Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அருண்ஜேட்லி, கரண்சிங், சரத்யாதவுக்கு சிறந்த நாடாளுமன்ற வாதி விருது

Posted: 12 Aug 2014 11:33 PM PDT

மத்திய நிதிமந்திரி அருண் ஜேட்லி, கரண்சிங் (காங்), சரத்யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அருண்ஜேட்லி, கரண்சிங், சரத்யாதவ் ஆகியோரை பாராளுமன்ற ஆய்வுகுழு 'சிறந்த பாராளு மன்றவாதி'களாக தேர்ந்து

வேட்பு மனுவில் போலி கையெழுத்து: ஆந்திர எம்.பி.யின் பதவி பறிபோகுமா?

Posted: 12 Aug 2014 10:56 PM PDT

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் அரக்கு தொகுதி எம்.பி.யாக இருப்பவர் கொத்தபள்ளி கீதா. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அவர் பின்னர் அந்த கட்சி பற்றி விமர்சனம் செய்தார். அதன் பிறகு அவர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு ஆகியோரை தனித் தனியாக சந்தித்தார். எனவே அவர் பா.ஜனதா அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் இணையலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

Posted: 12 Aug 2014 10:44 PM PDT

பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 மாதங்களாக இந்திய எல்லையில் அடுத்தடுத்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தினமும் எல்லையில் தாக்குதல் நடத்துகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு நேற்று சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

15–ந்தேதி சுதந்திரதின விழா: டெல்லி செங்கோட்டையில் மோடி கொடி ஏற்றுகிறார்

Posted: 12 Aug 2014 10:28 PM PDT

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி புதிய திட்டங்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். வருகிற 15–ந்தேதி நாட்டின் 68–வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல் – மந்திரிகளும் கொடியேற்றுகிறார்கள்.

ஆந்திராவின் தற்காலிக தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Posted: 12 Aug 2014 10:17 PM PDT

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிந்ததை தொடர்ந்து தெலுங்கானா, ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் பல பிரச்சினைகள் தலைதூக்கி வருவதால் ஆந்திராவுக்கு விரைவில் புதிய தலைநகரை அமைக்க ஆந்திரா அரசு முடிவு செய்துள்ளது.

பத்மநாபசுவாமி கோவில் பி அறையை திறந்து பொக்கிஷங்கள் கடத்தல்: சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

Posted: 12 Aug 2014 10:10 PM PDT

திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள ரகசிய நிலவறைகளில் பல நூற்றாண்டு பழமையான தங்க, வைர நகைகள் உள்பட அபூர்வ பொருட்கள் அடங்கிய பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக மதிப்பீட்டு குழுவும்

அமெரிக்க பயணக் கட்டணங்கள் உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி

Posted: 12 Aug 2014 09:48 PM PDT

தேவைகளுக்கேற்பவும், விடுமுறைக் காலங்களைப் பொறுத்தும் விமானப் பயணக் கட்டணங்களில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் சகஜமான ஒன்றாகும். ஆனால் இந்த சீசனுக்கான அமெரிக்க ஒரு வழிப் பயணக் கட்டணங்கள் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்திருப்பது பயணிகளையே மலைப்புக்கு உட்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை உளவு பார்த்ததாக புகார்: மோடி மீதான வழக்கு தள்ளுபடி

Posted: 12 Aug 2014 08:09 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, அவர் மீது இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இளம்பெண் ஒருவரை உளவு பார்க்க மோடி உத்தரவிட்டார் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் அவர் கூறி இருந்தார். ஆனால் அந்த பெண்ணின் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த

2ஜி வழக்கு: கனிமொழி மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு

Posted: 12 Aug 2014 07:56 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கனிமொழி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில், கடந்த ஆண்டு (2013) ஜூலை மாதம் 14-ந் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள

டெல்லியில் வாட்ஸப் செய்த மாயம்: லஞ்சம் வாங்கிய 5 போலீசார் ஒரே வாரத்தில் சிக்கினர்

Posted: 12 Aug 2014 04:42 PM PDT

லஞ்சம் வாங்கும் போலீசார் பற்றி தகவல் அளிக்கவும், பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும் 9910641064 என்ற எண் கொண்ட 'வாட்ஸப்' அழைப்பு முறையை டெல்லி போலீஸ்துறை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. அதற்குள்ளாக லஞ்சம் வாங்கிய 5 போலீசாரைப் பற்றிய ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் இந்த 'வாட்ஸப்' எண்ணுக்கு வந்து குவிந்துள்ளன.

விழா மேடையில் பிரதமரை பாராட்டிய ஜனாதிபதி- அவருக்கு புகழாரம் சூட்டிய மோடி

Posted: 12 Aug 2014 02:34 PM PDT

பாராளுமன்றத்தில் சிறப்பாக சேவையாற்றிய எம்.பி.க்களுக்கு விருது வழங்கும் விழா பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. 2010,2011,2012-ம் ஆண்டுகளின் சிறந்த எம்.பி.க்களுக்கான விருது அருண் ஜெட்லி, கரண் சிங், சரத் யாதவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

ரெயில் மோதி மாணவிகள் பலி

Posted: 12 Aug 2014 02:27 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், டியோரியா மாவட்டத்தில் உள்ள மீர் கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு செல்ல யாஸ்மின்(14), நக்மா(15) ஆகிய மாணவிகள் நேற்று அம்ரிஸ்சர்- கட்டிஹர் நிலயங்களுக்கு இடையிலான ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

மசூதிகளின் ஒலிபெருக்கிகளை கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும்: உத்தவ் தாக்கரே

Posted: 12 Aug 2014 12:56 PM PDT

மகாராஷ்ட்டிர மாநிலத்தில் ஆண்டுதோறும் 'தஹி ஹண்டி' (தயிர் பானை) என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் 'உறியடி திருவிழா'வைப் போன்ற இவ்விழாவின்போது, ஆண்களும் பெண்களும் (தனித்தனியாக) ஒருவரது தோளில் ஒருவர் அடுக்கடுக்காக ஏறி நின்று, சுமார் 50 அடி உயரமுள்ள மனித பிரமிட்களாக

15-ம் தேதி பெட்ரோல் விலை குறையும்

Posted: 12 Aug 2014 12:32 PM PDT

சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடும் சரிவை சந்தித்து வருவதால், சந்தை சூழ்நிலைக்கேற்பவும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியின் அடிப்படையிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோலின் விலையை மாற்றி அமைக்கும் எண்ணை நிறுவனங்களின் முடிவின்படி, வரும் 15-ம் தேதி பெட்ரோல்

அரசு பள்ளிக்கூடத்தை மதுக்கூடமாக்கிய 6 ஆசிரியர்கள் கைது

Posted: 12 Aug 2014 10:48 AM PDT

அறிவுக்கூடமாக விளங்கும் பள்ளிக்கூடத்தை மதுக்கூடமாக்கிய ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், ஹங்கர்வாடி பகுதியில் அரசு ஆரம்பநிலை பள்ளிக்கூடம் ஒன்றுள்ளது. நேற்றிரவு அந்த பள்ளிக்கூடத்தின் வழியாக ரோந்து சென்ற போலீசார், பள்ளி வளாகத்தின் உள்ளே இருந்து யாரோ தகராறு செய்வது போல் சத்தம்

துணை முதல் மந்திரியை நோக்கி செருப்பு வீசிய பெண் கைது

Posted: 12 Aug 2014 10:32 AM PDT

மகாராஷ்ட்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சமோர்ஷி நகரில் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அம்மாநில துணை முதல் மந்திரி அஜித் பவார், இறுதியாக தனது பேச்சை முடிக்கும் போது, 'ஜெய் ஹிந்த், ஜெய் மஹாராஷ்ட்டிரா' என்று கூறினார்.

கோவாவில் ஸ்ரீராம் சேனா செயல்பட அனுமதிக்க முடியாது: மனோகர் பாரிக்கர்

Posted: 12 Aug 2014 08:38 AM PDT

கோவா மாநிலத்தில் ஸ்ரீராம் சேனா செயல்படுவதற்கு அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். கோவா சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய முதல்வர் பாரிக்கர், ''ஸ்ரீராம் சேனா கோவாவில் இல்லை. அது கர்நாடகாவில்

எல்லைப் பகுதிகளில் இருந்து 20 இந்திய வீரர்கள் மாயம்: அதிர்ச்சி தகவல்

Posted: 12 Aug 2014 07:53 AM PDT

நாட்டின் எல்லைப்பகுதிகளில் பணியமர்த்தம் செய்யப்பட்டிருந்த 20 இந்திய வீரர்கள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 1996 முதல் 2010 வரை இவர்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானில் நீரில் மூழ்கி நான்கு பேர் பலி

Posted: 12 Aug 2014 07:48 AM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் பெண் குழந்தை உள்பட நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அஞ்மீரின் கஞ்ச் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அஜய்பால் குண்ட் என்ற பகுதிக்கு நண்பர்கள் ஐந்து பேர் இன்று சுற்றுலா சென்றனர். அப்போது நீரில் நீச்சலடித்துக்கொண்டிருந்தபோது ராஜேந்திரா, ராஜு சிங் மற்றும் கஜ்ரஜ்

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது பிளாஸ்டிக் கொடிகளை விற்பதற்கு கோவா அரசு தடை

Posted: 12 Aug 2014 07:17 AM PDT

வரும் 15ஆம் தேதி சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது பிளாஸ்டிக் கொடிகளை விற்பதற்கு கோவா அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் கொடிகளை வாங்குவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அதுபோல் விற்பவர்களைப் பார்த்தால் காவல் நிலையத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™