Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அங்கீகாரம் இல்லாமல் 1,000 தனியார் பள்ளிகள்...தவிப்பு:நில பற்றாக்குறை பிரச்னைக்கு அரசு தீர்வு எப்போது?

Posted:

தமிழகத்தில், நில பற்றாக்குறை பிரச்னையால், கடந்த 2011ல் இருந்து, அங்கீகாரம் இல்லாமல், 1,000 தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன. இந்த பள்ளிகள் மீது, எவ்வித முடிவும் எடுக்காமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கான, குறைந்தபட்ச நில பரப்பளவு குறித்து, தமிழக அரசு, ஒரு அரசாணையை வெளியிட்டது.அதில், 'மாநகராட்சி பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு, மாவட்ட தலைநகர் பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு, நகராட்சி பகுதி எனில், 10 கிரவுண்டு, பேரூராட்சி பகுதியாக இருந்தால், ஒரு ஏக்கர் மற்றும் ஊராட்சி பகுதியாக இருந்தால், மூன்று ஏக்கர் நிலமும், ...

லோக்சபாவில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்...கூத்து:'அம்மா' புகழ் பாடாமல் எதுவும் பேசுவதில்லை

Posted:

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில், தாங்கள் வாசிக்கும் எந்தவொரு உரையிலும், முடிந்த வரையில் அதிக முறை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடுவதிலும், புகழ்வதிலும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடையே போட்டி காணப்படுகிறது. இதனால், தமிழக சட்டசபையைப் போல,பார்லிமென்டிலும் முதல்வர் பெயர் அடிக்கடி கேட்கிறது.லோக்சபாவில் இந்த முறை, மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள, அ.தி.மு.க.,வில், மூன்று பேர் மட்டுமே பழைய எம்.பி.,க்கள்; மற்ற அனைவரும் புதுமுகங்கள். இவர்கள் அனைவருக்கும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் தான், முதல் பார்லிமென்ட் ...

கோட்டை விட்ட தி.மு.க.,:கொடி நாட்டிய அ.தி.மு.க., :பார்லி.,யில் கிடைத்தது கீழ்தள அலுவலகம்

Posted:

பார்லிமென்ட் வரலாற்றில் முதன்முறையாக, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிக்கு கீழ்தளத்தில் அலுவலக அறை கிடைத்துள்ளது. வாய்ப்பு இருந்தும், 10 ஆண்டுளாக தி.மு.க., தவறவிட்ட கவுரவத்தை, ஒருவழியாக அ.தி.மு.க., மீட்டெடுத்துள்ளது.பார்லிமென்டின் நீள்வட்ட கீழ்தளப் பாதையில் பிரதமர், சபாநாயகர், ராஜ்யசபா தலைவர், முக்கிய அமைச்சர்கள் ஆகியோருக்கு, அலுவலகங்கள் உள்ளன. பா.ஜ., - காங்., - தெலுங்கு தேசம் ஆகியகட்சிகளுக்கும் அலுவலகங்கள் உள்ளன.பலத்திற்கு ஏற்ப...:ஒவ்வொரு முறை புதிய லோக்சபா அமைக்கப்படும் போது, எம்.பி.,க்களின் பலத்திற்கு ஏற்ப, கட்சிகளுக்கு அலுவலக ...

பி.எஸ்.என்.எல்.,ஐ காப்போம்: அமைச்சர் ரவிசங்கர் அறிவிப்பு

Posted:

புதுடில்லி:''பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை சாக விடமாட்டோம்; அதை புத்துயிர் பெற வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,'' என, ராஜ்யசபாவில், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறினார்.அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:கடந்த 2000த்தில் துவக்கப்பட்ட, அரசுக்கு சொந்தமான, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மோசமான நிதி நிலைமையால், போட்டியை சமாளிக்க முடியாமல் தள்ளாடுகிறது. போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, முந்தைய ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்படாததே இதற்கு காரணம். இந்த நிறுவனத்தின் முந்தைய பெருமையை மீட்டுக் கொண்டு வருவோம். ...

எதிர்க்கட்சி தலைவர் பதவி கோரிய மனு தள்ளுபடி

Posted:

புதுடில்லி:'லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, காங்கிரசுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட, பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. பொதுநல வழக்கு என்ற பெயரில், அரசியல் பிரச்னைகளுக்கு, உச்ச நீதிமன்றம் தீர்வு காண முடியாது என்றும் கூறியுள்ளது.10 சதவீதம் அவசியம்:லோக்சபா மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையில், 10 சதவீதத்தை கொண்டுள்ள, அதாவது, 55 உறுப்பினர்களை உடைய கட்சிக்கே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும். ஆனால், தற்போதைய லோக்சபாவில், காங்கிரசுக்கு 44 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர். அதனால், ...

டெண்டுல்கர், நடிகை ரேகா சபைக்கு வராததற்கு எதிர்ப்பு

Posted:

புதுடில்லி:ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,க்களான, கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர், சினிமா நடிகை, ரேகா ஆகியோர், சபைக்கு அதிக நாட்களாக வராமல் இருப்பதற்கு, எம்.பி.,க்கள் கவலை தெரிவித்தனர்.ராஜ்யசபாவில் நேற்று, இது குறித்து கேள்வி எழுப்பிய, மார்க்சிஸ்ட் எம்.பி., ராஜிவ், ''தொடர்ந்து பல நாட்களாக இவர்கள் சபைக்கு வராமல் இருக்கின்றனரே... இதற்கு சபை தலைவரிடம் அனுமதி பெற்றுள்ளனரா?'' என்றார்.அதற்கு பதிலளித்து, சபையின் துணைத் தலைவர், பி.ஜே.குரியன் கூறியதாவது:ஒரு எம்.பி., 60 நாட்கள் பார்லிமென்டுக்கு வராமல் இருந்தால், அவரின் இடம் காலியாக இருப்பதாக ...

தமிழக பா.ஜ., புதிய தலைவர் யார்? தேசிய செயற்குழு உறுப்பினர் பேட்டி

Posted:

''தமிழக பா.ஜ., தலைவர் யார் என்பது குறித்து, நாளை நடக்க இருக்கும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் வேதா சுப்ரமணியன், நேற்று தெரிவித்தார்.பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், இன்று டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, தமிழக பா.ஜ., நிர்வாகிகள், 23 பேர், செயற்குழு உறுப்பினர்கள், 39 பேர் என, மொத்தம், 62 பேர், நேற்று, டில்லி புறப்பட்டுச் சென்றனர்.அவர்களுடன், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் வேதா சுப்ரமணியனும் சென்றார்.சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: நரேந்திர மோடி பிரதமராகவும், ...

அரசு திட்டங்களை செயல்படுத்த பன்னாட்டு ஒப்பந்தம்: ஜெ., அறிவிப்பு

Posted:

சென்னை:''அரசு திட்டங்களைசெம்மையாக செயல்படுத்த, பன்னாட்டு நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதாஅறிவித்து உள்ளார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:அரசுத் துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்க, 'தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் அமைப்பு' ஏற்படுத்தப்படும். அரசுத் துறை மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில், இந்த அமைப்பு செயல்படுத்தப்படும்.இதற்காக, மாநில புத்தாக்க நிதியம் உருவாக்கப்படும். இதற்கு, ஆண்டுதோறும், 150 கோடி ரூபாய் வழங்கப்படும். சிறந்த புத்தாக்க முயற்சிகளுக்கு, முதல்வரின் ...

100அடியை எட்டியது மேட்டூர் அணை

Posted:

மேட்டூர்:நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 100 அடியை எட்டியது. இதனால், வரும், 15ம் தேதிக்கு முன், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.உபரி நீர் :காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பிஉள்ளன. இவற்றின் உபரி நீர், காவிரியில் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த, 17ம் தேதி, 47 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 100 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு, 65 டி.எம்.சி.,யாக உள்ளது.சிறப்பு பூஜை :நீர்மட்டம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™