Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மும்பை மருத்துவமனையில் டி.ஆர்.பாலு அனுமதி
- வைகோவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
- மதுபான விற்பனை மூலம் ரூ.21,641 கோடி வருவாய்: தமிழக அரசு தகவல்
- கட்டுமானத் தொழிலாளர்கள் நலன் காக்க சட்டத் திருத்த மசோதா தாக்கல்
- 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்
- தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் மரணம்: தா.பாண்டியன் இரங்கல்
- ஆயுள் சிறைக் கைதி கொலை: புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ்
- துணைவேந்தர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம்: பேரவையில் மசோதா தாக்கல்
- இந்த நாளில் அன்று ( 9.8.1958); அத்தியாவசிய சர்வீஸ்களில் வேலை நிறுத்தங்கள் தடைசெய்யப்படும்; லோக சபையில் ஸ்ரீ பந்த் அறிவிப்பு
- வேண்டாம் புகையிலைப் பொருள்கள்...
- தமிழரென வாழ்ந்திடுதல் நன்றோ?
- இழப்பு இயற்கைக்கு அல்ல!
- சென்னையில் ரூ.1,101 கோடியில் வடிகால்கள்
- மகளிர், குழந்தைகளின் விடுதிகளை உரிமம் இன்றி நடத்தினால் சிறை
- டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அறிவிப்பு
- ஏழ்மை நிலையிலுள்ள 750 விவசாயிகளுக்கு பண்ணை முறையை ஊக்குவிக்கும் திட்டம்
- பேரவையிலிருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,000 கோடி வங்கிக் கடன்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
- "பூரண மது விலக்கை அமல்படுத்த முடியாது'
- "ரூ.1,672 கோடியில் 6 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்'
- பி.எட்.: இரு ஆண்டுகளாக அதிகரிக்கத் திட்டமா? அமைச்சர் விளக்கம்
- சட்ட விரோதமாக போராட்டம்:அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன்
- ஆபத்தான நிலையில் ஜஸ்வந்த் சிங்
- மக்களவையில் தமிழில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன்
- ரக்ஷô பந்தன்: 600 தடவை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை
- "சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவாக பிரசார இயக்கம்'
- நீதிமன்ற உத்தரவுகுப் பிறகு பேட்டரி ரிக்ஷாக்களை இயக்க நடவடிக்கை: கட்கரி
- தில்லி போலீஸார் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்
- தெற்கு தில்லி மாநகராட்சியில் துப்புரவு வாரம் தொடக்கம்
- தில்லி தமிழ்ச் சங்கத்தின் ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிகள்
- தனியார் ஆலையில் தீ
- தில்லி: "கொசு ஒழிப்பு ரயில்' தொடக்கம்
- வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்தது மத்திய அரசு
- தமிழகத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படுமா?
- வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை
- வரலட்சுமி நோன்பு: கோயில்கள், வீடுகளில் கோலாகலம்
- சென்னை கார் ஓட்டுநர் கொலை: கள்ளக்காதலி மாமல்லபுரத்தில் கைது
- நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல்: ஆகஸ்ட் 11-இல் வேட்புமனு தாக்கல்
- பீரோவை உடைத்து 29 பவுன் நகைத் திருட்டு
- கட்டட வடிவமைப்பாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
- 170 மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள்
- ஒரத்தி - வேப்பங்கரணை சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
- பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு
- செங்கல்பட்டில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- மணல் திருட்டு: மாட்டு வண்டிகள் பறிமுதல்
- கொலை வழக்கு: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
- பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம்
- சவுடு மண் திருட்டு:டிராக்டர் பறிமுதல்
- கைப்பந்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
- தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்
- அனைவருக்கும் இலவசக் கல்வி: விடுதலைச் சிறுத்தைகள் பேரணி
- ஓய்வூதியர்கள் நேர்காணல்:ஆக. 20 வரை நீட்டிப்பு
- ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
- தெரு விளக்குகள் இன்றி இருளில் மூழ்கிய சாலை
- மரப் பொருள்கள் தயாரிக்கும் கடையில் தீ விபத்து
- டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா
- அம்மா' திட்ட முகாம்:62 மனுக்களுக்கு தீர்வு
- இலங்கை அதிபரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- தனியார் நிலம் வழியாக பொதுப் பாதை கோரி சாலை மறியல்
- இலங்கை அதிபரை கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- இளைஞர் காவல் படை வீரர் விஷம் குடித்து தற்கொலை
- முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
- பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு
- "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' சுங்கான்கடை கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
- நாகர்கோவிலில் 11 இல் கூட்டுறவு குறைதீர்க்கும் கூட்டம்
- தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம்
- கேரளத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- பெண் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு
- ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: இருவர் கைது
- கேரளத்தில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது
- பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது
- பேருந்தில் பயணியிடம் பணம் திருடியவர் கைது
- ஆற்றங்கரையில் தொழிலாளி சடலம்
- டீசல், பெட்ரோல், எரிவாயு விலையை அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்
- குமரியில் ரப்பர் விலை தொடர் சரிவு:பாக்கு விலை தொடர் உயர்வு
- ஆகஸ்ட் 16 இல் புத்தகத் திருவிழா அரசுப் பேருந்து, ஆட்டோக்களில் விழிப்புணர்வு நடவடிக்கை
- உணவகங்களில் சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு
- அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை
- மார்த்தாண்டம், கருங்கல் பகுதியில் பலத்த மழை
- 11இல் பாஜக தர்னா
- பிரம்மபுரத்தில் குமரி பாலன் நினைவு தினம்
- மாவட்ட மின்னொளி சிலம்பம்: குலசேகரம் அணி முதலிடம்
- ஆளில்லா ரயில்வே கேட்:விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்
- 15 இல் மதுக்கடைகள் மூடப்படும்: ஆட்சியர்
- திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம் பகுதியில் மழை
- "மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் பெற்றுக் கொள்ளலாம்'
- கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ
- சாத்தான்குளம் அருகே பொதுச்சுவர் கட்டுவதில் மோதல்: 7 பேர் மீது வழக்கு
- கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு
- ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
- நாலாட்டின்புத்தூரில் சார்-ஆட்சியர் ஆய்வு
- தானியங்கி பொறியாளர் கூட்டமைப்புத் தொடக்கம்
- சிற்றுந்து கட்டணப் பிரச்னை:கோவில்பட்டியில் சமாதானக் கூட்டம்
- தூத்துக்குடி: 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா ஏற்பாடுகள்: அதிகாரிகள் ஆலோசனை
- 30 இல் விளாத்திகுளத்தில் கல்விக் கடன் வழங்கும் முகாம்
| மும்பை மருத்துவமனையில் டி.ஆர்.பாலு அனுமதி Posted: 08 Aug 2014 01:43 PM PDT உடல் நலக் குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். |
| வைகோவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி Posted: 08 Aug 2014 01:42 PM PDT திடீர் நெஞ்சுவலி காரணமாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| மதுபான விற்பனை மூலம் ரூ.21,641 கோடி வருவாய்: தமிழக அரசு தகவல் Posted: 08 Aug 2014 01:09 PM PDT கடந்த நிதியாண்டில் (2013-14) மதுபான விற்பனை மூலம் ரூ.21 ஆயிரத்து 641 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| கட்டுமானத் தொழிலாளர்கள் நலன் காக்க சட்டத் திருத்த மசோதா தாக்கல் Posted: 08 Aug 2014 01:08 PM PDT கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதனை, ஊரகத் தொழில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பி.மோகன் தாக்கல் செய்தார். |
| 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் Posted: 08 Aug 2014 01:08 PM PDT வீட்டுமனை இல்லாத மக்கள் பயன்பெறும் வகையில், இந்த நிதியாண்டில் 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார். |
| தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் மரணம்: தா.பாண்டியன் இரங்கல் Posted: 08 Aug 2014 01:06 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஏ.மோகன்ராஜ் (52) மறைவுக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். |
| ஆயுள் சிறைக் கைதி கொலை: புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் Posted: 08 Aug 2014 01:06 PM PDT சிறைக்கு அழைத்துச் சென்றபோது ஆயுள் சிறைக் கைதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| துணைவேந்தர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம்: பேரவையில் மசோதா தாக்கல் Posted: 08 Aug 2014 01:05 PM PDT துணைவேந்தர்களைத் தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. |
| Posted: 08 Aug 2014 01:04 PM PDT அத்தியாவசிய சர்வீஸ்களில் வேலை நிறுத்தங்கள் தடைசெய்யப்படும்; லோக சபையில் ஸ்ரீ பந்த் அறிவிப்பு |
| வேண்டாம் புகையிலைப் பொருள்கள்... Posted: 08 Aug 2014 12:59 PM PDT இந்தியாவில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். |
| Posted: 08 Aug 2014 12:59 PM PDT ஆங்கில சமூக இயல் அறிஞர் ட்ரவெல்யான் என்பவர் "இங்கிலாந்தின் சமுதாய வரலாறு' எனும் ஒரு சிறந்த நூலை இயற்றியுள்ளார். |
| Posted: 08 Aug 2014 12:57 PM PDT கடந்த ஆண்டு உத்தரகண்ட் என்றால், இந்த ஆண்டில் இயற்கையின் சீற்றம் மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தைச் சேர்ந்த மலின் என்கிற கிராமத்தைப் பூண்டோடு அழித்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டிருக்கிறது. |
| சென்னையில் ரூ.1,101 கோடியில் வடிகால்கள் Posted: 08 Aug 2014 12:53 PM PDT மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்க சென்னையிலுள்ள இரண்டு ஆறுகளின் வடிநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் ரூ.1,101 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| மகளிர், குழந்தைகளின் விடுதிகளை உரிமம் இன்றி நடத்தினால் சிறை Posted: 08 Aug 2014 12:52 PM PDT மகளிர், குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்களை உரிமம் பெறாமல் நடத்தினால், 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிப்பதற்கு வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அறிவிப்பு Posted: 08 Aug 2014 12:51 PM PDT டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி மது விலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்நாதன் அறிவித்தார். |
| ஏழ்மை நிலையிலுள்ள 750 விவசாயிகளுக்கு பண்ணை முறையை ஊக்குவிக்கும் திட்டம் Posted: 08 Aug 2014 12:50 PM PDT ஏழ்மை நிலையிலுள்ள 750 விவசாயிகளுக்கு பண்ணை முறையை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| பேரவையிலிருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 08 Aug 2014 12:49 PM PDT சட்டப்பேரவையில் பேசுவதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்ததாகக் கூறி தேமுதிகவினர் வெளிநடப்பு செய்தனர். |
| சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,000 கோடி வங்கிக் கடன்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 08 Aug 2014 12:49 PM PDT சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.6,000 கோடி வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும் என்றும், இதனால் 2.5 லட்சம் சுய உதவிக் குழுக்கள் பயன் அடைவர் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| "பூரண மது விலக்கை அமல்படுத்த முடியாது' Posted: 08 Aug 2014 12:47 PM PDT டாஸ்மாக் கடைகள் மூலம் கள்ளச்சாராய சாவுகள் குறைந்துள்ளன என்று மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். |
| "ரூ.1,672 கோடியில் 6 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்' Posted: 08 Aug 2014 12:46 PM PDT தமிழகத்தில் ரூ.1,672 கோடியில் ஆறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், பேரூராட்சிகளில் ரூ.53 கோடியில் 5 குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார். |
| பி.எட்.: இரு ஆண்டுகளாக அதிகரிக்கத் திட்டமா? அமைச்சர் விளக்கம் Posted: 08 Aug 2014 12:45 PM PDT பி.எட். படிப்புக்கான காலத்தை இரு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். |
| சட்ட விரோதமாக போராட்டம்:அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் Posted: 08 Aug 2014 12:43 PM PDT தில்லியில் சட்டவிரோதமாகப் போராட்டம் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுக்கு ஜாமீன் வழங்கி தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| ஆபத்தான நிலையில் ஜஸ்வந்த் சிங் Posted: 08 Aug 2014 12:42 PM PDT முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (76), அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| மக்களவையில் தமிழில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன் Posted: 08 Aug 2014 12:42 PM PDT மக்களவையில் அரிய நிகழ்வாக, உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஒருவர் தமிழில் பதிலளித்தார். |
| ரக்ஷô பந்தன்: 600 தடவை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை Posted: 08 Aug 2014 12:42 PM PDT ரக்ஷô பந்தன் பண்டிகையை ஒட்டி சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தில்லி மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பில் சுமார் 600 தடவை கூடுதல் ரயில் சேவை அளிக்க தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) முடிவு செய்துள்ளது. |
| "சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவாக பிரசார இயக்கம்' Posted: 08 Aug 2014 12:41 PM PDT சிறுதொழில் முனைவோர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடத்த பல்துறை தொழில், வணிகர்கள், விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக |
| நீதிமன்ற உத்தரவுகுப் பிறகு பேட்டரி ரிக்ஷாக்களை இயக்க நடவடிக்கை: கட்கரி Posted: 08 Aug 2014 12:41 PM PDT உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு தில்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை மீண்டும் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| தில்லி போலீஸார் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் Posted: 08 Aug 2014 12:41 PM PDT "மக்களுக்கு அர்ப்பணிப்பு, நேர்மையுடன் சேவையாற்றி மற்ற மாநில போலீஸாருக்கு முன்னுதாரணமாகத் தில்லி போலீஸார் திகழ வேண்டும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார். |
| தெற்கு தில்லி மாநகராட்சியில் துப்புரவு வாரம் தொடக்கம் Posted: 08 Aug 2014 12:40 PM PDT தெற்கு தில்லி மாநகராட்சியில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா ஆகிய நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் துப்புரவு வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| தில்லி தமிழ்ச் சங்கத்தின் ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிகள் Posted: 08 Aug 2014 12:40 PM PDT தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் இசை, நடனம், இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில், ஆகஸ்ட் 24-ஆம் தேதி தில்லி தமிழ்ச் சங்கத்தின் 49- |
| Posted: 08 Aug 2014 12:40 PM PDT தெற்கு தில்லி செüத் எக்ஸ்டென்ஷன்-1 மார்க்கெட்டில் அமைந்துள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை தீவிபத்து ஏற்பட்டது. |
| தில்லி: "கொசு ஒழிப்பு ரயில்' தொடக்கம் Posted: 08 Aug 2014 12:40 PM PDT தெற்கு தில்லி, புது தில்லி உள்ளிட்ட ரயில்வே இருப்புப் பாதைகளையொட்டிய நீர் நிலைகளில் கொசு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் கொசு ஒழிப்பு ரயில் (மொஸ்கிட்டோ டெர்மினேட்டர்) வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. |
| வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்தது மத்திய அரசு Posted: 08 Aug 2014 12:39 PM PDT தலைநகரில் உள்ள பேட்டரி ரிக்ஷாக்களை மோட்டார் வாகனச் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில், ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. |
| தமிழகத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படுமா? Posted: 08 Aug 2014 12:39 PM PDT தமிழகத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் து |
| வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை Posted: 08 Aug 2014 12:39 PM PDT வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். |
| வரலட்சுமி நோன்பு: கோயில்கள், வீடுகளில் கோலாகலம் Posted: 08 Aug 2014 12:38 PM PDT வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள், வீடுகளில் பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடினர். |
| சென்னை கார் ஓட்டுநர் கொலை: கள்ளக்காதலி மாமல்லபுரத்தில் கைது Posted: 08 Aug 2014 12:38 PM PDT சென்னை கார் ஓட்டுநர் கொலையுண்ட வழக்கில், அவரது கள்ளக்காதலியை போலீஸார் விசாரணையின் பேரில் கைது செய்தனர். |
| நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல்: ஆகஸ்ட் 11-இல் வேட்புமனு தாக்கல் Posted: 08 Aug 2014 12:38 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. |
| பீரோவை உடைத்து 29 பவுன் நகைத் திருட்டு Posted: 08 Aug 2014 12:37 PM PDT செங்கல்பட்டு வட்ட, காவல் எல்லைக்குள்பட்ட ஒழலூர் பகுதியில் பட்டப் பகலில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, 29 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். |
| கட்டட வடிவமைப்பாளர் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 08 Aug 2014 12:37 PM PDT சென்னையை அடுத்த மெüலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த வழக்கில் பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் கட்டட வடிவமைப்பாளரின் ஜாமீன் மனுவை, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| 170 மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள் Posted: 08 Aug 2014 12:37 PM PDT உத்தரமேரூர் வட்டம், கருவேப்பம்பூண்டி ஓம் சக்தி பீடத்தில் நடந்த விழாவில் 170 மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள் வழங்கப்பட்டன. |
| ஒரத்தி - வேப்பங்கரணை சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை Posted: 08 Aug 2014 12:37 PM PDT அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஒரத்தி - வேப்பங்கரணை நெடுஞ்சாலையைச் சீரமைக்குமாறு, மாவட்ட நிர்வாகத்துக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு Posted: 08 Aug 2014 12:36 PM PDT வண்டலூர் ரயில் நிலையம் அருகே பெண்ணிடமிருந்து 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| செங்கல்பட்டில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Aug 2014 12:36 PM PDT தமிழக முதல்வர் குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மணல் திருட்டு: மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 08 Aug 2014 12:36 PM PDT திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு பாலாற்றங்கரை பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| கொலை வழக்கு: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது Posted: 08 Aug 2014 12:36 PM PDT கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம் Posted: 08 Aug 2014 12:35 PM PDT உத்தரமேரூரில் கட்டப்பட்டும் திறக்கப்படாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. |
| சவுடு மண் திருட்டு:டிராக்டர் பறிமுதல் Posted: 08 Aug 2014 12:35 PM PDT சுங்குவார்சத்திரத்தை அடுத்த ஏகனாபுரம் பகுதியில் சவுடு மண் திருடப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| கைப்பந்துப் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு Posted: 08 Aug 2014 12:35 PM PDT கல்பாக்கம் நெஸ்கோ விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற நெம்மேலி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நெம்மேலி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் Posted: 08 Aug 2014 12:35 PM PDT தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அனைவருக்கும் இலவசக் கல்வி: விடுதலைச் சிறுத்தைகள் பேரணி Posted: 08 Aug 2014 12:34 PM PDT அனைவருக்கும் இலவசக் கல்வியை தமிழக அரசு வழங்க வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஓய்வூதியர்கள் நேர்காணல்:ஆக. 20 வரை நீட்டிப்பு Posted: 08 Aug 2014 12:34 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களின் நேர்காணலுக்கு, வரும் 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. |
| ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் Posted: 08 Aug 2014 12:33 PM PDT தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவுறுத்தினார். |
| தெரு விளக்குகள் இன்றி இருளில் மூழ்கிய சாலை Posted: 08 Aug 2014 12:33 PM PDT திருவள்ளூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
| மரப் பொருள்கள் தயாரிக்கும் கடையில் தீ விபத்து Posted: 08 Aug 2014 12:33 PM PDT கும்மிடிப்பூண்டி புறநகர் சாலையில் மரப் பொருள்கள் தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. |
| டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா Posted: 08 Aug 2014 12:33 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியின் 6-ஆம் ஆண்டு தொடக்க விழா, முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா புதன்கிழமை |
| அம்மா' திட்ட முகாம்:62 மனுக்களுக்கு தீர்வு Posted: 08 Aug 2014 12:32 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பன்பாக்கம் ஊராட்சிக்குள்பட்ட குருத்தானமேட்டில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இலங்கை அதிபரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 08 Aug 2014 12:32 PM PDT இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவைக் கண்டித்து ஊத்துக்கோட்டையில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தனியார் நிலம் வழியாக பொதுப் பாதை கோரி சாலை மறியல் Posted: 08 Aug 2014 12:32 PM PDT உத்தண்டிகண்டிகை கிராமத்தில் தனியார் நிலத்தில் உள்ள பாதையை பொதுப் பாதையாக மாற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| இலங்கை அதிபரை கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Aug 2014 12:32 PM PDT இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவைக் கண்டித்து, மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் |
| திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை Posted: 08 Aug 2014 12:31 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பொழிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். |
| காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 08 Aug 2014 12:31 PM PDT ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். |
| இளைஞர் காவல் படை வீரர் விஷம் குடித்து தற்கொலை Posted: 08 Aug 2014 12:31 PM PDT திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் காவல்படை வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். |
| முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி Posted: 08 Aug 2014 12:31 PM PDT திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு Posted: 08 Aug 2014 12:31 PM PDT பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' சுங்கான்கடை கல்லூரியில் அறிவியல் கண்காட்சி Posted: 08 Aug 2014 12:30 PM PDT சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியில் கல்லூரியில் "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி ' என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் 11 இல் கூட்டுறவு குறைதீர்க்கும் கூட்டம் Posted: 08 Aug 2014 12:30 PM PDT நாகர்கோவிலில் கூட்டுறவு குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய் |
| Posted: 08 Aug 2014 12:30 PM PDT தமிழ்நாடு நகராட்சி அனைத்து அலுவலர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் பத்மநாபபுரம் நகராட்சி முன் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கேரளத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 08 Aug 2014 12:29 PM PDT களியக்காவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| பெண் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு Posted: 08 Aug 2014 12:29 PM PDT திருவட்டாறு அருகே வெள்ளிக்கிழமை பெண்ணைத் தாக்கிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: இருவர் கைது Posted: 08 Aug 2014 12:29 PM PDT கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்த இருவரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| கேரளத்தில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது Posted: 08 Aug 2014 12:28 PM PDT கேரளத்தில் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை களியக்காவிளை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். |
| பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது Posted: 08 Aug 2014 12:28 PM PDT கன்னியாகுமரி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| பேருந்தில் பயணியிடம் பணம் திருடியவர் கைது Posted: 08 Aug 2014 12:28 PM PDT பளுகல் அருகே அரசுப் பேருந்தில் பயணியிடம் பணம் திருடிய இளைஞரைப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 08 Aug 2014 12:28 PM PDT திருவட்டாறு அருகே ஆற்றங்கரையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| டீசல், பெட்ரோல், எரிவாயு விலையை அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல் Posted: 08 Aug 2014 12:28 PM PDT டீசல், பெட்ரோல், எரிவாயு ஆகியவற்றின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டுமென குமரி மாவட்ட மோட்டார் வாகன ஓட்டுநர், உரிமையாளர், தொழில் பாதுகாப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது. |
| குமரியில் ரப்பர் விலை தொடர் சரிவு:பாக்கு விலை தொடர் உயர்வு Posted: 08 Aug 2014 12:27 PM PDT குமரி மாவட்டத்தில் ரப்பரைத் தவிர இதர தோட்டப் பயிர்களான பாக்கு உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. |
| ஆகஸ்ட் 16 இல் புத்தகத் திருவிழா அரசுப் பேருந்து, ஆட்டோக்களில் விழிப்புணர்வு நடவடிக்கை Posted: 08 Aug 2014 12:27 PM PDT நாகர்கோவிலில் புத்தகத் திருவிழா நடைபெறுவதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் விளம்பர விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வெள்ளிக்கிழமை ஒட்டினார். |
| உணவகங்களில் சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு Posted: 08 Aug 2014 12:27 PM PDT மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் கிள்ளியூர் வட்டார சுகாதாரத் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை Posted: 08 Aug 2014 12:26 PM PDT குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. |
| மார்த்தாண்டம், கருங்கல் பகுதியில் பலத்த மழை Posted: 08 Aug 2014 12:26 PM PDT மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. |
| Posted: 08 Aug 2014 12:26 PM PDT குமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்கக் வலியுறுத்தி பாஜக சார்பில், ஆகஸ்ட் 11ஆம் தேதி தர்னா நடைபெறுகிறது. |
| பிரம்மபுரத்தில் குமரி பாலன் நினைவு தினம் Posted: 08 Aug 2014 12:26 PM PDT தக்கலை அருகே இந்து இயக்கங்களின் சார்பில் பிரம்மபுரத்தில் முன்னாள் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் குமரி பாலனின் நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது |
| மாவட்ட மின்னொளி சிலம்பம்: குலசேகரம் அணி முதலிடம் Posted: 08 Aug 2014 12:25 PM PDT நாகர்கோவில் ராமன்புதூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி சிலம்பப் போட்டியில் குலசேகரம் அணி முதலிடம் பெற்றது. |
| ஆளில்லா ரயில்வே கேட்:விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 08 Aug 2014 12:25 PM PDT நாகர்கோவிலில் ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடப்பது குறித்து விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் வழங்கினர். சாலைகளில் உள்ள ஆள் இல்லாத ரயில்வே கேட்டை வாகனங்கள் கடக்கும் போது அடிக்கடி |
| சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் Posted: 08 Aug 2014 12:24 PM PDT சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் ஆட்சியர் ம. ரவிக்குமார் கூறினார். |
| 15 இல் மதுக்கடைகள் மூடப்படும்: ஆட்சியர் Posted: 08 Aug 2014 12:24 PM PDT சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. |
| திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம் பகுதியில் மழை Posted: 08 Aug 2014 12:24 PM PDT திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை திடீர் மழை பெய்தது. |
| "மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் பெற்றுக் கொள்ளலாம்' Posted: 08 Aug 2014 12:24 PM PDT விளாத்திகுளம் வட்டாரத்தில் வேளாண் இடுபொருள்களைவிவசாயிகள் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வே. சாந்திராணி |
| கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ Posted: 08 Aug 2014 12:23 PM PDT கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. |
| சாத்தான்குளம் அருகே பொதுச்சுவர் கட்டுவதில் மோதல்: 7 பேர் மீது வழக்கு Posted: 08 Aug 2014 12:23 PM PDT சாத்தான்குளம் அருகே பொதுச்சுவர் கட்டுவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு Posted: 08 Aug 2014 12:23 PM PDT சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். |
| ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை Posted: 08 Aug 2014 12:23 PM PDT பள்ளிக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பைத் துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். |
| நாலாட்டின்புத்தூரில் சார்-ஆட்சியர் ஆய்வு Posted: 08 Aug 2014 12:22 PM PDT நாலாட்டின்புத்தூர் பகுதியில் முதியோர் உள்ளிட்ட அரசு உதவித்தொகைகள் பெற்று வரும் பயனாளிகள் தகுதி உடையவர்களா என்பதுகுறித்து சார்-ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். |
| தானியங்கி பொறியாளர் கூட்டமைப்புத் தொடக்கம் Posted: 08 Aug 2014 12:22 PM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பில் தானியங்கி பொறியாளர் கூட்டமைப்புத் தொடக்க விழா நடைபெற்றது. |
| சிற்றுந்து கட்டணப் பிரச்னை:கோவில்பட்டியில் சமாதானக் கூட்டம் Posted: 08 Aug 2014 12:22 PM PDT கோவில்பட்டி நகரில் இயங்கி வரும் சிற்றுந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த புகாரையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. |
| தூத்துக்குடி: 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை Posted: 08 Aug 2014 12:22 PM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என இந்து முன்னணி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Aug 2014 12:22 PM PDT தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் கோவில்பட்டி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா ஏற்பாடுகள்: அதிகாரிகள் ஆலோசனை Posted: 08 Aug 2014 12:21 PM PDT திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| 30 இல் விளாத்திகுளத்தில் கல்விக் கடன் வழங்கும் முகாம் Posted: 08 Aug 2014 12:21 PM PDT மாணவர், மாணவிகளின் உயர்கல்விக்காக கல்விக்கடன் வழங்கும் முகாம் விளாத்திகுளத்தில் ஆக. 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |