Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தாக்க வந்த சிறுத்தை வில்லனை அரிவாளால் கொன்று உயிர் தப்பிய ஹீரோயின் கமலா

Posted: 24 Aug 2014 11:24 PM PDT

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் வீரத்துடன் சிறுத்தையுடன் மோதி படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார். ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ள கொட்டி பொட்னா கிராமத்தில் வசிப்பவர் கமலா தேவி. நேற்றைய நாள் அவருக்கு வழக்கமாக தான் தொடங்கியது.

டெல்லியில் தீ விபத்து: கட்டிடத்தின் முதல் மாடி பற்றி எரிகிறது

Posted: 24 Aug 2014 10:51 PM PDT

தலைநகர் டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ரமா பில்டிங் என்று பெயரிடப்பட்ட கட்டிடத்தில் முதல் மாடியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்ததும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தற்போது தீ அக்கட்டிடத்தின் நான்காவது மாடி வரை பரவியுள்ளதாகவும் அருகிலுள்ள கட்டிடத்திற்கும் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகா இடைத்தேர்தல்: பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி

Posted: 24 Aug 2014 10:35 PM PDT

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று அதன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகமுள்ள பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஒபலேஷ் பா.ஜ.க வேட்பாளரான ஸ்ரீ ராமுலுவை 33,144 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அங்குள்ள மற்ற தொகுதிகளான ஷிகாரிபுராவில் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எடியூரப்பாவின் மகனான பி.ஒய். ராகவேந்திராவும், சிக்கோடி தொகுதியில்

பஞ்சாப் இடைத்தேர்தல்: பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி

Posted: 24 Aug 2014 10:28 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்வண்டி சபோ மற்றும் பாட்டியாலா தொகுதிகளில் கடந்த 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மும்முனை போட்டியில உள்ள இத்தொகுதிகளில் தல்வண்டி சபோவில் 82.34 சதவிகித வாக்குகளும், பாட்டியாலாவில் 60 சதவிகித வாக்குகளும் பதிவானது. இதில் வெல்லப்போவது அம்மாநிலத்தை ஆளும் அகாலி தள கட்சியா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியா அல்லது அம்மாநிலத்தில் புதிதாக பலம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியா என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இன்று இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளரும் முன்னாள் மந்திரியுமான பிரணீத் கவுர் வெற்றி பெற்றார்.

தெலுங்கானாவில் திக் விஜய் சிங் கூட்டத்தில் காங்கிரசார் ரகளை

Posted: 24 Aug 2014 10:22 PM PDT

தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் எதிர்கால வளர்ச்சி கூட்டம் ஐதராபாத் புறநகரில் உள்ள ராவ்கா ரெட்டியில் நடந்தது. தெலுங்கானா மாநிலம் உதயமான பிறகு மாநில அளவில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் 10 மாவட்டங்களில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் வந்து இருந்தனர். கூட்டத்துக்கு மாநில தலைவர் பொன்னால லட்சுமியய்யா தலைமை

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

Posted: 24 Aug 2014 10:14 PM PDT

பீகார் மாநிலத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சில தினங்களுக்கு முன் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் இதய அறுவை சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் உள்ள இரண்டு வால்வுகள் மாற்றம் செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளதால் மும்பையில் உள்ள ஏசியன் இதய மருத்துவமனையில் லாலு சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை, உடல்நிலை குறித்தும் கவலைப்பட வேண்டியது இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனது இதயத்தின் நிலை கருதி பீகாரில்

திருப்பதி கோவில் அறங்காவலர் குழு தலைவராக வருவாய் துறை செயலாளர் நியமனம்

Posted: 24 Aug 2014 10:06 PM PDT

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றதும் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கோவில் அறங்காவலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் தலைவராக இருந்த கனிமுறிபாபுராஜூ பதவி விலக மறுத்தார். இதையடுத்து கடந்த 9–ந்தேதி அவரது பதவி பறிக்கப்பட்டு அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது.

காஷ்மீரில் எல்லையில் 35 இடங்களில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்: கிராம மக்கள் 2 பேர் காயம்

Posted: 24 Aug 2014 09:48 PM PDT

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இதுவரை இல்லாத வகையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். 70 தடவைக்கும் மேல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

பீகார் இடைத்தேர்தல்: 6 இடத்தில் நிதிஷ்-லாலு-காங், கூட்டணி முன்னிலை- 4 இடத்தில் பா.ஜனதா முன்னிலை

Posted: 24 Aug 2014 09:43 PM PDT

பீகார் மாநிலத்தில் 10 தொகுதிகளுக்குான இடைத்தேர்தல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், லாலு கட்சி, நிதிஷ்குமார் கட்சி ஒன்று சேர்ந்து போட்டியிட்டன. லாலு, நிதிஷ்குமார் கட்சி தலா 4 இடங்களிலும், காங்கரஸ் ஒரு இடத்திலும் போட்டியிட்டன. இந்த 10 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை

மத்திய பிரதேசத்தில் அமாவாசை பூஜை நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் பலி

Posted: 24 Aug 2014 09:29 PM PDT

திங்கட்கிழமையில் வரும் அமாவாசை தினத்துக்கு ''சோமவார அமாவாசை'' என்று பெயர். இந்த அமாவாசை நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்ரகூட் என்ற கிராமத்தில் புகழ்பெற்ற காம்த்நாத் என்ற சிவாலயம் உள்ளது. இங்கு சோமவார அமாவாசை வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்படுவதுண்டு.

நாக்பூரில் எத்தனால் மூலம் இயங்கும் பஸ்: நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்

Posted: 24 Aug 2014 09:02 PM PDT

சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கவும், எரிபொருளை சேமிக்கவும் மத்திய அரசு எத்தனால் மூலம் இயங்க கூடிய வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதை முன்னிட்டு நாக்பூரில் எத்தனால் பஸ்சை மத்திய மந்திரி நிதின் கட்காரி சோதனை அடிப்படையில் தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசுகையில் கூறியதாவது:-

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

Posted: 24 Aug 2014 08:04 PM PDT

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு விசாரணையை

சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது

Posted: 24 Aug 2014 05:14 PM PDT

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் கணக்கு விவரங்களை சட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தர மறுக்கிறது.

மகாராஷ்ட்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பு: ஓ.பி.கோஹ்லி பதவி ஏற்றார்

Posted: 24 Aug 2014 02:55 PM PDT

மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசு அமைந்தபின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்களை மாற்றிவருகிறது. மேற்கு வங்காள மாநில கவர்னர் எம்.கே.நாராயணன், நாகலாந்து கவர்னர் அஸ்வின்குமார், உத்தரப்பிரதேச மாநில கவர்னர் பி.எல்.ஜோஷி, சத்தீஸ்கர் கவர்னர் சேகர் தத் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த

தவறான வாக்குறுதிகளை அளித்து பதவிக்கு வந்துவிட்டார் நரேந்திரமோடி: திக்விஜய்சிங் தாக்கு

Posted: 24 Aug 2014 02:21 PM PDT

ஐதராபாத்தில் நேற்று நடந்த தெலுங்கானா காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கலந்து கொண்டு தெலுங்கானா காங்கிரசின் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– தேர்தல் பிரசாரத்தில் நரேந்திரமோடி, குஜராத் மாதிரியான வளர்ச்சி என்று கூறினார். குஜராத் மாதிரி வளர்ச்சி என்பது என்ன? பொய்யான

சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம்: டெல்லி போலீசார் தகவல்

Posted: 24 Aug 2014 01:22 PM PDT

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வரும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள், டெல்லி நங்லோய் அருகே மீர் விகார் பகுதியில் சட்டவிரோதமாக நடத்தி வந்த ஆயுத தொழிற்சாலை கடந்த 2011-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய டெல்லி சிறப்பு போலீசார், இது தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த சில தீவிரவாதிகளை தேடி வந்தனர்.

பதவி நாற்காலியை பறிகொடுத்து விடக்கூடாது: கெஜ்ரிவாலின் காலங்கடந்த ஞானோதயம்

Posted: 24 Aug 2014 01:04 PM PDT

டெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்ற 49 நாட்களில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டதால் அந்த பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வினர் முயற்சி செய்து, அதற்கான குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடிக்கு மருத்துவப் பரிசோதனை

Posted: 24 Aug 2014 12:15 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொண்டார். நேற்று காலை சுமார் 7 மணியளவில் ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த பிரதமருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளும் பூரண மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், சுமார் 6 மணி நேரம் அனைத்து வகை பரிசோதனைகளும் செய்யப்பட்டதாகவும் ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயர்க் கல்வியின் தரம் கவலைக்குரியதாக உள்ளது: ஜனாதிபதி வேதனை

Posted: 24 Aug 2014 11:24 AM PDT

மேற்கு வங்காளம் மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று விழாவை துவக்கி வைத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நமது நாட்டின் உயர்க் கல்வியின் தரம் கவலைக்குரியதாக உள்ளது என்று வேதனை தெரிவித்தார்.

எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை: 4 லஷ்கர் தீவிரவாதிகள்-2 ராணுவ வீரர்கள் பலி

Posted: 24 Aug 2014 10:54 AM PDT

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி அருகே இன்று காலை சிலரது நடமாட்டத்தை கண்காணித்த இந்திய ராணுவத்தினர் அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். இதனை பொருட்படுத்தாமல் எதிர் முனையில் இருந்தவர்கள் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். ராணுவத்தினரும் பதிலுக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™