மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு
- காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீச்சு: 2 பேர் பலி
- ஆந்திராவில் காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கற்பழிப்பு: 9 பேர் கைது
- கேரளாவில் மேலும் 312 மதுபான பார்களுக்கு பூட்டு: உம்மன்சாண்டி அதிரடி
- திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 22 மணி நேரம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
- உத்தரகாண்ட் மாநில கவர்னரை நீக்கும் திட்டம் இல்லை: ராஜ்நாத்சிங்
- சுஷ்மா சுவராஜ் நாளை வியட்நாம் பயணம்
- ஸ்காட்லாந்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விலைபோன ஆட்டுக்கிடா
- பாட்னாவில் மோடி கூட்டத்தின் போது குண்டு வெடிப்பு வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்
- மோடியை எதிர்த்த எழுத்தாளர் மரணம்: பட்டாசு வெடித்து எதிர்ப்பாளர்கள் கொண்டாட்டம்
- பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய காங்கிரசுக்கு ராஜ்நாத்சிங் கோரிக்கை
- பிரான்சு பெண்- புதுச்சேரி வாலிபர் திருமணம்: மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர்
- பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி சுப்ரீம் கோர்ட்டு கருத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு
- காவிரியில் குதித்து பட்டதாரி தோழிகள் தற்கொலை
- தேர்தல் தோல்வியை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை: மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேட்டி
- கொள்ளை முயற்சியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அடித்துக் கொலை
- ஞான பீட விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி மரணம்
- ராகிங் கொடுமையால் உயிருக்கு போராடும் பீகார் அமைச்சரின் மகன்
- 3 வயது பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற தந்தை
- குரேஷியை ராஜினாமா செய்ய யாரும் வற்புறுத்தவில்லை: மத்திய அரசு
| இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு Posted: 22 Aug 2014 11:13 PM PDT இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர். இலங்கை அரசுக்கும், முன்னாள் பாரதப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்கும் இடையே ஏற்பட்ட 13வது சட்டப்பிரிவை அமல்படுத்த |
| காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீச்சு: 2 பேர் பலி Posted: 22 Aug 2014 10:34 PM PDT காஷ்மீரில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இந்தியாவை சீண்டி வருகிறது. இந்தியாவுடன் பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறல் நீடித்து வருகிறது. |
| ஆந்திராவில் காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கற்பழிப்பு: 9 பேர் கைது Posted: 22 Aug 2014 10:23 PM PDT விரைவில் திருமணம் செய்ய இருக்கும் காதலனை கட்டிப்போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் கற்பழித்த கொடூர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கற்பழிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெயர் கீதா (பெயர் மாற்றம்). இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் செய்ய இருக்கும் வாலிபருடன் ஐதராபாத் காசிம் நகரில் உள்ள |
| கேரளாவில் மேலும் 312 மதுபான பார்களுக்கு பூட்டு: உம்மன்சாண்டி அதிரடி Posted: 22 Aug 2014 09:55 PM PDT கேரளாவில் மது விற்பனை மற்றும் பயன்பாட்டினை குறைக்க உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 5 நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான ஓட்டல்களில் செயல்பட்ட 418 மதுபான பார்கள் மூடப்பட்டன. அவற்றை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தபோது, அதனை நிராகரித்த அரசு மூடப்பட்ட பார்கள் மீண்டும் திறக்கப்படாது என்று அறிவித்ததோடு மேலும் 312 பார்களை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மது பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. உம்மன்சாண்டியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். கத்தோலிக்க அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சில கூட்டணி கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. |
| திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 22 மணி நேரம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல் Posted: 22 Aug 2014 09:39 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, குஜராத், அசாம், மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் |
| உத்தரகாண்ட் மாநில கவர்னரை நீக்கும் திட்டம் இல்லை: ராஜ்நாத்சிங் Posted: 22 Aug 2014 08:25 PM PDT மத்தியில் பா.ஜனதா கட்சி அரசு அமைந்தபின், மாநிலங்களில் முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். மேற்குவங்காள மாநில கவர்னர் எம்.கே.நாராயணன், நாகலாந்து கவர்னர் அஸ்வின்குமார், உத்தரபிரதேச மாநில கவர்னர் பி.எல்.ஜோஷி, சத்தீஸ்கர் கவர்னர் சேகர் தத், புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கடாரியா, மிசோரம் மாநில கவர்னர் கமலா பெனிவால் ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர். |
| சுஷ்மா சுவராஜ் நாளை வியட்நாம் பயணம் Posted: 22 Aug 2014 04:45 PM PDT மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக நாளை வியட்நாம் நாட்டுக்கு செல்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம் வியட்நாமுக்கு செல்லவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான ராணுவம் மற்றும் எரிசக்தி துறை தொடர்பான விவகாரங்கள் குறித்து தனது பயணத்தின்போது சுஷ்மா ஆலோசனை நடத்துகிறார். |
| ஸ்காட்லாந்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விலைபோன ஆட்டுக்கிடா Posted: 22 Aug 2014 03:16 PM PDT கலப்பின ஆடுகளின் விந்தணுக்களின் மூலமாக திடகாத்திரமான ஆடுகளை உருவாக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் 6 மாத ஆட்டுக்கிடா ஒன்றினை ஒரு லட்சத்து 52 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது. உடலின் மேல்பகுதியில் அடர்த்தியான கம்பளி ரோமத்துடன் கொழுகொழுவென்று இருக்கும் இந்த அரியவகை ஆட்டிடம் ஒருமுறை |
| பாட்னாவில் மோடி கூட்டத்தின் போது குண்டு வெடிப்பு வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 22 Aug 2014 02:54 PM PDT பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 27-10-2013 அன்று பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்ட பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டுகள் வெடித்தன. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 89 பேர் காயம் அடைந்தனர். |
| மோடியை எதிர்த்த எழுத்தாளர் மரணம்: பட்டாசு வெடித்து எதிர்ப்பாளர்கள் கொண்டாட்டம் Posted: 22 Aug 2014 02:11 PM PDT உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி (வயது 82) பெங்களூரில் நேற்று காலமானார். இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான 'ஞானபீடம்' விருதை பெற்றவர் கன்னட எழுத்தாளர் யு.ஆர். |
| Posted: 22 Aug 2014 01:23 PM PDT சமீபத்தில் அரியானா மாநிலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அந்த மாநில முதல்-மந்திரி ஹூடா பேசுகையில் எதிர்ப்பு கோஷங்கள் எழுந்ததால், அவர் உரையை பாதியில் முடித்தார். இதேபோல சம்பவங்கள் தொடர்ந்ததால், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை காங்கிரஸ் முதல்-மந்திரிகள் புறக்கணிக்க வேண்டும் என்று கட்சி தலைமை கேட்டுக் கொண்டது. |
| பிரான்சு பெண்- புதுச்சேரி வாலிபர் திருமணம்: மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர் Posted: 22 Aug 2014 01:03 PM PDT பிரான்சு நாட்டை சேர்ந்த பெண் பிளார் சோமான் (வயது 24), இந்திய கலாசாரம் பற்றி தெரிந்துகொள்வதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்தார். இங்கேயே தங்கிய அவர், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கற்றதுடன் இந்திய கலாசாரம் பற்றியும் படித்தார். தற்போது புதுச்சேரியில் பரதநாட்டிய பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். |
| பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி சுப்ரீம் கோர்ட்டு கருத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு Posted: 22 Aug 2014 12:53 PM PDT பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்து விட்ட நிலையில், அந்தப் பதவியின் முக்கியத்துவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்தார். |
| காவிரியில் குதித்து பட்டதாரி தோழிகள் தற்கொலை Posted: 22 Aug 2014 10:54 AM PDT கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றனர். அவர்களை காணவில்லை என்று குடும்பத்தார் தேடிவந்த நிலையில் மண்டியா மாவட்டம், மஜ்ஜெகாபுரா பகுதியில் காவிரியாற்றின் ஓரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டின் வலதுப்புற கால்வாயில் இரு |
| தேர்தல் தோல்வியை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை: மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேட்டி Posted: 22 Aug 2014 10:51 AM PDT தேர்தல் தோல்வியை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார். பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நரேந்திர மோடி அரசு தவறான கனவுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பதாக சோனியா காந்தி கூறுகிறார். |
| கொள்ளை முயற்சியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அடித்துக் கொலை Posted: 22 Aug 2014 10:42 AM PDT மும்பை நகரின் மத்திய பகுதியான மராத்தா மந்திர் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் சாஜித் அன்சாரி(40), அயூப் அன்சாரி(39) ஆகியோர் வேலை செய்து வந்தனர். நள்ளிரவுக்கு பின்னர் பங்க்கை மூடிவிடும் இவர்கள், அதுவரை பெட்ரோல் விற்பனை செய்த பணத்தை தங்களது பாதுகாப்பில் வைத்திருந்து, பொழுது விடிந்ததும் மேனஜரிடம் ஒப்படைப்பது வழக்கம். |
| ஞான பீட விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி மரணம் Posted: 22 Aug 2014 10:36 AM PDT 82 வயதான அனந்தமூர்த்தி பெங்களூர் டாலர்ஸ் காலனியில் வசித்து வந்தார். இவர், சிறந்த கன்னட எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். இவருக்கு 1998-ம் ஆண்டு பத்மபூஷண் விருதும், 1994-ம் ஆண்டு ஞான பீட விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 1984-ல் கன்னட ராஜ்யோத்சவா விருதும் பெற்றுள்ளார். |
| ராகிங் கொடுமையால் உயிருக்கு போராடும் பீகார் அமைச்சரின் மகன் Posted: 22 Aug 2014 09:18 AM PDT பீகார் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெய் குமார் சிங்கின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பள்ளியில் ராகிங் கொடுமையால் அவர் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. |
| 3 வயது பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற தந்தை Posted: 22 Aug 2014 09:14 AM PDT மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையை பெற்ற தந்தையே ஈவு இரக்கமின்றி கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஆலம்பஜார் பகுதியைச் சேர்ந்தவர் |
| குரேஷியை ராஜினாமா செய்ய யாரும் வற்புறுத்தவில்லை: மத்திய அரசு Posted: 22 Aug 2014 08:27 AM PDT மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்ற முடிவு செய்தது. அதன்படி, உள்துறை செயலாளர் பல்வேறு மாநில கவர்னர்களை போனில் தொடர்பு கொண்டு ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த உத்தரகாண்ட் மாநில கவர்னர் அஜிஸ் குரேசி, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |