Tamil Star |
- அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம்!
- சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை!
- தற்போதுள்ள சவால்கள் என்ன? ஹரி ஆனந்தசங்கரி விளக்கம்!
| அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம்! Posted: 24 Aug 2014 07:02 AM PDT
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 6 ரிக்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்துத் தெரியவில்லை. நிலநடுக்கம் கலிபோர்னியாவின், வட மேற்கு அமெரிக்க கேன்யான் பகுதியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்டது. பூமிக்குக் கீழே 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை சான் பிரான்சிஸ்கோ, டேவிஸ் ஆகிய நகரங்களிலும் மக்கள் உணர்ந்துள்ளனர். டிவிட்டரிலும் நிலநடுக்கத்தின் அதிர்வு குறித்து அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை! Posted: 24 Aug 2014 06:58 AM PDT
இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடியில் ஈடுபட மூன்று வருடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சுப்ரமணியன் சுவாமியின் யோசனையை இராஜதந்திர யோசனையாக ஏற்றுக்கொள்ள முடியாது என மீன்பிடி மற்றும் நீரியல்வள பிரதியமைச்சர் சரத் குமார குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பாக்கு சமுத்தரத்தில் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிப்பது தொடர்பில் தீர்வொன்றை எட்டும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தற்போதுள்ள சவால்கள் என்ன? ஹரி ஆனந்தசங்கரி விளக்கம்! Posted: 24 Aug 2014 06:49 AM PDT
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கான விபரங்கள், தடங்கள், தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் வழங்குவதே தற்போதுள்ள சவால் என கனேடிய லிபரல் கட்சியின் வேட்பாளராக தெரிவுவாகியுள்ள ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கனடாவின் ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park ) தொகுதி லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்கான போட்டியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்றுள்ளார். இந்தநிலையில், அவர் லங்காசிறி வானொலிக்கு விசேட செவ்வியொன்றை வழங்கியுள்ளார். கடந்த 5 வருடங்களாக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி மேற்கொண்ட முனைப்பின் பயனாக இந்த சர்வதேச விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் உள்ள தமிழ் சட்டத்தரணிகள் உட்பட பலர் ஒன்று கூட்டி போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள், தடயங்கள் மற்றும் தகவல்களை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு வாரங்களுக்குள் அவற்றை வெளிக்கொண்டு வர முடியும் என தாம் நம்புவதாகவும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


