மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நடிகை திருமண மோசடி புகார்: சதானந்தகவுடா மகன் கைது ஆவாரா?
- பாத சனி பிடித்தவர் யார்?: மந்திரியுடன் நடிகை ரோஜா மோதல்
- கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று தொடங்கியது: அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் வரவேற்பு
- ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடுடன் புதிய சுகாதார திட்டம்: மத்திய மந்திரி தகவல்
- ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 5–ந் தேதி நடை திறக்கப்படுகிறது
- நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக நாளை ஜப்பான் பயணம்
- சதானந்த கவுடா மகனுடன் திருமணம்: ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார்
- 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது
- பிரம்பு அடிக்கு பயந்து 3 மாணவர்கள் ஆற்றில் குதித்து தற்கொலை: 2 ஆசிரியர்கள் கைது
- மகாராஷ்டிராவில் லிங்காயத் சமூகத்தின் 10 உட்பிரிவுகளை ஓ.பி.சி.யில் இணைக்க அமைச்சரவை ஒப்புதல்
- என் தந்தையின் மரணத்தை அரசியலாக்காதீர்கள்: கோபிநாத் முண்டே மகள் எச்சரிக்கை
- கற்பழிப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம்
- 2000 மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு வங்கி சேவை: மோடி பேச்சு
- 70 வயதிற்குமேல் அரசியலில் இருக்கக்கூடாது: ஜனார்த்தன் திவேதி
- சாரதா சிட்பண்ட் ஊழல்: 22 இடங்களில் சி.பி.ஐ. இன்று ரெய்டு
- அலிகாரில் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய மக்கள்: கோவிலாக மாறிய தேவாலயம்
- ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20-ல் தீர்ப்பு
- சம்ஜோதா ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் அசிமானாந்தாவுக்கு ஜாமீன்
- ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இருந்து பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- மோசமான சாலைகளால் இந்தியாவில் நாள்தோறும் 20 சிறுவர்கள் பலி: அதிர்ச்சி தகவல்
| நடிகை திருமண மோசடி புகார்: சதானந்தகவுடா மகன் கைது ஆவாரா? Posted: 28 Aug 2014 10:49 PM PDT கர்நாடக முன்னாள் முதல்–மந்திரியும், தற்போதைய மத்திய ரெயில் மந்திரியுமான சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீது நடிகை மைத்திரி திருமண மோசடி புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்த்திக் கவுடாவுக்கும், கர்நாடக மாநிலம் சோமவார் பேட்டை குஷால் நகரைச் சேர்ந்த சுவாதிக்கும் நேற்று முன்தினம் குடகில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. |
| பாத சனி பிடித்தவர் யார்?: மந்திரியுடன் நடிகை ரோஜா மோதல் Posted: 28 Aug 2014 10:22 PM PDT ஆந்திர சட்டசபைக்கு நகரி சட்டமன்ற தொகுதியில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் நடிகை ரோஜா. நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நடிகை ரோஜா பேசும் போது, சந்திரபாபு நாயுடு அரசு மீது பல குற்றச்சாட்டுகளை கூறினார். அப்போது தெலுங்கு தேச உறுப்பினர்கள் அவரை கிண்டலடித்தனர். சினிமா போல டயலாக் பேசுகிறார் என்றனர். |
| கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று தொடங்கியது: அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் வரவேற்பு Posted: 28 Aug 2014 10:07 PM PDT கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை இன்று அத்தப்பூ கோலமிடுதலுடன் தொடங்கியது. கேரளாவை ஆண்ட மகாபலி மன்னன் ஆட்சியின் போது மக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அந்த மன்னன் சிறந்த கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார். அவரது கொடை தன்மையை சோதிக்க எண்ணிய மகாவிஷ்ணு குள்ளமான வாமன அவதாரம் |
| ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடுடன் புதிய சுகாதார திட்டம்: மத்திய மந்திரி தகவல் Posted: 28 Aug 2014 03:41 PM PDT ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடுடன் கூடிய புதிய சுகாதார திட்டம் பற்றி மத்திய மந்திரி ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்த்தன் கூறியதாவது:- ஜனாதிபதி உரையில், நாடு முழுவதும் சுகாதார சேவைக்கு உறுதி பூண்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. அதையடுத்து, பல்வேறு நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தேன். அவர்கள் நன்கு ஆராய்ந்து, 'நாடுதழுவிய சுகாதார உறுதியளிப்பு திட்டம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை |
| ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 5–ந் தேதி நடை திறக்கப்படுகிறது Posted: 28 Aug 2014 02:54 PM PDT புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதனால் அந்த திருவிழா நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாளிலும், பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்–வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். |
| நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக நாளை ஜப்பான் பயணம் Posted: 28 Aug 2014 01:26 PM PDT பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (சனிக்கிழமை) ஜப்பான் செல்கிறார். அவர் முதலில் அங்குள்ள க்யோட்டோ நகருக்கு சென்று தங்குகிறார். பின்னர் டோக்கியோ நகருக்கு செல்கிறார். ஜப்பான் பயணம் செல்ல இருப்பதைத் தொடர்ந்து நரேந்திர மோடி, 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் முதல்முறையாக ஜப்பான் மொழியில் |
| சதானந்த கவுடா மகனுடன் திருமணம்: ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார் Posted: 28 Aug 2014 12:50 PM PDT சதானந்த கவுடா மகன் மீது குற்றம்சாட்டிய நடிகை மைத்திரி கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறினார். நடிகை மைத்திரி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "எனக்கும், கார்த்திக் கவுடாவுக்கும் முதலில் அவரது நண்பர் குஷால் மூலம் தான் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு, பெங்களூர் சஞ்சய்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து இருவரும் சந்தித்து பேசினோம். பின்னர் |
| 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது Posted: 28 Aug 2014 11:28 AM PDT கன்னோஜ் மாவட்டத்தின் குரியானா கிராமத்தை சேர்ந்த மாணவி வேதியல் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மாணவி நேற்று பள்ளியில் தேர்வு விண்ணப்பம் சமர்பிக்க சென்றுள்ளார். அப்போது அவரை வேதியல் ஆசிரியர் தாராம்பால் சிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அழுது கொண்டே வீட்டுக்கு திருப்பிய பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் |
| பிரம்பு அடிக்கு பயந்து 3 மாணவர்கள் ஆற்றில் குதித்து தற்கொலை: 2 ஆசிரியர்கள் கைது Posted: 28 Aug 2014 10:48 AM PDT மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், வசாயில் வகாத் குருகுல் என்ற சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மும்பை மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது14), போரிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த பிரபுல் நாராயண் (14), டோம்பிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த குசால் நிலேஷ் (14) ஆகிய மூன்று மாணவர்களும் பள்ளி விடுதியில் தங்கி 9–ம் வகுப்பு படித்து வந்தனர். |
| மகாராஷ்டிராவில் லிங்காயத் சமூகத்தின் 10 உட்பிரிவுகளை ஓ.பி.சி.யில் இணைக்க அமைச்சரவை ஒப்புதல் Posted: 28 Aug 2014 07:33 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லிங்காயத் சமூகத்தின் 10 உட்பிரிவுகளை ஓ.பி.சி. பிரிவில் சேர்க்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. அத்துடன், அந்த சமுதாயத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரையும் செய்துள்ளது. |
| என் தந்தையின் மரணத்தை அரசியலாக்காதீர்கள்: கோபிநாத் முண்டே மகள் எச்சரிக்கை Posted: 28 Aug 2014 07:05 AM PDT முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டே டெல்லியில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முண்டேவின் உறவினருமான தனஞ்செய் முண்டே கோரிக்கை விடுத்தார். |
| கற்பழிப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் Posted: 28 Aug 2014 05:57 AM PDT பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கு மகளிர் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வரும் நிலையில், சில அரசியல் தலைவர்கள் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் இப்போது, மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.எல்.ஏ. தீபக் ஹல்தார் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை குறித்து பேசி வம்பில் மாட்டிக்கொண்டுள்ளார். |
| 2000 மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு வங்கி சேவை: மோடி பேச்சு Posted: 28 Aug 2014 05:14 AM PDT நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் புதிய திட்டமான ஜன் தன் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது; இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன பின்பும் நாட்டில் உள்ள |
| 70 வயதிற்குமேல் அரசியலில் இருக்கக்கூடாது: ஜனார்த்தன் திவேதி Posted: 28 Aug 2014 04:59 AM PDT காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜனார்த்தன் திவேதி. இவர் 70 வயதிற்குமேல் அரசியல் தலைவர்கள் அரசியலில் இருந்து விலகிவிட வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். அடுத்த மாதம் 69 வயதைத் தொடும் திவேதி, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக உணர்கிறார். 65 முதல் 70 வயது உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலில் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகி பிற பதவிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறும் திவேதி, இந்த வயது வரம்பில் இருந்து நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சி தலைவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றார். |
| சாரதா சிட்பண்ட் ஊழல்: 22 இடங்களில் சி.பி.ஐ. இன்று ரெய்டு Posted: 28 Aug 2014 04:45 AM PDT கொல்கத்தாவை சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ அமைப்பு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ரெய்டு நடத்திய சி.பி.ஐ., இன்று மேலும் 22 இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. |
| அலிகாரில் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய மக்கள்: கோவிலாக மாறிய தேவாலயம் Posted: 28 Aug 2014 04:45 AM PDT உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரிலிருந்து 30கி.மீ தொலைவில் உள்ள அஸ்ரோய் என்ற இடத்தில் இருந்த தேவாலயம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று புனரமைப்பு செய்யப்பட்டு சிவன் கோவிலாக மாற்றப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு முன் இங்கு வசித்து வந்த வால்மீகி என்ற இந்து பிரிவினைச் சேர்ந்த 72 பேர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியதாகவும் அவர்கள் அனைவரும் தற்போது மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. |
| ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20-ல் தீர்ப்பு Posted: 28 Aug 2014 04:42 AM PDT தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது 1996ல் புகார் எழுந்ததையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை 1998-ல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது. |
| சம்ஜோதா ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் அசிமானாந்தாவுக்கு ஜாமீன் Posted: 28 Aug 2014 04:15 AM PDT கடந்த 2007-ம் ஆண்டு சம்ஜோதா ரெயிலில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 68 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். இதில் பெரும்பாலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் செயலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் விசாரணையில், இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது இந்துத்வா தீவிரவாத அமைப்பு என்று தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சுவாமி அசிமானந்தா மற்றும் பிற இந்துத்வா தீவிரவாதிகள் |
| ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இருந்து பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted: 28 Aug 2014 03:50 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் இருந்து இன்று எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதா மற்றும் தேசிய சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபை இன்று கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து தொடர்பாக கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் முபாரக் குல் நிராகரித்தார். |
| மோசமான சாலைகளால் இந்தியாவில் நாள்தோறும் 20 சிறுவர்கள் பலி: அதிர்ச்சி தகவல் Posted: 28 Aug 2014 03:50 AM PDT இந்தியாவில் உள்ள மோசமான சாலைகளால் நாள்தோறும் 20 சிறுவர்கள் பலியாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய குற்றப் பதிவுகள் கழகத்தில் உள்ள ஆவணங்கள் மூலம் இந்த அதிர்ச்சியான செய்தி வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |