Tamil Star |
- நானும் ஆக 15க்கே வர்றேன்!- இது பார்த்திபன் துணிச்சல்
- படத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும்? சீமான் பாய்ச்சல்
- தமிழ் சினிமாவின் கோடீஸ்வரிகள்!
- இந்தி ரசிகர்களுக்கும் நம்ம ஆட்களை போன்று பேய் கதை!
- ஸ்மார்ட்போனில் அல்ட்ராவயலட் சென்ஸார் வசதி!
- யானையின் தந்தம் வெட்டப்படுவதை பார்த்ததுண்டா?
- மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்…..
- Fruits பிரியர்களே!.. ஈஸியா சாப்பிட சூப்பர் டிப்ஸ்….
- நாட்டின் மேல் பற்று இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும்….
- மறந்த மனைவியை மறக்காமல் பார்க்கும் கணவர்… இன்றைய தம்பதிகள் கட்டாயம் பார்க்கவும்!
- வயிறு வர ஆரம்பிக்கிறதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க…
- மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்! வெள்ளி வாங்கியது ஆடவர் அணி!!
- எங்களையும் மதியுங்களேன்.. ஜுவாலா கட்டா குமுறல்!
- மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்திற்கு ஹமாஸ்- இஸ்ரேல் சம்மதம்!
- ஆதாரமற்ற குற்றங்களுக்காக நாட்டை விட்டு ஓடமாட்டேன் – பர்வேஷ் முஷரப்!
- என் கணவர் தான் வேண்டும்: மன்னார் சிறப்பு தளபதி ஜானின் மனைவி ஆணைக்குழு முன் கதறல்!
- முன்னோக்கி நகர்த்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்தவே!– அஸ்கிரிய பீடாதிபதி
- பிரதமர் டோனி அபொட்டின் அகதி கொள்கைகளுக்கு இந்தோனேசியா எதிர்பார்ப்பு!
- தீர்வை முன்வைத்தால் ஏற்றுக்கொள்வோம்: மகிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி!
- மோடியைப் போன்ற பிரதமர் இலங்கைக்குத் தேவையாம்!
| நானும் ஆக 15க்கே வர்றேன்!- இது பார்த்திபன் துணிச்சல் Posted: 11 Aug 2014 01:57 AM PDT
தன்னுடைய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை ஆகஸ்ட் 15-ம் தேதியன்றே வெளியிட முடிவு செய்து பரபரப்பாக அதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டார் இயக்குநர் பார்த்திபன். கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் பார்த்தின் நடிக்கவில்லை. படத்தின் தலைப்பில் உள்ள வேலைகளை மட்டுமே செய்துள்ளார். இன்னொன்று நீண்ட நாளாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருப்பவர், அதற்கேற்ப படத்தை உருவாக்கியிருப்பதாக பேச்சு நிலவுகிறது. அவருக்காகவே ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலாபால், டாப்சி, சினேகா என பலரும் உதவி செய்துள்ளனர் இந்தப் படத்துக்கு, தங்கள் சிறப்புத் தோற்றம் மூலம். முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த தேதியில் வேறு படங்கள் அணிவகுத்ததால், தாமாகவே போட்டியிலிருந்து விலகி ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஆனால், இப்படி தள்ளிப் போய்க் கொண்டிருந்தால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும் என்பதைப் புரிந்து, என்ன ஆனாலும் சரி என ஆகஸ்ட் 15-ம் தேதியே வெளியிடுகிறார் (அன்றுதான் அஞ்சான் வெளியாகிறது). தியேட்டர்கள் பட்டியலையும் அறிவித்துவிட்டார். வெளிநாடுகளிலும் கிடைத்த விநியோகஸ்தர்களைக் கொண்டு படத்தை வெளியிடுகிறார். "கதை திரைக்கதை வசனம் இயக்கம்' கண்டிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும். இது ஒரிஜினல் கதை.. எந்த மொழி டிவிடியிலிருந்தும் சுடப்பட்டதல்ல. அப்படிப்பட்ட ஒரிஜினல் படத்தை தியேட்டர்களில் பார்த்து வெற்றிப் பெற வையுங்கள்," என்று தன் பாணியில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| படத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும்? சீமான் பாய்ச்சல் Posted: 11 Aug 2014 01:53 AM PDT
என் தம்பி விஜய்யின் கத்தி படத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய், சம்ந்தா நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைக்கா மொபைல் நிறுவன உரிமையாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்ற தகவல் பரவியுள்ளது. இதனால் கத்தி படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் முன்னணி தமிழ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சியோ, கருத்துகளோ இருந்தால் அந்த படத்தை எதிர்க்கும் முதல் ஆள் நான் தான். ஆனால் படத்தில் என்ன உள்ளது என்றே தெரியாமல் யாரோ கிளப்பிய சர்ச்சைக்காக அதை எதிர்க்க நான் ஒன்றும் எதுவும் தெரியாத மூர்க்கன் இல்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து என்னவெல்லாமோ கூறி அதை ஏன் சீமான் எதிர்க்காமல் உள்ளார் என்று கேட்பவர்கள் அவர்களே போராட வேண்டியது தானே. என்னை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்க நான் என்ன கோவில் காளையா? கலைப்புலி தாணு ஒரு படம் பண்ணுங்கள் என்று என்னிடம் 2 ஆண்டுகளாக கூறி வருகிறார். இந்நிலையில் நான் லைக்கா மொபைல் நிறுவனத்திற்கு பணம் பண்ண காத்திருக்கிறேனா?. எதையாவது கூறினால் சீமான் சீறிக் கொண்டு வருவார் என்று கனவு காண வேண்டாம். பிறர் உசுப்பேற்றிவிடுவதற்காக நான் என் சொந்த தம்பிகளை எதிர்க்க முடியுமா? லைக்கா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அந்நிறுவனம் செயல்படும் லண்டனில் சென்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியது தானே என்றார் சீமான்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ் சினிமாவின் கோடீஸ்வரிகள்! Posted: 11 Aug 2014 01:46 AM PDT
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எப்போதோ கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். எண்பதுகளிலேயே கோடிகளைத் தொட்டுவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. என்ன ஆச்சர்யம் என்றால் அவரை விட ஒரு ரூபாயாவது கூடுதலாக சம்பளம் பெறுவேன் என்று கூறி, அதைச் சாதித்தும் காட்டினார்கள் ராஜ்கிரண், ராமராஜன் ஆகியோர். இன்று முதல் படம் ஹிட்டானதுமே, அடுத்த படத்துக்கு கோடிகளில்தான் சம்பளமே பேசுகிறார்கள் ஹீரோக்கள். இத்தனைக்கும் முதல் படத்துக்கு சம்பளம்கூட வாங்கியிருக்க மாட்டார்கள் அல்லது சம்பளத்தை இயக்குநருக்குக் கொடுத்து நடித்திருப்பார்கள். ஹீரோயின்கள் நிலைமை அப்படியில்லை. அவர்கள் எத்தனை வெற்றிப் படங்களில் நடித்தாலும் லட்சங்களில்தான் சம்பளம். ஆனால் 2000 ஆண்டுக்குப் பிறகு, அந்த நிலை மாற ஆரம்பித்தது. இன்று பல நடிகைகள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள், வாங்குகிறார்கள். 2004-ம் ஆண்டு அறிமுகமானார் நயன்தாரா. அந்தப் படத்தில் இவருக்கு மிகக் குறைந்த சம்பளம். ரூ 2 லட்சம் கூட இல்லை. ஆனால் அதற்கடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி. அதில் நல்ல சம்பளம். அடுத்த படத்திலேயே ரூ 50 லட்சத்துக்கு தாவியது அவர் ரேட்! சிம்புவுடனான காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். படம் பில்லா. கவர்ச்சி நடிகைகளையே பின்னுக்குத் தள்ளும் அளவு அதிகபட்ச கவர்ச்சியுடன் வந்த அவருக்கு அந்தப் படத்தில் சம்பளம் ரூ 1 கோடி. அதன் பிறகு படத்துக்குப் படம் அவர் சம்பளம் கோடிகளில்தான். இன்று ஒரு படத்துக்கு அவர் ரூ 2 முதல் 2.50 கோடி வரை பெறுகிறார். சம்பள விஷயத்தில் போட்டி என்றால் இப்போதைக்கு அது நயன்தாராவுக்கும் ஹன்சிகாவுக்கும்தான். இத்தனைக்கும் ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் ராசியில்லா நடிகையாகத்தான் பார்க்கப்பட்டார். ஆனால் வேலாயுதம் படத்துக்குப் பிறகு அவரது மார்க்கெட் மதிப்பு ஒரே சீராகப் போக ஆரம்பித்துவிட்டது. இன்று அவர் ஒரு படத்துக்கு ரூ 2 கோடி முதல் 2.30 கோடி வரை பெறுகிறாராம். காஜல் அகர்வாலும் தமிழில் ஆரம்பத்தில் தோல்விப்பட நடிகையாகப் பார்க்கப்பட்டவர்தான். மகதீராவுக்குப் பிறகு தெலுங்கில் கோடிகளில் சம்பளம் வாங்கினார். தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி படங்களுக்குப் பிறகு அவரும் கோடிகளில் சம்பளம் பேச ஆரம்பித்துவிட்டார். இப்போது தமிழில் ஒரு படம்தான் அவருக்கு உள்ளது. தெலுங்கில் நான்கு படங்கள். சம்பளம் என்று பேசினால் ரூ 1.3 கோடியில் ஆரம்பித்து, ரூ 1 கோடிக்கு சம்மதம் சொல்கிறாராம். மிக இளம் வயது ஹீரோயின் என்ற அடைமொழியுடன் வந்த தமன்னாவும் தமிழில் ஒரு தோல்விப்பட நாயகியாகத்தான் அறிமுகமானார். ஆனால் கல்லூரி படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தமன்னாவுக்கு பெரும் வரவேற்பு. பையா, சுறா படங்களில் தமன்னா சம்பளம் கோடியைத் தாண்டியது. ஆனால் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள தமன்னா ரூ 75 லட்சம் வரை வாங்குகிறாராம்! விண்ணைத் தாண்டி வருவாயாவில் சின்ன வேடத்தில் வந்த சமந்தா, அடுத்து பாணா காத்தாடியில் நடித்தார். படம் சரியாகப் போகவில்லை. அதன் பிறகு அவர் நடித்த எந்தத் தமிழ்ப் படமும் ஓடவே இல்லை. நீதானே என் பொன்வசந்தம் மிகப்பெரிய ப்ளாப். ஆனால் அம்மணியின் சம்பளம் இப்போது ரூ 1.5 கோடி, அஞ்சானில்! அனுஷ்காவின் ரேஞ்ச் கடந்த மூன்றாண்டுகளாகவே ஒரே மாதிரிதான். அதாவது ரூ 1 கோடி வரை. ஆனால் லிங்காவில் ரஜினி நாயகியான பிறகு, அவர் மேலும் ரூ 50 லட்சத்தை உயர்த்திக் கொண்டாராம். தெலுங்கிலும் இதே நிலைதான். தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட லட்சுமியாகப் பார்க்கப்படுவர் லட்சுமி மேனன். இதுவரை ஒரு தோல்விப்படம் கூடக் கொடுக்காதவர் என்ற பெருமை அவருக்கு. வெற்றிப்பட நாயகியாக இருந்தாலும் இன்னும் ரூ 60 லட்சம் வரைதான் வாங்கிக் கொண்டிருக்கிறாராம். அடுத்த படத்தில் கோடியைக் கொட்டித் தரத் தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள்! அடுத்த ஆண்டு இந்தப் பட்டியலில் ப்ரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா போன்றவர்கள் இடம்பிடிக்கக் கூடும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தி ரசிகர்களுக்கும் நம்ம ஆட்களை போன்று பேய் கதை! Posted: 11 Aug 2014 01:38 AM PDT
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக ரசிகர்களுக்கு பேய் படம் என்றால் மிகவும் பிடித்துள்ளது. சினிமா எடுப்பவர்கள் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் தங்களின் கவலையை எல்லாம் மறக்கும் வகையில் படம் எடுக்கவே விரும்புகிறார்கள். ரசிகர்களும் படத்தை பார்த்து கவலையை மறந்து சிரிக்க விரும்புகிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களுக்கு பேய் படங்கள் மீது மவுசு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான பேய் படம் பீட்சா. அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து பீட்சா-2- வில்லா என்ற தலைப்பில் இரண்டாம் பாகத்தை எடுத்தார்கள். வில்லா புதுமுகம் தீபன் சக்ரவர்த்தி இயக்கத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸான பீட்சா 2 வில்லா ஹிட்டானது. படத்தை எடுக்க செலவு செய்த தொகையை விட மூன்று மடங்கிற்கு அதிகமாக வசூல் கிடைத்தது. ரசிகர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் சீட்டின் நுனியில் அமர்ந்து பேயை எதிர்பார்க்கும் படங்கள் பிடித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்களும் பேய் படங்களை எடுக்கவே விரும்புகிறார்கள். விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தை இந்தியில் ரீமேக் செய்து கடந்த மாதம் 18ம் தேதி ரிலீஸ் செய்தனர். அட பாருங்களேன் இந்தி ரசிகர்களுக்கும் நம்ம ஆட்களை போன்று பேய் கதை பிடித்துள்ளது. விளைவு படம் ஹிட்டாகியுள்ளது. நம்ம அஞ்சலி தெலுங்கில் நடித்துள்ள பேய் படம் கீதாஞ்சலி. படம் இந்த மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலி பேயாக வந்து ஆந்திராவை எந்த அளவுக்கு மிரட்டுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்மார்ட்போனில் அல்ட்ராவயலட் சென்ஸார் வசதி! Posted: 11 Aug 2014 01:31 AM PDT
தென்கொரியாவின், சியோல் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனமான சாம்சங், ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் தனியிடம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் சாம்சங் கேலக்ஸி நோட் 3ஐ அறிமுகப்படுத்தியது. ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடைபெறும் ஐரோப்பாவின் பெரிய டெக்னாலஜி எக்ஸ்போவை (ஐஎஃப்ஏ) ஒட்டியே சாம்சங் கேலக்ஸி நோட் 3 வெளியிடப்பட்டது. இதேபோன்று இந்த ஆண்டும் ஜெர்மனியின் பெர்லின் நகரில் வரும் செப்டம்பரில் ஐஎஃப்ஏ நடைபெற உள்ளது. இதற்குச் சில தினங்கள் முன்னதாக செப்டம்பர் 3 அன்று சாம்சங் கேலக்ஸி நோட் 4 ரிலீஸாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஐஎஃப்ஏ நிகழ்வை ஒட்டி ஆப்பிளின் ஐபோன் 6 அறிமுகமாகும் எனச் செய்திகள் பரவியுள்ள சூழலில் அதற்கு முன்னதாகவே தனது புதிய கேட்ஜெட்டைக் களமிறக்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தச் செய்தி டெக்னாலஜி பிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 4, ஸ்மார்ட்போனும் டேப்லெட்டும் இணைந்த ஃபேப்லெட் வகையைச் சேர்ந்தது. மேலும் இது அல்ட்ரா வயலட் சென்ஸார் கொண்ட முதல் ஸ்மார்ட் போன் என்றும் தெரிகிறது. நான்காம் தலைமுறை எல்டிஇ மொபைல் வயர்லெஸ் டெக்னாலஜி எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்திற்கு உதவும் வகையில் க்வால்காம் (Qualcomm) ப்ராசஸ்சர் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் டவுண்லோடு, அப்லோடு திறனை மேம்படுத்துகிறது. நோட் 4-ல் 16 எம்பி கேமராவும், 2 எம்பி ஃப்ரண்ட் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். சாம்சங் கேலக்ஸி நோட் 4-ன் டிஸ்ப்ளே 5.7 இஞ்ச் என்றும், இந்த டிஸ்ப்ளே க்வாட்-ஹெச்டு தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் படங்கள் துல்லியமாகத் தெரியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| யானையின் தந்தம் வெட்டப்படுவதை பார்த்ததுண்டா? Posted: 11 Aug 2014 12:56 AM PDT |
| மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்….. Posted: 11 Aug 2014 12:53 AM PDT |
| Fruits பிரியர்களே!.. ஈஸியா சாப்பிட சூப்பர் டிப்ஸ்…. Posted: 11 Aug 2014 12:49 AM PDT |
| நாட்டின் மேல் பற்று இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும்…. Posted: 11 Aug 2014 12:47 AM PDT |
| மறந்த மனைவியை மறக்காமல் பார்க்கும் கணவர்… இன்றைய தம்பதிகள் கட்டாயம் பார்க்கவும்! Posted: 11 Aug 2014 12:41 AM PDT |
| வயிறு வர ஆரம்பிக்கிறதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க… Posted: 11 Aug 2014 12:36 AM PDT
இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது. பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க... இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில் வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்... குறிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்து வந்தால், உடல் பருமன் குறையும். இங்கு கலோரி குறைவாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு வாருங்கள். காளானில் வைட்டமின் டி மற்றும் செலினியம் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டால் மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும். சாலட் செய்யும் போது, அதில் மறக்காமல் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும். பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கடுகு கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அமிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்! வெள்ளி வாங்கியது ஆடவர் அணி!! Posted: 11 Aug 2014 12:23 AM PDT
மகளிர் பிரிவில் தீபிகா குமாரி தலைமையிலான அணி தங்கப் பதக்கம் வென்றது. போலந்து நாட்டின் ராக்லா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இந்தியாவின் தீபிகா குமாரி, பாம்பேலா தேவி, லட்சுமிராணி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, இறுதிச் சுற்றில் மெக்ஸிகோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணியினர் 10 புள்ளிகளை 5 முறை எடுத்தனர். இதில் 3 முறை 10 புள்ளிகளை எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்தீபிகா குமாரி. தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர், அடனு தாஸ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மெக்ஸிகோவிடம் இறுதிச் சுற்றில் 3-5 என தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, புவஷா ஷிண்டே ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. முன்னணி வீராங்கனை தீபிகா குமாரி அணிகள் பிரிவில் தங்கம் வென்றார். அதோடு தனிநபர் பிரிவிலும், ஜெயந்தா தலுக்தருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இதனால், அவருக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன. பதக்கங்களை வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா, இந்த போட்டி அதிக கடினமாக இருக்கவில்லை. ஆசிய போட்டிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| எங்களையும் மதியுங்களேன்.. ஜுவாலா கட்டா குமுறல்! Posted: 11 Aug 2014 12:19 AM PDT
எங்களைப் போன்ற வீராங்கனைகளுக்கும், கிரிக்கெட் தவிர்த்த பிற விளையாட்டுக்களுக்கும் உரிய மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் தரப்பட வேண்டும். நாங்கள் பணத்திற்காக விளையாடவில்லை. அப்படி விளையாட நினைத்திருந்தால் பேட்மிண்டனையும், ஸ்குவாஷையும் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோம். வேறு விளையாட்டுக்குப் போயிருப்போம் என்று பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கூறியுள்ளார். இந்தியா டுடே மகளிர் மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில் தீபிகாவைப் போலவே ஜுவாலா கட்டாவும் விளையாட்டு பாரபட்சம் குறித்து குமுறல் வெளியிட்டார். எங்களுக்கும் கொஞ்சமாவது அங்கீகாரம், மதிப்பு, மரியாதை தேவை என்று நான் கருதுகிறேன். எங்களுக்குப் பணம் தேவையில்லை. அப்படி நினைத்திருந்தால் வேறு விளையாட்டை தேர்ந்தெடுத்திருப்போம். எதற்காக ஸ்குவாஷையும், பேட்மிண்டனையும் விளையாடப் போகிறோம். ஒரு தேசிய சாம்பியானவதற்கே இங்கு நூறு விதமான போராட்டங்களை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதில் சர்வதேச சாம்பியன் பட்டத்தைப் பற்றியெல்லாம் எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அரசு பேட்மிண்டன் சங்கத்திற்கு நிறைய நிதி கொடுப்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஆனால் பணமெல்லாம் எங்கே போகிறது என்றுதான் தெரியவில்லை. கிரிக்கெட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம், கவனிப்பு பிற விளையாட்டுக்களுக்கும் கிடைக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியம், 12 நாடுகளில் கிரிக்கெட்டை பிரமாதமாக வளர்த்துள்ளது. அதைப் பார்த்து பிற விளையாட்டு அமைப்புகளும் திருந்த வேண்டும், பாடம் கற்க வேண்டும் என்றார் ஜுவாலா கட்டா. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்திற்கு ஹமாஸ்- இஸ்ரேல் சம்மதம்! Posted: 11 Aug 2014 12:15 AM PDT
பாலஸ்தீனத்தின் காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. காஸா பகுதி மீது கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் வெறியாட்டத்துடன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பிஞ்சு குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள்தான் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து எகிப்தின் முன் முயற்சியில் அவ்வப்போது யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே உருவாக்கப்பட்ட 72 மணி நேர யுத்த நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இருதரப்பும் மீண்டும் தாக்குதல்களை தீவிரமாக்கின. இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது 51 முறை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மீண்டும் இஸ்ரேல் விமானங்கள் காஸா பகுதியில் குண்டு வீச்சில் ஈடுபட்டன. ஒரே நாளில் 20 இடங்களில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் மத்திய காஸாவில் 17 வயது மாணவர் உள்பட 10 பேர் பலியாகினர். இந்த நிலையில், டெல்அவிவ் நகரில் நேற்று நடந்த ராணுவ அமைச்சக கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் இயக்கத்தினருடன் இனிமேல் சமரச முயற்சி மேற்கொள்ளப்படமாட்டாது; விமான தாக்குதல் தொடரும் என்றும் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் இயக்கத்தினரும் யுத்த நிறுத்தம் செய்யமாட்டோம் என அறிவித்தனர். பின்னர் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் காஸா பகுதியில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அங்கு நிரந்தர யுத்த நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆதாரமற்ற குற்றங்களுக்காக நாட்டை விட்டு ஓடமாட்டேன் – பர்வேஷ் முஷரப்! Posted: 11 Aug 2014 12:09 AM PDT
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தான் பாகிஸ்தனை விட்டு ஓடியெல்லாம் செல்ல மாட்டேன் என்றும், தன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளார். அவரது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தொண்டர்களிடையே, நேற்று தொலைபேசி மூலம் அவர் உரையாற்றும்போது, "நான் பாகிஸ்தானை விட்டு ஒருபோதும் ஓடமாட்டேன். மாறாக என்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். எனினும் நோய்வாய்ப்பட்ட எனது தாயை பார்ப்பதற்காக நான் துபாய்க்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கிருந்து நான் உடனே நாடு திரும்பி விடுவேன்" என்று தெரிவித்தார். முன்னதாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், செனட் சபையின் தலைவருமான ராஜா ஜபருல் கூறுகையில், "முஷரப் வெளிநாடு செல்லும் விவகாரத்தில் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முஷரப் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| என் கணவர் தான் வேண்டும்: மன்னார் சிறப்பு தளபதி ஜானின் மனைவி ஆணைக்குழு முன் கதறல்! Posted: 11 Aug 2014 12:03 AM PDT
எனது கணவரை ஒருமுறையாவது காட்டுங்கள்..எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என முன்னாள் விடுதலைப் புலிகளின் மான்னார் சிறப்புத் தளபதி ஜானின் மனைவி ஆணைக் குழு முன் கண்ணீர் மல்க கதறி அழுதார். எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம் வீடு வேண்டாம் எனக்கு என் கணவர் தான் வேண்டும் என மன்னரில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான சாட்சியமளிக்கும் ஆணைக் குழு அமர்விலேயே இதனைத் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பாதிரியார் ஜோசெப் மைக்கல் உட்பட 40 பேருடன் தான் எனது கணவரும் சரணடைந்தார் எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் அவரை ஒரு முறையாவது காட்டுங்கள் என கதறி அழுதார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முன்னோக்கி நகர்த்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்தவே!– அஸ்கிரிய பீடாதிபதி Posted: 10 Aug 2014 11:58 PM PDT
நாட்டை முன்னோக்கி நகர்த்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என அஸ்கிரிய பீடாதிபதி உடுகம சிறி புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீராம விஹாரையில் நேற்று நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பழக்க வழக்கங்களை பேணிப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்தியை முன்நோக் நகர்த்தக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதியே. அமைச்சர்கள் அதிகாரிகள் இதற்கு முழு அளவில் ஆதரவளித்தால் நாட்டை மேலும் அபிவிருத்தி அடையச் செய்ய முடியும். ஜனாதிபதி சிறந்த முறையில் கடமையாற்றி வருகின்றார். அவரால் தனித்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்ய வேண்டியது அவசியமானது. அரசாங்கத்தின் குறைபாடுகள் இருக்கக் கூடும் அவை அனைத்தையும் ஜனாதிபதியினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியாது என அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடாதிபதி ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கடந்த காலங்களில் விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரதமர் டோனி அபொட்டின் அகதி கொள்கைகளுக்கு இந்தோனேசியா எதிர்பார்ப்பு! Posted: 10 Aug 2014 11:54 PM PDT
இலங்கை அகதிகளின் வருகையை எதிர்பார்த்து அவுஸ்திரேலியா தமது கடல் பாதுகாப்பினை அதிகப்படுத்துவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரதமராக ரொனி அபொட் பதவி ஏற்றதைத் தொடந்து, சுமார் ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த ஜுன் மாதம் இலங்கை அகதிகளின் படகுகள் இரண்டு அவுஸ்திரேலியா சென்றிருந்தன. இந்த படகுகள் அவுஸ்திரேலிய எல்லைக்குள் செல்வதற்கு முன்னதாகவே அவுஸ்திரேலிய அதிகாரிகளால் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இடைமறித்து, சுமார் 43 அகதிகள் வரையில் உடனடியாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர். எனினும் அவர்களில் தமிழ் நாட்டில் இருந்து சென்ற 157 அகதிகளை சர்வதேச அழுத்தங்களின் நிமித்தம் நாடுகடத்த முடியாமல், தற்போது நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ் நாட்டில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட சில இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கடல் எல்லை பாதுகாப்பை விழிப்பூட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அகதிகள் தொடர்பான உடன்படிக்கையை இந்தோனேசிய அரசாங்கம் தகர்க்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில் கெவின் ருட் பிரதமராக இருந்த காலப்பகுதியில் இந்;தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுடன் இந்த அகதிகள் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் கீழ் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இலங்கை அகதிகள் சிலர் இடைமறிக்கப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த அகதிகள் உடன்படிக்கையால் தமக்கு அரசியல் மற்றும் நிதி ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக இந்தோனேசியா கருதுகிறது என்று கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தீர்வை முன்வைத்தால் ஏற்றுக்கொள்வோம்: மகிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி! Posted: 10 Aug 2014 11:50 PM PDT
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம் என்று எவரும் கருதினால், பாரதூரமான விளைவுகள் ஏற்படும்" என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தக் கருத்துக்கள், அரச சார்பு ஊடகம் ஒன்றில் வெளியாயின. இதையடுத்தே சம்பந்தர் இக்கருத்துக்களை பிபிசியிடம் தெரிவித்தார். அரசு இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்து, நாட்டுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள், நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக் கூடியத் தீர்வுகளை அது முன்வைத்தால் தமது தரப்பு அதை ஏற்றுக் கொள்ளும் எனவும் சம்பந்தர் கூறுகிறார். நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் நோக்கம் குறித்து தாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அது தொடர்பில், அரச தரப்பில் வெளியாகியுள்ள கருத்துக்களும் தங்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஆளும் கட்சியிலுள்ள ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் பங்காளிக்கட்சியின் தலைவர்கள் ஆகியோர் ஊடகங்கள் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக்கூடாது. என்றெல்லாம் தமிழ்மக்களை சீண்டிப்பார்க்கும் அளவுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஆனால் நாம் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் எவ்வாறு பேச வேண்டும் என்பது அரசாங்கத்தர்ப்பினரிடமே உள்ளது .அதில் எமக்கு ஒரு தெளிவு ஏற்படுத்த வேண்டும். அது அரசாங்கத்தின் கையிலே உள்ளது. கடந்த காலங்களில் பேச்சு முறிவதற்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல. அரச தரப்பினரே எமது நிபந்தனையை அதாவது இனப்பிரச்சினையை தீர்க்க எத்தகைய தீர்வை உத்தேசித்திருக்கிறீர்கள், அதை முன்வையுங்கள் என்று பல தடவைகளில் கூறியிருந்தோம். பல தடவைகள் விட்டுக்கொடுத்தோம். அவர்கள் காலத்தை இழுத்தடிப்பதில் குறியாக இருந்தனரே தவிர எமது தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. ஜனாதிபதி கூறுவதுபோல் தமிழ் ஊடகங்களில் மட்டும் தமிழில் அறிக்கை விடுவதில்லை. கடந்த வாரம் கூட பாராளுமன்றில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்தேன். அந்த விடயம் சகல ஆங்கில ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது. இருந்தும் தமிழ் பத்திரிகைகளை ஜனாதிபதி அவர்கள் உன்னிப்பாக பார்த்து அறிந்து கொள்வது வழக்கம் என்பதும் எமக்குத் தெரியும். ஆகவே அவர் கூறுவது போல் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு நாம் பின்னிற்கவில்லை, என்றும் தயாராக உள்ளோம். ஆனால் அரசாங்கம் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள், நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக் கூடியத் தீர்வுகளை அது முன்வைத்தால் தமது தரப்பு அதை ஏற்றுக் கொள்ளும் எனவும் சம்பந்தர் கூறுகிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடியைப் போன்ற பிரதமர் இலங்கைக்குத் தேவையாம்! Posted: 10 Aug 2014 11:46 PM PDT
நரேந்திர மோடி போன்று உறுதியான பிரதமர் ஒருவர் இலங்கைக்குத் தேவை என்று ராவணா சவிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் பௌத்த இனவாத சிந்தனைகளைப் பரப்பும் நோக்கில் நாளுக்கு நாள் புதுப்புது அமைப்புகள் உருவெடுத்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கெனவே உள்ள பொதுபல சேனா, ராவணா பலய, சிங்கள ராவய, ஹெல உறுமய அமைப்புகளுடன் தற்போது புதிதாக ராவணா சவிய என்றொரு அமைப்பும் சேர்ந்து கொண்டுள்ளது. இந்த அமைப்பு தனது வருகையை அறிவிக்கும் நோக்கில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி உறுதியானவர். வரலாறு பற்றி நன்கு அறிந்த, வரலாற்றை நேசிப்பவர். இந்திய கலாசாரம், மக்கள் விருப்புகள், மரபுகளை நன்கு அறிந்தவர். நாட்டுப் பற்று மிக்கவர். அவரைப் போன்ற ஒருவர் இலங்கைக்கும் பிரதமராக வரவேண்டும். ஆனால் இலங்கையின் இன்றைய பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு வரலாறு குறித்து அறவே தெரியாது. எமது இலங்கையின் பாரம்பரியப் பெருமைக்கு உரித்தான இராவணன் குறித்து, அவன் சீதையைக் கடத்தி வந்தவன் என்று அபாண்டம் சுமத்துகின்றார். ஆனால் இது வால்மீகி இராமாயணத்தின் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கதையாகும். மேலும் பௌத்த மதத்தின் கிழக்குப் பிராந்திய காவலன் இராவணன் என்பது புராண இதிகாசங்களின் வாயிலாக அறியக் கிடைத்துள்ள தகவல்களாகும். இவ்வாறான நிலையில் சர்வ மத நல்லிணக்கம் என்ற போர்வையில் இலங்கையில் சிங்களவர்களின் பாரம்பரிய பெருமைக்குரிய வரலாற்றை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்தச் செயல்களுக்கு துணை போகும் பிரதமர் டி.எம்.ஜயரட்ன, பிரதமர் பதவிக்குப் பொருத்தமற்றவர் என்பதையும் வலியுறுத்திக் கொள்கின்றோம் என்றும் அந்த ஊடக அறிக்கை வாயிலாக ராவணா சவிய அமைப்பு தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















