Tamil News | Online Tamil News |
- வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மோடி..உறுதிடூஓட்டு அரசியலில் ஈடுபடும் கட்சிகள் மீது கடும் தாக்கு
- உ.பி., மத கலவரம் குறித்த ராகுல் பேச்சால்...சர்ச்சை:காங்கிரஸ் - பா.ஜ., கட்சியினர் வார்த்தை போர்
- ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பது...எப்போது?இப்போதைக்கு எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் தொடரும்
- சுதந்திர தின விழா நடப்பது எங்கே? ஆந்திரா - தெலுங்கானாவில் சர்ச்சை
- எம்.பி.,க்கு முக்கியத்துவம் ஜெ., உத்தரவால் உற்சாகம்
- சட்டசபையில் தே.மு.தி.க.,விற்கு கிடைத்த வாய்ப்பு:கட்சியை பலப்படுத்த புது வியூகம்
- கல்யாணசுந்தரம் கொளுத்தி போட்டது வெடியா? காமெடியா?:அழகிரி - ஸ்டாலின் ஆதரவு வட்டாரத்தில் புது சர்ச்சை
- இருளில் இருந்து வெளிச்சத்துக்கு...!வழிகாட்டும் மத்திய அரசின் புதிய ஜவுளிக்கொள்கை:கோவை, திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி
- உரத்த சிந்தனை :முன் பேர யூக வணிகம் - ஒரு சூதாட்டம்
| வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மோடி..உறுதிடூஓட்டு அரசியலில் ஈடுபடும் கட்சிகள் மீது கடும் தாக்கு Posted: புதுடில்லி:''சமூகத்தைப் பிரிக்க, ஓட்டு வங்கி அரசியலில், காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் தொடர்ந்து ஈடுபடுகின்றன. மக்களின் அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:நாட்டில் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை, பா.ஜ., ஒரு போதும் அனுமதிக்காது. நாடு முன்னேற்றம் அடைய ... |
| உ.பி., மத கலவரம் குறித்த ராகுல் பேச்சால்...சர்ச்சை:காங்கிரஸ் - பா.ஜ., கட்சியினர் வார்த்தை போர் Posted: புதுடில்லி:'உ.பி.,யில் நடக்கும் மத கலவரங்கள், திட்டமிட்டு, செயற்கையாக, வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றன. ஏழை மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியுடன் இது போன்ற கலவரங்கள் நடத்தப்படுகின்றன' என, காங்., துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ராகுலுக்கு ஆதரவாக காங்., கட்சியினரும்; எதிராக, பா.ஜ., கட்சியினரும் அறிக்கை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.காங்., துணைத் தலைவர் ராகுல், ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், 'உ.பி.,யில், சமீபகாலமாக நடக்கும் மத கலவரங்கள், திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றன. ... |
| Posted: புதுடில்லி:ராஜ்யசபாவில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, பெரும்பான்மை கிடைக்க வேண்டும் எனில், 2017ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். அது வரை, முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, எதிர்க்கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயத்தில், பிரதமர், நரேந்திர மோடி அரசு உள்ளது என, தகவல்கள் வெளியாகி உள்ளன.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 335 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், பா.ஜ., மட்டும், 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்று இருந்தாலும், மசோதாக்களை ... |
| சுதந்திர தின விழா நடப்பது எங்கே? ஆந்திரா - தெலுங்கானாவில் சர்ச்சை Posted: ஐதராபாத்:ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களில், சுதந்திர தின விழாவை கொண்டாட, புதிய இடங்களை தேர்வு செய்து உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.ஏற்பாடு தீவிரம்:ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், சுதந்திர தின விழா, ஐதராபாத்தில் உள்ள போலீஸ் மைதானத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது, ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து, தெலுங்கானா மாநிலம் உதயமாகியுள்ளது.இதையடுத்து, இந்தாண்டு சுதந்திர தின விழாவை, கர்னுாலில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த, கொண்டா ரெட்டி புருஜ் கோட்டை முன் நடத்த, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்து உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ... |
| எம்.பி.,க்கு முக்கியத்துவம் ஜெ., உத்தரவால் உற்சாகம் Posted: லோக்சபா கூட்டத் தொடரில், அ.தி.மு.க., குழு தலைவர் தம்பிதுரைக்கு அடுத்த இடத்தில் இருந்து, பேசும் வாய்ப்பை ஜெயலலிதா உத்தரவால், நாமக்கல் எம்.பி., சுந்தரம் பெற்றுள்ளார். லோக்சபாவில் தம்பிதுரையும், ராஜ்யசபாவில் மைத்ரேயனும், அ.தி.மு.க., சார்பிலான கருத்துக்களை, சபைகளில் பதிவு செய்து வந்தனர். ஆனால், தற்போதைய லோக்சபா கூட்டத் தொடரில், தம்பிதுரைக்கு அடுத்தபடியாக, நாமக்கல் எம்.பி., சுந்தரம் நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார்.சுந்தரத்துக்கு இப்படியொரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது, கட்சியின் மற்ற எம்.பி.,க்களிடம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.சில ... |
| சட்டசபையில் தே.மு.தி.க.,விற்கு கிடைத்த வாய்ப்பு:கட்சியை பலப்படுத்த புது வியூகம் Posted: சட்டசபையில், கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்க, தே.மு.தி.க., தலைமை புது வியூகம் வகுத்து செயல்பட ஆரம்பித்திருப்பதாக, தகவல் பரவி இருக்கிறது.சட்டசபையில், பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம், கடந்த மாதம் 10ம் தேதி முதல் நடந்து வருகிறது. இவ்விவாதத்தில் பங்கெடுத்து பேசுவதற்கு, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், விவாதத்தை துவங்கி வைப்பதற்கு, முதலில், தே.மு.தி.க., அழைக்கப்படுகிறது.அதன்பிறகு தான், தி.மு.க.,வினர் பேச முடியும். ஆனால், சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும், ... |
| கல்யாணசுந்தரம் கொளுத்தி போட்டது வெடியா? காமெடியா?:அழகிரி - ஸ்டாலின் ஆதரவு வட்டாரத்தில் புது சர்ச்சை Posted: 'தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலினை வரும் 2016 சட்டசபை தேர்தலுக்கு, உடனடியாக அறிவிக்க வேண்டும்' என, கட்சியில் இருந்து விலக்கப்படுவதற்கு முன், கட்சியின் அமைப்புச் செயலர் கல்யாண சுந்தரம் கொளுத்திப் போட்டு உள்ள வெடி, விரைவில் எல்லா இடங்களிலும் வெடிக்கும் என, ஸ்டாலின் ஆதரவு வட்டாரம் கூறுகிறது.கலந்துரையாடல்:அதற்கு உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்டாலின் நடத்திய முதல் கலந்துரையாடல் கூட்டத்திலேயே, இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரம் கூறுகிறது.அதேநேரத்தில், அழகிரி வட்டாரமோ, 'கல்யாணசுந்தரம் கொளுத்தி போட்டது வெடி ... |
| Posted: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம்,2024 - -25ம் ஆண்டுக்கான ஜவுளித்துறை வளர்ச்சியைஇலக்காக கொண்டு, புதிய ஜவுளி கொள்கைக்கான திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள திட்டங்கள், தமிழக தொழில் துறையினர்மத்தியில், புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளன.இந்தியாவில், விவசாயத்துக்கு அடுத்த நிலையில் அதிக வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகவும், பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஜவுளித்துறை உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க இத்துறையின் வளர்ச்சிக்கான திட்டங்களுடன், மத்திய அரசு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஜவுளி கொள்கை வெளியிடுகிறது.3.5 ... |
| உரத்த சிந்தனை :முன் பேர யூக வணிகம் - ஒரு சூதாட்டம் Posted: அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான யூக வணிகத்தின் மூலம், இந்திய உணவுப் பொருட்கள் விவசாயம் வளமை அடைந்திருக்கிறதா அல்லது இந்திய விவசாயிகள் செல்வச் செழிப்பில் திளைத்திருக்கின்றனரா என்றால், இல்லை என்பதே கசப்பான உண்மை.முதன் முதலில், உலகளவில் 1710ல், ஜப்பான் நாட்டில், அரிசி மற்றும் பட்டு வணிகத்திற்காக முன் பேர வணிக மையம் துவங்கப்பட்டது. பின், 1848-ல், அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், முன் பேர வணிக மையம் துவங்கப்பட்டு, 1919ல் அதில் மாற்றங்கள் செய்து இயங்கி வந்தது. நம் நாட்டில், 1947ல் பம்பாயில் சட்ட முன் வடிவு இயற்றப்பட்டது. பின், 1952ல் மத்திய அரசால் சட்டம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 10,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |