Tamil Star |
- தள்ளுபடி விலையில் கார்பன் டைட்டானியம் ஆக்டேன்!
- தொடப்படாத புதிய கதைகளத்தில் பயணமாக உள்ளேன்: குக்கூ ராஜூமுருகன்!
- ஆர்யாவுடன் நெருக்கமாக நடித்து கண் கலங்கிய ஹன்சிகா!
- இவரோட செயலைப் பாருங்க…. திக்கு முக்காடிப் போயிடுவீங்க!
- தாயின் வயிற்றிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தை….
- நேர்த்திக்கடன் என்ற பெயரில் தலையில் உடைக்கப்படும் தேங்காய்….
- யாரும் தொந்தரவு பண்ணாதீங்க…. பசிக் கொடுமை தாங்க முடியல!….
- யாழ் கிணறுகளில் எண்ணைய்! தொடரும் மர்மம்….
- மேயராக தேர்வு செய்யப்பட்ட நாய்.!!
- மரண தண்டனை சட்டத்தை நீக்க வேண்டும்: பிரித்தானியா கோரிக்கை
- கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள்!
- கடைசி டெஸ்ட்: இலங்கை அணி 8 விக்கெட்டு இழப்பு!
- சினாட்டி டென்னிஸ்: பெடரர் புதிய சாதனை
- உளவுபார்ப்பதில் இருந்து தப்பிக்க இ-மெயில் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறது யாகூ!!
- மலையில் ரயில் தடம் புரண்டது: 3 பெட்டிகள் கவிழ்ந்தன!
- மிஷினை விட மின்னல் வேகத்துடன் செயல்படும் மனிதர்கள்…..
- மிகப்பெரிய மீனை வெறும் கையால் பிடித்து அசத்தும் மனிதர்!
- இணைய உலகத்தை கலக்கும் விசித்திர இசையமைப்பாளர்…
- மீனை முள் இல்லாமல் சுத்தம் செய்யத் தெரியுமா?
- 616 டூயல் சிம் ஸ்மார்ட்போன் ரூ.14,000 விலையில் அறிமுகம்!
| தள்ளுபடி விலையில் கார்பன் டைட்டானியம் ஆக்டேன்! Posted: 14 Aug 2014 05:21 PM PDT
கார்பன் நிறுவனம் Snapdeal உடன் கூட்டாக இணைந்து அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன்களான கார்பன் டைட்டானியம் ஆக்டேன் மற்றும் கார்பன் டைட்டானியம் ஆக்டேன் பிளஸ் ஆகிய இரண்டு மொபைல்களுக்கு சுதந்திர தினம் சலுகை வழங்குகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் Snapdeal வழியாக ஆகஸ்ட் 15 முதல் கடைசி ஸ்டாக் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டைட்டானியம் ஆக்டேன் ரூ.2,500 விலை குறைக்கப்பட்டது மற்றும் டைட்டானியம் ஆக்டேன் பிளஸ் ரூ.4,000 விலை குறைக்கப்பட்டது. நிறுவனம், டைட்டானியம் ஆக்டேன் தொடக்க விலை ரூ.14,490க்கு பதிலாக ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்றும் டைட்டானியம் ஆக்டேன் பிளஸ் தொடக்க விலை ரூ.17,990க்கு பதிலாக ரூ.13,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், கார்பன் நிறுவனம் சலுகைகள் கிடைக்கக்கூடிய யூனிட்களின் எண், அல்லது சரியான காலக்கெடு ஆகியவற்றை குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே இரட்டை சிம் ஆதரவு கொண்டிருக்கின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகின்றன. கார்பன் டைட்டானியம் ஆக்டேன்: கார்பன் டைட்டானியம் ஆக்டேன் ஸ்மார்ட்போன், ஒரு 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரேம் 1GB கொண்ட 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் MT6592 ப்ராசசர் இயங்குகிறது. இதில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கொண்டுள்ளது. கார்பன் டைட்டானியம் ஆக்டேன் பிளஸ்: கார்பன் டைட்டானியம் ஆக்டேன் பிளஸ் ஸ்மார்ட்போன், 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரேம் 2GB கொண்ட 1.7GHz மீடியா டெக் MT6592 அக்டா கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதில் 16 மெகாபிக்சல் ஆட்டோபோகஸ் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டைட்டானியம் ஆக்டேன் போன்றே 2000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, மற்றும் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கொண்டுள்ளது. கார்பன் டைட்டானியம் ஆக்டேன் அம்சங்கள்: இரட்டை சிம், 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் MT6592 ப்ராசசர், 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 2000mAh பேட்டரி. கார்பன் டைட்டானியம் ஆக்டேன் பிளஸ் அம்சங்கள்: இரட்டை சிம், 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 2GB, 1.7GHz மீடியா டெக் MT6592 அக்டா கோர் ப்ராசசர், 16 மெகாபிக்சல் ஆட்டோபோகஸ் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 2000mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொடப்படாத புதிய கதைகளத்தில் பயணமாக உள்ளேன்: குக்கூ ராஜூமுருகன்! Posted: 14 Aug 2014 05:16 PM PDT
'குக்கூ' படத்தின் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஜுமுருகன். பிரபல எழுத்தாளராக இருந்து இயக்குனரான இவர், எழுத்திலும் செயலிலும் காட்டும் வீரியத்தை சொல்லில் காட்ட விழைவதில்லை. திரை உலகின் மிக நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் ராஜூ விமர்சகர்களால் மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் பெரிய அளவுக்கு பேசப்பட்டவர். இவர் தனது அடுத்த படத்தின் ஆயத்த பணிகளில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில், இவர் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாகவும், அந்த படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக செய்தி வெளிவந்தது. பின்னர், தனுஷுக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் பரவியது. இதுகுறித்து ராஜூமுருகன் கூறும்போது, ஊடக நண்பர்களின் ஆதரவு என்னுடைய முதல் படம் பெரும் வெற்றியடைய முக்கிய காரணம். 'குக்கூ'வின் வெற்றி எனக்கு கொடுத்த மகிழ்ச்சியைவிட அடுத்த படத்தை பெரிதாக தரவேண்டும் என்ற உந்துதல் தந்ததே அதிகம். தற்போது எனது அடுத்த படத்துக்கான கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த படத்தின் கதாபாத்திரங்களை அந்த கதைதான் தீர்மானிக்கும். ஊடகங்கள் இடையே எனது அடுத்த படத்தைப் பற்றி கற்பனைக்கு யூகங்களும் கேள்விகளும் பெரிதளவில் இருப்பதை நான் அறிகிறேன். அந்த தகவல்கள் எதுவும் இந்த தருணத்தில் உண்மையில்லை. நான் அடுத்ததாக முற்றிலும் தொடபடாத ஒரு புதிய கதை களத்தில் பயணமாக உள்ளேன். இதை பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்று உறுதியாக கூறுகிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆர்யாவுடன் நெருக்கமாக நடித்து கண் கலங்கிய ஹன்சிகா! Posted: 14 Aug 2014 05:14 PM PDT
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குனர் மகிழ்திருமேனி, இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். படத்தைப் பற்றி இயக்குனர் பேசும் போது, மீகாமன் என்பதற்கு கேப்டன் ஆப் ஷிப் அதாவது ஒரு கப்பலை வழிநடத்துபவர் என்பது பொருள். இப்படத்தை ஆக்ஷன் படமாக உருவாக்கியிருக்கிறேன். இதில் இரண்டு பாடல்கள் உள்ளது. தமன் சிறப்பாக இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவ்விரண்டு பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்படம் ஆர்யாவுக்கு ஸ்டைலீசான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றார். மேலும் ஹன்சிகாவை பற்றி பேசும்போது, ஆர்யா-ஹன்சிகா இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கினேன். அப்போது அந்த காட்சி எடுத்தப் பின்பு ஹன்சிகா கண் கலங்கினார். ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை இப்பாடல் கெடுத்து விடும் என்ற அச்சத்தில் கண் கலங்கினார். பின்னர் அப்படி ஆகாது என்று கூறிய பிறகுதான் சமாதானம் ஆனார் என்று கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இவரோட செயலைப் பாருங்க…. திக்கு முக்காடிப் போயிடுவீங்க! Posted: 14 Aug 2014 05:09 PM PDT |
| தாயின் வயிற்றிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தை…. Posted: 14 Aug 2014 05:05 PM PDT |
| நேர்த்திக்கடன் என்ற பெயரில் தலையில் உடைக்கப்படும் தேங்காய்…. Posted: 14 Aug 2014 05:02 PM PDT |
| யாரும் தொந்தரவு பண்ணாதீங்க…. பசிக் கொடுமை தாங்க முடியல!…. Posted: 14 Aug 2014 04:59 PM PDT |
| யாழ் கிணறுகளில் எண்ணைய்! தொடரும் மர்மம்…. Posted: 14 Aug 2014 04:56 PM PDT
சுன்னாகம் பகுதியிலுள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணைய் கலக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சுன்னாகம் பகுதியிலுள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, சுமார் இருநூறு கிணறுகளின் நீர் மாதிரிகளை நீர்வழங்கல், வடிகாலமைப்பு அதிகார சபையினால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர். நீர்மாதிரிகள் பெறப்பட்டு சுமார் எட்டு மாதங்கள் கடந்துள்ளபோதிலும், அதுதொடர்பான பரிசோதனைகளின் நிலை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என சுன்னாகம் பிரதேச சபைத் தியாகராசா பிரகாஷ் குறிப்பிடுகின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேயராக தேர்வு செய்யப்பட்ட நாய்.!! Posted: 14 Aug 2014 04:54 PM PDT
மினசோட்டாவில் இந்த வாரம் 7-வயதுடைய டியுக் என்ற பெயருடைய நாய் மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மினசோட்டாவில் உள்ள கொமொறன்ட் என்ற ஒரு சிறு பட்டினத்திற்கு 12-குடும்பங்கள் குடும்பத்திற்கு 1-டொலர்கள் செலுத்தி தங்கள் வாக்கை பதிவு செய்து தெரிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பெரிய பைரனீஸ் இன நாய் மனித போட்டியாளரை எதிர்த்து மகத்தான வெற்றி பெற்று மேயராக தெரிவுசெய்யப் பட்டுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட Richard Sherbrook கொமொறன்ட கடை சொந்தகாரர் டியுக் பெற்ற வாக்குகளின் அரைப்பகுதிக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டியுக் ஒரு வருடத்திற்கு மேயராக பதவி வகிக்கும். எதிர்வரும் சனிக்கிழமை உத்தியோக பூர்மாக டியுக் மேயராக பதவி ஏற்க உள்ளது. சம்பளமாக ஒரு வருடத்திற்கு தேவையான kibble எனப்படும் செல்லப்பிராணிகளிற்கான உணவு வழங்கப்படும். அப்பகுதியை சேர்ந்த செல்லப்பிராணிகளின் உணவு கடை இதனை நன்கொடையாக வழங்குகின்றது. மனிதரல்லாத ஒரு பிராணி பொது அலுவலகத்திற்கு மேயராக தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவை அல்ல. அலாஸ்கா, Talkeetna –வில் பூனை ஒன்று 17-வருடங்கள் மேயராக பதவிவகித்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த பூனை பிறந்த உடனேயே மேயராக பதவி ஏற்றுள்ளதுதான். அத்துடன் 2013-ல் அப்பகுதி நாய் ஒன்றின் படுகொலை முயற்சியில் இருந்தும் தப்பியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மரண தண்டனை சட்டத்தை நீக்க வேண்டும்: பிரித்தானியா கோரிக்கை Posted: 14 Aug 2014 04:51 PM PDT
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியா தனது அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்கி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு, கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிராக டேவிஸ் பணியாற்றி வருகிறார். உலக நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடக்கப்பட்டிருந்தாலும் 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என உள்நாட்டில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிறுவர் துஷ்பிரயோகம், கொலைகள், போதைப்பொருள் விற்பனை போன்ற பாரிய குற்றச் செயல்களின் அதிகரிப்பே இந்த கோரிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது. இலங்கையில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருவதுடன் பலர் தண்டனையை குறைக்குமாறு கோரி மேன்முறையீடு செய்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள்! Posted: 14 Aug 2014 04:49 PM PDT
பாகிஸ்தானின் 68வது சுதந்திர தினம் இன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் சமூகத்தை சேர்ந்தவர்களுடன் இலங்கை முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் சமூகத்தினர், தமது பாரம்பரிய உற்சாகத்துடன் தமது சுதந்திரத்தை தினத்தை கொண்டாடுவதாக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. முற்போக்கான சகிப்புத்தன்மையுடன் கூடிய, வலுவான மாறுதலுடன் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரிய அரசாங்கம் தனது 68வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் குவாசிம் குரேஷி தேசிய கொடிகளை ஏற்றி வைத்துடன், பிரதமர் நவாஷ் ஷெரீப் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் சுதந்திர தின செய்திகளை வாசித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடைசி டெஸ்ட்: இலங்கை அணி 8 விக்கெட்டு இழப்பு! Posted: 14 Aug 2014 04:47 PM PDT
இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியுடன் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் 37 வயதான மஹேலா ஜெயவர்த்தனே, சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெறுவதால் அவரது ஆட்டத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஜெயவர்த்தனேவின் குடும்பத்தினரும் ஆஜரானார்கள். இதில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் உபுல் தரங்காவும், கவ்ஷல் சில்வாவும் நிதானமாக பேட் செய்தனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்கோர் 79 ரன்களை (32.5 ஓவர்) எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. சில்வா 41 ரன்னிலும் (106 பந்து), அடுத்து வந்த முந்தைய டெஸ்டின் நாயகன் சங்கக்கரா 22 ரன்களிலும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தனர். ஜெயவர்த்தனே ஏமாற்றம் இதையடுத்து 37 வயதான மஹேலா ஜெயவர்த்தனே களம் புகுந்தார். இது அவரது கடைசி டெஸ்ட் என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் இருபுறமும் வரிசையாக நின்று அவருக்கு கவுரவம் அளித்தனர். மைதானத்தில் பட்டாசும் வெடிக்கப்பட்டது. ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கரவொலி எழுப்பினர். ஆனால் ஏக்கமுடன் காத்திருந்த உள்ளூர் ரசிகர்களை ஜெயவர்த்தனே ஒரேயடியாக ஏமாற்றி விட்டார். 4 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்த தப்பித்த ஜெயவர்த்தனே அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே 4 ரன்னில் (16 பந்து), சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதை சரியான தீர்ப்பு என்பதை உணர்ந்து டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் ஏதும் செய்யாமல் ஜெயவர்த்தனே பெவிலியன் திரும்பினார். இலங்கை 8–261 ரன் தரங்கா மட்டுமே அந்த அணியில் நிலைத்து நின்று ஆடினார். அவர் 92 ரன்களில் (179 பந்து, 12 பவுண்டரி) கேட்ச் ஆனார். திரிமன்னே (20 ரன்), டிக்வெலா (24 ரன்), தில்ருவான் பெரேரா (0), கேப்டன் மேத்யூஸ் (39 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் நடையை கட்டினர். இதில் மேத்யூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 11–வது இலங்கை வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 261 ரன் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜூனைட் கான் 4 விக்கெட்டுகளும், வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 2–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சினாட்டி டென்னிஸ்: பெடரர் புதிய சாதனை Posted: 14 Aug 2014 04:45 PM PDT
சின்சினாட்டி ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2–வது சுற்றில் 3–ம நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7–6 (7–4), 5–7, 6–2 என்ற செட் கணக்கில் கனடாவின் வாசெக் போஸ்பிசிலை 2 மணி நேரம் போராடி தோற்கடித்தார். இதன் மூலம், சாம்பியனாகும் வீரருக்கு 1000 தர வரிசை புள்ளிகளை அளிக்கும் ஏ.டி.பி. டூர் மாஸ்டர்ஸ் பந்தயத்தில் 300–வது வெற்றியை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றார். இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்– செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் ஜோடி 2–வது சுற்றில் 1–6, 6–4, 8–10 என்ற செட் கணக்கில் வாசெக் போஸ்பிசில் (கனடா)– ஜாக் சோக் (அமரிக்கா) இணையிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பவுச்சார்ட் (கனடா), விம்பிள்டன் சாம்பியன் கிவிடோவா (செக்குடியரசு) ஆகியோர் வெளியேற, அமெரிக்காவின் செரீனா வில்லியம்சஸ் 3–வது சுற்றுக்குள் நுழைந்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உளவுபார்ப்பதில் இருந்து தப்பிக்க இ-மெயில் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறது யாகூ!! Posted: 14 Aug 2014 04:43 PM PDT
போலீசாரின் உளவு, ஹேக்கர்களிடமிருந்து இ-மெயில் தகவல்களை பத்திரப்படுத்த கூகுளைப்போலவே யாகூவும் பாதுகாப்பு நடைமுறைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் அரசு அதிகாரிகள் பரிமாறிய இ-மெயில் தகவல்களை ஸ்னோடன் என்பவர் உளவு பார்த்து பல ரகசியங்களை அம்பலப்படுத்தினார். இதனால் அவரை பிடிக்க அமெரிக்கா வலை வீசி தேடிவருகிறது. இந்நிலையில் இ-மெயில் தகவல்களை பாதுகாப்பதில் கூகுள் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோன்ற நடைமுறையை யாகூ எடுத்துவருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கூகுள் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவை ஏற்கனவே சுதாரித்துக் கொண்டு தங்கள் பயன்பாட்டாளர்களின் டேட்டாக்களை வேறு யாரும் திருடிவிடாமல் தடுக்கும் முயற்சிகளை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யாகூ நிறுவனம் சார்பில் கருத்து தெரிவிக்க யாரும் கிடைக்காத நிலைியல், கூகுள் சார்பில் இந்த தகவலுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில், எந்த ஒரு வெப்சைட் டெவலப்பர்களாக இருந்தாலும், பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூகுள் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலையில் ரயில் தடம் புரண்டது: 3 பெட்டிகள் கவிழ்ந்தன! Posted: 14 Aug 2014 04:40 PM PDT
சுவிட்சர்லாந்தில் ஆப்ல்ஸ் மலையில் சென்று கொண்டிருந்த மலை ரயில், நிலச்சரிவு காரணமாக திடீரென தடம்புரண்டது. இதில், 3 பெட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 11 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் மரங்கள் அடர்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் ரயில் இயக்கப்படுகிறது. டீபன்கேஸ்டல் மற்றும் ஜூரிச் இடையிலான இந்த மலை ரயில் பயணம் மிகவும் திரில்லாக இருக்கும். ஆல்ப்ஸ் மலை பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜூரிச் நகருக்கு நேற்று காலை 140 பயணிகளுடன் மலை ரயில் கிளம்பியது. செயின்ட் மோரிட்ஸ் ரயில் நிலையத்துக்கு அருகே சுரங்க பாலத்தை கடந்து சென்ற போது, நிலச்சரிவு காரணமாக ரயில் தடம்புரண்டது. ரயிலின் 3 பெட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்தன. ஒரு பெட்டி, கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழ இருந்தது. எனினும், பள்ளத்தாக்கில் உள்ள பெரிய பெரிய மரங்களால் பள்ளத்தாக்கில் விழாமல் தப்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிரவுபென்டன் போலீசார் ஹெலிகாப்டர் மூலம் ரயில் பயணிகளை மீட்டனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிஷினை விட மின்னல் வேகத்துடன் செயல்படும் மனிதர்கள்….. Posted: 14 Aug 2014 05:37 AM PDT |
| மிகப்பெரிய மீனை வெறும் கையால் பிடித்து அசத்தும் மனிதர்! Posted: 14 Aug 2014 05:30 AM PDT |
| இணைய உலகத்தை கலக்கும் விசித்திர இசையமைப்பாளர்… Posted: 14 Aug 2014 05:25 AM PDT |
| மீனை முள் இல்லாமல் சுத்தம் செய்யத் தெரியுமா? Posted: 14 Aug 2014 05:20 AM PDT |
| 616 டூயல் சிம் ஸ்மார்ட்போன் ரூ.14,000 விலையில் அறிமுகம்! Posted: 14 Aug 2014 04:39 AM PDT
HTC நிறுவனம் ஒன் (E8) உடன் இணைந்த டிசயர் 616 டூயல் சிம் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. HTC டிசயர் 616 டூயல் சிம் ஸ்மார்ட்போன் ரூ.14,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மாலி 450MP4 கிராபிக்ஸ் உடன் 1.4GHz அக்டா கோர் மீடியா டெக் MT6592 SoC கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் ரேம் 1GB உள்ளது, மற்றும் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. HTC டிசயர் 616 ஸ்மார்ட்போனில் ஒரு வழக்கமான (மினி) சிம் மற்றும் மைக்ரோ சிம் ஆகிய டூயல் சிம் அமைப்பு உள்ளது. முதன்மை சிம் கார்டு (வழக்கமான) 3G நெட்வொர்க்குகளை இணைக்க முடியும், இரண்டாவது சிம்மில் (மைக்ரோ) இணைக்க முடியாது. இந்த ஸ்மார்ட்போனில் Wi-Fi a/b/g/n நெட்வொர்க்குகளை இணைக்க முடியும். இது 1080p வீடியோக்கள் பிடிக்கக்கூடிய 8 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. 720p வீடியோக்கள் பிடிக்கக்கூடிய 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. HTC பொழுதுபோக்கு விருப்பத்திற்காக FM வானொலி சேர்க்கப்பட்டுள்ளது. HTC டிசயர் 616 டூயல் சிம் ஸ்மார்ட்போனில் 294ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் மற்றும் சென்ஸ் 5.5 கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. என்றாலும், ஆண்ட்ராய்டு கிட்கேட் மேம்படுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 150 கிராம் எடையுடையது. இது 2000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. HTC டிசயர் 616 டூயல் சிம் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது. Wi-Fi, 802.11 b/ g/ n, ஜிபிஎஸ், Bluetoothv 4.00 மற்றும் மைக்ரோ-USB போன்ற இணைப்பு வருப்பங்களை கொண்டு வருகிறது. ப்ராக்சிமிட்டி சென்சார், ஆக்சிலரோமீட்டர், அம்பியண்ட் லைட் சென்சார் ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது. HTC டிசயர் 616 டூயல் சிம் ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் திரை, 294ppi பிக்சல் அடர்த்தி, 1.4GHz அக்டா கோர் மீடியா டெக் MT6592 SoC, மாலி 450MP4 கிராபிக்ஸ், ரேம் 1GB, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு, டூயல் சிம், 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, Wi-Fi 802.11 b/ g/ n, ஜிபிஎஸ், Bluetoothv 4.00, மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன், சென்ஸ் 5.5, 2000mAh பேட்டரி, 150 கிராம் எடை..This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




















