Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஆசஸ் Fonepad 7 (FE170CG) டேப்லெட் அறிமுகம்!

Posted: 12 Aug 2014 02:32 AM PDT

Fonepad-7-FE170CG

Fonepad-7-FE170CGஆசஸ் நிறுவனம் வியாழக்கிழமை அன்று இந்தியாவில் ரூ.8,999 விலையில் Fonepad 7 (FE170CG) டேப்லெட்டை தொடங்கியுள்ளது.

இந்த சாதனம் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மே மாதம் தாய்லாந்தில் முதல் முறையாக THB 4190 (சுமார் ரூ.7,670) விலையில் வெளியிடப்பட்டது.

இந்த Fonepad 7 (FE170CG) டேப்லெட்டில் 1024x600 பிக்சல் தீர்மானம் கொண்ட WSVGA டிஸ்ப்ளே மற்றும் 169ppi பிக்சல் அடர்த்தி வருகிறது.

குரல் அழைப்பு கொண்ட டேப்லெட்டில் ZenUI ஸ்கின் உடன் இணைந்து ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குகிறது. இது ஹைப்பர் த்ரெட்டிங் தொழில்நுட்பம் கொண்ட 1.2GHz இரட்டை கோர் இண்டெல் ஆட்டம் Z2520 'Clover Trail+' பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் ரேம் 1GB கொண்டுள்ளது. புதிய ஆசஸ் டேப்லெட் microSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB மற்றும் 4GB ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது. Fonepad 7 (FE170CG) டேப்லெட்டில் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.

டேப்லெட்டில் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, Miracast, ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், மற்றும் 3 ஜி எச்எஸ்பிஏ + ஆகியவை அடங்கும்.

Fonepad 7 (FE170CG) டேப்லெட் 10 மணி நேரம் வரை தாங்கக்கூடிய பேட்டரி ஆயுள் வழங்குகிறது. இந்த டேப்லெட்டில் கருப்பு, வெள்ளை, சிவப்பு, மற்றும் நீல வண்ணத்தில் கிடைக்கிறது. டேப்லெட் மெஷர்ஸ் 192x110.8x10.7mm மற்றும் 290 கிராம் எடையுடையது.

ஆசஸ் Fonepad 7 (FE170CG) டேப்லெட் சிறப்பம்சங்கள்:

1024x600 பிக்சல் தீர்மானம் கொண்ட WSVGA டிஸ்ப்ளே,

169ppi பிக்சல் அடர்த்தி,

1.2GHz இரட்டை கோர் இண்டெல் ஆட்டம் Z2520 'Clover Trail+' பிராசசர்,

ரேம் 1GB,

microSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8GB மற்றும் 4GB சேமிப்பு வகைகள்,

இரட்டை சிம்,

2 மெகாபிக்சல் பின்புற கேமரா,

0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,

Wi-Fi 802.11 b/g/n,

ப்ளூடூத் 4.0,

Miracast,

ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ்,

3 ஜி எச்எஸ்பிஏ +,

ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,

290 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே கடியில் 20 பேரின் உயிரை பறிக்கும் பாம்பு….. தெய்வமாக வழிபடும் மக்கள்!

Posted: 12 Aug 2014 02:19 AM PDT

Pray-it-doesn't-bite-Deadly-snake-hovers-ominously-close-to-man's-face-at-religious-ceremony-Mirr

Pray-it-doesn't-bite-Deadly-snake-hovers-ominously-close-to-man's-face-at-religious-ceremony-Mirr

This posting includes an audio/video/photo media file: Download Now

கடற்கரையில் கரையொதுங்கிய கடற்கன்னி….

Posted: 12 Aug 2014 02:16 AM PDT

Mermaids-appear-in-spanish-sea

Mermaids-appear-in-spanish-sea

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆப்பிள் பழங்களை சுத்தம் செய்து விற்பனைக்கு அனுப்பும் முறை…..

Posted: 12 Aug 2014 02:11 AM PDT

Touring-an-apple-packing-facility

Touring-an-apple-packing-facility

This posting includes an audio/video/photo media file: Download Now

காத்து வாங்கிட்டே தம் அடிக்குறதுல எவ்ளோ ஒரு ஆனந்தம்..

Posted: 12 Aug 2014 02:07 AM PDT

HILARIOUS-SMOKING-MONKEY

HILARIOUS-SMOKING-MONKEY

This posting includes an audio/video/photo media file: Download Now

பாம்பின் உச்சக்கட்ட கோபம்…. கூலாக கையாளும் மனிதர்!

Posted: 12 Aug 2014 02:03 AM PDT

King-Cobra-Master-Unbelievable

King-Cobra-Master-Unbelievable

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹன்சிகா போட்ட குத்தாட்டம்….

Posted: 12 Aug 2014 02:00 AM PDT

Ravi-Teja,-Brahmanandam,-Hansika-&-Funny-Dance-Performance-Power-Movie-Audio-Launch

Ravi-Teja,-Brahmanandam,-Hansika-&-Funny-Dance-Performance-Power-Movie-Audio-Launch

This posting includes an audio/video/photo media file: Download Now

அழகை விரும்பும் பெண்களுக்கு மட்டும்…. ஆண்கள் பார்க்க வேண்டாம்!

Posted: 12 Aug 2014 01:51 AM PDT

Windows-8-asia-Beautiful-and-Fast

Windows-8-asia-Beautiful-and-Fast

This posting includes an audio/video/photo media file: Download Now

அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காய்ச்சல்!

Posted: 12 Aug 2014 01:42 AM PDT

headache

headache1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வந்தது. இதுவரை ஆப்பிரிக்காவில் பரவி பல மக்களை கொன்ற இந்த வைரஸானது, தற்போது இந்தியாவில் மும்பை, தமிழ்நாடு போன்ற இடங்களில் பரவி வருவதாக வந்த தகவல்களால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தியாவில் பரவி வரும் உயிரைப் பறிக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்! ஏனெனில் ஆப்பிரிக்காவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தது இல்லை. மேலும் இதற்கு இன்னும் போதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோயினால் தாக்கப்பட்டால் மரணத்தைக் கூட தழுவக்கூடும். எபோலா வைரஸ் நோயானது காற்று, நீர் போன்றவற்றினால் பரக்கூடியது அல்ல. விலங்குகளான குரங்கு, வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும். மேலும்ம் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தில் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!! இப்போது இந்தியாவில் பரவியுள்ளதாக கூறப்படும் இந்த எபோலா வைரஸின் அறிகுறிகள் மற்றும் அந்த நோய் பரவுவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம். முக்கியமாக இந்த நோய் தாக்கி இதன் அறிகுறிகள் தெரிய 5-10 நாட்கள் ஆகும். ஆகவே கவனமாக இருங்கள். எபோலா வைரஸ் தாக்கியிருந்தால், முதலில் காய்ச்சல் வரக்கூடும். காய்ச்சலைத் தொடர்ந்து உடல் எப்போதும் மிகவும் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும். இந்த வைரஸ் தாக்குதலால் தொண்டையில் புண் ஏற்படும். எதை சாப்பிட்டாலும் வாந்தி வரக்கூடும். வயிற்று வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எபோலா வைரஸ் தாக்கியிருந்தால் கடுமையான வயிற்று வலி வரும். வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும். அதைத் தொடர்ந்து சருமத்தில் அரிப்புகளும், கட்டிகளும் ஏற்படும். குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும். சிலருக்கு நெஞ்சு வலி வரும். அதுமட்டுமின்றி மூச்சு விடுவதில் கூட சிலருக்கு சிரமம் ஏற்படும். உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்கள் சிவப்பாகவும், அடிக்கடி விக்கல் ஏற்படும். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும். எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்குதலில் இருந்து வெளிவரலாம்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திட்டி தீர்க்கும் முன்னாள் ஆட்டக்காரர்கள்!

Posted: 12 Aug 2014 01:31 AM PDT

virat-kholi

virat-kholiஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அடைந்த மோசமான டெஸ்ட் தோல்விக்காக முன்னாள் வீரர்கள், இந்திய அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டியில் லாட்சில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் 3 மற்றும் 4காவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எதிரணியிடம் ஒட்டுமொத்தமாக சராணகதி அடைந்து தோற்றது. இதுகுறித்து முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தாகியா கூறுகையில் "3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பந்து வீச்சாளர் மெயீன் அலிக்கு எதிராக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். எனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு எதிராக அடித்து ஆட முயன்றனர். ஆனால் அப்போதும் அவுட்தான் ஆனார்கள். விராட் கோஹ்லி தன்மீது மிகுந்த அழுத்தத்தை கொடுத்து வருகிறார். வெளியில் இருந்து வரும் அழுத்தத்தை தாண்டி அவருக்கு அவரே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். இந்த போட்டித்தொடரில் ஒரே மாதிரியான வகையில் விராட் கோஹ்லி அவுட் ஆகிவருகிறார். சிறந்த பேட்ஸ்மேனான அவர், டெக்னிக்கல் ரீதியில் தோல்வியடைந்து அவுட் ஆவதாக நான் நினைக்கவில்லை. அவரது மனது கலக்கத்தில் இருப்பதால்தான் இதுபோன்று அவுட் ஆகிறார். நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற மான்செஸ்டரில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எனவே 4வது, ஐந்தாவது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி தடை பட வாய்ப்பு இருந்தது. இந்திய அணி இரு இன்னிங்சுகளிலும் தலா 100 ஓவர்கள் நிலைத்து நின்றிருந்தாலே ஆட்டம் டிராவில் முடிந்திருக்கும். குறிப்பாக எதிரணியின் முக்கியமான இரு பந்து வீச்சாளர்கள் காயத்தால் பந்து வீசாத நிலையிலும் இந்தியாவால் அதை செய்ய முடியவில்லை. இரு இன்னிங்சுகளையும் சேர்த்தால்கூட 100 ஓவர்கள் இந்தியா பேட்டிங் செய்யவில்லை" என்று விஜய் தாகியா தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மின்னல் வேகத்தில் போன கார்… நொடி இடைவெளியில் விபத்திலிருந்து தப்பிய கவாஸ்கர்!

Posted: 12 Aug 2014 01:24 AM PDT

gavaskar

gavaskarமுன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், லண்டனில் காரில் போய்க் கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக சின்னக் காயம் கூட இல்லாமல் தப்பினார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதற்காக கிரிக்கெட் வர்னணைக்காக கவாஸ்கரும் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து, கவாஸ்கர் ஜாகுவார் ரக கார் ஒன்றில் மான்செஸ்டர் நகரிலிருந்து லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். கவாஸ்கரும், அவரது லண்டன் நண்பர் சந்திரேஷ் படேல், இங்கிலாந்து டிவி வர்னணையாளர் மார்க் நிக்கோலஸ் ஆகியோரும் அந்தக் காரில் பயணித்தனர். கார் படு வேகமாக போய்க் கொண்டிருந்தது. அப்போது சரியான மழையும் பெய்து கொண்டிருந்தது. கன மழையில் எதிர் வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாத நிலையில் சாலை இருந்தது. சில நொடி நேரத்தில் உயிர் தப்பியதை அறிந்து கவாஸ்கரும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், கடவுளே.. கடவுள்தான் எங்களைக் காப்பாற்றினார். கார் படு வேகமாக போய்க் கொண்டிருந்தது. நல்ல வேளையாக யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை. மிக மிக அச்சுறுத்தலாகப் போய் விட்டது என்றார். இந்த விபத்தைத் தொடர்ந்து கார் பயணத்தைக் கைவிட்ட கவாஸ்கரும் மற்றவர்களும், ரயில் மூலம் லண்டனுக்குக் கிளம்பிச் சென்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

யாஸிதிகள் குழுமியதால் உணவுப் பொட்டலம் போட முடியாமல் திரும்பிய விமானம்!

Posted: 12 Aug 2014 12:53 AM PDT

iraq-mass-killing

iraq-mass-killingகடுமையான பசி மற்றும் தாக்குதல் அபாயத்தால் வாடி வரும் யாஸிதி சிறுபான்மையினருக்கு உணவுப் பொட்டலங்களைப் போட வந்த உதவி விமானம், ஆயிரக்கணக்கில் கூடிய யாஸிதி மக்களால், எப்படி உணவுப் பொட்டல்ததைப் போடுவது என்று தெரியாமல், மீண்டும் திரும்பிச் சென்று விட்டது. மிகப் பெரிய அளவில் அகதிகள் கூடியிருந்த நிலையில் உணவுப் பொட்டலங்களைப் போட்டால் அவர்களுக்குள் பெரும் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடும் என்பதால் உதவி விமானம் திரும்பிச் சென்று விட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த விமானப்படை விமானம் ஒன்று உதவிப் பொருட்களுடன் சிஞ்சார் மலைப் பகுதிக்கு வந்தபோதுதான் இந்த நெருக்கடி ஏற்பட்டு விட்டது. அங்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்புவதற்காக ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தவர்களும், கிறிஸ்தவர்களும் அடைக்கலம் புகுந்துள்ளனர். குடிநீர், சாப்பாடு இல்லாமல் தவித்து வருகின்றனர். மலைப் பகுதியில் உரிய தங்குமிட வசதி இல்லாமல், சாப்பாடு, குடிநீர் இல்லாமல் கடும் குளிரிலும், வெயிலிலும் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மறுபக்கம் மனிதகுணமே இல்லாத ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களை கொத்துக் கொத்தாக வேட்டையாடி வருகின்றனர். 500க்கும் மேறப்ட்டோரை இதுவரை அவர்கள் மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பலரை உயிருடன் புதைத்துள்ளனர் தீவிரவாதிகள். இந்த நிலையில் உதவிப் பொருட்களுடன் வந்த இங்கிலாந்து விமானப்படை விமானம், உணவுப் பொருட்களைப் போட முடியாத நிலைக்குப் போய் திரும்ப நேரிட்டுள்ளது. காரணம், உணவுப் பொருட்களைப் பெற மிகப் பெரிய அளவில் யாஸிதிகளும், கிறிஸ்தவர்களும் கூடி விட்டனர். ஒரு உணவுப் பொட்டலத்தையும் போட முடியாத நிலை. மீறிப் போட்டால், அதை பெற கூட்டம் முண்டியடிக்கும், நெரிசல் ஏற்படும். அதில் சிக்கி பலர் இறந்து போக நேரிடும் என்ற இக்கட்டான நிலை. இதனால் அந்த விமானம் திரும்பிப் போய் விட்டது. இதுவரை கடந்த 48 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை பாலியல் அடிமைகளாக அவர்கள் பயன்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தாக்குதல் எதிரொலி: ஈராக்கில் பயணிகள் விமான சேவை கடும் பாதிப்பு

Posted: 12 Aug 2014 12:48 AM PDT

lufthansa

lufthansaவடக்கு ஈராக் பகுதிக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளதாக ஜெர்மனியின் முன்னணி விமான சேவை நிறுவனமான லுப்தான்ஸா அறிவித்துள்ளது. பிரான்க்பர்ட் நகரில் இருந்து ஈராக்கின் எர்பில் நகருக்கு வாரத்தில் இரு நாட்கள் இயக்கிய லுப்தான்ஸா விமானமும், வியன்னாவில் இருந்து எர்பில் நகருக்கு தினசரி இயக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஏர்லைன்ஸ் விமானமும் தற்காலிகமாக தங்கள் இயக்கத்தை நிறுத்தியுள்ளன. ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க விமானப்படை இரு நாட்களுக்கு முன்பிருந்து தாக்குதலை ஆரம்பித்துள்ளது. குர்திஷ் வீரர்களை காக்க அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இத்தாக்குதல் வடக்கு ஈராக் பகுதியில்தான் அதி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே அந்த பகுதியின் வான் எல்லையை கடந்து விமானங்கள் பறப்பது அவற்றின் பாதுகாப்புக்கு குந்தகமாக முடிந்துவிடும் என்று விமான போக்குவரத்து நிறுவனங்கள் அச்சமடைந்துள்ளன. லுப்தான்ஸா நிறுவனம் ஈராக்கில் எர்பில் நகருக்கு மட்டுமே விமானச்சேவையை அளித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அதையும் நிறுத்திவிட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய பிரதமர் மக்களை ஒன்றுபடுத்துவார் – ஒபாமா

Posted: 12 Aug 2014 12:37 AM PDT

obama

obamaஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று ஈராக் பிரச்சனை தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளித்தார். அதில் அவர், ஈராக்கில் தீவிரவாத சக்திகள் குர்து மக்களின் எப்ரில் நகரை கைப்பற்றுவதை தடுக்கும் வகையிலும், அங்குள்ள அமெரிக்க மக்களை காக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் வெற்றிகரமாக வான்வழி தாக்குதலை நடத்தின. குர்திஷ் படைகளுக்கு தேவையான ராணுவ ஆலோசனை மற்றும் உதவியை அதிகரித்து ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளுக்கு எதிராக தரைவழியாக அவர்கள் போராடி தங்களது நகரத்தை பாதுகாத்துக் கொள்ளவும் உதவி வருகிறோம். அதே வேளையில், சிஞ்சார் மலைப்பகுதியில் தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான உதவிகளையும் நமது விமானப்படை விமானங்கள் மூலமாக மனிதநேய அடிப்படையில் நாம் அன்றாடம் செய்து வருகிறோம். மலை மீது இருக்கும் மக்களை தாக்க நினைக்கும் எந்த தீவிரவாத சக்தியையும் தாக்கி அழிக்கவும், அங்குள்ள நமது விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் பெரிதாகிக் கொண்டே வரும் சிக்கலான அரசியல் நிலவரத்துக்கு அமெரிக்க ராணுவத்தால் தீர்வு காண முடியாது. ஈராக்கில் உள்ள அனைத்து மக்களின் சட்ட பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கவும், ஐ.எஸ்.ஐ.எல். படைகளுக்கு எதிராக நாட்டின் போராட்டத்தை ஒருமுகப்படுத்தவும், ஈராக் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிலையான அரசை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே அங்கு நிலவி வரும் பிரச்சனைக்கு நீடித்த தீர்வாக அமையும். இதன் முன்முயற்சியாக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஈராக் அதிபர், அந்நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, ஹைதர் அல் அபாடியை பிரதமராக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, ஈராக்கில் உள்ள பல்வேறு சமுதாயங்களை ஒன்றுபடுத்தும் விதமான புதிய அரசை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும்" என்று தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

செல்ஃபி மோகம்! மலை உச்சியில் இருந்து கால் தவறி கடலில் விழுந்து இறந்த தம்பதி

Posted: 12 Aug 2014 12:33 AM PDT

selfie-on-cliff-edge-kills-polish-couple

selfie-on-cliff-edge-kills-polish-coupleசெல்போனின் செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், போலந்து நாட்டு தம்பதி, மலை உச்சியில் இருந்து கால்தவறி கடலில் விழுந்து இறந்த சம்பவம் பிரபல சுற்றுலா தலமான போலந்து நாட்டின் லிஸ்பன் அருகே நடந்துள்ளது.

செல்ஃபி போட்டோ எடுத்துக்கொள்வது இப்போது பேஷனாகிவிட்டது. எங்கு நோக்கினும் செல்ஃபி மயம்தான்.

இதே மயக்கத்தில்தான் போலந்து நாட்டு தம்பதி மலை உச்சியில் இருந்து கடலில் விழுந்து இறந்துள்ளனர்.

போலந்து நாட்டிலுள்ள பிரபல சுற்றுலா தலமான லிஸ்பன் அருகேயுள்ளது கபோ டே ரோகா. இங்கு மலை குன்றை ஒட்டி, அட்லான்டிக் கடல் அமைந்துள்ளது.

இந்த பகுதிக்கு தங்களது ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகளுடன் போலந்து தம்பதி ஒன்று வந்துள்ளது. குழந்தைகளை ஓரமாக நிற்க செய்துவிட்டு மலை குன்றின் உச்சியில் நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளது அந்த தம்பதி.

பின்பக்கம் இருந்த கடலும் சேர்ந்து படத்தில் விழ வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சிபகுதிக்கே வந்த அந்த கணவனும், மனைவியும், குழந்தைகள் கண் எதிரிலேயே கடலில் விழுந்தனர்.

தகவல் அறிந்ததும் வந்த மீட்பு படையினர் கடலுக்குள் இருந்து சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காட்டிக் கொடுக்கும் இராயப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்டும்!- பொதுபல சேனா

Posted: 12 Aug 2014 12:22 AM PDT

Rayappu Joseph

Rayappu Josephநாட்டையும், படையினரையும் காட்டிக் கொடுக்கும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அவரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் பின்னடிப்பது எதற்காக என்றும் கேள்வியெழுப்பினார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லையென்றும், அக் குழுவிற்கு சாட்சியமளிக்க தயாரில்லை என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன், இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் மன்னாரில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தமை தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய போதே கலகொட அத்தே ஞானசாரதேரர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக தேரர் மேலும் தெரிவிக்கையில்; ஆயர் இராயப்பு ஜோசப் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராகவும் எமது படையினருக்கு எதிராகவும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அரசாங்கம் மௌனமாக இருக்கின்றது. இராயப்பு ஜோசப் இலங்கையின் அரசியலமைப்பையும் சட்டங்களையும் மீறி செயற்படுகின்றார். இறுதிக் கட்ட யுத்தத்தில் எமது படையினர் கொத்து குண்டுகளை மக்கள் மீது பொழிந்தனர் என்றும் சர்வதேச ரீதியில் பிரசாரத்தை இவரே முன்னெடுத்தார். பாம்பு கடிக்கிறது என கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் அப் பாம்மை அடித்துக் கொல்ல வேண்டும். அதேபோன்று தேசத்துரோக செயலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் இராயப்பு ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இரகசியங்களை 20 நாடுகள் இலங்கையிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளன!- பாதுகாப்பு அமைச்சு

Posted: 11 Aug 2014 11:46 PM PDT

training_forces

training_forcesபோர் இரகசியங்களை 20 நாடுகள் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கொடிய பயங்கரவாதிகளை இலங்கை படையினர் தோற்கடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். போர் தந்திரோபயங்கள் மற்றும் போர் இரகசியங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினர் இலங்கைக்கு விஜயம்செய்த வண்ணம் இருக்கின்றார்கள். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான பாடங்களை கற்றுக்கொள்ள பல நாடுகள் விரும்புகின்றன. சர்வதேச போர்ச் சட்டங்களுக்கு புறம்பாகா வகையில் போர்த் தந்திரோபாயங்களை படையினர் பயன்படுத்தியிருந்தனர். பிரிட்டனின் போர் உபாயங்களையே படையினர் பயன்படுத்தி வந்தனர். 2000ம் ஆண்டுக்கு பின்னர் புதிய போர்த் தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டன. இருபது நாடுகளைச் சேர்ந்த படை அதிகாரிகள் இலங்கை இராணுவ முகாம்களில் பயிற்சி பெற்றுக்கொள்கின்றனர். எதிரிகளிடம் சிக்கிக்கொண்ட படையினரை மீட்டல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சி அளிக்கப்படுகின்றது. மாதுருஓயா முகாம், கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு பயிற்சி அளிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதமர் அலுவலகத்தில் பாரியளவில் முறைகேடுகள்!

Posted: 11 Aug 2014 11:23 PM PDT

DM-PM

DM-PMபிரதமர் அலுவலகத்தில் பாரியளவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் அரச நிர்வாக சேவையில், கடயைமாற்றிய 6156 உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு விஜயங்களை செய்துள்ளனர். புலமைப் பரிசில்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றுக்காக இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை ஒரே ஆண்டில் மேற்கொள்ள பிரதமர் டி.எம். ஜயரட்ன அனுமதியளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகச் சேவையைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்ல முன்னர் பிரதமரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு சுற்று நிரூபத்தின் அடிப்படையில் இவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளே அதிகளவில் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் பொழுது போக்கு நிகழ்வு ஒன்றை நடாத்தி பரிசில் வழங்குவதற்காக இருபது மில்லியன் ரூபாவை பிரதமர் அலுவலகம் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் காகிதாதிகளுக்கான மொத்தச் செலவு 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இலங்கை குறித்த நன்மதிப்பை மேம்படுத்தும் செயற்திட்டம் ஒன்றை மட்டுமே கடந்த ஆண்டில் பிரதமர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்காக இரண்டு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் அலுவலகத்தில் நிதி பாரியளவில் விரயமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மதத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்: ஜனாதிபதி!

Posted: 11 Aug 2014 11:17 PM PDT

Rajabaksa

Rajabaksaபௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி அசல பெரஹரா நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுவதாக போலிப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.

சட்டமொன்று பற்றி தெரியாவிட்டால் அது பற்றி பேசாமல் இருப்பதே முக்கியம்.

சட்டமொன்று பற்றி தெரியாமல் அது குறித்து பேசி பிழையான கருதுகோள்களை உருவாக்கக் கூடாது.

வலுவான ஓர் செயற்திட்டத்தின் மூலம் பௌத்த மதத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மத நல்லிணக்கத்தைப் போன்றே மத மேம்பாட்டுக்காகவும் அரசாங்கம் பாரியளவில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தலதா மாளிகையை பாதுகாத்துக் கொள்ள முடியாத யுகமொன்று நாட்டில் இருந்தது.

பௌத்த மதத்திற்கு மட்டுமன்றி கோவில், பள்ளிவாசல், தேவாலயங்களுக்கும் இன்று பாதுகாப்பு கிடைத்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™