Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


லிபியாவில் தவிக்கும் கேரள நர்சுகளை அழைத்து வர சிறப்பு விமானம்: உம்மன் சாண்டி கோரிக்கை

Posted: 01 Aug 2014 11:18 PM PDT

ஈராக்கில் சிக்கித் தவித்த இந்திய நர்சுகள் ஒருவழியாக கடந்த மாதம் பத்திரமாக தாய்நாடு திரும்பிய நிலையில், தற்போது உள்நாட்டு மோதலால் திணறி வரும் லிபியாவில் பணியாற்றும் கேரள நர்சுகளை பத்திரமாக தாய்நாட்டுக்கு அழைத்து வர சிறப்பு விமானம் ஒன்றினை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி மத்திய அரசுக்கு

உறுதி அளிக்கும் படிவங்களில் தங்களுக்கு தாங்களே கையெழுத்திடலாம்: மத்திய அரசு

Posted: 01 Aug 2014 11:05 PM PDT

அரசு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் செய்யும் போது சான்றிதழ்கள் உண்மையானவை தானா என்பதற்கு உயர் அதிகாரிகள் உறுதி அளித்து சாட்சியம் அளிக்கும் முறை (அட்டெஸ்டேசன்) நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகிறது. மேலும் இதற்காக பணம் கை மாறுவது பெருமளவில் நடப்பதாக சர்ச்சை உள்ளது.

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவித்த ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு

Posted: 01 Aug 2014 11:01 PM PDT

நமது நாட்டில் பெண் குழந்தைகளை சிசுக் கொலை செய்யும் தீயப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கர்ப்பக் காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் என்ன? என்பது தொடர்பான விபரங்களை 'ஸ்கேன்' மூலம் கண்டறிந்து அறிவிக்கும் பழக்கத்துக்கு மத்திய-மாநில அரசுகள் முற்றிலுமாக தடை விதித்துள்ளன.

திருப்பதி ஏழுமலையான் வங்கி கணக்கில் 6,800 கிலோ தங்கம் டெபாசிட்

Posted: 01 Aug 2014 10:52 PM PDT

உலகின் பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் வங்கி கணக்கில் 5,000 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தானம் சார்பில் 1,800 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இந்த 6,800 கிலோ தங்கத்துக்கு தங்கத்தையே வட்டியாக வழங்க தேசிய வங்கிகள்

சோனியா 2 ஆண்டு பதவியை துறப்பது நல்லது: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து

Posted: 01 Aug 2014 10:27 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. ஏராளமான ஊழல் குற்றச் சாட்டுக்களில் சிக்கியதால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் தகுதி கூட கிடைக்காமல் போய்விட்டது. பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் சார்பிலும், ராகுலும், அவர் தலைமையிலான அணியினருமே பொறுப்பு ஏற்று எதிர்கொண்டனர். மூத்த தலைவர்கள் பிரசாரம் மட்டும் செய்த நிலையில் மற்ற அனைத்தையும் ராகுலின் ஆதரவாளர்களே முன்நின்று செய்தனர். எனவே காங்கிரஸ் தோல்விக்கு ராகுலும், அவர் ஆதரவாளர்களுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

புனே நிலச்சரிவு பலி 75 ஆக உயர்வு: 100 பேர் கதி என்ன?

Posted: 01 Aug 2014 10:22 PM PDT

மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடந்த 30-ம் தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 44 வீடுகள் மண்ணில் புதையுண்டன. வீடுகளில் இருந்த 160-க்கும் அதிகமானவர்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்தை சேர்ந்த சுமார் 400 வீரர்கள் இவர்களை மீட்கும்

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க 293 யாத்ரீகர்களுடன் 37-வது குழு புறப்பட்டது

Posted: 01 Aug 2014 10:19 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கரடு முரடான மலைப்பாதை வழியாக பயணித்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில்

ஆந்திராவில் அண்ணா உணவகம்: என்.டி.ராமராவ் பெயரில் தொடங்க சந்திரபாபுநாயுடு முடிவு

Posted: 01 Aug 2014 10:08 PM PDT

தமிழ்நாட்டில் சென்னை உள்பட மாநகராட்சிகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஆந்திராவிலும் செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டது. இது தொடர்பாக ஆந்திர பொது விநியோகத்துறை மந்திரி பரிடாலா சுனிதா தலைமையிலான குழு தமிழ்நாட்டுக்கு வந்து அம்மா உணவகத்தை பார்வையிட்டனர். அங்கு தயாரிக்கப்பட்ட

தேசிய நெடுஞ்சாலைகளில் கார்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதி: மத்திய அரசு

Posted: 01 Aug 2014 10:04 PM PDT

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு வாகனமும் மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு சட்ட விதிகளை வகுத்துள்ளது. 1989–ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்புப்படி சொந்த கார்களில் செல்லும் பயணிகளின் கார், ஜீப் வேகத்துக்கு எந்த அளவும் வரையறுக்கப்படவில்லை. வணிக கார்கள் 60 கிலோ மீட்டர், மோட்டார் சைக்கிள்கள் 50 கிலோ மீட்டர், கனரக வாகனங்கள் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.

கேரளாவில் பலத்த மழை: அரசு அலுவலகங்கள்–பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Posted: 01 Aug 2014 09:49 PM PDT

கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக பருவமழை தொடங்கியது. என்றாலும் மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை

பாகிஸ்தானில் குடியேறி விட்ட மகளின் பெயரால் பென்ஷன் வாங்கிய தந்தை மீது வழக்கு

Posted: 01 Aug 2014 09:42 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியை சேர்ந்த லாடூ என்ற பெண் அம்மாநில வனத்துறையில் அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர், தனது கணவருடன் பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று, அந்நாட்டு குடிமகளாக மாறி விட்டார்.

பாராளுமன்றத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி உடைகிறது

Posted: 01 Aug 2014 09:35 PM PDT

ஆந்திர பாராளுமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் 8 எம்.பிக்கள் வெற்றி பெற்றனர். ஆனால் சந்திரபாபு நாயுடு முதல்–மந்திரியாக தேர்வு பெற்றதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த கர்னூல் எம்.பி. எஸ்.டி.ஒய்.ரெட்டி தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார். அதிர்ச்சி அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி கட்சி தாவல்தடை சட்டத்தின்படி அவரது எம்.பி. பதவியை பறிக்கும்படி பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில் மேலும் 3 எம்.பிக்கள் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் விசாகப்பட்டினம் அரக்கு தொகுதி எம்.பி.கொத்தப் பள்ளி சீதா. இவர் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தெலுங்கு தேசம் மந்திரி அச்சன் நாயுடுவை சந்தித்து பேசினார்.3 நாட்களுக்கு முன்பு முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். தொகுதி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வற்புறுத்தவே முதல்–மந்திரியை சந்தித்து பேசியதாக விளக்கம் அளித்தார். ஆனால் கட்சி தாவும் முடிவில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனை நிருபிக்கும் வகையி

சகரான்பூரில் இயல்பு நிலை திரும்புவதால் 10 மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்வு

Posted: 01 Aug 2014 08:48 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சகரான்பூர் மாவட்டத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக இரண்டு பிரிவினருக்கு இடையே கடந்த 26-ம் தேதி மோதல் ஏற்பட்டது. பின்னர், இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இதனால், மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு

சட்டத்தை மீறி சொத்து அபகரிப்பு: சோனியா-ராகுல் மீது அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கியது

Posted: 01 Aug 2014 05:09 PM PDT

முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் 1938-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை நிறுவனம் டெல்லியில் தொடங்கப்பட்டது. ஹெரால்டு உள்பட 3 பத்திரிகைகளை வெளியிட்டுவந்த 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' என்ற அந்த நிறுவனம் 2008-ம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்த நிறுவனத்துக்கு ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டி கோவிலில் யசோதா பென் பிரார்த்தனை

Posted: 01 Aug 2014 04:35 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், சிரவண மாதத்தையொட்டி குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் மகர்வாடா கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபத்திர மகராஜ் கோவிலுக்குச் சென்று நேற்று வழிபட்டார். அப்போது அவர், மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டியும் பிரார்த்தனை செய்தார்.

தகுதியானவர்களுக்கு மட்டுமே மானியம்: நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவிப்பு

Posted: 01 Aug 2014 03:11 PM PDT

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி மானியம் வழங்குவது தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வ பதிலை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாகத் திகழ்வது மானியத் தேவையை எதிர்கொள்வதுதான். ஏனெனில் நாட்டின் வருவாயின் பெரும்பகுதி மானியத்திற்கே சென்று விடுகிறது. சில நேரங்களில் இந்த மானியங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளன.

டெல்லியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Posted: 01 Aug 2014 12:56 PM PDT

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, வர்த்தக மந்திரி பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை வந்த அவர்கள் நேற்று முன்தினம் நிதி மந்திரியும் ராணுவ மந்திரியுமான அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார்கள். பின்னர் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தனர்.

சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்து: நரேந்திர மோடி உத்தரவு

Posted: 01 Aug 2014 12:40 PM PDT

நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில் அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தன்னை சந்தித்த பல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா- மோடி அவதூறு செய்தி: பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் அ.தி.மு.க. பிரச்சினை எழுப்பி பேச்சு

Posted: 01 Aug 2014 12:11 PM PDT

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை ராணுவ இணையதள கட்டுரை தொடர்பாக டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பிரச்சினை எழுப்பி பேசினார். அப்போது அவர், இந்த பிரச்சினையை இலங்கை அரசிடம் மத்திய அரசு தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரண்டு நாள் பயணமாக நேபாளம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: வெளியுறவு துறை அமைச்சகம் தகவல்

Posted: 01 Aug 2014 10:35 AM PDT

வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக காத்மாண்டு செல்கிறார் என்று இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் தெரிவித்துள்ளார். நேபாளம் செல்லும் அவர், அந்நாட்டு பிரதமர் சுசில் கொய்ராலவுடன் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மோடியின் நேபாள


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™