Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


விளம்பர தூதுவர் மூலம் அதிக வருமானம் சம்பாதிக்கும் அனுஷ்கா!

Posted: 22 Aug 2014 06:45 AM PDT

Anushka_Shetty

Anushka_Shettyதமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படஉலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் அனுஷ்கா முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு சினிமாவில் நடிப்பது தவிர விளம்பர படங்கள் மூலமும் பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக பணியாற்றுவதன் மூலமும் பலகோடி வருமானம் குவிகிறது. அனுஷ்காவைவிட நயன்தாரா அதிக சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவர் விளம்பர படங்கள் மூலம் வருவாய் ஈட்டவில்லை. திரிஷா, ஹன்சிகா, சமந்தா போன்றோர் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் தலைகாட்டியும் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அனுஷ்காவை போல் பெரிய வணிக நிறுவனங்களில் இவர்கள்கள் விளம்பர தூதுவராக இல்லை. சமீபத்தில் மொபைல் போன் கம்பெனியொன்று அனுஷ்காவை தங்கள் நிறுவனத்தில் விளம்பர தூதராக்கி கொண்டது. இதற்காக அவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இதுதவிர இன்னும் சில பெரிய நிறுவனங்களும் தூதுவராக்க அவரை அணுகியுள்ளன. தமிழ், தெலுங்கில் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்கிறார். 'லிங்கா' படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் தயாராகும் ருத்ரமாதேவி, பாகுபலி சரித்திர படங்களிலும் நடிக்கிறார். சினிமா மற்றும் விளம்பரங்கள் மூலம் இருவழிகளில் அனுஷ்காவுக்கு பணம் குவிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரசிகர்களுக்காக எதையும் செய்யும் விஜய்!

Posted: 22 Aug 2014 06:36 AM PDT

vijay

vijayதமிழ் சினிமாவின் அழகிய தமிழ் மகனாக வலம் வருபவர் விஜய். தற்போது கத்தி படத்தின் பிரச்சனை அவருக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தாலும் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்வேன் என்று மீண்டும் நிருபித்துள்ளார்.

கோவையில் தன் ரசிகர் மன்ற சார்பில் பல இளைஞர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடந்துள்ளது.

இவை அனைத்தையும் தன் சொந்த செலவிலேயே செய்து வைத்தார்.தனக்கு எத்தனை பிரச்சனை இருந்தாலும், தன் ரசிகர்கள் குரலுக்காக வந்து நடத்திக்கொடுத்தார் விஜய்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி இடத்தை நெருங்கிய அஜித்!

Posted: 22 Aug 2014 06:33 AM PDT

rajini-ajith

rajini-ajithஅஜித்தின் மார்க்கெட் கடந்த 2 வருடங்களில் உச்சத்தை தொட்டுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் ஆரம்பம், வீரம் படத்தின் தொடர் வெற்றி தான். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கொடுத்த சம்பளம் ரூ.40 கோடியாம். இதில் 12 கோடி ரூபாய் வரியாக செலுத்திவிட்டார் அஜித்.இதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு ரூ. 50 கோடி அஜித்திற்கு தரப்போவதாக ரத்னம் முன்பே கூறியிருந்தார். அதுவும் நடந்தால் அஜித் தான் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர். இதுநாள் வரை ரஜினி தான் அந்த இடத்திற்கு சொந்தக்காரர், அஜித் அந்த இடத்தை நெருங்க சில காலங்களே உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சேதுபதியின் ராசிக்கு அலையும் இயக்குனர்கள்!

Posted: 22 Aug 2014 06:30 AM PDT

vijay_sethupathi

vijay_sethupathiவிஜய் சேதுபதி என்றாலே தற்போது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் மினிமம் கேரண்டி தான். ஆனால் அதையும் தாண்டி இவருக்கென்று ஒரு ராசி உருவாகிவிட்டது.இதை பல இயக்குனர்கள் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். அது என்னவென்றால் இவர் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தால் அந்த படம் ஹிட் என்று ஒரு ராசி உருவாகிவிட்டது. உதாரணமாக ஜிகர்தண்டா, கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற படங்களில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்த படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது திருடன் போலிஸ் படத்திலும் நட்புக்காக நடித்துகொடுத்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்கொள்ளாக் காட்சியாக மாறிய செல்லப்பிராணிகளின் குதூகலக் குளியல்…..

Posted: 22 Aug 2014 03:26 AM PDT

pool-party

pool-party

This posting includes an audio/video/photo media file: Download Now

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு சும்மாவா சொன்னாங்க?

Posted: 22 Aug 2014 03:16 AM PDT

Obi-Feuervogel-Schlagzeuger-auf-dem-Mauerpark

Obi-Feuervogel-Schlagzeuger-auf-dem-Mauerpark

This posting includes an audio/video/photo media file: Download Now

ரயில்வே தண்டவாளம் அமைக்கப்படும் சுவாரஸ்யக் காட்சி..

Posted: 22 Aug 2014 03:01 AM PDT

Shailesh-Lodha,-Surendra-Pal,-Raja-Hasan,-Kapil-Sharma,-Neha-Mehta,-Toshi-Sabri

Shailesh-Lodha,-Surendra-Pal,-Raja-Hasan,-Kapil-Sharma,-Neha-Mehta,-Toshi-Sabri

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏவுகணை சோதனை செய்யப்படும் காட்சி….

Posted: 22 Aug 2014 02:24 AM PDT

Russia-test-launches-missiles-during-planned-military-drills

Russia-test-launches-missiles-during-planned-military-drills

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓபன் டென்னிஸ் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி!

Posted: 22 Aug 2014 01:26 AM PDT

Caroline-Wozniacki

Caroline-Wozniackiஅமெரிக்காவில் நடக்கும் கனெக்டிகட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இரண்டாவது சுற்றில் இத்தாலியின் கமிலா ஜார்ஜியுடன் (38வது ரேங்க்) நேற்று மோதிய வோஸ்னியாக்கி (11வது ரேங்க்) 46, 26 என்ற நேர் செட்களில் தோற்றார். மற்றொரு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 62, 62 என்ற நேர் செட்களில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டை வீழ்த்தினார். ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸா, கிறிஸ்டன் பிலிப்கென்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாக்கி அணி தங்கம் வெல்லும் பயிற்சியாளர் வால்ஷ் நம்பிக்கை!

Posted: 22 Aug 2014 01:11 AM PDT

Derry

Derryஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லும் என்று தலமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

17வது ஆசிய விளையாட்டு போட்டி தொடர் தென் கொரியாவின் இன்சியான் நகரில் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆண்கள் ஹாக்கியில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோத உள்ளன.

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ள பி பிரிவிலேயே இந்திய அணியும் உள்ளதால் முதலிடம் பிடிக்க கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

மற்ற 3 அணிகளாக சீனா, ஓமன், இலங்கை இடம் பெற்றுள்ளன.ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 2 முறை மட்டுமே தங்கப் பதக்கம் வென்றுள்ளது (1966 மற்றும் 1998). தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கம் வென்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து, தலைமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் நேற்று கூறியதாவது: இன்சியான் தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால், பி பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மட்டுமல்ல எந்த அணியையுமே எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் முழு திறமையையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்துள்ளோம்.

இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டம் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். இந்த முறை லீக் சுற்றிலேயே மோதுவதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக பாகிஸ்தான் அணி பெரிய போட்டித் தொடர் எதிலும் விளையாடவில்லை என்பது நமக்கு ஓரளவு சாதகமாக இருக்கும்.

சீன அணிக்கு எதிராக லீக் ஆட்டத்திலும் கவனமாக விளையாடுவது அவசியம். சமீபத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதால் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர்.

அதே உத்வேகத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.பெனால்டி கார்னர் வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அவற்றை பயன்படுத்தி கோல் அடிப்பதிலும் இன்னும் முன்னேற்றம் தேவை என நினைக்கிறேன்.

அதில் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி செய்து வருகிறோம். கேப்டன் சர்தார் சிங் உள்பட அனைத்து வீரர்களும் நல்ல உடல்தகுதியுடன் உள்ளனர். தென் கொரியாவில் இருந்து தங்கப் பதக்கத்துடன் திரும்புவோம் என நம்புகிறேன்.

இவ்வாறு பயிற்சியாளர் வால்ஷ் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™