ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே'
- பெரியது எது....
- இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- எரிகிற வீட்டில
- வானத்து உணவு ?
- அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது
- இதுவும் உங்க ஃபைனான்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம்தான்..
- இன்றைய சிந்தனை துளிகள்
- மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!
- நெய் நல்லதா? வெண்ணெய் கெட்டதா?
- பாம்புடன் உணவு உண்டு, படுத்து தூங்கும் சிறுமி!
- மனிதருள் மாணிக்கங்கள்
- சிந்திக்க வைத்த கதை.....இப்படியும் நடக்கும்..
- எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்
- சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம்
- விண்ணப்பங்களுக்கு தீர்வு காண 'அம்மா மக்கள் சேவை மையம்'!
- ஆஸ்துமா அறிகுறிகளை அறிவோம்!
- 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
- இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு போர்க்கப்பல் - ஐ.என்.எஸ். கொல்கத்தா
- முன்கோபம் முட்டாள் தனம்
- உலகச் செய்திகள்!
- இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இறுதி ரிப்போர்ட்
- இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
- உதவி
- தொடத் தொடத் தொல்காப்பியம் (286)
- துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு)
- திருநாள்
- வீட்டு மனை பிரச்சினை -சட்டபூரவமாக யாரிடம் புகார் கொடுக்க வேண்டும்?
- உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்
- திருக்குறள் காவியம்
- தமிழக தேர்தல் முடிவுகள் 2014
- வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம்
- கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி!
| மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே' Posted: 08 Aug 2014 12:17 PM PDT 'மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே' மண் குதிரைன்னு தெரிஞ்சபிறகு, எவனாச்சும் அதை நம்பி ஆத்துல இறங்குவானா? பிறகெதுக்கு இப்படி சொல்றாங்க? அப்படி கேளுங்க... அதாவது, ஆத்துக்கு நடுவுல அங்கங்க திட்டுத்திட்டா மண் மேடு இருக்கும் . இந்த மேடுகள 'குதிர் 'னு சொல்வாங்க. 'மேடு' தானேன்னு போய் அதுல காலை வைச்சா... அவ்வளோதான், அப்படியே உள்ள போயிடும். அந்தளவுக்கு பலமில்லாதது அந்த மேடுங்க. அதுக்காக 'மண் குதிர நம்பி ஆத்துல இறங்காத'னு சொல்லி வெச்சத்துதான்... மண்ணு குதிரைனு பறக்க ஆரம்பிச்சுடுச்சு. |
| Posted: 08 Aug 2014 12:14 PM PDT பெரியது எது.... வேடன் ஒருவன் தன்னுடைய வேட்டை நாயைக் கூட்டிகிட்டு வேட்டைக்குப் போனான். காட்டில் ஒரு முயலைப் பார்த்தார்கள். வேடன் அந்த நாயிடம் சொன்னான், "நீ ஓடிப் போய் அந்த முயலைப் பிடித்து உன்னுடைய உணவாக்கிக் கொள்" என்று. நாய் வேகமாக முயலைத் துரத்திகொண்டு ஓடியது. ஆனால் முயல் அதை விட வேகமாக ஓடி, வேட்டை நாயிடமிருந்து தப்பி சென்றுவிட்டது. தோல்வியுடன் திரும்பி வந்த நாயைப் பார்த்து வேடன் கேலி செய்தான். "உனக்கு வேகமாக ஓடி, இரையைப் பிடிக்க கொடுத்த பயிற்சியெல்லாம் என்ன ஆச்சு?, ஒரு சின்ன முயலிடம் ... |
| இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது Posted: 08 Aug 2014 12:12 PM PDT நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது என்று கேட்டபோது... இஸ்லாத்திலேயே சிறந்த செயல் பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் முதலில் சலாம் சொல்வதும் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையை கடை பிடிக்கும் வண்ணமாக சவூதி அரேபியாவின் மன்னராக ஃபைசல் அவர்களின் காலத்தில் (வருடம் 1972) அச்சடிக்கப்பட்டநாணயம் இது. இதில் ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று அரபியில் ... |
| Posted: 08 Aug 2014 12:03 PM PDT ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| Posted: 08 Aug 2014 11:55 AM PDT அன்பே....!! உங்க மடியில் தலை வைத்துள்ள போதே என் உயிர் போயிடனும்!! என் ஆசையும் அதுதான் கண்ணே...... எரிகிற வீட்டில 5 பேரை துாக்கி தீயிலிருந்து காப்பாற்றியதுக்காகவா உன்னை கைது செஞ்சாங்க? ஆமாம்.. நான் வெளியே துாக்கிப் போட்டவங் எல்லாம் தீயணைப்பு வீரர்களாம்... காதலியிடமும், மனைவியிடமும் எதை மறைக்கனும் சார்?ஃ காதலிகிட்ட மனைவியை மறைச்சிடு, மனைவிக்கிட்ட காதலிய மறைச்சிடு. சர்வர், கஸ்டமரோடு என்ன தகராறு? சிக்கல் இல்லாத இடியாப்பம் ஒரு பிளேட் வேணும்" ன்னு கேட்டார்.. முதலாளி!! |
| Posted: 08 Aug 2014 10:44 AM PDT கீதை 15 : 2 கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் மற்றும் பலவாறாக விரிந்து பரந்த அதன் கிளைகள் ஜட இயற்கையின் முக்குணங்களாகும் . அதிலிருந்து கீழ்நோக்கிய சிம்புகளும் விழுதுகளும் உலகியல் ஆதாய செயல்களால் பந்தப்பட்டு நிற்பவையாகும் . வேதமரத்தின் ஒரு தன்மை – அதாவது பரத்தை நோக்கிய தன்மை – சத்வ குணம் - முந்தய சுலோகத்தில் விளக்கப்பட்டது . ஆனால் அதே மரத்தின் எஞ்சிய குணங்களும் இந்த சுலோகத்தில் விளக்கப்படுகின்றன . ரஜோ மற்றும் தமோ குணங்களால் உலகியல் ஆதாய செயல்பாடுகளில் ஆர்வமும் பந்தமும் உள்ளவைகளாக கீழ்நோக்கிய ... |
| அம்மா தியேட்டர் - 25 ரூபாயில் குளு குளு ஏசி தியேட்டர்கள் - டிசம்பரில் வருகிறது Posted: 08 Aug 2014 10:29 AM PDT இன்றைய தேதியில் ஒரு தியேட்டருக்கு நாலுபேர் சேர்ந்தாற்போல் படம் பார்க்கப் போனால் குறைந்த பட்சம் 1,000 ரூபாயாவது அழ வேண்டியிருக்கு. அடிப்படை வசதிகள் இல்லாத தியேட்டர்களுக்குப் போனால் கூட 500 வரை செலவாகும். இதனால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. அதுபோக சின்ன பட்ஜெச் படங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்களை தருவதில்லை. இதனால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்து உள்ளாகின்றனர். விட்டால் ... |
| இதுவும் உங்க ஃபைனான்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.. Posted: 08 Aug 2014 10:26 AM PDT தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக... 1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine 2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine 3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine 4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine 5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை ... |
| Posted: 08 Aug 2014 10:25 AM PDT இன்றைய சிந்தனை துளிகள் தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக, தலையால் நடப்பதைப் போன்றது... புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது... வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது... பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்ப்பதால், நம்முடைய துன்பங்களை சகிக்க கற்றுக்கொள்கிறோம்... மனிதனின் ஆசைக்கு அளவில்லை, அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை... |
| மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்! Posted: 08 Aug 2014 10:24 AM PDT 1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. 2. நன்றாகத் தூங்குங்கள் நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் ... |
| நெய் நல்லதா? வெண்ணெய் கெட்டதா? Posted: 08 Aug 2014 10:18 AM PDT நாம் எல்லோரும் கொலஸ்ட்ரால் என்ற கொடிய அரக்கனை பார்த்து பயப்படுகிறோம். இதில் இருந்து தப்ப நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தவிர்க்கிறோம். இவைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உருவாகி விட்டதால் இவற்றை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதே உண்மை. வெண்ணெய், நெய் இரண்டும் பால் பொருட்கள். பிறந்தவுடன் குழந்தைகளும், விலங்குகளும் தாய்ப்பாலைத்தான் முதலில் அருந்துகின்றன. அவர்களுக்காகவே படைக்கப்பட்ட உணவு பால். குழந்தைகள் நன்றாக வளர்வதற்கான அனைத்து சத்துக்களும் பாலில் உள்ளன. பாலின் வகைகள் : பகல் முழுவதும் ... |
| பாம்புடன் உணவு உண்டு, படுத்து தூங்கும் சிறுமி! Posted: 08 Aug 2014 10:07 AM PDT இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு, ஒரே படுக்கையில் படுத்து வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் பல முறை பாம்பிடம் கடி வாங்கியுள்ளார். இவரது தந்தை பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு இதில் ஆர்வம் வந்துள்ளது. இவரது தந்தை தற்போது இவரின் அண்ணணுக்கு இந்த தொழிலை கற்றுக் கொடுத்துவிட்டு ... |
| Posted: 08 Aug 2014 10:05 AM PDT ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க மனிதருள் மாணிக்கங்கள் தோன்றினார்கள். மத தத்துவங்களால் மனித மனங்களை புனிதப்படுத்தினார்கள் மகான்கள். மனித சமுதாய தேவைகளை கண்டுபிடிப்புகளின் வழியே நிறைவேற்றி முன்னேற்றம் ஏற்பட செய்தனர் விஞ்ஞானிகள். அரசியல் தொண்டறம் புரிந்து மாற்றங்களை உருவாக்கினார்கள் சீர்திருத்தவாதிகள். இவர்களின் போதனைகள், கண்டுபிடிப்புகள், கொள்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊடுருவி நிற்பதால் அவர்கள் என்றும் மறக்கக்கூடாதவர்களாகிறார்கள். மகான்கள், விஞ்ஞானிகள், ... |
| சிந்திக்க வைத்த கதை.....இப்படியும் நடக்கும்.. Posted: 08 Aug 2014 09:56 AM PDT சிந்திக்க வைத்த கதை.....இப்படியும் நடக்கும்.. "ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒரு வார காலம் இருந்தது. மேலும், அது சுலபமான பேப்பர் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாச ஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது. அப்போது ஒரு நண்பன், "கிளைமேட் ... |
| எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Posted: 08 Aug 2014 09:54 AM PDT 'எபோலா' நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை என்றும், எனவே யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார். ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் 'எபோலா' எனப்படும் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோயால் சுமார் 1,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. ... |
| சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் Posted: 08 Aug 2014 09:53 AM PDT தமிழ்நாட்டில் அரசே இலவச கியாஸ் அடுப்புகள் கொடுத்த பிறகு தமிழ்நாட்டில் சமையல் கியாஸ் பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஒருகாலத்தில் வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே பயன்படுத்தி வந்த சமையல் கியாஸ் அடுப்புகள் இன்று அரசாங்கத்தின் கருணை பார்வையால் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களிலும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. தமிழ்நாடு முழுவதும், இந்தியன் ஆயில் நிறுவனத்தால் மட்டும் ஒரு கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இவர்களில் ... |
| விண்ணப்பங்களுக்கு தீர்வு காண 'அம்மா மக்கள் சேவை மையம்'! Posted: 08 Aug 2014 09:50 AM PDT சென்னை: குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், 'அம்மா மக்கள் சேவை மையம்' நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், "அலுவலர்கள் அலுவல் நிமித்தமாக வெளி இடங்களுக்கு சென்றுவிடும் நேர்வில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலுவலர்களை சந்திக்க இயலாமல் போய்விடுகிறது. ... |
| Posted: 08 Aug 2014 09:43 AM PDT அவஸ்தையின் மறுபெயர் ஆஸ்துமா. மூச்சுக் குழாயின் உட்சுவர் வீக்கம் அடைதல் மற்றும் சளியை அதிக அளவில் சுரத்தல் போன்ற காரணங்களால் மூச்சுக்குழாயின் பாதை சுருங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதையே ஆஸ்துமா என்கிறோம். இதனால், இருமல், வீசிங் பிரச்னையும் ஏற்படுகிறது. சிலருக்கு இந்தப் பிரச்னை எப்போதாவது ஏற்படலாம். வேறு சிலருக்கோ இது வாழ்வையே பாதிக்கக்கூடிய, உயிரைப் பறிக்கக்கூடிய அளவு மிகக் கடுமையானதாக இருக்கும். ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், டாக்டரிடம் சென்று தொடர் மருத்துவ ஆலோசனையின்படி ... |
| 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014 Posted: 08 Aug 2014 09:40 AM PDT நகரம்: இஞ்சியோன், தென் கொரியா குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் துவக்க விழா : செப்டம்பர் 19 நிறைவு விழா : அக்டோபர் 4 முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் ... |
| இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு போர்க்கப்பல் - ஐ.என்.எஸ். கொல்கத்தா Posted: 08 Aug 2014 09:36 AM PDT இந்திய கடற்படைக்கு ஒரே நேரத்தில் 16 ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட 'ஐ.என்.எஸ். கொல்கத்தா' போர்க்கப்பல் சேர்க்கப்படுகிறது. இந்த போர்க்கப்பலை வருகிற 16-ந் தேதி மும்பையில் நடை பெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தியாவில் 'ஐ.என்.எஸ். கொல்கத்தா' என்ற வலிமைவாய்ந்த போர்க்கப்பல் உள்நாட்டு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. 16 ஏவுகணைகளை ஏவலாம் புதிய போர்க்கப்பல் 6 ஆயிரத்து 800 டன் எடை கொண்டது. மும்பையில் மஜகாவ் டக்யார்டு லிமிடெட் என்ற நிறுவனம் போர்க்கப்பல் கட்டும் ... |
| Posted: 08 Aug 2014 09:35 AM PDT முன்கோபம் முட்டாள் தனம் ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர். அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது. நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் ... |
| Posted: 08 Aug 2014 09:32 AM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இறுதி ரிப்போர்ட் Posted: 08 Aug 2014 09:22 AM PDT காஸாவில் நடைபெற்று வந்த போர், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. உயிர் இழப்புகள்: இஸ்ரேல்: 64 ராணுவ வீரர்கள், 3 சிவிலியன்கள் ஹமாஸ் (Hamas): 300 வீரர்கள், 1600 சிவிலியன்கள். போர் தொடக்கத்தில் ஹமாஸிடம் 10,000 ராக்கெட்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இதில் 3000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவபட்டன. அதில் வெறும் 3% மட்டுமே இஸ்ரேலின் இரும்பு டோமை(Iron dome)த் தாண்டி இஸ்ரேல் உள்ளே விழுந்தன. 97% ராக்கெட்டுகள் இரும்பு டோமால் தடுக்கப்பட்டன. மீதம் இருந்தவற்றில் 3000 ராக்கெட்டுகள், இஸ்ரேலிய ... |
| இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான் Posted: 08 Aug 2014 09:17 AM PDT இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் இந்தியா–பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள செனாப் ஆற்றில், நேற்று காலையில் 4 எல்லை பாதுகாப்பு வீரர்கள் படகின் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்னூர் அருகே ஒரு குறுகலான வளைவு பகுதியில் சென்ற போது, படகின் என்ஜின் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை மீட்க மற்றொரு படகில் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் சத்யஷீல் யாதவ் என்ற வீரர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். மற்ற ... |
| Posted: 08 Aug 2014 09:14 AM PDT என் பெயர் முருகன் நான் ஈகரை தளத்தில் புதியவராக இணைந்துள்ளேன் நான் ஆன்லைன் வேலைகளின் மூலம் பணம் பெற்ற ஆதாரத்தினை வெளியிட விரும்புகிறேன் நான் எந்த டாபிக்கில் வெளியிடுவது என்று எனக்கு சொல்லுங்கள் |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (286) Posted: 08 Aug 2014 07:57 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... (தொடர் பதிவு) Posted: 08 Aug 2014 06:00 AM PDT - மாலா : துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா? - கீதா : என்னோட மாமியாருக்கு துன்பம் வரும் போது நான் சிரிப்பேன். - ---------------------------------- |
| Posted: 08 Aug 2014 05:01 AM PDT திருநாள் ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா? |
| வீட்டு மனை பிரச்சினை -சட்டபூரவமாக யாரிடம் புகார் கொடுக்க வேண்டும்? Posted: 08 Aug 2014 03:20 AM PDT நாங்கள் 3 பேர் வாங்கிய மனையில் எங்களின் உபயோகத்திற்காக மட்டும் ஏற்படுத்திக்கொண்ட பாதையை இதில் எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் பயன்படுத்த முடியுமா? இது சம்பந்தமாக சட்டபூரவமாக யாரிடம் புகார் கொடுக்க வேண்டும்? |
| Posted: 08 Aug 2014 02:42 AM PDT உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள் 1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்.... 2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு ... |
| Posted: 08 Aug 2014 01:57 AM PDT இசை வடிவில் 1330 திருக்குறளையும் கேட்டு மகிழுங்கள்! MP3 யாகத் தரவிறக்கம் செய்ய! http://eegarai.com/mp3/Thirukkural/thirukkural_kaviyam_158MB.mp3 158MB 64 bitrate http://eegarai.com/mp3/Thirukkural/thirukkural_kaviyam.mp3 476MB 192 bitrate |
| Posted: 08 Aug 2014 01:40 AM PDT வடசென்னை தொகுதி வடசென்னை தொகுதியில் 40 வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 40 பேர் போட்டியிட்டனர். அவர்கள் பெற்ற இறுதி ஓட்டு விவரம் வருமாறு:– 1. டி.ஜி.வெங்கடேஷ்பாபு (அ.தி.மு.க.)– 4,06,704 2. வக்கீல் ஆர்.கிரிராஜன் (தி.மு.க.)– 3,07,00 3. எம்.சவுந்திரபாண்டியன் (தே.மு.தி.க.)– 86,989 4. பிஜூ சாக்கோ (காங்கிரஸ்)– 24,190 5. உ.வாசுகி (மா.கம்யூ)– 23,751 6. எஸ்.சீனிவாசன் (ஆம் ஆத்மி)– 6,819 7. ஜெ.ஜனார்த்தனன் (பகுஜன்சமாஜ்)– 4,960 8. எம்.நிஜாம் ... |
| வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் Posted: 08 Aug 2014 01:18 AM PDT புத்தக அறிமுகம் VaNdamizhil Vaazhviyal Sadanggugal – Life Rituals in Tamil - ஆங்கிலப்புத்தகம் (வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்) ஆசிரியர் : Senthamizh Vaylvi Chadhuarar M.P.Saththiyavayl Muruganaar வெளியீடு : தெய்வத் தமிழ் அறக்கட்டளை பக்கங்கள் : 484 நம்முடைய தமிழ்க்கலாச்சாரத்தில் சடங்கு என்ற ஒன்று இன்றியமையாதது. எந்த ஒரு நிகழ்வுக்கும் சடங்கு / விழா இல்லாமல் இருந்ததில்லை. அவற்றுள் ஒவ்வொரு குலத்திற்கும் அல்லது ஊருக்கும் என்று தனிப்பட்ட முறைமைகள் உண்டு. எதையும் ஊருடன், சுற்றத்துடன் கூடி ... |
| கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி! Posted: 08 Aug 2014 12:39 AM PDT ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார். ஒளவையார் கோயில்கள் நாஞ்சில் நாட்டு நாவல் மர சோலைகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் தாடகை மலையடிவாரத்தில் (தோவாளை பகுதியில்) காணப்படும் தாழக்குடி ஒளவையாரம்மன் கோயிலும் அழகிய பாண்டிபுரம் பகுதியில் ஐந்துகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிச் செவ்வாய்களில் ஒளவையாரம்மன் கோயில்கள் விழாக்கோலம் பெறுகின்றன. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |