Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் த்ரிஷா!

Posted: 02 Aug 2014 12:59 AM PDT

trisha

trishaதமிழ் சினிமாவின் தொடர்ந்து 10 வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தற்போது இவர் கௌதம் இயக்கும் அஜித் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த பூலோகம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது, இந்நிலையில் மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. சுராஜ் இயக்கும் படத்தில் ரவியுடன் ஏற்கனவே அஞ்சலி நடித்து வரும் நிலையில். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையானை மிஞ்சும் அஞ்சான்!

Posted: 02 Aug 2014 12:56 AM PDT

Anjaan

Anjaanஇந்திய சினிமாவே வியந்து பார்த்த திரைப்படம் கோச்சடையான். இப்படத்தின் எதிர்பார்ப்பு குறித்து நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.

இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து இதுவரை 45 லட்சத்திற்கு மேல் ஹிட்ஸ் வந்துள்ளது, ஆனால் அஞ்சான் திரைப்படம் வெளிவரவேயில்லை, அதற்குள் இப்படத்தின் டீசர் 30 லட்சத்தை தாண்டியுள்ளது.

வரும் காலங்களில் எளிதாக கோச்சடையான் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையை மிஸ் பண்ணுகிறேன் – சமந்தா பேட்டி!

Posted: 02 Aug 2014 12:50 AM PDT

Samantha

Samanthaசமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காதலி என்ற தமிழ் படத்தில் தான். அதன்பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படங்களுக்கு பிறகு தெலுங்கில் அறிமுகமான சமந்தா, அங்கேயே நிறைய படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். தெலுங்கில் அதிக மார்க்கெட் இருப்பதால், சமந்தா தனது தலைமை அலுவலகத்தை ஆந்திராவிலேயே உருவாக்கிவிட்டார். இதையடுத்து சமந்தாவுக்கு சென்னை பிடிக்கவில்லை என்றொரு செய்தி மீடியாக்களில் பரவியிருக்கிறது. இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை தான். என்னுடைய தோழிகள் அனைவரும் சென்னையில் தான் இருக்கின்றனர்.எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும், ஆனால் சென்னை எனக்கு பிடிக்காது என்று பரவி வரும் செய்தி வேடிக்கையாக உள்ளது என்று சமந்தா கூறியுள்ளார். மேலும் சென்னையையும், எனது தோழிகளை அதிகமாக மிஸ் பண்ணுவதாகவும் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி கையால் சம்பளம் பெற்ற நடிகர்!

Posted: 02 Aug 2014 12:44 AM PDT

Rajini

Rajiniஇந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான். இவர் படம் வந்தாலும், வராவிட்டாலும் இவரை பற்றிய செய்திகள் மட்டும் வந்துக்கொண்டே இருக்கும். தற்போது இவர் லிங்கா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் பிரபல சின்னத்திரை நட்சத்திரம் ராஜ்கமல் நடித்தியிருக்கிறார். அவருக்கே சூப்பர் ஸ்டாரே தன் கையால் சம்பளம் கொடுத்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டைட்டானியம் S19 ரூ.8,999 விலையில் ஆன்லைனில் கிடைக்கும்!

Posted: 02 Aug 2014 12:26 AM PDT

Karbonn-Titaniu

Karbonn-Titaniuகார்பன் நிறுவனம் டைட்டானியம் S99 கைபேசியை அறிமுகப்படுத்திய பின்னர், கார்பன் அதன் டைட்டானியம் பிராண்டை விரிவாக்கம் செய்து டைட்டானியம் S19 என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தி ஆன்லைன் சில்லறை வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டு வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முக்கிய கார்பன் வலைத்தளத்தில் டைட்டானியம் S19 பற்றி பட்டியலில் இல்லை என்றாலும், ஒரு ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து ரூ.8,999 விலையில் தற்போது கிடைக்கிறது. இன்னமும், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை.

ஆன்லைன் சில்லறை பட்டியல் படி, கார்பன் டைட்டானியம் S19 இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது.

720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஒரு HD OGS ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 1GB உடன் இணைந்து ஒரு 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

கார்பன் டைட்டானியம் S19 ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா வருகிறது மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.

ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு ஆதரிக்கிறது. டைட்டானியம் S19 ஸ்மார்ட்போனின் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்கள் 3G, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும்.

ஹோம்ஷாப்18 பட்டியலின் படி, கார்பன் டைட்டானியம் S19 ஸ்மார்ட்போன் 2000mAh லி-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது.

கார்பன் டைட்டானியம் S19 போன்றே, கார்பன் ஓபியம் N7 மற்றும் ஓபியம் N9 இரட்டை சிம் ஸ்மார்ட்போன்கள் சென்ற மாத தொடக்கத்தில் ஆன்லைன் சில்லறை வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஓபியம் N7 ரூ. 5,999 (MRP ரூ. 6,390) விலையிலும், ஓபியம் N9 ரூ. 8,999 (MRP ரூ. 9,990) விலையிலும் உள்ளது.

கார்பன் டைட்டானியம் S19 ஸ்மார்ட்போன் விவரக் குறிப்புகள்:

இரட்டை சிம்,

720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஒரு HD OGS ஐபிஎஸ் டிஸ்ப்ளே,

ரேம் 1GB,

1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர்,

எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,

2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,

microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு,

3G,

Wi-Fi 802.11 b/g/n,

ப்ளூடூத் 4.0,

ஜிபிஎஸ்,

ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,

2000mAh லி-அயன் பேட்டரி.

This posting includes an audio/video/photo media file: Download Now

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்!!!

Posted: 02 Aug 2014 12:22 AM PDT

pomegranate

pomegranateசமீபத்தில் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய விந்தணு உற்பத்தி இல்லாததால், ஆண்கள் மலட்டு தன்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர்.

இப்படி போதிய விந்தணு உற்பத்தி இல்லாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை உண்ணும் உணவுகளும், வாழ்க்கை முறையும் தான்.

அதுமட்டுமின்றி, தற்போது ஆண்கள் அதிக வேலைப்பளுவின் காரணமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.

இதுவும் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடக்க ஆரம்பித்தால், அப்போது கெட்ட பழக்கங்களை விட்டு, அப்போது உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.

இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!! அதிலும் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து வந்தால், திருமணத்திற்கு பின் குழந்தை பெற முயற்சிக்கும் போது, எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும், விலை குறைவில் கிடைக்கும் சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம்.

ஆம், டார்க் சாக்லெட் சாப்பிட்டால் விந்தணுவின் உற்பத்தி அதிகரிக்கும். ஏனெனில் அதில் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.

எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டு வாருங்கள். வாழைப்பாத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ப்ரோமெலைன் என்னும் நொதி நிறைந்துள்ளது. இவை ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஆண்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

மாதுளையை சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்தத்தில் உள்ள கெமிக்கலை குறைக்கும். இந்த கெமிக்கலானது விந்தணுவை அழிக்கும் திறன் கொண்டது. எனவே மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், விந்தணு அழிவதைத் தடுக்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அபராதம் ரத்து: தண்டனையில் இருந்து ஆண்டர்சன் தப்பினார்!

Posted: 02 Aug 2014 12:09 AM PDT

ravindra-jadeja-james-anderson

ravindra-jadeja-james-andersonஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்டர்சனுடனான மோதல் விவகாரத்தில் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் ஆண்டர்சனுக்கும் எந்த தண்டனையும் விதிக்கப்படவும் இல்லை. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 50% அபராதம் விதித்தது ஐ.சி.சி. இதற்கு இந்திய அணி கேப்டன் டோணி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் தடையை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக லூயிஸ் விசாரணை நடத்தினார். 6 மணி நேர விசாரணைக்கு பிறகு, ஆண்டர்சன் மற்றும் ஜடேஜா இருவரும் எந்த தவறும் செய்யவில்லை எனவும், இவ்விவகாரத்தில் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த வீரர்களின் அறையின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமிரா அந்த சமயத்தில் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதற்கு பொறுப்பானவர்கள் பல்டி அடித்தனர். போதிய ஆதாரம் இல்லாததால் ஆண்டர்சன் தடையில் இருந்து தப்பி இருக்கிறார். இந்த தீர்ப்பால் இந்திய அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகளிர் குத்து சண்டை: இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்!

Posted: 02 Aug 2014 12:05 AM PDT

pinki-rani

pinki-raniகாமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிருக்கான குத்து சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் இன்று பெண்களுக்கான 48-51கிலோ பிரிவு, குத்துச்சண்டை அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பிங்கி ராணி ஜன்க்ரா மற்றும் வடக்கு அயர்லாந்தின் வால்ஸ் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிங்கி ராணி தோல்வியடைந்தார். மூன்றாம் இடம் பிடித்ததற்காக அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

காஸா மீது இஸ்ரேல் வெறியாட்டம்: ஒரே நாளில் 160 பேர் பலி!

Posted: 01 Aug 2014 11:55 PM PDT

gaza

gazaயுத்த நிறுத்தத்தை மீறி பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ஒரே நாளில் 160 பேர் பலியாகி உள்ளனர். காஸா பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த 3 வார காலமாக இஸ்ரேல் கண்மூடித்தனமாக தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 1,500 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், பிஞ்சு குழந்தைகள். 2 லட்சம் அகதிகள் சுமார் 7 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும்அதிகமானோர் அகதிகளாக ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் அந்த பள்ளிகள் மீதும் ஈவிரக்கமின்றி தாக்குதலை நடத்தி வருகிறது. 3 நாள் யுத்த நிறுத்தம் இந்த தாக்குதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்திய பின்னரும் இஸ்ரேல் அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் 3 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் 160 பேர் பலி ஆனால் யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வெறியாட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 160 பாலஸ்தீனர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளனர். ரஃபா, கான் யூனிஸ் மீது தாக்குதல் காஸாவின் ரஃபா பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 65 பாலஸ்தீனியர்கள், கான் யூனிஸ் பகுதி தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் 51 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், இதனால் இஸ்ரேல் வீரர்களின் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடத்தப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மேலும் ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட இஸ்ரேல் வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐநா மற்றும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தாய்லாந்து பாடகருக்கு 15 ஆண்டு சிறைதண்டனை!

Posted: 01 Aug 2014 11:53 PM PDT

facebook-logo

facebook-logoதாய்லாந்தைச் சேர்ந்த பாடகர் ஒருவருக்கு மன்னராட்சி பற்றிய ஃபேஸ்புக்கில் விமர்சித்ததற்காக 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் 86 வயது அதுல்யாதேஜ் மன்னராக இருக்கிறார். அந்நாட்டு சட்டப்படி மன்னரையோ அவரது குடும்பத்தினரையோ அவமதித்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். இருப்பினும் 28 வயதான தாய்லாந்து பாடகர் ஒருவர் 2010,11ஆம் ஆண்டுகளில் மன்னராட்சியை விமர்சித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அந்த பாடகருக்கு மன்னராட்சியை அவமதித்ததற்காக 15 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத் தீர்ப்பினைத் தொடர்ந்து அந்த பாடகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையின் அவதூறு விவகாரம்! மன்னிப்பு கேட்டதால் முடிந்து போன விடயம்

Posted: 01 Aug 2014 11:48 PM PDT

swamy-mahinda

swamy-mahindaதமிழக முதல்வர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதற்கு இலங்கை மன்னிப்பு கேட்டதால், அந்த விவகாரத்தை முடிந்து போனதாக கருத வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனங்கள் செய்து இலங்கையின் பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் கட்டுரை வெளியாகியிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறுகையில், ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்தை இணையத்தளத்தில் வெளியிட்டதற்காக இலங்கை மன்னிப்பு கேட்டிருப்பதால், இந்த விவகாரத்தை முடிந்து போனதாக கருத வேண்டும். மேலும், இந்திய வெளியுறவுக் கொள்கையில் தமிழக அரசு தலையிட முடியாது என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இஸ்ரேல், பலஸ்தீன படுகொலைகள் தொடர்பில் நவிபிள்ளையின் நிலைப்பாடு என்ன!

Posted: 01 Aug 2014 11:44 PM PDT

Navi-pillai

Navi-pillaiஇஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நிலைப்பாடு என்ன என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காஸா நிலப்பரப்பில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் நவனீதம்பிள்ளை தனது கருத்தை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரச்சார செயலாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுகின்றனவா? பலஸ்தீனத்தில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றனவா? என்பது குறித்து நவனீதம்பிள்ளை தெளிவாக விளக்க வேண்டும்.

உக்ரேய்னில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போர்க்குற்றச் செயல் என நவனீதம்பிள்ளை திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

எனினும், பலஸ்தீன சம்பவங்கள் குறித்து நவனீதம்பிள்ளை மௌனம் காத்து வருகின்றார்.

பலஸ்தீன இஸ்ரேல் மோதல்களில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறவில்லையா என கேள்வி எழுப்புகின்றோம்

பலஸ்தீன விவகாரத்தில் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபுரோவில் சைக்கிளில் சென்றவர் கார் மோதி கொல்லப்பட்டார்!

Posted: 01 Aug 2014 11:41 PM PDT

accident

accidentசைக்கிள் வண்டியில் சென்ற ஒருவர் காரினால் மோதப்பட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நெல்சன் வீதி மற்றும் செப்பேர்ட் வீதி கிழக்கு பகுதிக்கு அண்மையில் நடந்துள்ளது.

ரொறொன்ரோ அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் விபத்திற்குள்ளானவர் 30-வயது மதிக்கத்தக்கவர் என தெரிவித்துள்ளனர்.

அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் மனிதனை சனிபுறூக் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிர்த்துடிப்பிற்கான அறிகுறிகள் இல்லாமல் இருந்ததென போலிசார் தெரிவித்துள்ளனர்.

கார் சாரதி சம்பவம் நடந்த இடத்திலேயே நின்றுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர். விபத்து நடந்த பகுதி போலிசாரின் புலன்விசாரனைக்காக போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சூரியஒளி குளியல் எடுத்து கொண்டிருந்த தாய்க்கு ஏற்பட்ட அவமானம்!

Posted: 01 Aug 2014 11:37 PM PDT

mom

momகனடா-அல்பேர்ட்டாவைச் சேர்ந்த 33-வயதுடைய, 5-பிள்ளைகளின் தாயார் ஒருவர் நீச்சல் உடையில் கடற்கரையில் சூரிய ஒளி குளியல் எடுத்தக்கொண்டிருந்த சமயம் மூவர் தன்னை அவமானப்படுத்தியதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தான பொது இடத்தில் அவமானப் படுத்துப்பட்டதாக கூறியுள்ளார். 13-வருடங்களிற்குப் பின்னர் இவர் வெளியே சென்று சூரியஒளி குளியலை எடுக்க முயன்றதாகவும் அச்சமயம் 2-ஆண்களும் 1-பெண்ணும் தன்னை சுட்டிக்காட்டி பரிகசித்து சிரித்ததோடு உதைப்பது போல் பாசாங்கு செய்ததாகவும் கூறியுள்ளார். Tanis Jex-Blake என்ற இவர் தனது உடம்பின் படம் ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டு பெயர் இடப்படாத அந்த மூவருக்கும் ஒரு பகிரங்க கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். கடிதம் என்ன நடந்ததென்பதை விளக்கியுள்ளது. "நான் 13-வருடங்களின் பின்னர் எனது முதல் நீச்சல் உடையில் சூரியஒளி குளியல் உங்களிற்கு அருவருப்பை ஏற்படுத்தி இருந்தால் நான் வருந்துகின்றேன். எனது வயிறு தட்டையாக மற்றும் இறுக்கமாக இல்லாததற்கு நான் வருந்துகின்றேன். எனது தொப்பையில் இழுபட்ட அடையாளங்கள் காணப்படுவதற்கும் நான் வருந்துகின்றேன். எனது உடல் 5-அற்புதமான, ஆரோக்கியமான மற்றும் அறிவார்ந்த மனிதர்களை வைத்திருந்து வளர்த்து பாதுகாத்ததற்கு நான் வருந்தவில்லை. ஆனால் உங்களை பார்த்து உங்கள் உடல் எத்தகைய அற்புதமான சாதனையை செய்து கொண்டிருக்கின்றதென என்னால் நினைக்க தான் முடியும்." தன்னை பரிகாசம் செய்தபோது தான் எதிர்த்து செயல்படவில்லை என்று கூறினார். வீட்டிற்கு திரும்பிச் செல்லும் போது உடைந்து போய்விட்டார். "எனது நாளை பாழாக்கியதற்கு நன்றி. உங்களைப்போன்ற மக்கள் இந்த உலகத்தை ஒரு அசிங்கமான வெறுக்கத்தக்க இடத்திற்கு தள்ளிவிடுவார்கள். நீங்கள் எல்லோரும் எனது அடையாளங்கள் பெருமைக்குரியவை வெட்கப்படவேண்டியவை இல்லையென ஒரு நாளைக்கு உணர்வீர்கள்." என தெரிவித்துள்ளார். இவரது படமும் கடிதமும் 3,000 தடவைகள் பகிரப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் Jex-Blake ற்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™