Tamil Star |
- கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து முதுகு வலி பின்னி எடுக்குதா?
- உணவை நடித்துக் காட்ட வைக்கும் மிகவும் வினோத ஹோட்டல்……
- எத்தனை தடவை பார்த்தாலும் மீளவே மாட்டீங்க!
- கழுகுக்கே ஆப்பு வைத்த பாம்பைப் பாருங்க!
- நல்லா சோதனை செய்றாங்க!…. இந்த ஐபோனுக்கு வாயிருந்தால் கூட அழுதிடும்….
- வெஸ்டர்ன் – சதர்ன் ஓபன் பட்டம்: பெடரருக்கு!
- சிரியா வான் எல்லையில் விமானங்களை இயக்க அமெரிக்கா தடை!!
- மொசூல் அணையை மீட்டது குர்திஷ் படை! ஒபாமா வாழ்த்து!!
- ரத்தக்கறை படிந்த பெட்ஷீட்களை திருடிச் சென்ற 17 பேர்!
- ஐ.நா.விசாரணையை தமிழகத்தில் நடத்தவும்: கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேர் கோரிக்கை!
| கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து முதுகு வலி பின்னி எடுக்குதா? Posted: 19 Aug 2014 05:12 AM PDT
மனம் மயங்க வைக்கும் கார்பரேட் உலகத்திற்கு உங்களை தாரை வார்த்து விட்டவரா நீங்கள்! நாள் முழுவதும் இதற்காக கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்திருப்பதால் சோர்ந்திருப்பவரா? கம்ப்யூட்டருக்கு முன்னால் முறையான நிலையில் அமராத போது, முதுகு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி மற்றும் உங்களுடைய கைகள், விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் கடுமையான வலி உணர்வுகள் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நல்ல நிலையில் கம்ப்யூட்டருக்கு முன்னர் அமரும் நிலையையும், மேலும் சில நல்ல பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது மேற்கண்ட பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்க உதவும். கம்ப்யூட்டர்வாசிகளே.. உங்க கண்ணைப் பாதுகாக்க இதைப் படியுங்க...! நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும் அல்லது படுக்கும் போதும் உங்களுடைய உடலை சரியான நிலையில் வைத்திருப்பதும் மற்றும் தசைகள் அல்லது மூட்டுகளில் வலி வராமல் இருக்கச் செய்வதும் தான் நல்ல நிலை எனலாம். தசைகளை திறமையாக பயன்படச் செய்ய விரும்பினால், எலும்புகளையும், மூட்டுகளையும் நேராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சரியான நிலையில் இவ்வாறு வைத்திருப்பதன் மூலமாக மூட்டுகளில் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்த்திட முடியும். குறிப்பாக நீங்கள் கம்ப்யூட்டர்களுக்கு முன்னால் நெடுநேரத்திற்கு அமர நேரும் வேளைகளில், சரியான நிலையில் அமர்வது உங்களுடைய முதுகெலும்பை அழுத்தம் உணராத இடமாக வைத்திருக்கவும் மற்றும் தசை வலி மற்றும் முதுகு வலி வராமல் வைத்திருக்கவும் உதவும். சிறந்த பார்வைக்கு மட்டுமல்லாமல், சரியான நிலையில் அமர்வதால் தசை வலிகள் குறைவதுடன், உடலில் குறைந்த அளவு சக்தியை மட்டுமே செலவிட வைக்கவும் முடியும். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய முதுகையும் மற்றும் தோள்பட்டைகளையும் நேராக வைத்திருக்கப் பழக வேண்டும். மேலும், உங்களுடைய பிட்டங்கள் நாற்காலியின் பின்புறத்தை தொட்டுக் கொண்டிருக்கவும் வேண்டும். கம்ப்யூட்டரின் திரையிலிருந்து கையை நீட்டும் தொலைவில் அமர்ந்து கொள்வதன் மூலம், உங்களுடைய பார்வையின் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும். வலது புறமாக உங்களுடைய முழங்கால்களை மடித்து உட்காரலாம் மற்றும் கால்களை குறுக்காக வைத்தவாறு அமர்வதை தவிர்க்கவும். உங்களுடைய கால் பாதங்கள் தரையை தொடுமாறு வைத்திருக்கவும் மற்றும் உங்களுடைய கண்களை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வைத்திருக்காமல் நேராக வைத்திருக்கவும். உங்களுடைய புஜங்கள் மற்றும் முழங்கைகளை நாற்காலியில் ஓய்வு நிலையில் வைத்திருங்கள் மற்றும் தோள்பட்டைகளையும் ஓய்வாக வைத்திருங்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உணவை நடித்துக் காட்ட வைக்கும் மிகவும் வினோத ஹோட்டல்…… Posted: 19 Aug 2014 04:58 AM PDT |
| எத்தனை தடவை பார்த்தாலும் மீளவே மாட்டீங்க! Posted: 19 Aug 2014 04:52 AM PDT |
| கழுகுக்கே ஆப்பு வைத்த பாம்பைப் பாருங்க! Posted: 19 Aug 2014 04:38 AM PDT |
| நல்லா சோதனை செய்றாங்க!…. இந்த ஐபோனுக்கு வாயிருந்தால் கூட அழுதிடும்…. Posted: 19 Aug 2014 04:22 AM PDT |
| வெஸ்டர்ன் – சதர்ன் ஓபன் பட்டம்: பெடரருக்கு! Posted: 19 Aug 2014 03:31 AM PDT
அமெரிக்காவின் மாசான் நகரில் நடந்த வெஸ்டர்ன்- சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளார் ரோஜர் பெடரர். இது இவருக்கு இங்கு 6வது பட்டமாகும். மேலும் அவரது டென்னிஸ் வாழ்க்கையில் இது 80வது பட்டமாகும். இறுதிப் போட்டியில் டேவிட் பெர்ரரை 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பெடரர். அடுத்த வாரம் நியூயார்க்கில் தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்பாக இது பெடரருக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. அமெரிக்க ஓபன் பட்டத்தை பெடரர் வென்றால் அது அவருக்கு 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். ஏற்கனவே அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை பீட் சாம்ப்ராஸ் வசம் பறித்துவிட்டார் பெடரர். தற்போது சாம்ப்ராஸை விட 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை அதிகம் வைத்துள்ளார் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரியா வான் எல்லையில் விமானங்களை இயக்க அமெரிக்கா தடை!! Posted: 19 Aug 2014 02:56 AM PDT
உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவின் வான்பகுதியில் தனது நாட்டு பயணிகள் விமானங்களை இயக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் உள்ள விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மூலமாக சிரிய, நாட்டு பாதுகாப்பு படை விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள ஆயுதங்கள் குறித்து சர்வதேச ஆயுத ஆய்வு குரூப் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் விமானத்தை சுட்டு வீழ்த்தும் சக்தி கொண்ட ஏவுகணைகள் தீவிரவாதிகளிடம் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இதை பரிசீலித்த அமெரிக்க விமான நிர்வாக அமைப்பு, தனது நாட்டு விமானத்தை சிரிய நாட்டு வான் எல்லைக்கு மேல் பறக்க முற்றிலும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே பல அமெரிக்க விமானங்கள் சிரியாவின் சில பகுதிகளின் மேல் பறப்பதை தவிர்த்து வந்த நிலையில், தற்போது, சிரிய வான் எல்லையை முற்றிலும் தவிர்க்க அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் சுட்டு மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேம்படுத்தியுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மொசூல் அணையை மீட்டது குர்திஷ் படை! ஒபாமா வாழ்த்து!! Posted: 19 Aug 2014 02:25 AM PDT
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வசம் இருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மொசூல் அணையை அமெரிக்காவின் உதவியுடன் குர்திஷ் படையினர் மீட்டுள்ளனர். ஈராக்கில் யாஸிதி சிறுபான்மையினரை அகதிகளாக விரட்டியடித்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கம். இதனால் சிஞ்சார் மலைக்குன்றுகளில் பசியும் பட்டினியுமாக கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில் யாஸிதிகள் செத்து மடிந்தனர். அத்துடன் சிஞ்சார் மலைக்குன்றுகளில் மனிதப் பேரவலம் நிகழப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து சிஞ்சார் மலைக்குன்றுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாஸிதி இனத்தவரை மீட்க அமெரிக்கா களமிறங்கியது. அமெரிக்கா போர் விமானங்கள் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. 10 நாட்கள் தாக்குதலுக்குப் பின்னர் யாஸிதிகள் மலைக்குன்றுகளில் இருந்து குர்திஷ் மாகாணங்களுக்கு வந்தடைந்தனர். இந்த நிலையில் குர்திஷ் மாகாணத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையில் தொடர்ந்தும் அமெரிக்கா தாக்குதலை நடத்தி வந்தது. இதன் முக்கிய கட்டமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வசம் இருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மொசூல் அணைக்கட்டை குர்திஷ் மாகாண அரசு படைகள் கைப்பற்றியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா அதிபர் ஒபாமா, மொசூல் அணைக்கட்டை மீட்டிருப்பது மிக முக்கியமான முன்னேற்றம். மொசூல் அணைக்கட்டை மீட்டிருப்பதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரத்தக்கறை படிந்த பெட்ஷீட்களை திருடிச் சென்ற 17 பேர்! Posted: 19 Aug 2014 02:08 AM PDT
லைபீரியாவில் உள்ள எபோலா மெடிக்கல் சென்டரில் இருந்து எபோலா காய்ச்சால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்புகள் மற்றும் படுக்கைகளை திருடிச் சென்ற 17 பேரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி லைபீரியா, நைஜீரியா, சியர்ரா லியோன், கினியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், பலர் வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் லைபீரியாவில் எபோலா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மையத்திற்குள் புகுந்த சிலர் அங்கிருந்த எபோலா நோயாளிகளின் ரத்தக்கறை படிந்த படுக்கை மற்றும் படுக்கை விரிப்புகளை திருடிச் சென்றுவிட்டனர். அவர்கள் அந்த பொருட்களை பெரிய சேரிப்பகுதிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு போராடி வரும் நிலையில் அந்த 17 பேர் திருடிச் சென்ற பொருட்களால் வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 413 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் லைபீரிய அரசின் வேண்டுகோளை அடுத்து அமெரிக்கா அனுப்பிய இசட்மாப் என்ற மருந்து எபோலா நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நா.விசாரணையை தமிழகத்தில் நடத்தவும்: கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேர் கோரிக்கை! Posted: 18 Aug 2014 11:42 PM PDT
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றனவா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்துங்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். 33 உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- தமிழ் மக்கள் தாங்கள் சிங்கள அரசினால் இனப் படுகொலைக்குட்படுத்தப்பட்டனர் என்றும் தொடர்ந்தும் உட்படுத்தப்படுகின்றனர் என்றும் உறுதியாக நம்புகின்றனர். இறுதிப் போரில், தமிழர்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டனர்; அவர்களது வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டன, அவர்களது யாழ். நூலகம் அழிக்கப்பட்டது இவை எல்லாம் நடந்து முடிந்தவை. இப்போதும் கடத்தல்கள், காணாமற்போகச் செய்தல்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்ற எல்லா அடக்குமுறைகளும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றஙகள் இடம்பெற்றுள்ளன. இப்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் சொந்த இடத்தில் மீளக்குடியேற முடியாமல் பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் வசிக்கின்றனர். இந்த விடயங்கள் அனைத்தையும் ஐ.நா. மனிஉரிமைகள் விசாரணைக்குழு கருத்தில் கொள்ளவேண்டும். 1974 முதல், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஐ.நா. சபை ஆராய வேண்டும். 1970, 1980, 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து இலங்கை அரசு எந்த உண்மைகளையும் வெளியிடவில்லை. உள்ளூர் பொறிமுறையான நல்லிணக்க ஆணைக்குழுவும் ஆராயவில்லை. சர்வதேச விசாரணைக்குழு இலங்கை வருவதற்க அரசு அனுமதியளிக்க மறுத்தால் தமிழ்நாட்டில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த மாதம் பதவியில் இருந்து விலகும் தாங்கள் உலகில் மனித உரிமையை நிலை நாட்டுவதற்காக மிகவும் திறமையாகச் செயற்பட்டுள்ளீர்கள். அந்தச் சேவைக்கும் பணிக்கும் எமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். - என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.கே.சிவாஜிலிங்கம், பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், த.குருகுலராஜா, அன்ரனி ஜெனநாதன், த.சித்தார்த்தன், அனந்தி சசிதரன், ப.அரியரத்தினம், கா.கிருஷ்ணபிள்ளை, கு.நாகேஸ்வரன், இரா.துரைரெத்தினம் உள்ளிட்ட வடக்கு,கிழக்கு மாகாண சபைகளின் 33 உறுப்பினர்கள் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










