மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கோர்ட்டு பெண் ஊழியர் செக்ஸ் புகார்: மும்பை நீதிபதி சஸ்பெண்டு
- அசாமில் என்கவுண்டர்: போடோ தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை
- பத்ம விபூஷன் விருதாளர், பிரபல யோகாசன குரு பி.கே.எஸ். அய்யங்கார் காலமானார்
- வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படை தலைவர் பாஜகவில் சேருகிறார்
- இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: 12 நாளில் 17 முறை அத்துமீறல்
- ஜெகன்மோகன் ரெட்டி குழுமத்துக்கு சொந்தமான ரூ.863 கோடி சொத்துகள் முடக்கம்
- கோயில் தோட்டத்தில் விளையாடிய 8 வயது சிறுமி கற்பழிப்பு: 60 வயது பூசாரி கைது
- 4 கிராமவாசிகளை கொன்று அட்டூழியம் செய்த புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்
- தெலுங்கானாவில் குடியுரிமை கணக்கெடுப்பு மிகப்பெரிய வெற்றி: சந்திரசேகர ராவ்
- முலாயமின் வீட்டிற்கு சென்றார் அமர் சிங்: சமாஜ்வாடி கட்சியில் இணைவாரா?
- லிபியாவில் இருந்து மேலும் 216 பேர் இந்தியா திரும்பினர்
- பொறியியல், மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரம்: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- ஊழலை நாட்டை விட்டு விரட்டியடிப்பேன்: அரியானா விழாவில் பிரதமர் மோடி சபதம்
- தமிழகம் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்ல தடை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- என்ஜின் கோளாறால் ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்: 186 பயணிகள் உயிர் தப்பினர்
- கருப்பையில் 36 வருடமாக இருந்த குழந்தையின் எலும்புக்கூடு: அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்
- உ.பி.யில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது
- தமிழக-இலங்கை மீனவர் பிரச்சினை பற்றி இன்று ஆலோசனை: பிரதமர் அலுவலகம் ஏற்பாடு
- அசாம்-நாகாலாந்து எல்லையில் போலீசார்-போராட்டக்காரர்கள் கடும் மோதல்: 21 பேர் காயம்
- காசியாபாத்தில் வீட்டை உடைத்து புகுந்து துப்பாக்கி சூடு: நான்கு பேர் படுகாயம்
| கோர்ட்டு பெண் ஊழியர் செக்ஸ் புகார்: மும்பை நீதிபதி சஸ்பெண்டு Posted: 19 Aug 2014 10:33 PM PDT மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதியாக பணிபுரிபவர் எம்.டி. கெய்க்வாட். இவர் மீது அதே கோர்ட்டில் ஊழியராக பணி புரியும் பெண் ஒருவர் 3 வாரங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அதில் கோர்ட்டு அறையில் தன்னிடம் நீதிபதி கெய்க்வாட் தவறாக நடக்க முயன்றார் என்று கூறியிருந்தார். இந்த புகார் பற்றி சிறப்பு நீதிபதி எஸ்.டி.துலாங்கர் விசாரணை நடத்தினார். அதில் கெய்க்வாட் |
| அசாமில் என்கவுண்டர்: போடோ தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை Posted: 19 Aug 2014 10:20 PM PDT அசாமில் போடோ தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை தடுக்க உள்ளுர் போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இன்று அதிகாலை அசாமின் சிராங் மாவட்டத்தில் ராய்மகி என்ற இடத்தில் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் |
| பத்ம விபூஷன் விருதாளர், பிரபல யோகாசன குரு பி.கே.எஸ். அய்யங்கார் காலமானார் Posted: 19 Aug 2014 10:20 PM PDT இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்ய அருந்தொண்டாற்றிய பி.கே.எஸ்.அய்யங்கார் புனேவில் இன்று அதிகாலை காலமானார். யோகக் கலை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து, அவற்றை நூல்களாக எழுதி வெளியிட்டுள்ள பி.கே.எஸ்.அய்யங்காருக்கு உலகம் |
| வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படை தலைவர் பாஜகவில் சேருகிறார் Posted: 19 Aug 2014 10:06 PM PDT கர்நாடக முன்னாள் போலீஸ் அதிகாரி சங்கர் பிதரி. இவர் சில வருடங்களுக்கு முன் சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கர்நாடக அதிரடிப்படையின் தலைவராக செயல்பட்டார். பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் அரசியலில் ஈடுபட திட்டமிட்டார். இதற்காக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால் அங்கு தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகி |
| இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: 12 நாளில் 17 முறை அத்துமீறல் Posted: 19 Aug 2014 09:58 PM PDT இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. எல்லையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லையில் அத்து மீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் ஹமீர்பூரில் உள்ள இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. உடனே இந்திய வீரர்களும் திருப்பி தாக்கினார்கள். பலமணி நேரம் |
| ஜெகன்மோகன் ரெட்டி குழுமத்துக்கு சொந்தமான ரூ.863 கோடி சொத்துகள் முடக்கம் Posted: 19 Aug 2014 09:55 PM PDT ஆந்திர மாநில முதல் மந்திரியாக மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பதவி வகித்தபோது குண்டூர் மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம், புதிய விமான நிலையம் ஆகியவற்றை உருவாக்கும் மிகப்பெரிய திட்டம் தீட்டப்பட்டது. இதற்கான பணி ஒப்பந்தம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி அவருக்கு மிகவும் நெருக்கமான நிம்மகட்டா பிரசாத் |
| கோயில் தோட்டத்தில் விளையாடிய 8 வயது சிறுமி கற்பழிப்பு: 60 வயது பூசாரி கைது Posted: 19 Aug 2014 09:43 PM PDT ஜென்மாஷ்டமி திருநாளையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தெற்கு டெல்லியில் உள்ள சத்பிரி பகுதியில் அமைந்துள்ள ஒரு கோயிலிலும் நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. |
| 4 கிராமவாசிகளை கொன்று அட்டூழியம் செய்த புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர் Posted: 19 Aug 2014 08:28 PM PDT மகாராஷ்ட்டிர மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள டோங்கர் ஹல்டி கிராமத்தை சேர்ந்த சிலர், மேய்ச்சலுக்கு சென்ற தங்களின் மாடுகளை தேடி கடந்த 17-ம் தேதி அதிகாலை சிச்பள்ளி சரக காட்டுப்பகுதிக்குள் சென்றனர். காட்டின் அடர்ந்த புதர் மறைவில் மறைந்திருந்த ஒரு புலி, டட்டு பாண்டுரங் தோலே(35) என்பவரின் மீது ஆவேசமாக பாய்ந்தது. அவரது கழுத்தை கவ்வி இழுத்துச் சென்ற புலி, ஆக்ரோஷமாக டட்டு பாண்டுரங் தோலேவின் உடலை கடித்துக் குதறி தின்றது. |
| தெலுங்கானாவில் குடியுரிமை கணக்கெடுப்பு மிகப்பெரிய வெற்றி: சந்திரசேகர ராவ் Posted: 19 Aug 2014 05:16 PM PDT ஆந்திராவில் இருந்து பிரிந்து நாட்டின் 29–வது மாநிலமாக தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் அம்மாநில முதல் மந்திரியாக பதவி ஏற்றார். அதன் பின் தெலுங்கானாவில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் குடியிருப்பதால் அரசு நலத் திட்டங்கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதை கருத்தில் |
| முலாயமின் வீட்டிற்கு சென்றார் அமர் சிங்: சமாஜ்வாடி கட்சியில் இணைவாரா? Posted: 19 Aug 2014 04:53 PM PDT சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் வீட்டிற்கு சென்ற அமர்சிங் இரண்டு மணி நேரம் அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அக்கட்சியின் முக்கிய தலைவரான ராம் கோபால் யாதவ், அமர்சிங் தங்கள் கட்சியில் மீண்டும் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த 48 மணி நேரத்தில் முலாயமை அவர் சந்தித்துள்ளது அரசியல் |
| லிபியாவில் இருந்து மேலும் 216 பேர் இந்தியா திரும்பினர் Posted: 19 Aug 2014 03:21 PM PDT லிபியாவில் நடக்கும் உள்நாட்டு கிளர்ச்சியை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்கள் குழுவாக நாடு திரும்பி வருகின்றனர். நேற்று விமானம் மூலம் 216 பேர் டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 750 பேர் ஆகும். தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெறுவதாக வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| பொறியியல், மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரம்: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 19 Aug 2014 03:12 PM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான போட்டி நுழைவுத்தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. மத்திய கல்வி வாரியம், கல்வி பெறும் உரிமை சட்டம் ஆகியவற்றை மீறி செயல்படும் இந்த பயிற்சி மையங்கள் தவறான |
| ஊழலை நாட்டை விட்டு விரட்டியடிப்பேன்: அரியானா விழாவில் பிரதமர் மோடி சபதம் Posted: 19 Aug 2014 02:59 PM PDT காங்கிரஸ் ஆளும் அரியானா மாநிலத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் பிரதமர் பதவி ஏற்ற பின்னர், நரேந்திர மோடி முதன் முதலாக நேற்று அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காய்தால் நகரில் இருந்து அரியானா-ராஜஸ்தான் எல்லை வரையில் ரூ.1,393 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா முன்னிலையில் நடைபெற்ற விழாவில், நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- |
| தமிழகம் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்ல தடை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 19 Aug 2014 01:55 PM PDT கேரளாவில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் கெயில் நிறுவன திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு அளித்திருந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கெயில் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தமிழக அரசின் |
| என்ஜின் கோளாறால் ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்: 186 பயணிகள் உயிர் தப்பினர் Posted: 19 Aug 2014 01:41 PM PDT கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற ஏர்-இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் கோளாறு காரணமாக மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசரமாக தறையிறங்கியது. இதனால் 186 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். நேற்று மாலை 4.30 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த விமானத்தில் |
| கருப்பையில் 36 வருடமாக இருந்த குழந்தையின் எலும்புக்கூடு: அறுவைசிகிச்சை மூலம் அகற்றம் Posted: 19 Aug 2014 01:03 PM PDT மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிபாரியாவை சேர்ந்த 60 வயது பெண்மணியின் உடலில் 36 வருடமாக பிறக்காமல் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு மருத்துவ உலகில் அரிதான அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. காந்தாபாய் குன்வந்த் என்ற அந்த பெண்மணி கடந்த வாரம் தனது அடிவயிற்றில் தீராத வலி ஏற்பட்டதன் காரணமாக நாக்பூரில் உள்ள |
| உ.பி.யில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது Posted: 19 Aug 2014 12:46 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்த மிக கனமழை காரணமாக இம்மாநிலத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள பல நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பலி எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்தது. இந்த வெள்ளத்தால் நேற்று வரை அம்மாநிலத்தில் 48 பேர் பலியான நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது. அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி பஹ்ரியாச்சில் 8 பேரும், ஸ்ரவாஸ்தியில் மற்றும் பல்ராம்பூரில் மூவரும், லக்கிம்பூரில் ஒருவரும் இன்று வெள்ளத்துக்கு பலியாகியுள்ளனர். அம்மாநில நீர்வளத்துறை அமைச்சரான ஷிவ்பால் யாதவ் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு சேதங்களை கணக்கெடுத்தார். அதிகாரிகளுக்கு நிவாரண பணிகள் குறித்த பல்வேறு உத்தரவுகளையும் அவர் பிறப்பித்தார். |
| தமிழக-இலங்கை மீனவர் பிரச்சினை பற்றி இன்று ஆலோசனை: பிரதமர் அலுவலகம் ஏற்பாடு Posted: 19 Aug 2014 12:33 PM PDT இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பது தொடர்பாக, தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தலைமை தாங்குகிறார். மத்திய |
| அசாம்-நாகாலாந்து எல்லையில் போலீசார்-போராட்டக்காரர்கள் கடும் மோதல்: 21 பேர் காயம் Posted: 19 Aug 2014 12:21 PM PDT அசாம் மற்றும் நாகாலாந்து மாநில எல்லையில் உள்ள கொலாகட் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 21 பேர் காயமடைந்தனர். இரு மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஏழு கிராமங்களில் வசிக்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 15 பேர் நாகாலாந்தில் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அசாம் ஆதிவாசிகள் மாணவர்கள் கூட்டமைப்பு |
| காசியாபாத்தில் வீட்டை உடைத்து புகுந்து துப்பாக்கி சூடு: நான்கு பேர் படுகாயம் Posted: 19 Aug 2014 12:06 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் வீட்டினுள் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். காசியாபாத்தில் உள்ள இந்திராபுரி காலனியில் இன்று மாலை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்த சஞ்சய், சோனு மற்றும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |