Tamil Star |
- அடுத்த அதிரடிக்கு அஜித் ரெடி!
- சாவித்திரி கதை கேட்டு அழுத திரிஷா!
- 60 கிலோ குறைத்து, 12 மணிநேரம் மேக்கப் போட்ட விக்ரம்!
- வாழைப்பழத்தை அறுவடை செய்து பொதி செய்யப்படும் காட்சி..
- அன்னாச்சி பழ பிரியர்களே!…. இவரது திறமையை மிஸ் பண்ணாமல் பாருங்க!
- இப்படி ஒரு பாசப் பறவையை எங்காவது பார்த்ததுண்டா?
- அம்புட்டு பாசக்காரங்களா நீங்க….
- முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை!!!
- 2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
- டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியல்: ரோஜர் பெடரர் முதலிடம்
- ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நீண்ட கால போர் நிறுத்தம்!!
- புதுமையான நெயில்பாலிஸ் கண்டுபிடிப்பு!
- சுற்றுலாத் துறைக்காக சீனப் பேரழகிகள் இலங்கை வருகை!
- அரசியலில் நுழைய கோத்தபாய இரகசிய நடவடிக்கை!
- விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டும்!
- பயணிகளிடையே மோதல்! அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம்
| Posted: 27 Aug 2014 11:39 AM PDT
அஜித் படங்கள் என்றாலே மிகவும் ரகசியமாக தான் படப்பிடிப்பு நடத்துவார்கள். அதையும் மீறி ஒரு சில ரசிகர்கள் எப்படியோ கண்டுபிடித்து செய்தியை வெளியே சொல்லிவிடுவார்கள். அதேபோல் தற்போது கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் சென்னையில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு எடுத்து வந்தார்கள். இந்நிலையில் படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்திவிட்டு விநாயகர் சதுர்த்திக்கு பிறகு ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். அடுத்த கட்ட படப்பிடிப்பில் மிக முக்கியமான சண்டைக்காட்சியை எடுக்க படக்குழு தயாராகி வருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாவித்திரி கதை கேட்டு அழுத திரிஷா! Posted: 27 Aug 2014 11:27 AM PDT
மறைந்த பழைய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை கேட்டு திரிஷா கண்கலங்கினார். பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு திரிஷா வந்து இருந்தார். சில காட்சிகளில் நடித்த அவர், ஓய்வு எடுப்பதற்காக சிறிது நேரம் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது, தெலுங்கு பட உலகை சேர்ந்த மூத்த நடிகர் ஒருவர் சாவித்திரியின் வாழ்க்கை கதையைப் பற்றி பேச துவங்கினார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து லட்சம், லட்சமாக சம்பாதித்த சாவித்திரி சொத்துக்களை வாங்கி குவித்தார். ஆனால், கடைசியில் சாவித்திரிக்கு எதுவும் நிலைக்கவில்லை. மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால் எல்லாம் போய்விட்டது. பட வாய்ப்புகளை இழந்தார். சம்பாதித்த சொத்துக்களை இழந்தார். நோய்வாய் பட்டார். பல மாதங்கள் கோமா நிலையிலேயே படுக்கையில் இருந்து உயிரை விட்டார் என்று உருக்கமாக அவரது சாதனையை சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்டதும் திரிஷாவுக்கு கண்களில் நீர் கசிந்தது. தன்னுடைய கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். இன்றைய இளம் கதாநாயகிகள் பலருக்கு சாவித்திரி ரோல் மாடலாக இருக்கிறார். அவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா? என்று சொல்லி திரிஷா வருத்தப்பட்டாராம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 60 கிலோ குறைத்து, 12 மணிநேரம் மேக்கப் போட்ட விக்ரம்! Posted: 27 Aug 2014 11:21 AM PDT
ஐ படத்திற்காக விக்ரம் 60 கிலோ எடையை குறைத்து 12 மணிநேரம் மேக்கப் போட்டுள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் இரண்டு ஆண்டுகளாக நடித்து வந்த ஐ படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்கள். இந்நிலையில் விக்ரம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில், விக்ரம் அர்ப்பணிப்பு மிக்க நடிகர். ஒரு படத்திற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்த நடிகரை நான் பார்த்தே இல்லை. அவர் இத்தனை ஆண்டுகள் ஆனது குறித்து குறை கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட கெட்டப்பிற்காக விக்ரம் பல நாட்கள் 12 மணிநேரம் மேக்கப் போட வேண்டி இருந்தது. படத்தில் அவர் மூன்று வித்தியாசமான லுக்கில் வருகிறார். விக்ரம் ஒரு கெட்டப்பில் 120 கிலோ எடையில் இருக்க வேண்டும். மற்றொன்றில் 60 கிலோவாக இருக்க வேண்டும். இதற்காக அவர் எடையை அதிகரித்து குறைத்தார். படத்தின் பல காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டன. நாங்கள் சீனாவில் அதிக தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தீபாவளிக்கு ரிலீஸாகும் உத்தம வில்லன் படத்திற்காக கமல் ஹாஸன் 4 மணிநேரம் மேக்கப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாழைப்பழத்தை அறுவடை செய்து பொதி செய்யப்படும் காட்சி.. Posted: 27 Aug 2014 07:58 AM PDT |
| அன்னாச்சி பழ பிரியர்களே!…. இவரது திறமையை மிஸ் பண்ணாமல் பாருங்க! Posted: 27 Aug 2014 07:44 AM PDT |
| இப்படி ஒரு பாசப் பறவையை எங்காவது பார்த்ததுண்டா? Posted: 27 Aug 2014 07:36 AM PDT |
| அம்புட்டு பாசக்காரங்களா நீங்க…. Posted: 27 Aug 2014 07:30 AM PDT |
| முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை!!! Posted: 27 Aug 2014 07:09 AM PDT
ஆயுர்வேத முறைப்படி உணவின் இறுதியில் நீர் அருந்துவதென்பது விஷத்தை உட்கொள்வதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. இது ஜதார்கனியை (நம் உடல் உணவை செரிக்க தேவையான ஆற்றல்) அழிப்பதன் மூலம் நம் உடலின் உள்ளே உணவை செரிக்க செய்வதற்கு பதிலாக அதனை செயலிழக்க செய்கிறது. இதன் காரணமாக நம் உடலில் வாயு மற்றும் அமிலம் உருவாகி ஒரு தீங்கு மிக்க சுழற்சி நம் உடலில் தொடங்குகிறது. உணவை உண்டு முடித்த உடனே நீரை அருந்துவதன் விளைவாக நம் உடல் 103 விதமான வியாதிகளுக்கு ஆளாக நேரிடலாம் என்று மகரிஷி வக் பட் கண்டறிந்துள்ளார். இங்கு ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். உணவு மற்றும் நீர் ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச இடைவெளி 1 1/2 மணிநேரத்திலிருந்து 2 1/2 மணிநேரம் இருக்க வேண்டும். இந்த இடைவெளி நாம் வாழ்கின்ற இடத்தின் புவியியல் தன்மை மற்ற பிற காரணிகளை சார்ந்து மாறுபடுகிறது. மலைப்பகுதிகளில் இந்த கால இடைவெளி அதிகமானதாகவும் மற்றும் சமவெளி பகுதி, வெப்பம் மிகுந்த இடங்கள் ஆகியவற்றில் இது குறைவானதாகவும் உள்ளது. நாம் வாழ்கின்ற சுற்றுப்புற பகுதிகளை சார்ந்து நம் உடல் உணவை செரிக்கும் தன்மை மாறுபடுவதால் இந்த கால இடைவெளியும் மாறுபடுகிறது. சூடான தேநீர் அருந்துவது போல நீரை ஒவ்வொரு மடக்காக மெதுவாக குடியுங்கள். நீரின் அளவு காலையில் செய்ய வேண்டிய முதல் விஷயம் நீர் அருந்துவது ஆகும். இதனை நம் உடல் வெப்பநிலைக்கு ஏற்ப சூடான தேநீர் அருந்துவது போல வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக அதிக அளவிலான எச்சில் நமது வயிற்று பகுதிக்கு செல்ல வாய்ப்பு அதிகம். செம்பினாலான பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர் எனில் அதனை வெதுவெதுப்பாக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தாமிரதினாலான பாத்திரத்தில் உள்ள நீர் வெதுவெதுப்பான நீரின் குணநலன்களை ஏற்கனவே பெற்றிருக்கும். மண் பானையில் வைக்கப்பட்டிருக்கும் நீர் எனில் அதனை வெதுவெதுப்பாக்க வேண்டியது அவசியம் ஆகும். 18 வயதிற்கு குறைவானவர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் 1.5 -லிருந்து 2 டம்ளர்கள் நீர் எடுத்து கொள்ள வேண்டும். மற்ற அனைவரும் 1.25 லி அதாவது 3 டம்ளர்கள் நீரை எடுத்து கொள்ள வேண்டும். தாகம் இல்லாமல் ஒருவர் அருந்த வேண்டியது இந்த அளவிலான நீரே ஆகும். சிறு சிறு மடக்குகளாக மெதுவாக நீரை அருந்த வேண்டும். இதனை 6 மாதங்களுக்கு முயன்று உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணருங்கள். நீங்கள் புத்துணர்வாகவும், இலகுவானவராகவும் உணர்வீர்கள். மேலும் உங்களது உறக்கம், செரிமானம், வலிகள் மற்றும் இதயம் ஆகியவற்றில் மேம்பட்ட செயல்திறனை உணர்வீர்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங் Posted: 27 Aug 2014 07:00 AM PDT
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிப் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியுள்ளது இப்போட்டி. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 25ம்தேதி நடைபெற வேண்டிய முதலாவது ஒருநாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ்டர் குக் தனது அணி முதலில் பவுலிங் செய்யும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பெய்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக காணப்படுகிறது. எனவே பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பதாலும், பந்து எல்லைக்கோட்டை தொட கஷ்டப்படும் என்பதாலும் குக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. கார்டிப் மைதானத்தை பொறுத்தளவில், இதுவரை நடந்த 15 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்ய அணி அதிகபட்சமாக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி விவரம்: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோஹ்லி, அஜிங்ய ரகானே, டோணி, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ்வர் குமார், முமகது ஷமி, மோஹித் ஷர்மா. இங்கிலாந்து அணி விவரம்: அலிஸ்டர் குக், ஹேல்ஸ், இயான் பெல், ரூட் மோர்கன், பட்லர், ஸ்டோக்ஸ், வோக்ஸ், ஜோர்டன், டிடட் வெல், ஆண்டர்சன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியல்: ரோஜர் பெடரர் முதலிடம் Posted: 27 Aug 2014 06:53 AM PDT
டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் தொடர்பான போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். போர்ப்ஸ் இதழ் இந்தாண்டு அதிகம் பணம் சம்பாதித்த டென்னிஸ் வீரர்கள் குறித்த பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டது. இதன்படி டாப் 10 வரிசையில் முதலிடத்தை பெடரர் பிடித்துள்ளார். 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர் இந்தாண்டு நோவக் ஜோகோவிக்கிடம் பட்டத்தைத் தவற விட்டார். ஆனபோதும் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில் பெடரர் ஈட்டியுள்ள மொத்த வருமானம் 56.2 மில்லியன் டாலர் ஆகும். இது இந்திய மதிப்பில் 340 கோடி ரூபாய். ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் 44.5 மில்லியன் அமெரிக்க டாலருடன் 2வது இடத்திலும், செர்பியா நாட்டின் நோவக் ஜோகோவிக் 33.1 மில்லியன் அமெரிக்க டாலருடன் 3வது இடத்திலும் உள்ளனர். டென்னிஸ் போட்டியில் உலக தர வரிசையில் பெண்கள் பிரிவில் முதலிடம் வகிக்கும் செரீனா வில்லியம்ஸ் 22 மில்லியன் அமெரிக்க டாலருடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது வருமானத்தில் பாதி பரிசு வழியாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து நாட்டின் ஆண்டி முர்ரே 19.1 மில்லியன் அமெரிக்க டாலருடன் 7வது இடத்திலும், விக்டோரியா அசரென்கா 11.1 மில்லியன் அமெரிக்க டாலருடன் 8வது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்தப் பட்டியலில் ஜப்பானின் கீய் நிஷிகோரி 11 மில்லியன் அமெரிக்க டாலருடன் 9வது இடத்தையும், டென்மார்க் நாட்டின் கரோலின் வோஸ்னியாக்கி 10.8 மில்லியன் அமெரிக்க டாலருடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நீண்ட கால போர் நிறுத்தம்!! Posted: 27 Aug 2014 06:39 AM PDT
எகிப்து கோரிய நீண்ட கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன. இதனை ஐ.நா வரவேற்றுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியியில், இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்குமான போர் 50 நாட்களாக நீடித்தது. இதில் 2,140 பாலஸ்தீனர்கள் பலியாகினர். 11,100 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் தரப்பில் 64 ராணுவத்தினர், 5 பொதுமக்கள் என 69 பேர் பலியானார்கள். எகிப்து அரசு பல முறை இரு தரப்பு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோதும், சமரசம் ஏற்படாமல் காஸாவில் பதற்றம் நீடித்து வந்தது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக் கொண்டன. இந்த நிலையில் இரு தரப்பும் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஐ.நா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ட்யூஜாரிக் கூறும்போது, 50 நாட்களாக அங்கு ஏற்பட்ட துயரங்களுக்கு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நெடுநாட்களாக அங்கு நடந்த மனித துயரங்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் முடிவு ஏற்படும் வாய்ப்பு அமைந்துள்ளது என்றார்This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதுமையான நெயில்பாலிஸ் கண்டுபிடிப்பு! Posted: 27 Aug 2014 02:43 AM PDT
அமெரிக்காவில் பெண்களை டேட்டிங் அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்வதை தடுக்க வடக்கு கரோலினா மாணவர்கள் புதிய நெயில்பாலிஷை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெண்களை டேட்டிங் அழைத்துச் சென்று மதுவிலோ, குளிர்பானத்திலோ மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தனர். இது குறித்து ஆய்வு செய்த அவர்கள் ஒரு புதுமையான நெயில்பாலிஷை கண்டுபிடித்துள்ளனர். இந்த நெயில்பாலிஷை போட்டால் பெண்கள் டேட் செல்கையில் அளிக்கப்படும் பானத்தில் ஏதாவது போதை, மயக்க வஸ்து கலக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். தங்களுக்கு அளிக்கப்படும் பானத்தை நெயில்பாலிஷ் போட்டுள்ள விரலால் கலக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த பானத்தில் ஏதாவது போதை, மயக்க வஸ்து கலக்கப்பட்டிருந்தால் நெயில்பாலிஷின் நிறம் மாறும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுற்றுலாத் துறைக்காக சீனப் பேரழகிகள் இலங்கை வருகை! Posted: 27 Aug 2014 02:36 AM PDT
சீனாவின் அழகுராணிகள் 15 பேர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் தேசிய அழகு ராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருக்கும் அழகிகளே நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளனனர். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறை மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பிலேயே இவர்கள் இங்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சினமன் ஹோட்டல் அன்ட் ரிசோர்ட் மற்றும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலைய அதிகாரிகளால் விமான நிலையத்தில் இவர்கள் வரவேற்கப்பட்டார்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசியலில் நுழைய கோத்தபாய இரகசிய நடவடிக்கை! Posted: 27 Aug 2014 02:33 AM PDT
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்குரிய பொறுப்பை கோத்தபாயவின் விசுவாசியான பொலிஸ் உயரதிகாரி அநுர சேனநாயக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். இந்த நிலையில், கோத்தாவும் அநுரவும் இணைந்து பல இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக தற்போது பொலிஸ்மா அதிபராக உள்ள என்.கே. இளங்கக்கோனை பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அந்த இடத்தில் அநுர சேனநாயக்காவை அமர்த்த கோத்தபாய திட்டமிட்டுள்ளாராம். எதிர்வரும் டிசம்பருக்கு முன்னர் அவரை பதவியில் அமர்த்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் எதிர்வரும் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பியபடி செயற்படுவதற்கு கோத்தபாய எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அநுர சேனநாயக்காவை அப்பதவியில் அமர்த்துவதற்கு சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும், இரண்டு முறை பதவிநீடிப்பு வழங்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை வேறு வழிகளில் நியமிக்கும் திட்டமும் கோத்தாவிடம் காணப்படுகின்றது. எனினும் 9 மூத்த பொலிஸ் அதிகாரிகள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மூன்றாவது தடவையாக பதவி நீடிப்பு வழங்குவது தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இது குறித்து நீதிமன்றம் செல்லதிட்டமிட்டுள்ளனர் என அவ்விணையத்தளத்தில் குறிப்பிடப்படடுள்ளது. இதேவேளை, கறுவாத்தோட்டத்தில் ஆடம்பர பங்களா ஒன்றை அநுரவிற்கு கோத்தபாய வழங்கியுள்ளார். இரவு நேரங்களில் ஆடம்பர விருந்துகள் இடம்பெறுகின்றன. இந்த விருந்துகளுக்கு இலங்கையின் முக்கிய வர்த்தக புள்ளிகளே அழைக்கப்படுகின்றனர். இந்த விருந்துபசாரங்களின் போது அநுர சேனநாயக்கா கோத்தா தேர்தலில் போட்டியிடவுள்ளது குறித்து பகிரங்கமாக அறிவித்து வருவதுடன் அவருக்கு ஆதரவு வழங்குமாறு கோரிவருகின்றார் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டும்! Posted: 27 Aug 2014 02:28 AM PDT
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதீதமான தெய்வ பக்தி உள்ளவர். பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அவர் இருந்த போதிலும் தனது இளமைப் பருவத்தில் ஆத்ம ஞானத்தைத் தேடி அலைந்தவர். ஞானவான்களைத் தந்த ஞானபூமியாகிய இந்திய தேசத்தின் தலைமையை மிகப் பெரும்பான்மையான பலத்துடன் பொறுப்பேற்கும் மிகப் பெரும் சந்தர்ப்பம் மோடிக்கு இருந்தமைக்கு அவரின் ஆத்ம ஞானபலமே காரணம் எனலாம். எனவே இந்தியப் பிரதமர் மோடி தன்னைச் சந்திப்பவர்களின் மனநிலைகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மனோபலம் மிக்கவர் என்பதையும் அவர் பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் அவரின் அணுகு முறைகளின் நுட்பங்கள் தொடர்பிலும் பிரதமர் மோடியை எவரும் ஏமாற்ற முடியாது என்பதும், பிரதமர் மோடி எவரையும் ஏமாற்ற மாட்டார் என்பதும் புலனாகும். இந்த அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்த சலனமும் இல்லாமல் பிரதமர் மோடி சந்தித்திருந்தார். இலங்கை ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் கூட்டமைப்பை பிரதமர் சந்திக்கமாட்டார் என சுப்பிரமணிய சுவாமி கூறிய வார்த்தைகள் செய்தியாக வெளிவந்த கையோடு கூட்டமைப்பினரை மோடி சந்தித்ததன் மூலம் ' நான் தனித்துவமானவன்' என்ற செய்தியை பிரதமர் மோடி இலங்கைக்கு மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, மன்மோகன் சிங்கின் ஆட்சியில் எதிர்பார்த்த எதனையும் பிரதமர் மோடியின் ஆட்சியில் இலங்கை அரசு எதிர்பார்க்க முடியாதென்ற உண்மை இலங்கை ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கும். இது ஒரு புறம் இருக்க எங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் நிறைந்த ஆத்மபலம் உள்ளவர். எங்கள் கூக்குரல் அரசியல்வாதிகள் மத்தியில் அவர்களைச் சமாளித்து நடப்பது கூட அவரின் ஆத்மபலம் என்றே கூறவேண்டும். கூட்டங்களில் முன்வைக்கின்ற கருத்துக்கள், அரசின் போக்கை நாகரிகமாக விமர்சிக்கும் தன்மைகள், வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றும் பேரவாவைச் சமாளித்துச் செல்லும் நுட்பங்கள் என அனைத்தும் அவரின் ஆத்மபலம் கொடுத்த தைரியம் எனலாம். அரசியல் ஊடான அறிமுகம் எதுவும் இல்லாமல் இரண்டு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் விருப்பு வாக்குகள் பெற்று வடக்கின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், ஆத்மபலம் மிக்க இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்கும் போது இருவருக்கு மிடையில் மிக நெருக்கமான உறவு நிச்சயம் ஏற்படும். தமிழ் மக்கள் பட்ட சொல்லொணாத் துயரங்களைப் பிரதமர் மோடிக்கு விக்னேஸ்வரன் எடுத்துக் கூறும் போது அதனைச் செவிமடுக்கும் அவதானிப்பு மிக அதிகமாகவே இருக்கும் எனலாம். அது மட்டுமன்றி, மீண்டும் மிகவிரைவில் நாங்கள் சந்திப்போம் என்று பிரதமர் மோடி கூறும் அளவில் நிலைமை மாறும். எனவே வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பிரதமர் மோடியையும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவையும் நிச்சயம் சந்திக்க வேண்டும். இச் சந்திப்பு மிக விரைவில் இடம்பெறுவது காலத்தின் முதன்மைத் தேவை. இந்தியப் பிரதமரின் அலுவலகம் சந்திப்புக்கு அழைப்பு விடும் என்று காத்திராமல் வடக்கின் முதலமைச்சர் சந்திப்புக்கான கோரிக்கையை முன்வைக்கலாம். வடக்கு மாகாண அரசு என்பது தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் பேசுகின்ற அனைத்து அதிகாரத்தையும் கொண்ட தமிழ் அரசு. எனவே, பிரதமர் மோடியை வடக்கின் முதல்வர் சந்திக்கின்ற போது அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பது சத்தியம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயணிகளிடையே மோதல்! அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம் Posted: 27 Aug 2014 12:35 AM PDT
அமெரிக்காவில் உள்ள ஒரு விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இருவருக்கும் இடையே நடந்த இருக்கை சண்டையால் விமானம் பாதி வழியில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நேவார்க் என்ற நகரில் இருந்து டென்வர் என்ற நகரை நோக்கி யூனிடெட் ஏர்லைன்ஸ் 1462 என்ற விமானம் நேற்று மாலை பறந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதில் பயணம் செய்த ஒரு பயணி முழங்கால் வைக்கும் பகுதியில் தனது லேப்டாப்பை பயன்படுத்தி வந்தார். அப்போது அவருக்கு முன்னால் உள்ள இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் பயணி தனது இருக்கையை பின்புறமாக சாய்த்தார். இதனால் பின்னால் இருந்த பயணி லேப்டாப்பை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் முன் இருக்கையில் இருந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் பயணி வாட்டர் பாட்டிலை எடுத்து பயணியின் முகத்தில் எறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த லேப்டாப்பை பயன்படுத்திய பயணி, பெண் பயணியை அடிக்க முயற்சித்தார். இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான ஊழியர்கள் சமாதானப்படுத்தியும் இருவரும் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டு இருந்ததால் விமானத்தை சிகாகொ விமான நிலையத்தில் பைலட் வேறு வழியின்றி இறக்கினார். பின்னர் சிகாகோ காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் இரு பயணிகளையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் அந்த விமானம் கிளம்பியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















