Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஐரோப்பியர்கள் பாடும் தமிழ் பாட்டு :) அவசியம் பார்த்து ரசியுங்கள் !

Posted: 09 Aug 2014 10:47 AM PDT

ஐரோப்பியர்கள் பாடும் தமிழ் பாட்டு அவசியம் பார்த்து ரசியுங்கள் ! என்ன அழகா பாடறா பாருங்கோ ! அவர்கள் வாயால் வரும்போதும் தமிழ் எவ்வளவு அழகாய் இருக்கு !! சூப்பர் தானே?

சிறந்த கவிதைப்போட்டிக்கு பரிசாம்...!

Posted: 09 Aug 2014 10:04 AM PDT


-

சிறந்த கவிதைப்போட்டிக்குப்
பரிசுப் போட்டியாம்

எதற்குப் போட்டி?
முதல் பரிசை
உன் அப்பனுக்குக்
கொடுத்துவிட வேண்டியதுதானே..!
==============================
====
>கண்மணி ராஜா முகம்மது

சரி…ஒரு நாள் ஊசியோட கதையை முடிச்சுடறேன்..!

Posted: 09 Aug 2014 09:57 AM PDT

- அரசே அண்டை நாட்டு மன்னருக்கு கப்பம் கட்டி விடுவது ரொம்ப நல்லது…! - கட்டாவிட்டால்? - நீங்க புறமுதுகிட்டு ஓடிய காட்சியை வீடியோவில் படம் எடுத்து வச்சிருக்காராம். அதை நெட்டில் வெயிட்டு விடுவாராம்…! - –வி.எஸ்.மணி - ————————————- சாதாரண நாய்க்குட்டியோட விலை ஆயிரம் ரூபாயா? - ஆச்சரிப்படாதீங்க மேடம்! இந்த நாய் கரேக்டா மாமியாரை மட்டும்தான் கடிக்கும்..! - >ச.வள்ளுவன் - ————————————– - ஸ்கூல் வாத்தியாருக்கு ட்ரீட்மென்ட் பண்ணது தப்பா போச்சா..ஏன் டாக்டர்? - பீஸ் கேட்டா…சாக்பீஸ் ...

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

Posted: 09 Aug 2014 09:53 AM PDT

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ' என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்...
1. ஆடம்பரமாய் வாழும் தாய்.
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.
3. ஒழுக்கமற்ற மனைவி.
4. ஏமாற்றுவதும்; துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்.
5. சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்.
இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்பது இதன் விளக்கம்.

நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?

Posted: 09 Aug 2014 09:34 AM PDT

——- - 'ஹலோ! டார்லிங் நம்ம காதல் உங்கங்கப்பாவுக்கு தெரிஞ்சு போச்சுங்கிறதுக்காகவா இவ்வளவு கவலைப்படற?' - 'எங்கப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது? அவர் எப்படியாவது நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடுவார்..! - ————————————– - 'உங்க வீட்டுக்காரர் தமிழ் வருடப் பிறப்பிற்கு உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?' - எனக்கு எங்க வாங்கிக் கொடுத்தார்? அவருக்குத்தான் ஒரு கிரைண்டர் வாங்கிக் கிட்டார்.' - ———————————— - சார்! கல்யாணம் ஆன நீங்க எப்படி ஓட்டப்பந்தயத்தில முதலாவதா வந்தீங்க?' - 'என் ...

உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?’.

Posted: 09 Aug 2014 09:28 AM PDT

உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'. - சமையல்காரரே நீங்கதானே! - ————————————– - பேச்சாளர்: - "முல்லை பெரியார் பற்றி எனக்குத் தெரியாதாம். எதிர் கட்சிக்காரர்கள் என்னிடமே சவால் விடுகிறார்கள். பெரியாரை வம்புக்கிழுத்தால் நான் வாயை மூடிக் கொண்டிருக்க மாட்டேன். அவருக்காக பெரும் போராட்டம் நடத்துவேன் என்றும் எச்சரிக்கிறேன்." - ———————————- - பேச்சாளர்: - "பெரியோர்களே! தாய்மார்களே! நம்முடைய அண்ணன் தான் இரவு 8.00 மணி முதல் காலை 8 மணிவரை அதிக நேரம் அமைச்சராக ...

கட்டிட்டுவா’ என்றால் “வெட்டிட்டு’ வந்திடுவான்! -

Posted: 09 Aug 2014 09:28 AM PDT

   -    "அந்த சீனியர் கதாநாயக நடிகரின் சிரிப்பு    ரொம்ப கவர்ச்சிகரமா இருந்திச்சின்னு சொன்னது    ரொம்ப தப்பா போச்சு".    -    "ஏன்… ஏதேனும் எசகுபிசகா நடந்துக்கிட்டாரா…?"    -    "இல்லே. அவரு பல்செட்டை கழட்டிக் கொடுத்துட்டாரு…"    -    ———————————————    -    " எனக்கு டூப்பா நடிக்கிறவனை என்    கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சு…"    -    "ஏன்… என்ன செஞ்சான்?"    -    "மணவறையில வந்து உக்காந்து நான்தான் தாலி    கட்டுவேன்றான்".    -    கி.ராஜகோபாலன்,    -    ——————————————–   ...

… மப்பு ஏறவே மாட்டேன்கிறது”

Posted: 09 Aug 2014 08:05 AM PDT

ஏன் அவருக்கு பேசிக்கிட்டே இருக்கும் போது வாய்ல இருந்து ரத்தமா கொட்டுது?" - "நான்தான் சொன்னேனே அவர் வாய் கிழியப் பேசுவார்னு" - ——————————– - அவர் எப்பவும் ரொம்பக் கவனமாக இருப்பார்னு சொல்றது சரிதான் அதுக்காக இப்படியா? - ஏன் என்ன ஆச்சு?' - "செக்கைக் கிராஸ் பண்ணும்போது கூட ரெண்டு பக்கமும் பார்த்துட்டுத்தான் பண்ணுறாரு" - ——————————– - "சச்சினுக்கும் உன் கணவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தானா, என்ன அது? " - "சச்சின் சூப்பரா சதம் அடிப்பார்; என் கணவர் சூப்பரா சாதம் ...

தரைமட்டத்துக்கு மேலே ஒரு அடி வரை சுவையான குடிநீர் கிடைக்கும்..!

Posted: 09 Aug 2014 08:03 AM PDT

- "என்ன சார்… இது… தரைமட்டத்துக்கு மேலே ஒரு அடி வரை சுவையான குடிநீர் கிடைக்கும்னு போட்டிருக்காங்க?" - "அதுவா சார்..! மழை பெய்தா ஒரு அடிக்குத் தண்ணீர் தேங்கும்றதைக்கூட எப்படி கவர்ச்சியா விளம்பரம் பண்றாங்க பாருங்க..!" - -குப்பிலியா கி.ஹரிஹரன், - ————————————- - "குமார், நீ எதுவரைக்கும் படிக்கணும்னு ஆசைப்படறே?" - ""பெல் அடிக்கறவரைக்கும் சார்…" - >எஸ்.ஆறுமுகம், . - ———————————- - "நீங்க என்ன பண்றீங்க?" - "எங்க அப்பாவுக்கு உதவியா இருக்கேன்…" - "உங்கப்பா ...

சுலபமான முறையில் இனிப்புகள் - பாதுஷா !

Posted: 09 Aug 2014 07:27 AM PDT

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம். முதலில் திரட்டுப்பால் . பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும். தேவையானவை: வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர் சர்க்கரை 200 கிராம் செய்முறை: அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் . பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம். நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு ...

புறாவின் குழப்பம்...

Posted: 09 Aug 2014 07:22 AM PDT

- ஜோடிக்கு சேதி அனுப்பனும் ஃபேக்ஸா, ஈ மெயிலா? புறாவின் குழப்பம்..! - --------------------------- - அலுவலக வேலையை வீட்டில் பார்க்கணும் தூக்கம் வரவில்லை - ----------------------- - ரேசனில் சர்க்கரை நீண்ட க்யூ எறும்புகள் கூட்டம் - ----------------------- - ஜோடி பொருத்தமில்லை கல்யாண வீட்டில் வாதம் கண்வன் மனைவி சண்டை! - ------------------------ - பெருக்கிய போதும் கூட்டியபோதும் எல்லாமே கழிந்தது கணக்கு நோட்டு - ----------------------------- >டி.என்.இமாஜன்

பேச்சாளன் ஊமையானான்

Posted: 09 Aug 2014 06:57 AM PDT

- பேச்சாளன் ஊமையானான் அவன் மனைவி பேசும்போது..! - ------------------------ - கணவனுக்கு கை நீளம் மனைவிக்கு கால் நீளம் எட்டி உதைத்தாள் - ------------------------- - பெட்டி நிறைய பணம் செலவழிக்க பயம் கருப்புப் பணம் - ------------------------ - தொலைக்காட்சி பார்ப்பதா கதைப்புத்தகம் படிப்பதா? மாணவன் குழப்பம் - ------------------------ - கெட்டகாலம் நெருங்குது வாழ்க்கை தப்புமா? கதவிடுக்கில் பல்லி - ----------------------- >டி.என்.இமாஜன் நகைச்சுவையான ஹைகூ கவிதைகள் -

sandilyan books kidaikkuma

Posted: 09 Aug 2014 06:32 AM PDT

sandilyan kadal pura,kannimadam noolgal kidaikkuma

காலத்தின் அருமை

Posted: 09 Aug 2014 06:21 AM PDT

காலத்தின் அருமை மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப் பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து "நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்" என்று கேட்டார் போப். "ஆறு மாதம்" என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றி பார்க்க மாட்டீர்கள்… முடியாது என்றார் போப். அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம் தான் தங்கப் போகிறேன் என்றார். "நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள்" என்றார் போப். பிறகு மூன்றாமவரைப் பார்த்து "நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம் ...

அம்மாவின் அழகு

Posted: 09 Aug 2014 06:20 AM PDT

அம்மாவின் அழகு ஒரு தெருவில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருந்தது.அப்போது அங்கே இருப்பவர்கள் அந்த குழந்தையிடம் வந்து ''ஏன் அழுகிறாய் '' என்று கேட்டனர், என் அம்மா வை காணவில்லை என்றது, அவர்கள் அனைவரும் உன் அம்மா எப்படி இருப்பாள் என்றார்கள். ''என் அம்மா அழகாக இருப்பார்கள் '' என்றது.இதை அனைவரும் அந்த நாட்டின் மன்னனிடம் கூரெனார்கல். அப்போது மன்னர் அந்த ஊரில் உள்ள அணைத்து அழகான பெண்களையும் வர சொல்லி அந்த குழந்தைஎடம் காட்டினார்கள். அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு இவர்கள் எல்லாரையும் விட என் அம்மா ...

அமைச்சர் நட்டார் தூங்குமூஞ்சி மரம்

Posted: 09 Aug 2014 06:17 AM PDT

- அமைச்சர் நட்டார் அலுவலக வளாகத்தில் தூங்குமூஞ்சி மரம் - ----------------------- - நாங்கள் சாகிறோம் நீங்கள் வாழ்கிறீர்கள பட்டுப்பூச்சிகள் மணப்பெண்ணிடம் - ---------------------------- - அலாரம் வைத்து எழுந்தான் கடை திறக்கப் போகணும் கோழிக்குச் சீக்கு - ---------------------------- - மருந்து எழுதினார் சித்த வைத்தியர் ஆங்கிலத்தில் - ------------------------- - ஆயிரம் ரூபாய் கேட்டதும் மாயமாய் மறைந்தான் அன்புக் காதலன் - ------------------------ >டி.என்.இமாஜன் நகைச்சுவையான ...

மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!

Posted: 09 Aug 2014 05:09 AM PDT

1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. 2. நன்றாகத் தூங்குங்கள் நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் ...

ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைக்க சில தகவல்கள்!

Posted: 09 Aug 2014 05:01 AM PDT

ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது. ஆயுர்வேதம் என்றால் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் என்பது நிதர்சனமான உண்மை. ஆயுர்வேத சிகிச்சைகள் உங்களை இயற்கைக்கு மிக அருகில் கொண்டு செல்லும். மேலும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை நோயாக ஆயுர்வேதத்தில் ...

மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்…

Posted: 09 Aug 2014 04:37 AM PDT

சிறு வயதிலிருந்தே நமக்கு நினைவு வைத்துக் கொள்ள சொல்லித் தருகிறார்கள். படிக்கும் பாடமாகட்டும், மற்ற விஷயங்கள் ஆகட்டும் அதிகமாய் நினைவு வைத்துக் கொள்வது எல்லோராலும் பாராட்டப்படுகிறது. துரதிர்ஷடவசமாக அதையும் விட முக்கியமான கலை ஒன்றை யாரும் நமக்கு சொல்லித் தருவதில்லை. அந்தக் கலை மதிப்பெண்கள் வாங்கித் தராதென்றாலும் மன அமைதியை அடைய வைக்கும். அது தான் மறக்கும் கலை. நம் மனதில் நாம் சேர்த்து வைத்துள்ள நினைவுகளில் எத்தனை நினைவுகள் நம் மனதில் ரணங்களாக இருக்கின்றன. எத்தனை நினைவுகள் வரப்பிரசாதமாக இருப்பதற்கு ...

கல்யாணத்திற்காக வாங்கிய கடன்

Posted: 09 Aug 2014 04:17 AM PDT

"கல்யாணத்திற்காக வாங்கிய கடன் எப்படி விவசாய கடன் ஆகும்"...!! "கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்து பயிர் தானே சார்!!!!... ஒரு வீட்டில திருடன் வந்து நகை..பணம் எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டான். அவன் கிளம்பும்போது அதை அந்த வீட்டுக் குழந்தை பார்த்துடுச்சு.... "மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் எடுத்திட்டு போ...இல்லன்னா...அம்மாவ எழுப்பிடுவன்...." காதலன்: முத்தம் கொடுக்கும் போது கண்ணை மூடல்ல ஏன் டார்லிங்",..? காதலி: போன தடவையும் அப்படி இருந்தபோதுதான் என் ஹேண்ட் பேக்ல பணம் எடுத்துத்டீங்க....

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?

Posted: 09 Aug 2014 04:01 AM PDT

நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம். உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பவல்லது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில், அதனை ஒரு இடத்தில் ...

எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி

Posted: 09 Aug 2014 03:55 AM PDT

எண்ணங்கள், நல்ல எண்ணங்களை எண்ணுங்கள் என்று சொல்லுகிற நல்ல புத்தகம்....! அதில் இருந்து சுவாரசியமான பகுதிகளில் சில.... மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன. - புத்தர் எண்ணங்களை உள்ளே விடுங்கள். முடியும் என்ற எண்ணங்களை திரும்ப திரும்ப எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. நமது நம்பிக்கையைதிரும்ப திரும்ப சிந்திக்கும் பொது அது செயலாக பரிணமிக்கிறது. திரும்ப திரும்ப செய்யும் ஒரு செயல் பழக்கமாகிறது. பல பழக்கங்கள் மனிதனின் (character) குண நலன்களாகின்றன. - ரால்ப் வல்டோ டிரைன் கொலை ...

வண்ணத்துப் பூச்சிகள் கண்ட கனவு

Posted: 09 Aug 2014 01:28 AM PDT

- கலர் கலராய் கனவுகள் வண்ணத்துப் பூச்சி கண்டது பூந்தோட்டத்தில் - -------------------------- - காதல் ஆழமானது ஏற்கவில்லை அவள் விமானப் பணிப்பெண் - ------------------------- - காதலும் வேண்டாம் கத்திரக்காயும் வேண்டாம் நடிகை சபதம் - --------------------------- - மரம் பட்டுப் போனது சோகத்தில் பறவைகள் இறுதி அஞ்சலி - -------------------------- - ஈரல் புகையிடம் குடல் மதுவிடம் காதல் தோல்வியில் அவன் - ------------------------- - டி.என்.இமாஜன் நகைச்சுவையான ஹைகூ கவிதைகள்

அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ்

Posted: 09 Aug 2014 01:19 AM PDT

கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார். மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ...

தண்ணீரில் கண்டம், பலித்தது ஜோசியம் -

Posted: 09 Aug 2014 01:10 AM PDT

- தண்ணீரில் கண்டம் ஜோசியர் சொன்னார் மதுவால் சாவு - ---------------------- - பெட்டியில் போட்ட தபால் போய்ச் சேருமா, சேராதா? அபாயச் சிவப்பு - ----------------------- - சேதி சேர்க்கும் வேலையில் நல்ல சேதி எப்போது? யோசனையில் தபால்காரர் - ------------------------- - வசிப்பிடம் வாடகைக்கு வேண்டுவோர் வாருங்கள் அவள் மனசு - -------------------------- - இரும்புக்கடை வைத்தவர் இரும்புக் கம்பி எண்ணினார் ஊழல் அரசியல்வாதி - -------------------------- டி.என்.இமாஜன் நகைச்சுவையான ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (287)

Posted: 09 Aug 2014 12:42 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

"மண் குதிரை(யை) நம்பி

Posted: 09 Aug 2014 12:27 AM PDT

"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று நம்பகத்தன்மை இல்லா மனிதரை பற்றி கூறும் போது நாம் கூறுகிற ஒரு பழமொழி. இது நடை முறையில் நடவாத காரியம் அன்றோ. முதலாவது நாம் மண் குதிரையை ஆற்றுக்கே நடத்தி செல்ல முடியாது. பின் எதை நமக்கு உணர்த்த கூறப் பட்ட பழமொழி இது. அந்த காலங்களில் இப்போது இருப்பது போல் ஆற்றை கடக்க மேம்பாலங்கள் கிடையாது. நடந்து தான் கடக்கவேண்டும். அப்படி கடந்து போனப் பிறகு சில சமயம் ஆறுகளில்,திடீர் வெள்ளம் வந்துவிடும்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் அப்போது நடு நடுவே மண் ...

இன்றைய சிந்தனை துளிகள்...

Posted: 09 Aug 2014 12:22 AM PDT

இன்றைய சிந்தனை துளிகள்...

தவறு செய்ததற்காக வெட்கப்பட்டால் மட்டும் போதாது. அதை ஒப்புக் கொள்ளவும் வெட்கப்படக்கூடாது.

பட்டங்களை பெற தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்வதே பெருமை, பட்டம் பெறுவதல்ல.

அறிவுடையவர்கள் பிறர் செய்த தீமையை பொறுத்துக்கொள்வார்கள். அன்புடையவர்கள் அதை மன்னிப்பார்கள்.

இன்பமும் துன்பமும் நேர்மாறானவைதான் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்பது இயற்கையின் ஏற்பாடு.

ஆரோக்கியகுறைவு காரணமாகவே கெட்டகுணங்களில் பாதி உண்டாகிறது.

jathagam

Posted: 08 Aug 2014 11:29 PM PDT

ஹாய் சார், இது என்னுடைய பிறந்த தேதி - 10/06/1979. இது என்னுடைய மனைவி பிறந்த தேதி - 29/7/1989.
எங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும். எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும். என்னுடைய உத்தியோகம் எப்படி இருக்கும். தயவு கூர்ந்து சொல்லுங்கள்.  
நன்றி அன்புடன் .

ரமணியின் கவிதைகள்

Posted: 08 Aug 2014 09:17 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

மாதவிடாய்

Posted: 08 Aug 2014 08:46 PM PDT

வணக்கம்,

எனது நண்பிக்கு பதிவு திருமணம் முடிந்து 25 நாட்கள் ஆகின்றன.அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டு இருக்கின்றார்கள் இதனால் நண்பிக்கு வரவேண்டிய மாதவிடாய் வரவில்லை.அவர்களுக்கு தற்போது குழந்தை வேண்டாம் என்கிறார்கள்.மாதவிடாய் வர என்ன செய்யலாம்?

நன்றி

பாமரர் தேவாரம்

Posted: 08 Aug 2014 08:22 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

கணினி -கேள்வி.....

Posted: 08 Aug 2014 04:28 PM PDT

சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்.....


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™