Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இரண்டு மாதத்தில் இரு முறை இங்கு வந்துள்ளேன்-காரணம் உங்கள் அன்பு: காஷ்மீரில் மோடி பேச்சு

Posted: 11 Aug 2014 11:39 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் லடாக் பகுதி மக்களை ஈர்க்கும் வகையில் பேசிய மோடி அவர்கள் உள்ளங்களை கவர்ந்தார். காஷ்மீர் மக்களின் அன்பின் காரணமாகவே அம்மாநிலத்திற்கு இரண்டு மாதத்திற்குள் இருமுறை வந்துவிட்டதாக மோடி தனது உரையின் போது குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது;-

திருவனந்தபுரத்தில் இன்று பெண்கள் மாநாட்டில் பங்கேற்ற சோனியாகாந்தி

Posted: 11 Aug 2014 11:38 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று காலை திருவனந்தபுரம் வந்தார். விமானத்தில் அவருக்கு கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சோனியா சென்றார். அங்கு நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு சோனியா பேசினார். அதன்பின் திருவனந்தபுரம் புத்தரிகண்டனம் மைதானத்தில் நடைபெற்ற குடும்பஸ்ரீ மகளிர் அமைப்பு மாநாட்டிலும் சோனியா பங்கேற்று

தொழில் அதிபர் தற்கொலை: ஆபாசப்பட கும்பல் தலைவன்– 2அழகிகளுக்கு போலீஸ் காவல்

Posted: 11 Aug 2014 11:29 PM PDT

கேரளாவில் பெண் ஆசை காட்டி தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்கள், அரசு ஊழியர்கள் சிலரை செக்ஸ் வலையில் ஒரு கும்பல் வீழ்த்தியது. தங்கள் வலையில் வீழ்ந்தவர்களை ஆடம்பர சொகுசு பங்களாக்களுக்கும், நட்சத்திர ஓட்டலுக்கும் வரவழைத்து அவர்களை அழகிகளுடன் உல்லாசமாக இருக்க செய்தனர்.

நீதிபதி முன் தற்கொலை முயற்சி: தீர்ப்பை கேட்டதும் பிளேடால் கழுத்தை அறுத்தார்

Posted: 11 Aug 2014 11:21 PM PDT

தெலுங்கானா மாநிலம் மெடக் மாவட்டம் கோதாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி பிஸ்மில்லா கவுசிகா பேகம். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், குழந்தை இல்லை. அதோடு கடன் தொல்லையும் இருந்தது. இதனால் முகமது யூசுப் 2–வது திருமணம் செய்யப் போவதாக மனைவியிடம் கூறினார். 2–வது திருமணம் செய்தால் வரதட்சணையாக பணம் வரும். கடனை அடைக்கலாம் என்று கூறினார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ராஜினாமா செய்ய மறுத்ததால் திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பதவி பறிப்பு

Posted: 11 Aug 2014 10:55 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக கனிமுனி பாபி ராஜு இருந்து வந்தார். ஆந்திராவில் கடந்த 10 ஆண்டு காலமாக நடந்த காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட இவர் 2–வது முறையாக இப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர். தற்போது ஆந்திராவில் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்– மந்திரியாக பதவி ஏற்றதும் கோவில்களின் பழைய

காஷ்மீர் லே பகுதியில் 2 புனல்மின் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்

Posted: 11 Aug 2014 10:50 PM PDT

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள லடாக் பகுதிக்கு இன்று காலை மோடி சென்றார். அங்குள்ள லே பகுதியில் இரண்டு புனல்மின் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- லடாக் வந்ததில் நான் பெருமை அடைகிறேன். லே மக்கிளன் நாட்டுப்பற்றுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த புனல்மின் திட்டம் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாது.

பாலக்காடு அருகே ரெயில் மீது ஏறி நின்று படம் பிடித்த மாணவன் சாவு

Posted: 11 Aug 2014 10:45 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரனூர் அருகேயுள்ளது திருமிட்டகோடு. இந்த பகுதியைச் சேர்ந்த மொய்தீன் மகன் சகாபுதீன்(வயது 14). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். சொரனூர் ரெயில் நிலையத்துக்கு சென்ற சகாபுதீன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறினான். தன்னிடம் இருந்த செல்போனில் தன்னைத்தானே படம் பிடித்தான். அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர்அழுத்த மின்கம்பி மீது சகாபுதீனின் உடல் பட்டது. உடல் கருகிய அவன் தூக்கி வீசப்பட்டான். அங்குள்ள புதருக்குள் விழுந்த சகாபுதீனை ரெயில்வே போலீசார் மீட்டு சொரனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மக்களவை துணை சபாநாயகர் தேர்தல்: தம்பித்துரை இன்று மனுதாக்கல் செய்கிறார்

Posted: 11 Aug 2014 10:41 PM PDT

பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். துணை சபாநாயகர் பதவி பாராளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கப்படும். பாராளுமன்றத்தில் தற்போது 44 எம்.பி.க்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆனால்

தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் சரத்பவார், மாயாவதி கட்சிகள்

Posted: 11 Aug 2014 10:09 PM PDT

ஒரு அரசியல் கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் இருந்து 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 2 சதவீதம் என்பது 11 பாராளுமன்ற தொகுதிகளாகும். பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல்–மே மாதங்களில் நடந்த தேர்தலில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகளும் தேசிய அங்கீகாரத்தை பெறும் வகையில் வெற்றி பெறவில்லை. தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றாலும் அந்த கட்சிக்கு 1.6 சதவீத ஓட்டுக்களே கிடைத்தன.

காஷ்மீர் மாநிலத்தில் மோடி செல்லும் வழியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 ராணுவ வீரர்கள் காயம்

Posted: 11 Aug 2014 10:04 PM PDT

காஷ்மீர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீரில் 3 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க., அங்கு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே ஒரு தடவை காஷ்மீர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார்

மோடி அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது: கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 11 Aug 2014 10:01 PM PDT

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த மே மாதம் பதவி ஏற்றது. பிரதமர் மோடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் மோடி அரசின் முதலாவது ரெயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த 3 மாதங்களில் மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி பா.ஜனதாவின் பொது மக்கள் பிரசார கொள்கை நிபுணரும், பா.ஜனதா பிரமுகருமான ராஜேந்திர பிரதாப் குப்தா என்பவர் 'ஆன்–லைன்' மூலம் கருத்து கணிப்பு நடத்தினார்.

திருப்பதி: தலைமுடி காணிக்கை மூலம் ரூ.658 கோடி வருமானம்

Posted: 11 Aug 2014 09:41 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட காணிக்கை தலைமுடி விரைவில் ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தான இணை அதிகாரி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலர் தங்களின் நேர்த்திக்கடனாக தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் காணிக்கை தலைமுடி,

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

Posted: 11 Aug 2014 08:11 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு (கொலீஜியம்) வழங்கும் பரிந்துரையின் படி தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். நீதிபதிகள் குழு பரிந்துரையின்படி நீதிபதிகளை நியமிப்பதற்கு பதிலாக, 6 பேரை கொண்ட 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' ஒன்றை அமைத்து, அது வழங்கும் சிபாரிசின்படி நீதிபதிகளை

நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம்: ஆர்.எம்.லோதா

Posted: 11 Aug 2014 08:03 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிக்கும் நியமன குழு (கொலீஜியம்), கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கே.எல்.மஞ்சுநாத்தை பஞ்சாப்

தாவூத் இப்ராஹிம் எங்கிருந்தாலும் கைது செய்வோம்: பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் உறுதி

Posted: 11 Aug 2014 03:50 PM PDT

முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அந்நாட்டின் உளவுத்துறையின் ஆதரவுடன் பாகிஸ்தானில் வசித்து வருவதாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் பாடகி ஆஷா போஸ்லே சந்திப்பு

Posted: 11 Aug 2014 02:32 PM PDT

ஆயிரக்கணக்கான இந்திப் பாடல்களைப் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடம்பிடித்த பிரபல பிண்ணனிப் பாடகி ஆஷா போஸ்லே, தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் 'செண்பகமே.., செண்பகமே', பாடல் மூலம் நீக்கமற நிறைந்துள்ளார்.

ஆம்புலன்ஸில் கடத்தப்பட்ட 360 கிலோ கஞ்சா பிடிபட்டது

Posted: 11 Aug 2014 02:21 PM PDT

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள படேரு பகுதி வழியாக ஏராளமான கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட ஆயத்தீர்வை மற்றும் கலால் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, படேரு பகுதியில் உள்ள சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகன போக்குவரத்தை போலீசார் கண்காணித்து

அபுதாபியில் வேலை அளிப்பதாக மோசடி: விமான நிலையத்தில் 36 பேர் பரிதவிப்பு

Posted: 11 Aug 2014 01:54 PM PDT

அபுதாபியில் வேலை வாங்கி தருவதாக கூறி உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் பகுதியில் 36 பேரிடம் லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்து தலைமறைவாகி விட்டவரை போலீசார் தேடி வருகின்றனர். காசியாபாத் நகரில் உள்ள இந்திராபுரம் பகுதியில் வெளிநாடுகளில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் நிறுவனத்தின் மேனேஜர்

காந்தியை தவிர யார் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறாது: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

Posted: 11 Aug 2014 12:49 PM PDT

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியை தவிர யாருடைய உருவப்படமும் அச்சிடப்பட மாட்டாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், இந்திய இலக்கியத்தின் பெருமைக்குரிய அடையாளமாக

மீனவர்களை சுட்டுக் கொன்ற மாலுமிகள் விவகாரம்: மோடியுடன் இத்தாலி பிரதமர் பேச்சு

Posted: 11 Aug 2014 12:09 PM PDT

கேரளாவின் கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை இத்தாலி நாட்டு கப்பலில் இருந்த மாலுமிகள் கடந்த 2012-ம் ஆண்டு துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஆணையத்தால் விசாரணை நடத்தப்பட்டு அந்நாட்டு மாலுமிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™