Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க 269 யாத்ரீகர்களுடன் 38-வது குழு புறப்பட்டது

Posted: 02 Aug 2014 11:09 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கரடு முரடான மலைப்பாதை வழியாக பயணித்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், 269 யாத்ரீகர்கள் கொண்ட 38-வது குழுவினர் பகவதி நகர் முகாமில் இருந்து இன்று அதிகாலை 4.10 மணியளவில் 9 வாகனங்களில் புறப்பட்டு குகைக் கோயிலுக்கு சென்றனர்.

14 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு – சந்திரசேகரராவ் சந்திப்பு

Posted: 02 Aug 2014 10:57 PM PDT

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்த பின்னர் முதல்– முறையாக ஜனாதிபதி பிராணப் முகர்ஜி நேற்று தெலுங்கானா வந்தார். நால்சார் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்றார். இதற்காக அவர் நேற்று மாலை 3.25 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்து சேர்ந்தார். ஜனாதிபதியை வரவேற்க தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகர ராவ் 30

மூணாறில் கனமழை: ஹெட் ஒர்க்ஸ் அணையில் திடீர் விரிசல்

Posted: 02 Aug 2014 10:54 PM PDT

மூணாறில் பெய்த கன மழையால் ஹெட்ஒர்கஸ் தடுப்பணையின் மேல் பகுதியில் 3 இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மூணாறில் ஜூலை 8 முதல் பருவமழை தீவிரமடைந்த போதும், கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் கொட்டித்தீர்க்கிறது. நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மூணாறில் 10.41 செ.மீ, மழை பதிவானது. இதனால் பாதிப்புகள் இல்லை என்றாலும், பல இடங்களில் சிறிய மண்சரிவு ஏற்பட்டது. மூணாறு காலனி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு டாக்சி டிரைவர் மணி என்பவரின் வீடு சேதமடைந்துள்ளது. முதிரைப்புழை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றுக்காடு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குண்டும் குழியுமான ஓடு பாதை: டயர் வெடித்து 380 பயணிகளுடன் விபத்தில் இருந்து தப்பிய விமானம்

Posted: 02 Aug 2014 10:46 PM PDT

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று காலை 11 மணிக்கு ஜித்தார் நாட்டில் இருந்து 371 பயணிகள் மற்றும் 19 ஊழியர்களுடன் வந்தது. விமான ஓடுதளத்தில் இறங்கியதும் விமானத்தின் இடது புறம் உள்ள டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

கேரளாவில் கனமழை நீடிப்பு: அணைகள் நிரம்புகின்றன

Posted: 02 Aug 2014 10:28 PM PDT

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. மேலும் இதுவரை எதிர்பார்த்த அளவு மழையும் பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு பருவமழை கைவிட்டு விடுமோ? என்று மக்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. திருவனந்தபுரம், கண்ணூர், கோட்டயம், களிபரம்பு, கொச்சி, ஆலப்புழா, மாவேலிகரா, ஆலுவா, சேர்த்தலை போன்ற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

புனே நிலச்சரிவு பலி 87 ஆக உயர்வு: 160 பேர் கதி என்ன?

Posted: 02 Aug 2014 10:23 PM PDT

மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடந்த 30-ம் தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 44 வீடுகள் மண்ணில் புதையுண்டன. வீடுகளில் இருந்த 200-க்கும் அதிகமானவர்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் விளைவாக சேற்றில் புதைந்த நிலையிலும், இடிபாடுகளில் சிக்கிய நிலையிலும் தொடர்ந்து சடலங்கள் மீட்டெடுக்கப்படுகின்றன. இன்று காலை நிலவரப்படி இதுவரை 33 ஆண்கள், 42 பெண்கள், 12 குழந்தைகள் என 87 சடலங்கள்

ஆந்திராவில் டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் பலி

Posted: 02 Aug 2014 10:08 PM PDT

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் காரணமாக பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் 527 பேர் அனுமதிக்கப்பட்டு

திகார் நெருக்கடியை தவிர்க்க டெல்லிக்கு கூடுதலாக 3 புதிய சிறைகள்

Posted: 02 Aug 2014 09:49 PM PDT

நாட்டின் தலைநகரமான டெல்லி குற்றச் சம்பவங்களுக்கும் தலை நகரமாக திகழ்ந்து வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி என நாள்தோறும் டெல்லியில் பல வகையான குற்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பிடிபடும் குற்றவாளிகளும் தலைநகர் டெல்லியில் அடைத்து வைக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு புலனாய்வுப் படை போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். திகார் சிறைகளின் மொத்த கொள்ளளவான 6

டெல்லியில் லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு

Posted: 02 Aug 2014 09:49 PM PDT

வடமேற்கு டெல்லியில் பாலஸ்வா டெய்ரி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம் பெண் இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக ஒரு கார் வந்து அவர் அருகே நின்றது. அதில் நிலபுரோக்கர் சதீஷ் மற்றும் நண்பர்கள்

திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்: துப்பாக்கி சூட்டில் தமிழக வாலிபர் பலி

Posted: 02 Aug 2014 09:38 PM PDT

திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் வனப் பகுதியில் அதிக அளவில் செம்மரங்கள் உள்ளன. இந்த செம்மரங்களை மர்ம கும்பல் வெட்டி சீனா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதை தடுக்க சேஷாசலம் வனப்பகுதியில் 24 மணி நேரமும் ஆந்திர போலீசார் ரோந்து

கோசி நதியில் வெள்ளம்: பீகாரில் 1 லட்சம் பேர் வெளியேற்றம்

Posted: 02 Aug 2014 09:28 PM PDT

இமயமலையில் உள்ள நேபாள நாட்டில் பெய்யும் கனமழை காரணமாக அங்கு உற்பத்தியாகும் கோசி நதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோசி நதி வெள்ளத்தால் அங்கு மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் நிலச்சரிவு மீட்பு பணியை மேற்கொள்வதற்காக கோசி நதிக்கரையை வெடி வைத்து உடைப்பு ஏற்படுத்தினார்கள்.

உம்மன் சாண்டி பற்றி விமர்சித்த நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக கேரள காங். போர்க்கொடி

Posted: 02 Aug 2014 09:20 PM PDT

கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தின் ஆரன்முலா பகுதியில் புதிதாக தனியார் விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்தது. இந்த முடிவினால் ஆரன்முலா பகுதியின் பாரம்பரிய சின்னங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு

பணம் எடுக்க முயன்ற போது ஏ.டி.எம். மையத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Posted: 02 Aug 2014 09:05 PM PDT

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள ஹோலம்பி கலன் கிராமத்தை சேர்ந்தவர் சியாம் நாத்பாண்டே (வயது 35). இவர் பவானா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மதியம் பணம் எடுப்பதற்காக ஹோலம்பி கலன் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்தில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார வயர்

சாதிய உணர்வை தூண்டினார் காந்தி: அருந்ததிராய் பேச்சால் சர்ச்சை

Posted: 02 Aug 2014 08:42 PM PDT

சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தின் 'மகாத்மா அய்யங்காளி இருக்கை' நடத்திய சர்வ தேச கருத்தரங்கில் (கடந்த மாதம் 17-ந் தேதி) கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பாங்கினை தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது" என கூறினார். மேலும் காந்தி பெயரால் அமைந்த நிறுவனங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்து வியாபாரி பலி

Posted: 02 Aug 2014 08:30 PM PDT

டெல்லியின் புறநகர் பகுதியான ஷாஹாபாத் பண்ணையில் மளிகைக்கடை வைத்திருப்பவர், ஜோகேந்தர்(38). டெல்லியில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டை சமாளித்து, கடைக்கு செல்ல வேண்டிய மின்சார சப்ளையை சீரமைப்பதற்காக இவர் இன்வெர்ட்டர் ஒன்றை பயன்படுத்தி வந்தார். நேற்று காலை அந்த இன்வெர்ட்டரில் இருந்த பேட்டரி திடீரென்று வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த ஜோகேந்தரை கடையின் ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், சிக்கிசை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்திய மருத்துவ கவுன்சில் மீது மத்திய சுகாதார மந்திரி கடும் தாக்கு

Posted: 02 Aug 2014 08:25 PM PDT

நாடு முழுவதிலும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பிடம் தங்களது கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும். அதன் பின்னர்தான் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும். இந்த ஆண்டு பல்வேறு குறைபாடுகளைக் கூறி 70-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துவிட்டது. இதற்கான விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.

அமிதாப் பச்சனின் கேள்விக் கணைகளுடன் மீண்டும் கோன் பனேகா க்ரோர்பதி துவங்கியது

Posted: 02 Aug 2014 08:17 PM PDT

பொதுமக்களின் அறிவுத் திறனை பரிசோதித்து, கோடிக்கணக்கான ரூபாயை பரிசாக அள்ளித் தரும் 'கோன் பனேகா க்ரோர்பதி' என்ற நிகழ்ச்சியை கடந்த 2000-ம் ஆண்டு முதல் பிரபல இந்தி தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளராக 2007-ம் ஆண்டு நீங்கலாக தொடர்ந்து 6 முறை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் பங்கேற்று வந்துள்ளார்.

சோனியா குறித்த நட்வர்சிங் கருத்தை ஒப்புக்கொண்ட மணி சங்கர் அய்யர்

Posted: 02 Aug 2014 08:10 PM PDT

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்ட முன்னாள் மத்திய மந்திரி நட்வர்சிங் ''ஒண் லைப் இஸ் நாட் எனப்: ஆன் ஆட்டோபயாகிரபி' (ஒருவாழ்வு போதாது: சுய சரிதை) என்ற பெயரில் தனது சுய சரிதையை எழுதி உள்ளார். இது தொடர்பாக டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "2004-ல் தனது உள்மனம் கூறுவதால் பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சோனியாகாந்தி அறிவித்தார். ஆனால் அதில் உண்மையில்லை. எங்கே தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ்

பெண்களுக்கு கல்வியறிவு-பாதுகாப்பு வழங்கப்படவில்லையென்றால் நாடு முன்னேறமுடியாது: அகிலேஷ் கருத்து

Posted: 02 Aug 2014 04:50 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், பெண்களுக்கு கல்வியறிவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படவில்லையென்றால் நாடு முன்னேறமுடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். தங்கள் அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தேவையான

உயரதிகாரியின் துன்புறுத்தலால் பதவியை ராஜினாமா செய்த கடற்படை பெண் அதிகாரி

Posted: 02 Aug 2014 04:45 PM PDT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினதிலுள்ள கடற்படைக்கான பயிற்சிப் பள்ளியில் பயிற்சியின்போது உயரதிகாரி ஒருவர் தனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பெண் அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். வேலையை அப்பெண் அதிகாரி ராஜினாமா செய்ததால் பயிற்சிக்காக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™