிக்க வேண்டும் என்று பல்துறையைச் சேர்ந்த வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புரோ கபடி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது புரோ கபடி லீ்க் என்பது அதன் பெயர். ஐபிஎல் போல இது கபடிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிகேஎல்லில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதை பிரபல விளையாட்டு விமர்சகரும், வர்னணையாளரும், மஷால் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநருமான சாரு சர்மா நிர்வகிக்கிறார். இந்த எட்டு அணிகளும் 60 போட்டிகளில் ஆடவுள்ளன. இதில் முதல் நான்கு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெறும் அரை இறுதிப் போட்டியில் மோதும். இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகள் விவரம் - யுனைட்டெட் மும்பை, பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பல்தான், பாட்னா பைரேட்ஸ். பிரபல கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா கூறுகையில், எனக்குக் கபடி பிடிக்கும். அது விறுவிறுப்பான விளையாட்டு. கல்லூரி அளவில் நான் விளையாடியுள்ளேன். சுவாரஸ்யமான விளையாட்டு இது. இந்தியாவில் அதைப் பிரபலப்படுத்தினால் நல்லது என்றார். பிகேஎல் ஆரம்பித்ததெல்லாம் சரி.. ஆனால் தமிழகத்துக் கிராமங்களில் இன்றளவும் வீர விளையாட்டு போல கருதி வாலிபர்கள் விளையாடி வரும் கபடிக்கு, இந்த பி.கே.எல்லில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லையே.. தமிழகத்தின் பெயரில் அணி கூட ஏற்படுத்தவில்லையே.. என்ன காரணம் சர்மா...?

This posting includes an audio/video/photo media file: Download Now

20வதுகாமன்வெல்த் போட்டி: ஐந்தாவது இடத்துடன் இந்தியா திருப்தி!

Posted: 04 Aug 2014 03:39 AM PDT

kashyap-parupalli

kashyap-parupalliஸ்காட்லாந்தில் நடந்த 20வது காமன்வெல்த் போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன்  கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ம் தேதி 20வது காமன்வெல்த் போட்டிகள் துவங்கியது. இங்கிலாந்திடன் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. சுமார் 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் முடிவில், 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் என மொத்தமாக 174 பதக்கங்களை குவித்த இங்கிலாந்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஆஸ்திரேலியா மொத்தம் 137 பதக்கங்களை வென்று இடண்டாவது இடத்தை பிடித்தது. இதில், 49 தங்கம், 42 வெள்ளி, 46 வெண்கலம் அடங்கும். கனடா 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கல பதங்கங்களுடன் மொத்தம் 82 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தையும் பெற்றது. இதுவரை ஸ்காட்லாந்தில் நடக்கதாக அளவிற்கு சிறப்பாக கடந்த 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் நிறைவு விழா, நேற்று ஹாம்டன் பார்க் மைதானத்தில் மிகவும் வண்ணமயமாக நடந்தது. சுமார் 40,000 ரசிகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் 15,000 தன்ஆர்வலர்கள், 1,500 பணியாளர்கள், 30,000 ஒப்பந்ததாரர்கள், 1,800 காவலர்கள் என அனைவரும் மைதானத்தில் வரிசையாக நுழைந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இப்போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. வரும் 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடத்தப்படுவதை தெரிவிக்கும் விதத்தில் காமன்வெல்த் போட்டியில் பயன்படுத்தப்பட்ட கொடி ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பாப் பாடகி மினோக்கின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இறுதியாக ஸ்காட்லாந்து பாப்பாடகி லுாலுா அந்நாட்டின் 'சூட்' பாடலை பாட ரசிகர்கள், பணியாளர்கள், வீரர், வீராங்கனை என அனைரும் மைதானத்தில் நடனமாட மைதானத்தின் வெளியே வண்ணமயமாக வாணவேடிக்கையுடன் விழா கோலாகலமாக முடிவடைந்தது. காமன்வெல்த்தில் இந்தியா 64 பதக்கங்களை வென்று 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம். இந்தியாவில் இருந்து மொத்தம் 215 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வாரி குவித்து முதல் முறையாக 2வது இடத்தை பெற்றது.  

This posting includes an audio/video/photo media file: Download Now

போதைக்கு அடிமையாகி பிறக்கும் இங்கிலாந்து குழந்தைகள் – அதிர்ச்சித் தகவல்

Posted: 04 Aug 2014 03:09 AM PDT

yawning-baby

yawning-babyகருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்குவதாகவும், இதனால் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாகவும் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. பொதுவாக கருவுற்றிருக்கும் பெண்கள் சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுவதுண்டு. ஆனால், சில நாடுகளில் கர்ப்பிணிகள் தங்களது உடற்சூட்டை கருத்தில் கொண்டு மது அருந்துகின்றனர். ஆனால், மேலும் சிலரோ போதைக்காக மது அருந்துகின்றனர். இவ்வாறு கர்ப்பிணிகள் அருந்தும் மது வயிற்றில் உள்ள குழந்தைகளை போதைக்கு அடிமையாக்குவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் மது அருந்தும் கர்ப்பிணிகள் குறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே போதையின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. கருவுற்ற நிலையில் இந்த குழந்தைகளின் தாய்கள் ஹெராயின், கொக்கைய்ன் போன்ற கொடிய போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததால், எந்தப் பாவமும் அறியாத அப்பாவி குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த போதைப் பழக்கம் பரவி விடுவதாக அந்த ஆய்வு கூறுகின்றதுதெரிவித்துள்ளது. பெண்களின் கொடிய போதைப் பழக்கம் அவர்களை மட்டுமின்றி, அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாழ்படுத்தி விடுவதாக அந்த ஆய்வு கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இவ்வாறு போதைக்கு அடிமையாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,800 என அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வேல்ஸ் மாகாணத்தில் 464 குழந்தைகளும், ஸ்காட்லாந்தில் 738 குழந்தைகளும், இங்கிலாந்தில் 6,599 குழந்தைகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்துள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மலையை விலைபேசிய லட்சுமி மிட்டல்…. இங்கிலாந்தில் எதிர்ப்பு வலுக்கிறது!

Posted: 04 Aug 2014 03:06 AM PDT

04-1407132526-lakshmi-mittal-600

04-1407132526-lakshmi-mittal-600இங்கிலாந்தில் உள்ள 2,850 அடி உயர பிலென்கத்ரா மலையை தனியாருக்கு விற்க அந்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் இயற்கை எழில் சூழ்ந்த மாகாணங்களுள் ஒன்றான கும்பிரியாவின் லேக் மாவட்டத்தில் காணப்படுகிறது 2,850 அடி உயர பிலென்கத்ரா மலை. இது அரசகுடும்பத்தின் லோன்ச்டலே பிரபுவுக்கு சொந்தமானது. கடந்த 2006ஆம் ஆண்டு லோன்ச்டலே இறந்த பிறகு, அவரது சொத்துக்களுக்கு வாரிசு அரசுக்கு தான் செலுத்த வேண்டிய 9 மில்லியன் பவுண்டு வரி பாக்கிக்காக இம்மலையை விற்க முடிவெடுத்தார். 2,676 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைக்கான விற்பனை விலையாக 1.75 மில்லியன் பவுண்டு நிர்ணயிக்கப்பட்டது. மலையை விற்பனை குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. பல எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் ஊக்குவிப்பு சக்தியாக இருந்துள்ள இந்த மலைப்பகுதி தனியார்வசம் சென்றால் உயரடுக்கு செல்வந்தர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிடக்கூடும் என்ற அச்சம் விளம்பரத்தைக் கண்ட உள்ளூர் மக்களுக்கு உண்டானது. மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது 'பிலென்கதரா நண்பர்கள் அமைப்பு'. இம்மலை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டு சமூக சொத்தாக மாற்றப்படவேண்டும் என இந்த இயக்கம் வலியுறுத்தியது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எச்-எச் சொத்து விற்பனை நிறுவனரான ஜான் ராப்சன் இதற்கான ஒரு விற்பனை வாய்ப்பும் வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். பின்னர், இந்த மலையை வாங்குவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தவர் இந்தியத் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் என்பதுவும், நிர்ணயிக்கப்பட்டுள்ள விற்பனைத் தொகையைவிடக் கூடுதலாக அவர் கேட்டிருப்பதுவும் வெளிச்சத்திற்கு வந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

Posted: 04 Aug 2014 01:24 AM PDT

Pavithra_vanniyaaraadsi

Pavithra_vanniyaaraadsiநாட்டுக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச சதித்திட்டங்களை தோற்கடித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த பெண்கள் ஒரு சக்தியாக அணித்திரண்டு வருவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எகலியகொட நகரில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அனைத்து பெண்களின் கைகளில் நாட்டின் உண்மையான தேசிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 30 வருடங்களாக இருந்து வந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் சந்தர்ப்பத்தில், நாட்டை மீண்டும் பின்நோக்கி நகர்த்த தேசிய மற்றும் சர்வதேச சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இலங்கை பெண்கள் இந்த சதித்திட்டங்களுக்கு எதிராக முன்னோக்கி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் தேசத்தை காப்பற்றி கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்துவது பெண்கள் கடமையாகும். 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை கடலிலும், நான்கில் மூன்று பகுதியை விடுதலைப் புலிகளுக்கும் எழுதி கொடுத்தார். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே மாற்றி அமைத்தார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவின் அழுத்தம்! இலங்கையிலிருந்து வெளியேறினார் பாக். அலுவலர்

Posted: 04 Aug 2014 01:19 AM PDT

pak_embassy

pak_embassyஇந்தியாவின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் கடமையாற்றிய வீசா அலுவலர் பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தூதரகங்களை வேவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டார. இந்தநிலையில் இவர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் வீசா அலுவலர் அமிர் சுபைர் சித்தீக்கின் வழிகாட்டலியே செயற்பட்டதாக இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது. இந்த அலுவலர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு பிரிவுக்காக பணியாற்றுகிறார் என்றும் இந்தியா குற்றம் சுமத்தியது. இறுதியாக 20 அம்சங்களை கோடிட்டு அது தொடர்பில் விபரங்களை தருமாறு இலங்கையிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அதில் தென்னிந்தியாவில் கைது செய்யப்பட்டவர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இந்தியாவுக்கு அடிக்கடி வந்துசென்றமை குறித்த தகவல்களை இந்தியா கோரியுள்ளது. இந்தநிலையிலேயே சித்தீக், பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக ஆளும்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி!

Posted: 04 Aug 2014 01:14 AM PDT

Lal-kantha

Lal-kanthaஅரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பலைகள் வலுப்பெற்றுள்ளதாக ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் உறுதியான திகதிகள் எதனையும் அறிவிக்கவில்லை. மக்கள் நன்மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்து செல்வதனால் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. எனினும், தற்போதைய ஜனாதிபதி முறைமையின் கீழ் நான்கு ஆண்டுகளில் ஜனாபதித் தேர்தலை நடாத்துவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அரசாங்கத்தை வெறுத்துள்ள காரணத்தினாலேயே ஆறு ஆண்டுகள் ஆட்சி நடாத்த வேண்டிய அரசாங்கத்திடம், நான்கு ஆண்டுகளிலேயே தேர்தல் நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் அதிகளவான அரசியல்வாதிகள் ராஜபக்ச ஆட்சி நாட்டில் தொடர்வதனை விரும்பவில்லை. தேசிய சுதந்திர முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சி குறித்து நேரடியாக அதிருப்தி வெளியிட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இனவாத அரசியலை முன்னெடுத்த காரணத்தினால் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவினை ஏற்கனவே இழந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவது அரசாங்கத்திற்கு பாதக நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும். அதிகாரங்களை குறைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது குறித்து ஏனைய கட்சிகளுடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் என லால்காந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™