Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நடிகர் பவன்கல்யாண் படத்துடன் 50 ரூபாய் நோட்டு வியாபாரி புகார்

Posted: 27 Aug 2014 11:33 PM PDT

முன்னாள் மத்திய மந்திரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனசேனா என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். ஆந்திர சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா – தெலுங்கு தேசம் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

கற்பழிப்பு வழக்குபதிவு: சதானந்த கவுடா மகன் திருமணம் நடைபெறுமா?

Posted: 27 Aug 2014 11:25 PM PDT

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்றிரவு குடகு பகுதியில் உள்ள குஷால் நகரில் நடந்தது. இந்த நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கும்போது கன்னட நடிகையும், மாடலிங் அழகியுமான மைத்ரியா கவுடா பெங்களூர் ஆர்.டி. நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:– சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கும் நானும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். கடந்த ஜூன் மாதம் 5–ந்தேதி அவர் மங்களூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து என்னை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

கேரளாவில் 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

Posted: 27 Aug 2014 11:20 PM PDT

கேரளாவில் கனமழையாக பெய்த தென்மேற்கு பருவ மழை கடந்த 2 நாட்களாக ஓய்ந்து இருந்தது. இந்தநிலையில் மீண்டும் நேற்று முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த மழை வருகிற சனிக்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும்

மணிப்பூரில் குண்டு வெடித்து 2 வீரர்கள் பலி

Posted: 27 Aug 2014 11:18 PM PDT

மணிப்பூர் மாநிலம் சண்டெல் மாவட்டம் பழைய சோம்தால் பகுதியில் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள் படை பிரிவு முகாம் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 வீரர்கள் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். இந்த குண்டு வெடிப் புக்கு ஐக்கிய தேசிய விடு தலை முன்னணி பொறுப்பேற்றுள்ளது. தங்களது மற்றொரு பிரிவான மணிப்பூர் மக்கள்

லாலு உடல்நலம் விசாரிக்க மும்பை ஆஸ்பத்திரி சென்ற அருண் ஜெட்லி

Posted: 27 Aug 2014 11:01 PM PDT

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஆசியன் இதயவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதற்கட்ட பரிசோதனையில் இருதயத்தில் உள்ள வால்வுகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பேச்சுவார்த்தை நடந்த சில மணி நேர்த்திற்குப்பின் துப்பாக்கிசூடு நடத்திய பாக். ராணுவம்

Posted: 27 Aug 2014 10:22 PM PDT

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த நாள் முதல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. கடந்த 10 நாட்களாக பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அத்துமீறல் அதிகரித்தது. இதனால் எல்லையில் சுமார் 15 ஆயிரம் இந்தியர்கள் வீடுகளை காலி செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எல்லையில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா

கடுமையான குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட 13 ஆண்டுகள் தடை: மத்திய அரசு பரிசீலனை

Posted: 27 Aug 2014 10:11 PM PDT

குற்றப்பின்னணி உள்ளவர்களை அமைச்சர்களாக நியமனம் செய்ய வேண்டாம் என்று பிரதமருக்கும், மாநில முதல்–மந்திரிகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு புதிய அறிவுறுத்தல் ஒன்றை நேற்று வெளியிட்டது. ஜனநாயக நாட்டில் குற்றப்பின்னணி கொண்டவர்களால் மக்கள் ஆளபடக் கூடாது என்பதற்காக இந்த கருத்தை வெளியிடுவதாக நீதிபதிகள் கூறினார்கள். குற்றப்பின்னணி உள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: தெலுங்கானா அரசு பரிந்துரை

Posted: 27 Aug 2014 10:04 PM PDT

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தெலுங்கானா அரசு பரிந்துரை செய்துள்ளது. 1991 முதல் 1996–ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியின் பிரதமராக இருந்தவர் பி.வி. நரசிம்மராவ். தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் 1921–ம் ஆண்டு ஜூன் 28–ந்தேதி பிறந்தார். காங்கிரசின் அடிமட்ட தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்தவர்.

கேரளாவில் மதுபார்களை மூடும் முடிவில் உறுதியாக இருக்கிறோம்: உம்மன்சாண்டி

Posted: 27 Aug 2014 09:41 PM PDT

கேரளாவில் ஆட்சி செய்யும் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த பூரண மதுவிலக்கு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக கேரளாவில் செயல்பட்ட 418 மதுபான

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவில்லை: சிபிஐ இயக்குனர் மறுப்பு

Posted: 27 Aug 2014 09:00 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக கூறியும், எனவே விசாரணையை துரிதப்படுத்தி முடிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரியும் தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை குறித்து, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா, தனது நிலையை விளக்கி சுப்ரீம் கோர்ட்டுக்கு நேற்று

மதம் மாற்ற முயன்றதாக வழக்கு: துப்பாக்கி சுடும் வீராங்கனை தாராவின் கணவர்-மாமியார் கைது

Posted: 27 Aug 2014 08:12 PM PDT

இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை தாரா ஷாதியோ. இவருக்கும், ரஞ்சித் குமார் கோலி என்ற ராகிபுல் உசேனுக்கும் கடந்த ஜூலை 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வசித்து வந்தனர். சமீபத்தில் இஸ்லாம் மதத்தை பின்பற்றத் தொடங்கிய கோலி, அதை மறைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. திருமணத்துக்கு

ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்: குழந்தைகளுக்கு அமீர்கான் அட்வைஸ்

Posted: 27 Aug 2014 03:53 PM PDT

பிரபல பாலிவுட் கதாநாயகி ராணி முகர்ஜியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'மர்தானி' என்ற இந்திப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. இந்தப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான், 'மர்தானி' படத்தில் வன்முறை மற்றும் விரும்பத்தகாத காட்சிகளும், கொச்சையான வசனங்களும்

குஜராத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: 84 பேர் வேட்பு மனு தாக்கல்

Posted: 27 Aug 2014 03:40 PM PDT

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து, பின்னர் ராஜினாமா செய்த மணிநகர் தொகுதி மற்றும் ஆனந்த், லிம்கேடா, டீஸா, கம்பாலியா, டங்காரா, மட்டர், டலாஜா, மங்ரோல் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேனீர் கொடுக்க தாமதம் ஆனதால் தகராறு: கழுத்தையறுத்து வாடிக்கையாளர் படுகொலை

Posted: 27 Aug 2014 03:02 PM PDT

கிழக்கு டெல்லியின் ஜப்ராபாத் பகுதியில் தங்களது குடும்பத் தொழிலான அச்சகம் வைத்து நடத்தி வரும் சகோதரர்கள் இருவர் வாடிக்கையாக காலை, மாலை வேளைகளில் அருகாமையில் உள்ள டீக்கடை ஒன்றில் இருந்து தேநீர் வரவழைத்து குடிப்பது பழக்கம். இவ்வகையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் தங்களுக்கு தேநீர் அனுப்பி வைக்கும்படி டீக்கடைக்காரரிடம் கூறி உள்ளனர். வெகு

டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 25 வயது பணிப்பெண் தற்கொலை

Posted: 27 Aug 2014 02:50 PM PDT

புது டெல்லியில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் 25 வயது மதிக்கத்தக்க பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய மோத்தி பாக் பகுதியில் வசிக்கும் அந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் வீட்டையொட்டியுள்ள பணியாளர் குடியிருப்பில் தங்கியிருந்த அந்த

ரூ.630 கோடி அபராத தொகையை செலுத்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 27 Aug 2014 02:46 PM PDT

பிரசித்தி பெற்ற டி.எல்.எப். ரியல் எஸ்டேட் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பெலாயிர் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக, வர்த்தக மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்கிற போட்டி முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.

சர்வதேச போலீசான இண்டர்போலின் பிரசாரத் தூதராக ஷாருக் கான் நியமனம்

Posted: 27 Aug 2014 02:36 PM PDT

பல்வேறு நாடுகளுக்கிடையில் ரகசிய தகவல்களை பறிமாறிக் கொள்ளவும் ஒரு நாட்டில் குற்றங்களை செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பியோடும் பேர்வழிகளை தேடிக் கண்டுபிடித்து குற்றம் நிகழ்ந்த நாட்டிடம் ஒப்படைக்கவும் சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் செயல்பட்டு வருகின்றது. சர்வதேச அளவிலான ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கள்ளநோட்டு கும்பல், இணையதள மோசடி மற்றும் தீவிரவாதத்துக்கு

ஜார்க்கண்டில் பிடிபட்ட பறக்கும் அணில்: வனவிலங்கு காப்பகத்தில் ஒப்படைப்பு

Posted: 27 Aug 2014 02:01 PM PDT

பறவைகளைப் போல் நீண்ட தூரத்துக்கு பறக்க முடியாவிட்டாலும் கை, கால்களை சிறகுகளைப் போல் அசைத்து, சுமார் 300 அடி தூரம் வரை பறந்து, மரத்துக்கு மரம் தாவும் அணில் வகைகள் உலகில் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்பட்டு, பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இவ்வகையிலான பறக்கும் அணில்களை மதிப்பளித்து, வணங்கியும் வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை இன்றோடு முடிக்க தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு

Posted: 27 Aug 2014 01:37 PM PDT

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு வக்கீல்களின் இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது. அதைத்தொடர்ந்து மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட சில மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட தனிக்கோர்ட்டு

எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

Posted: 27 Aug 2014 01:22 PM PDT

கடந்த 45 நாட்களாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களின் இந்திய நிலைகள் மீதும், எல்லையோர கிராமங்கள் மீதும் தொடர்ந்து சிறிய ரக பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.புரா, ஆர்னியா, ராம்கார், ஆக்னோர், கனாசாக் ஆகிய பகுதிகளில் மட்டும் கடந்த சில நாட்களில் பாகிஸ்தான் நடத்திய


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™