மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திறனறிவு தேர்வு முறை தொடர்பான மத்திய அரசு முடிவில் மாற்றம் இல்லை
- கற்பழிப்பில் இருந்து தப்பிக்க சாமியாரின் மர்ம உறுப்பை வெட்டிய இளம்பெண்: பீகாரில் பரபரப்பு
- இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது: ஆய்வில் தகவல்
- சந்திரசேகரராவ் மகள் மீது வழக்குபதிவு: தேச துரோக சட்டத்தில் நடவடிக்கை
- மோடி ஒப்படைத்த நேபாள வாலிபர் ஏற்கனவே குடும்பத்தோடு இணைந்தவர்?: பேஸ்புக் பட ஆதாரம்
- சிறுமி விழுங்கிய ஊசி ஆபரேஷன் இல்லாமல் அகற்றம்
- முக்கிய பொறுப்பை விரைவில் ஏற்க வேண்டும்: பிரியங்காவுக்கு ஆதரவு குவிகிறது
- 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் கைது
- தற்கொலை முயற்சி குற்றம் ஆகாது: சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை
- ஹெலிகாப்டர் பேர ஊழல்: இத்தாலி நிறுவனத்திடம் ஆயுத தளவாட கொள்முதலுக்கு தடை
- முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு: தெலுங்கானா அரசின் முடிவுக்கு பாஜக எதிர்ப்பு
- காப்பீட்டு சட்டதிருத்த மசோதா: காங். இரட்டை வேடம் போடவில்லை: ராகுல்காந்தி
- வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்தது: 18 பேர் மாயம்
- அசாமை வாட்டும் மூளையழற்சி நோய்: சில வாரங்களிலேயே 350 பேர் பலி
- டெல்லி சட்டசபை குறித்து 5 வாரங்களுக்குள் தீர்வுகாண மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு
- ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன்: 3-வது நாளாக மீட்பு குழு போராட்டம்
- ராஜினாமாவை திரும்பப்பெற்றார் நாராயண் ராணே: கட்சித்தலைமை மீது நம்பிக்கை உள்ளது என தகவல்
- நர்மதை ஆற்றில் ஆட்டோ ரிக்சா கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி
- நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
- மோடி பற்றி பேஸ்புக்கில் அவதூறு: கேரளாவில் கம்யூ. கட்சியை சேர்ந்தவர் கைது
| திறனறிவு தேர்வு முறை தொடர்பான மத்திய அரசு முடிவில் மாற்றம் இல்லை Posted: 05 Aug 2014 11:26 PM PDT யு.பி.எஸ்.சி. திறனறிவு தேர்வில் ஆங்கிலத்தை அறவே நீக்க வேண்டும் என்று இந்தி மொழி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து மத்திய அரசு திறனறிவு தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவித்தது. என்றாலும் மாணவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது. பாராளுமன்றதிலும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்களில் கேட்ட போது சாட் திறனறிவு தேர்வு தொடர்பான மத்திய அரசு முடிவில் மாற்றம் இல்லை. இந்த மாதம் 24–ந்தேதி தேர்வு நடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. |
| கற்பழிப்பில் இருந்து தப்பிக்க சாமியாரின் மர்ம உறுப்பை வெட்டிய இளம்பெண்: பீகாரில் பரபரப்பு Posted: 05 Aug 2014 11:02 PM PDT பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த சில நாட்களாக இனம் புரியாத நோயினால் பாதிக்கப்பட்டவர் போல் சோர்வாக காணப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு 'காத்து- கருப்பு' சேஷ்டை இருக்கும் என கருதிய பெற்றோர், அதே பகுதியில் இருக்கும் மந்திரவாதியான தங்களது |
| இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது: ஆய்வில் தகவல் Posted: 05 Aug 2014 10:59 PM PDT இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் மது குடிப்பவர்கள் பற்றிய ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியாவில் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. மது குடிப்பதால் வாலிபர்களின் உடல் நலத்துக்கு மிகுந்த கேடு ஏற்படுகிறது. |
| சந்திரசேகரராவ் மகள் மீது வழக்குபதிவு: தேச துரோக சட்டத்தில் நடவடிக்கை Posted: 05 Aug 2014 10:25 PM PDT தெலுங்கானா முதல்– மந்திரியும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திர சேகரராவின் மகள் கவிதா. இவர் நிஜாமாபாத் தொகுதி எம்.பியாக உள்ளார். இவர் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், ''சுதந்திரம் கிடைத்த பிறகு காஷ்மீர், தெலுங்கானா பகுதிகள் பலவந்தமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. காஷ்மீரின் சில பகுதிகள் இந்திய வரைப்படத்துக்குள் இல்லை'' என்று கூறி இருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| மோடி ஒப்படைத்த நேபாள வாலிபர் ஏற்கனவே குடும்பத்தோடு இணைந்தவர்?: பேஸ்புக் பட ஆதாரம் Posted: 05 Aug 2014 10:16 PM PDT பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் நேபாளம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் போது நரேந்திரமோடி தன்னுடன் 26 வயது ஜித்பகதூர் என்ற இளைஞரையும் அழைத்து சென்றார். ஜித்பக்தூரின் சொந்தநாடு நேபாளம் ஆகும். 1998–ல் வேலை தேடி ராஜஸ்தான் வந்த அவர் வழிதவறி குஜராத் சென்று விட்டார். திக்கு தெரியாமல் தவித்த அவருக்கு அப்போது 10 வயது. அவர் ஏதேட்சையாக நரேந்திரமோடியை சந்திக்க நேர்ந்தது. பகதூர் மீது இரக்கப்பட்ட மோடி அவரை தன் கண்காணிப்பில் வளர்த்து வந்தார். மோடி பிரதமரான நிலையில் பகதூரின் பெற்றோர் நேபாளத்தில் எங்கு வசிக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. |
| சிறுமி விழுங்கிய ஊசி ஆபரேஷன் இல்லாமல் அகற்றம் Posted: 05 Aug 2014 10:08 PM PDT ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் லட்சுமி நகரை சேர்ந்தவர் பவித்ரா (வயது 3) இந்த சிறுமி வீட்டு மேஜையில் இருந்த தையல் எந்திரத்தின் ஊசியை விழுங்கி விட்டாள். இதனால் வலி தாங்காமல் அலறினாள். இதையடுத்து அவரை பெற்றோர் கர்னூல் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது சிறுகுடல் பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்தது. |
| முக்கிய பொறுப்பை விரைவில் ஏற்க வேண்டும்: பிரியங்காவுக்கு ஆதரவு குவிகிறது Posted: 05 Aug 2014 09:58 PM PDT பிரியங்கா தீவிர அரசியலுக்கு வரும் முடிவுக்கு காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் அமோக ஆதரவு உள்ளது. நாளுக்கு நாள் காங்கிரசாரிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும், பிரியங்கா காந்தி விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்து உள்ளனர். பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. |
| 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் கைது Posted: 05 Aug 2014 09:36 PM PDT தெற்கு டெல்லியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுமி, சோனு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பள்ளிக்கு செல்வது என்றாலே துள்ளிக் குதித்துக் கொண்டு உற்சாகமாக கிளம்பும் சோனு, கடந்த 10 நாட்களாக ஏதேதோ சாக்குப் போக்குகளை |
| தற்கொலை முயற்சி குற்றம் ஆகாது: சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை Posted: 05 Aug 2014 09:00 PM PDT பாராளுமன்றத்தில் நேற்று உள்துறை இணை மந்திரி கிரெண் ரிஜிஜு ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப் போது அவர் கூறியதாவது:- சட்ட ஆணையம் தனது வலைத்தளத்தில் தூக்கு தண்டனையை ரத்து செய்யலாமா? வேண்டாமா? என்பது பற்றி கருத்துகள், ஆலோசனைகளை வழங்கும்படி மே மாதம் அறிவித்தது. குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கையில், விரைவான வழக்கு விசாரணை, புலனாய்வில் ஏற்படும் |
| ஹெலிகாப்டர் பேர ஊழல்: இத்தாலி நிறுவனத்திடம் ஆயுத தளவாட கொள்முதலுக்கு தடை Posted: 05 Aug 2014 08:56 PM PDT மிக மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்கு 12 ஹெலிகாப்டர்களை சப்ளை செய்ய இத்தாலியை சேர்ந்த ஆயுத வியாபார நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. ரூ.3 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அந்நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு ரூ.360 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. |
| முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு: தெலுங்கானா அரசின் முடிவுக்கு பாஜக எதிர்ப்பு Posted: 05 Aug 2014 08:48 PM PDT ஆந்திராவில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் சட்டசபைக்கு நடைபெற்ற முதல் தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு 12 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது அந்த வாக்குறுதிகளில் ஒன்றாகும். |
| காப்பீட்டு சட்டதிருத்த மசோதா: காங். இரட்டை வேடம் போடவில்லை: ராகுல்காந்தி Posted: 05 Aug 2014 07:55 PM PDT இந்திய காப்பீட்டுத்துறையில், தற்போதுள்ள அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்க பிரதமர் மோடியின் மந்திரி சபை முடிவு செய்தது. ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த காப்பீட்டு சட்ட திருத்த மசோதா 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டதுதான். அதைத்தான் இப்போது |
| வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்தது: 18 பேர் மாயம் Posted: 05 Aug 2014 05:20 PM PDT வாரணாசி அருகே ரோகானியா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெட்டாவர் கட் என்ற இடத்தில் 40 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. வாரணாசியில் இருந்து மீர்சாபூர் நோக்கி கங்கை நதியில் 40 பேருடன் அப்படகு சென்று கொண்டிருந்தபோது |
| அசாமை வாட்டும் மூளையழற்சி நோய்: சில வாரங்களிலேயே 350 பேர் பலி Posted: 05 Aug 2014 05:08 PM PDT மூளையழற்சி மற்றும் 'ஜப்பான் மூளையழற்சி' எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பாலானோர் பலியான நிலையில் தற்போது அந்நோய் அசாமையும் வாட்டி எடுத்துவருகிறது. இந்நோயால் சில வாரங்களில் |
| டெல்லி சட்டசபை குறித்து 5 வாரங்களுக்குள் தீர்வுகாண மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு Posted: 05 Aug 2014 05:01 PM PDT டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் 49 நாட்களில் முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். மாற்று அரசு அமைக்க முடியாததால் சட்டசபை முடக்கிவைக்கப்பட்டு |
| ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன்: 3-வது நாளாக மீட்பு குழு போராட்டம் Posted: 05 Aug 2014 04:49 PM PDT கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் சூழிக்கெரே கிராமத்தில் அனுமந்தா கட்டி என்ற விவசாயியின் மகன் திம்மண்ணா (வயது 6) தோட்டத்தில் உள்ள 300 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க 3-வது நாளாக நேற்று மீட்பு பணி |
| ராஜினாமாவை திரும்பப்பெற்றார் நாராயண் ராணே: கட்சித்தலைமை மீது நம்பிக்கை உள்ளது என தகவல் Posted: 05 Aug 2014 04:08 PM PDT மகராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சி தலைவர் சோனியாவை அம்மாநில தொழிற்துறை மந்திரி நாராயண் ராணே சந்தித்தார். அப்போது மாநில முதல்வர் பிரித்விராஜ் சவானின் |
| நர்மதை ஆற்றில் ஆட்டோ ரிக்சா கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி Posted: 05 Aug 2014 01:14 PM PDT குஜராத்தில் பாயும் நர்மதை ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் பலியானதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நர்மதா ஆறு பாயும் கெவாடியா காலனியில் அமைந்துள்ள கொரா பாலத்தின் மேலே பயணம் செய்தபோது ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 6 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே மூழ்கி |
| நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை Posted: 05 Aug 2014 12:19 PM PDT கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்திவரும் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் தொடர்பாக ஆர்த்திராவ் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கின் மீது பிடதி போலீசார் வழக்கு |
| மோடி பற்றி பேஸ்புக்கில் அவதூறு: கேரளாவில் கம்யூ. கட்சியை சேர்ந்தவர் கைது Posted: 05 Aug 2014 11:18 AM PDT பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ராஜீஷ் குமார் என்ற 24 வயது நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டதாக |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |