மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- செம்மரக் கொள்ளையை தடுக்க திருப்பதி வனப்பகுதி முழுவதும் சேட்டிலைட் மூலம் கண்காணிப்பு
- டிரைவர் செல்போனில் பேசியவாறு ஓட்டியதால் விபத்து: போக்குவரத்து போலீஸ்காரரை 1 கி.மீ. தூரம் இழுத்துச் சென்ற கார்
- திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்
- ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு: சுதந்திர தினவிழாவில் மோடி அறிவிப்பு
- சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
- ஆந்திர பிரிவினைக்கு பின் சுதந்திர தின விழா சந்திரபாபு நாயுடு கர்னூலில் கொடி ஏற்றினார்
- சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் முதல் முறையாக மோடி தேசிய கொடி ஏற்றுகிறார்
- தமிழக மீனவர்களுடன் அவர்கள் படகும் ஒப்படைக்க மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
- ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது குறித்து தந்தை பெருமிதம்
- மழை பெய்தாலும் குடை வேண்டாம் என்று மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடி
- சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிப்பு
- மராட்டியத்தின் அடுத்த முதல்–மந்திரி யார்? உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு
- ஐந்து மாத சம்பளத்தை திருப்பி அனுப்பிய டெல்லி காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- மலேரியா தாக்கம்: லைபீரிய மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்ட இந்தியர் சாவு
- மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 கட்டணம்: ரிசர்வ் வங்கி
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் 80 சதவீதம் குறைந்துள்ளது: உமர் அப்துல்லா
- உ.பி.யில் ஆளில்லா ரெயில்வே கேட்டில் கார் மீது ரெயில் மோதல்- 4 பேர் பலி
- வாக்களிப்போர் சதவிகிதம் உயர்ந்துள்ளது நாட்டின் ஜனநாயகத்தை பறைசாற்றுகிறது: பிரணாப்
- ராகுல் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் - வெங்கையா நாயுடு சூசக பேச்சு
- நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்தனர்: சபாநாயகர் மகிழ்ச்சி
| செம்மரக் கொள்ளையை தடுக்க திருப்பதி வனப்பகுதி முழுவதும் சேட்டிலைட் மூலம் கண்காணிப்பு Posted: 14 Aug 2014 10:44 PM PDT திருப்பதி வனப்பகுதியில் சிவப்பு சந்தனம் என அழைக்கப்படும் செம்மரம் செழித்து வளர் கிறது. செம்மரக் கட்டைகளுக்கு உலக அளவில் நல்ல கிராக்கி இருப்பதால் அதனை திருட்டுத்தனமாக வெட்டி கடத்தி வருகிறார்கள். கடத்தல்காரர்களை என்கவுண்டர் மூலம் சுட்டு வீழ்த்தினாலும் கடத்தல் தொழில் தங்கு தடையின்றி நடக்கிறது. |
| Posted: 14 Aug 2014 10:36 PM PDT டிரைவர் செல்போனில் பேசியவாறு ஓட்டியதால் கார் போக்குவரத்து போலீஸ்காரர் மீது மோதி அவரை 1 கி.மீ. தூரம் இழுத்துச் சென்றது. வாகனம் ஓட்டுவோர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது என்பது விதி. ஆனால் நாடு முழுவதும் பெரும்பாலான டிரைவர்கள் இதை பொருட்படுத்தாமல் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் |
| திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் Posted: 14 Aug 2014 10:22 PM PDT ஆந்திராவில் இந்த மாதம் பல முகூர்த்த நாட்கள் இருந்தாலும் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய 4 நாட்கள் சிறந்த முகூர்த்த நாட்களாக தெலுங்கு மக்களால் கருதப்படுகிறது. அதுவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதாலும், மாத சுத்த சதுர்த்தசி மற்றும் ரேவதி நட்சத்திரம் கூடி வருவதால் அதிர்ஷ்டகரமான முகூர்த்த நாளாக மக்கள் கருதுகிறார்கள். |
| ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு: சுதந்திர தினவிழாவில் மோடி அறிவிப்பு Posted: 14 Aug 2014 10:15 PM PDT இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் மிகவும் உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் காலை 7 மணிக்கு சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். காலை 7.20 மணிக்கு செங்கோட்டைக்கு பிரதமர் நரேந்திர |
| சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு Posted: 14 Aug 2014 10:14 PM PDT பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் சபரிமலையில் திரளான பக்தர்கள் திரண்டு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும் ஓணம், சித்திரைவிசு மற்றும் பங்குனி உத்திர திருவிழாக்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (16–ந் தேதி) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி மகேஷ்மோகனரரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து |
| ஆந்திர பிரிவினைக்கு பின் சுதந்திர தின விழா சந்திரபாபு நாயுடு கர்னூலில் கொடி ஏற்றினார் Posted: 14 Aug 2014 10:06 PM PDT ஒருங்கிணைந்த ஆந்திரா தெலுங்கானா, சீமாந்திரா என 2 மாநிலமாக பிரிந்த பிறகு அம்மாநில மக்கள் முதல் சுதந்திர தின விழாவை இன்று உற்சாகமாக கொண்டாடினார்கள். ஆந்திர அரசு சார்பில் கர்னூல் ஏ.பி.எஸ்.பி. மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடு தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 1953–ம் ஆண்டு அக்டோபர் 1–ந்தேதி தமிழ்நாட்டில் இருந்து பிரிந்து ஆந்திர பிரதேசம் தனி மாநிலமாக உதயமானது. தனி மாநில |
| சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் முதல் முறையாக மோடி தேசிய கொடி ஏற்றுகிறார் Posted: 14 Aug 2014 03:42 PM PDT இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அவர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவது இதுவே முதல் தடவை ஆகும். |
| Posted: 14 Aug 2014 03:06 PM PDT சுதந்திரதினத்தையொட்டி இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று அறிவித்தார். இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை, தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார். |
| ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது குறித்து தந்தை பெருமிதம் Posted: 14 Aug 2014 02:29 PM PDT இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டுக்காக வீரதீர செயலாற்றிய, சிறந்த சேவையாற்றிய ராணுவ வீரர்களுக்கான ஜனாதிபதி விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை அறிவித்தார். இதில் வீரதீர செயலுக்கான மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பின்னர் இந்த விருது வழங்கப்படுகிறது. |
| மழை பெய்தாலும் குடை வேண்டாம் என்று மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடி Posted: 14 Aug 2014 01:51 PM PDT சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக டெல்லி செங்கோட்டையில் உரையாற்றுகிறார். எந்த குறிப்புகளும் எடுத்துக்கொள்ளாமல் பேச உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அநேகமாக சுதந்திர தின உரையை எந்த குறிப்புகளும் இல்லாமல் பேசும் பிரதமராக மோடிதான் இருப்பார். |
| சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிப்பு Posted: 14 Aug 2014 12:12 PM PDT சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகளை அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த விருது பெறும் அதிகாரிகள் விவரம் வருமாறு:- சென்னை தெற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ஆபாஷ் |
| மராட்டியத்தின் அடுத்த முதல்–மந்திரி யார்? உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு Posted: 14 Aug 2014 10:43 AM PDT சிவசேனாவை சேர்ந்தவர் தான் மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்–மந்திரியாக இருப்பார் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளனார். மும்பையில் பால் தாக்கரே தொடங்கி வைத்த மார்மிக் இதழின் 54–ம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசுகையில், ''வரும் சட்டமன்ற தேர்தலின் |
| ஐந்து மாத சம்பளத்தை திருப்பி அனுப்பிய டெல்லி காங்கிரஸ் எம்.எல்.ஏ. Posted: 14 Aug 2014 07:35 AM PDT டெல்லி சட்டசபை தேர்தலின்போது பாட்லி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவேந்திர யாதவ். இவர் தனக்கு அளித்த 5 மாத சம்பளமான ரூ.267495-ஐ துணைநிலை ஆளுநருக்கு திருப்பி அனுப்பினார். ஆனால், ஐந்து மாத சம்பளமாக 5 ரூபாய் மட்டுமே வைத்துக்கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு 49 |
| மலேரியா தாக்கம்: லைபீரிய மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்ட இந்தியர் சாவு Posted: 14 Aug 2014 07:34 AM PDT மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானதையடுத்து அந்த நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
| மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 கட்டணம்: ரிசர்வ் வங்கி Posted: 14 Aug 2014 07:28 AM PDT வங்கி கணக்கு உள்ளவர்கள் பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது வாடிக்கை. தங்கள் வங்கி கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் மற்ற வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. |
| ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் 80 சதவீதம் குறைந்துள்ளது: உமர் அப்துல்லா Posted: 14 Aug 2014 07:28 AM PDT ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதல்கள் 80 சதவீதம் குறைந்துள்ளது என்றும், அமைதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன என்றும் ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது:- மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடம் |
| உ.பி.யில் ஆளில்லா ரெயில்வே கேட்டில் கார் மீது ரெயில் மோதல்- 4 பேர் பலி Posted: 14 Aug 2014 07:21 AM PDT உத்தர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில் உள்ள கிராமம் பெடுபாரா. இங்கு ஆளில்லா ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. லகிம்பூரில் இருந்து ஜான்பூருக்கு சென்றுகொண்டிருந்த ஒரு கார், இன்று பிற்பகல் இந்த ரெயில்வே கேட்டை கடக்கும்போது, அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த இரண்டு குழந்தைகள் உள்பட |
| வாக்களிப்போர் சதவிகிதம் உயர்ந்துள்ளது நாட்டின் ஜனநாயகத்தை பறைசாற்றுகிறது: பிரணாப் Posted: 14 Aug 2014 07:19 AM PDT நாட்டின் 68வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தொலைக்காட்சியில் பொதுமக்களுக்கு உறையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; இந்திய நாட்டின் குடிமக்களுக்கும், வெளிநாடுகளில் வாழும் |
| ராகுல் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் - வெங்கையா நாயுடு சூசக பேச்சு Posted: 14 Aug 2014 06:49 AM PDT நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சுமித்ரா மாகஜன் பாரபட்சமாக நடந்துகொள்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியதுடன் அவையின் மையப்பகுதிக்கும் சென்று கோஷமிட்டார். அவரது இந்த செயலுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் |
| நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்தனர்: சபாநாயகர் மகிழ்ச்சி Posted: 14 Aug 2014 06:43 AM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிந்தது. பட்ஜெட் தாக்கலுக்கு பின் அதன் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அதே போல் இக்கூட்டத்தொடரில் சில மசோதாக்களும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |