Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரஜினிகாந்த, அமீர் கான் மோதல்! படக்குழுக்கள் அதிர்ச்சி!

Posted: 05 Aug 2014 03:46 AM PDT

Amir-khan-Rajinikanth

Amir-khan-Rajinikanthரஜினியும், அமீர் கானும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்குள் தற்போது என்ன பிரச்சனை? என்றால் அவர்கள் தொழில் ரீதியாக தான். ரஜினி நடிக்கும் லிங்கா திரைப்படம் அவரது பிறந்தநாள் அன்று வெளிவருகிறது, இப்படம் வெளியான ஒரே வாரத்தில் அமீர் கான் நடித்த பிகே திரைப்படமும் வரயிருக்கிறது. சூப்பர் ஸ்டாருக்கு வட இந்தியாவில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் அமீர் கானுடன் போட்டி போட முடியாது, இதே நிலைமை தான் தென்னிந்தியாவில் அமீருக்கு. தற்போது இதற்கு என்ன வழி என்று இரண்டு தரப்பு படக்குழுவும் யோசித்து வருகிறதாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

என் அடையாளம்.. துறக்க மாட்டேன்.. "லட்சுமி" உறுதி!

Posted: 05 Aug 2014 03:40 AM PDT

lakshmi-menon

lakshmi-menonசாதிப் பெயரை கூடவே கூட்டிச் செல்வது சிலருக்குப் பிடித்தமான விஷயம். எல்லாத் துறையிலும் இதுபோல நிறையப் பேர் இருக்கிறார்கள். சினிமாவும் அதற்கு விலக்கன்று. சிலர் காலப் போக்கில் இந்தப் பெயர்களை விட்டு விடுவார்கள். சிலரோ புதிதாக சேர்த்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் ஒருபோதும் இதை விட மாட்டேன் என்று வம்படியாக சொல்வதும் உண்டு. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேரளத்துக்காரர்கள்தான் அதிக அளவில் சாதியை கூடவே வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். மற்ற மொழியினர் அவ்வளவாக இதை பிடித்துக் கொண்டிருப்பதில்லை அந்தக் காலத்திலேயே நம்பியார் தனது ஜாதிப் பெயரை கடைசி வரை விடவில்லை. உண்மையில் அவரது உண்மையான பெயரை விட இந்த நம்பியார் என்ற பெயர்தான் அனைவருக்கும் நல்ல பரிச்சயமாகவும் மாறிப் போனது. நம்பியார் என்பது, இது நாயர் சமூகத்தின் உட் பிரிவாகும். சமீபத்தில் சில கேரள நடிகைகளின் பெயருடன் ஒட்டியிருந்த ஜாதிப் பெயர்கள் சர்ச்சையைக் கிளப்பின. குறிப்பாக சில நடிகைகளின் பெயருடன் ஒட்டியிருந்த நாயர் உள்ளிட்ட ஜாதிப் பெயர்களை தமிழ்த் திரையுலகில் சிலர் பகிரங்கமாக எதிர்த்தனர். ஜாதிப் பெயரை நீக்கினால்தான் படத்தில் புக் செய்வோம் என்று கூட புரட்சிகள் கிளம்பின. அதேசமயம், நடிகை லட்சுமி மேனன் தான் பெயரையெல்லாம் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். இது எனது அடையாளம். இதை நான் உதற வேண்டும் என்று அவர் பதில் கேள்வி கேட்டுள்ளார். இதேபோல மேனனுடன் வலம் வருபவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன். இவர் ஆரம்பத்தில் வெறும் கெளதம் என்ற பெயரில்தான் வலம் வந்தார். திடீரென தனது தந்தை மற்றும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொண்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விபத்திலிருந்து தப்பிக்கும் மனிதனின் திக் திக் நிமிடம்…. கோபப்படுபவர்கள் பார்க்க வேண்டாம்!

Posted: 05 Aug 2014 03:33 AM PDT

How-to-avoid-getting-hit-by-a-train

How-to-avoid-getting-hit-by-a-train

This posting includes an audio/video/photo media file: Download Now

வாழ்நாளில் இப்படியொரு சாகசத்தை நீங்கள் பார்த்ததுண்டா?

Posted: 05 Aug 2014 03:26 AM PDT

Motorbike-BASE-Jump-Daredevil-Captures-Incredible-Stunt-On-GoPro

Motorbike-BASE-Jump-Daredevil-Captures-Incredible-Stunt-On-GoPro

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜாலியாக போட்டியில் கலந்த மனிதன் உயிருக்கு போராடும் பரிதாபக் காட்சி!

Posted: 05 Aug 2014 03:23 AM PDT

Mexican-Bull-Rider-get-his-neck-Broken

Mexican-Bull-Rider-get-his-neck-Broken

This posting includes an audio/video/photo media file: Download Now

9 வயதில் 93 கிலோ எடையுள்ள சிறுமி: குழப்பத்தில் திணறும் மருத்துவர்கள்!

Posted: 05 Aug 2014 03:21 AM PDT

Suman-Khatun,-One-Of-The-Fattest-Kids-In-The-World

Suman-Khatun,-One-Of-The-Fattest-Kids-In-The-World

This posting includes an audio/video/photo media file: Download Now

இதுதாங்க துபாய்…. தெரியாதவங்க சுற்றி பார்த்துக்கோங்க!

Posted: 05 Aug 2014 03:14 AM PDT

Dubai-Time-lapse-2014

Dubai-Time-lapse-2014

This posting includes an audio/video/photo media file: Download Now

டீயின் சில வியப்பூட்டும் நன்மைகள்!!!

Posted: 05 Aug 2014 03:07 AM PDT

black-tea-good-for-cold

black-tea-good-for-coldகேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகிறது. க்ரீன் டீ, வொயிட் டீ மற்றும் ஊலாங் டீ ஆகியவற்றை விட ப்ளாக் டீ தான் அதிக மணம் மற்றும் சுவை வாய்ந்தது. அதன் கருப்பு நிறத்திற்கேற்றவாறு அது ப்ளாக் டீ என்று அழைக்கப்படுகிறது. இருந்தாலும், சற்று உற்றுப் பார்த்தால் இந்த டீ பொதுவாக ஆரஞ்சு அல்லது அடர்ந்த அம்பர் நிறத்தில் தான் இருக்கும். சீனர்கள் இதை சிவப்பு டீ என்று தான் அழைப்பார்கள். தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! தற்போது ப்ளாக் டீயைக் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் உள்ள காப்ஃபைன் மட்டும் தான் கொஞ்சம் கவலை தரும் விஷயமாகும். ஒரு கப் காபியில் உள்ள பாதி அளவு காப்ஃபைன், ஒரு கப் ப்ளாக் டீயில் உள்ளது. இருந்தாலும் ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகிறது. அதன் சுவை நீண்ட நேரத்திற்கு நாக்கிலேயே இருந்து சப்புக் கொட்ட வைத்துக் கொண்டே இருக்கும். சோத்துக் கற்றாழை சாற்றினால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள்!!! இதயம் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு ப்ளாக் டீ மிக அருமையான தீர்வாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு ப்ளாக் டீ உதவுகிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நம் உடலுக்கு பல விதங்களிலும் கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் போது, நம் உடலில் இவை அதிகமாகின்றன. ஆனால் ப்ளாக் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இவற்றை அழிக்க உதவுகின்றன. காபியில் உள்ள காப்ஃபைனை விட ப்ளாக் டீயில் உள்ள காப்ஃபைன் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. நம்முடைய மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன. இவை மட்டுமில்லாமல் சுவாச உறுப்புகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவற்றின் தூண்டல் வளர்ச்சியிலும் ப்ளாக் டீயில் உள்ள த்யோப்பைலின் உதவுகிறது. ப்ளாக் டீ குடிப்பதால் இரத்த நாளங்கள் வலுப்படுகின்றன; உடல் திறன் அதிகரிக்கிறது; ஒவ்வாமை பிரச்சனைகள் குறைகின்றன; சர்க்கரை வியாதியும் தவிர்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பதக்கம்: அப்படியே பாதிக்குப் பாதி குறைந்து போய் விட்டதே!

Posted: 05 Aug 2014 03:02 AM PDT

sukhendey

sukhendey2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கங்களை அள்ளிக் குவித்திருந்தது. அதாவது 101 பதக்கங்களை வாரியிருந்தது. ஆனால் நடந்து முடிந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இது 64 பதக்கங்களாக சுருங்கிப் போய் விட்டது. கடந்த முறை 2வது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா, இந்த முறை 5 வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த முறை 38 தங்கங்களை வெட்டி வந்த இந்தியா, இந்த முறை வெறும் 15 தங்கத்தோடு நின்று விட்டது. கடந்த முறை 27 வெள்ளிகளை தேற்றி வந்த இந்தியா, இந்த முறை 30 வெள்ளிகளை இறக்குமதி செய்து ஆறுதல் தேடிக் கொண்டது. அதேசமயம், கடந்த முறை 36 வெண்கலப் பதக்கங்களை அள்ளிய இந்தியா இந்த முறை 19 வெண்கலத்தோடு நின்று விட்டது. கடந்த முறையை விட இந்த முறை இந்தியாவின் பதக்க வேட்டை பாதியாக குறைந்து போனதற்குக் காரணம், சாய்னா நெஹ்வால் போன்றோர் பங்கேற்காமல் போனதும், இந்திய வீரர், வீராங்கனைகள் முழுத் திறமையுடன் விளையாடாமல் போனதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் பளு தூக்குதல் மூலம் கிடைத்தது. கடைசி தங்கம் பேட்மிண்டன் போட்டியில் வந்தது. மகளிர் பளு தூக்குதலில் சஞ்சிதா சானு இந்தியாவின் முதல் தங்கத்தைப் பறித்தார். கடைசி தங்கம் பேட்மிண்டனில் காஷ்யப் மூலம் கிடைத்தது. ஜூலை 24ம் தேதி காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில், இந்தியாவின் சஞ்சிதா சானு, மகளிர் 48 கிலோ பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல ஆடவர் பளு தூக்குதலில் 56 கிலோ பிரிவில் சுகேன் தே தங்கம் வென்றார். 2வது நாளில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார். 3வது நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம் கிடைத்தது. அபூர்வி சன்டேலா மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். அதேபோல 25 மீட்டர் மகளிர் பிஸ்டல் பிரிவில் ரஹி சரோன்பாட் தங்கப் பதக்கம் வென்றார். 11வது நாளில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தட்டி வந்தது. அடுத்து ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். டெல்லியில் அசத்தியதைப் போல கிளாஸ்கோவில் அசத்தத் தவறிய இந்தியா, கோல்ட் கோஸ்ட்டில் கலக்குமா என்பதை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜடேஜாவைப் பார்த்து என்ன வார்த்தை பேசியிருக்கிறார் இந்த ஆண்டர்சன்!

Posted: 05 Aug 2014 02:57 AM PDT

jadeja

jadejaஇங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய கேப்டன் டோணி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரைப் பார்த்து ஆபாசமாகப் பேசியது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் டோணி, ஆண்டர்சன் இடையிலான சின்ன வாக்குவாதம் குறித்த விவரமும் தெரிய வந்துள்ளது.

இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்கு இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாம். இங்கிலாந்தின் தி மிர்ரர் பத்திரிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஜடேஜாவை மட்டுமல்லாமல் கேப்டன் டோணியையும் கூட ஆண்டர்சன் ஆணவத்தோடும், வாய்த் திமிரோடும் திட்டி, அவமதித்தது தெரிய வந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா மற்றும் ஆண்டர்சன் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் முதலில் ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் ஆண்டர்சன் மீதான புகார்கள் கைவிடப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். அதேபோல ஜடேஜா மீதான புகாரும் கைவிடப்பட்டது.

ஜடேஜா மீதான முதல் நடவடிக்கை மற்றும் ஆண்டர்சன் விடுவிக்கப்பட்டது இந்திய அணியை கடும் கோபத்திலும் அதிருப்தியும் ஆழ்த்தியது. டோணி இதை பகிரங்கிமாகவே விமர்சித்திருந்தார்.

டோணியும் பதிலுக்கு ஆண்டர்சனை விமர்சித்துள்ளார். ஆனால் அவர் ஆபாசமாக பேசவில்லை. மாறாக, இந்திய அணியினர் டிரஸ்ஸிங் ரூம் பக்கம் மட்டும் வந்து விடாதீர்கள். சும்மா விட மாட்டார்கள், நசுக்கி விடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வருத்தம் தெரிவிக்கிறேன்.. ஜெயலலிதா அவதூறுக் கட்டுரை குறித்து ராஜபக்சே!

Posted: 05 Aug 2014 02:51 AM PDT

rajapaksa

rajapaksaதமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பான கட்டுரை வெளியானதற்காக வருத்தப்படுகிறேன். இது எப்படி நடந்தது என்பது குறித்து நான் விளக்கம் கேட்டுள்ளேன் என்று ராஜபக்சே கூறியுள்ளார். ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சேவின் நேரடிப் பொறுப்பில் உள்ள பாதுகாப்புத்துறை இணையதளத்தில், முதல்வர் ஜெயலலிதாவை கேவலமாக சித்தரித்து ஒரு கட்டுரை சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையும், அதற்காக அவர்கள் போட்டிருந்த படமும் மிகவும் கீ்ழ்த்தரமாக இருந்ததால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் மத்திய அரசு வழக்கம் போல மெத்தனமாகவே இருந்தது. ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த்தின் தேமுதிக தவிர அத்தனைக் கட்சிகளும் இலங்கையின் இந்த செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததால் மத்திய அரசு சற்று அசைந்து கொடுத்தது. திமுக தலைவர் கருணாநிதியே கூட மிகக் கடுமையாக இந்த செயலைக் கண்டித்திருந்தார். கடைசி ஆளாக விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து மத்திய அரசு இலங்கையைத் தொடர்பு கொண்டு ஆட்சேபனை எழுப்பியதைத் தொடர்ந்து கட்டுரையை நீக்கியது இலங்கை அரசு. மேலும் மன்னிப்பும் கேட்டது. இருப்பினும் அதிமுக விடவில்லை. தொடர்ந்து மத்திய அரசை உலுக்கி எடுத்து வந்தது. நேற்று நாடாளுமன்றத்தையும் அதிமுக உறுப்பினர்கள் ஸ்தம்பிக்க வைத்தனர். இதையடுத்து நேற்று இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னேவே நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்த விவகாரத்தில் இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடந்ததற்காக வருத்தப்படுகிறேன். இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளேன் என்றார் ராஜபக்சே.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதல்வர் உத்தரவிட முடியாது: விக்னேஸ்வரனுக்கு இலங்கை சுப்ரீம் கோர்ட் குட்டு!

Posted: 05 Aug 2014 02:48 AM PDT

vigneswaran

vigneswaranஇலங்கை வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் தொடர்ந்த வழக்கில் மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தோல்வி அடைந்துள்ளார். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. வடக்கு மகாண முதல்வராக விக்னேஸ்வரன் கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். தனது அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மாகாண ஆளுநரும், தலைமைச் செயலாளரும் இடையூறாக இருப்பதாக விக்னேஸ்வரன் நினைத்தார். இதையடுத்து அவர் சுற்றறிக்கை ஒன்றை மாகாண அரசின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மாகாண ஆளுநரின் முடிவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்காமல், அரசுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை எதிர்த்து தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. அந்த பெஞ்ச் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அரசின் தலைமை செயலாளராக யாரை நியமிப்பது என்பது தேசிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரமும் தேசிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு மட்டுமே உண்டு. மாகாண தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் முதல்வருக்கு கிடையாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இயற்பியல் விதிக்குப் புறம்பான நவீன ராக்கெட் என்ஜின்.. நாசா கண்டுபிடிப்பு!

Posted: 05 Aug 2014 02:44 AM PDT

nasa-impossible-engine

nasa-impossible-engineஅமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், இயற்பியல் விதிகளுக்குப் புறம்பான முறையில் இயங்கும் ஒரு அதி நவீன ராக்கெட் என்ஜினை வடிவமைத்துள்ளனர். சூரிய சக்தியின் மூலமாக இயங்கக் கூடிய இந்தப் புதிய வகை ராக்கெட் என்ஜினை செயல்படுத்த நாசா அனுமதியும் அளித்துள்ளது. இயற்பியல் விதிகளுக்கு எதிராக சூரிய சக்தியின் மூலம் உண்டாக்கப்படும் மைக்ரோவேவ் அலைகளைக் கொண்டு இந்த ராக்கெட் என்ஜின் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பொருளானது உந்து சக்தியால் மட்டுமே, முன்னோக்கி நகர முடியும் என்பது அடிப்படை இயற்பியல் விதியாகும். ஆனால் அதற்கு நேர் மாறாக இந்த புதிய ராக்கெட் என்ஜினின் செயல்பாடு உள்ளது. "இம்பாசிபிள்" என்று இந்த புதிய வகை ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்திற்குப் பெயரிட்டுள்ளது நாசா. அதன் சோதனை ஓட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. நாசாவின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு அறிவியல் உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளிப் பயணங்களில் இந்த புதிய கண்டுபிடிப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புரப்பல்லன்ட் இல்லாமலேயே திரஸ்ட் மூலம் சக்தியை உருவாக்கி அதைக் கொண்டு என்ஜின் இயங்குவது போல இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். இது நிச்சயம் சாத்தியமில்லாத ஒன்றுதான். ஆனால் அதை சாதித்துள்ளது நாசா தொழில்நுட்பம். இது என்ஜினில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கன்டெய்னருக்குள் அதிக சக்தியுடன் சுற்றி வந்து விசையை உருவாக்குகிறது. இது அந்த என்ஜினை இயக்க உதவுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக வங்கி ரூ.1,200 கோடி நிதி!

Posted: 05 Aug 2014 02:27 AM PDT

world-bank-building

world-bank-buildingஎபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ரூ.1,200 கோடி நிதி அளிப்பதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் தாக்கி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியர்ரா லியோன், நைஜீரியா மற்றும் லைபீரியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எபோலா வைரஸ் பரவுவதை தடுக்காவிட்டால் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை நினைத்து நான் கவலைப்படுகிறேன். வைரஸின் விளைவுகளை நான் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அது சுகாதாரத் துறை ஊழியர்கள், குடும்பங்கள், சமூகத்தை அழித்து இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. ஏற்கனவே சுகாதார விஷயத்தில் வலுவில்லாமல் இருக்கும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோனில் எபோலா தாக்குதல் அந்நாடுகளை மேலும் வலுவடையச் செய்துள்ளது. எபோலா வைரஸ் பரவுவதை தடுத்து உலக நாடுகள் உதவி செய்ய முன்வர வேண்டும். வைரஸ் பரவுவதை தடுக்க உலக வங்கி ரூ.1,200 கோடி நிதியுதவி அளிக்கும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க 50 நோய் தடுப்பு நிபுணர்களை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™