Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சன்னி லியோன் ஆட்டம்.. இந்த வாரக் கடைசியில்.. பெங்களூரில்!

Posted: 01 Aug 2014 01:22 AM PDT

sunny-leone

sunny-leoneடிகே... அதாவது இது ஒரு கன்னடப் படத்தின் டைட்டில். இந்தப் படத்தில் ஒரு குத்துப் பாட்டு இடம் பெறுகிறது. அதில் பங்கேற்று ஆடிச் சிறப்பிக்கவுள்ளார் சன்னி லியோன். இதற்காக அவர் இந்த வாரக் கடைசியில் பெங்களூருக்குப் பறந்து வருகிறாராம். இயக்குநர் -நடிகர் ஜோகி பிரேம்தான் இந்தப் படத்தை இயக்குபவர். அவரும், சன்னியும் சேர்ந்துதான் ஆடப் போகிறார்களாம் இந்தக் குத்துப்பாட்டுக்கு. ஜோகி பிரேம் யாருன்னு சொல்லவே இல்லையே.. தமிழில் சிம்புவுடனும், விஜய்யுடனும் நடித்தவரான முன்னாள் நடிகை ரக்சிதாவின் கணவர்தான் இந்த ஜோகி பிரேம். இப்படத்தை தயாரிப்பவர் ரக்சிதாதான். அதாவது இது ஜோகி பிரேமின் குடும்பப் படமும் கூட. ஏற்கனவே பேபி டால், லைலா போன்ற குத்துப் பாடல்களுக்கு ஆட்டம் போட்டவர்தான் சன்னி லியோன். தமிழிலும் கூட வடகறியில் ஆட்டம் போட்டுள்ளார். இப்போது கன்னடத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆடப் போகிறார். அவரது வருகைக்காக பெங்களூர் காத்திருப்பதாக ஜோகிபிரேம் குதூகலமாக கூறியுள்ளார். ஏற்கனவே தெலுங்கிலும் கூட தலை காட்டியுள்ளார் சன்னி. மலையாளம் மட்டும்தான் பாக்கி. சீக்கிரம் அங்கும் தனது திறமையைக் காட்டுவார் என்று நம்பலாம். சன்னியின் ஆட்டத்துக்காக பெங்களூர்ப் புறநகர்ப் பகுதி ஒன்றில் விசேஷமாக செட் போட்டுள்ளனராம். அங்குதான் ஆடப் போகிறார் சன்னி. ஆட்டத்தை வடிவமைத்திருப்பவர் அர்ஜூன் ஜான்யா. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பவர் சைத்ரா சந்திரகாந்த் என்பவர் ஆவார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிர்வாணமாக நடிக்கும் அமீர்கான்!

Posted: 01 Aug 2014 01:15 AM PDT

pk-photos

pk-photosபடத்திற்கு படம் ஏதாவது வித்யாசமாக செய்து பரபரப்பு கிளப்புவார் அமீர்கான். தற்போது பிகே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதில் ஆடைகள் எதுவும் இன்றி நிற்கும் அமீர்கான் கையில் ஒரு டேப்ரெக்கார்டரை வைத்து அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொண்டிருப்பது போல போஸ்டர் வெளியாகியுள்ளது.

3 இடியட்ஸ்' படத்துக்குப் பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் 'பிகே'. இதில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.

காட்சியை ராஜ்குமார் ஹிரானி படமாக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவில் படமாக்கப்பட்ட முத்தக் காட்சியில் இதுதான் நீளமான முத்தக்காட்சியாம்.

ஏற்கனவே '3 இடியட்ஸ்' படத்தில் கரீனா கபூருக்கு முத்தம் கொடுத்து அமீர்கான் நடித்திருந்தார். இதில் அனுஷ்கா சர்மாவுக்கு நீண்ட முத்தம் கொடுத்து அசத்தியுள்ளார்.

அதைவிட முக்கிய அம்சம் அவர் கொடுத்துள்ள நிர்வாண போஸ்தான். இந்த போஸ்டர் நேற்றிரவு வெளியானது முதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எதையோ முறைத்து பார்ப்பது போன்ற தோற்றத்தில் காணப்படும் அமீர்கான் முகத்தோற்றமும், உடலமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

பிகே திரைப்படம் கிருஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக் பார்த்த உடனே டீசரை ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர் அமீர்கான் ரசிகர்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!

Posted: 01 Aug 2014 12:00 AM PDT

beet-root

beet-rootஅழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம். புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும். தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். பீட்ரூட்டின் பயன்கள் புற்றுநோய் பரவுவதை தடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். பித்தத்தைக் குறைக்கும் அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்மார்ட்போன் ரூ.4,020 விலையில் அறிமுகம்!

Posted: 31 Jul 2014 11:41 PM PDT

Maxx-AXD21-MSD7-Smarty

Maxx-AXD21-MSD7-SmartyMaxx மொபைல் நிறுவனம் அதன் முதல் அண்ட்ராய்டு 4.4 கிட்கேட் சார்ந்த ஸ்மார்ட்போனான AXD21 MSD7 Smarty ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் ரூ.4,020 விலையில் தொடங்கப்பட்டது. Maxx நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் புதன்கிழமை முதல் Snapdeal-ல் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. Maxx AXD21 MSD7 Smarty ஸ்மார்ட்போன் ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) சாதனம் ஆகும் மற்றும் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இது 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA கொள்ளளவு தொடுதிரை, மற்றும் ரேம் 512MB உடன் இணைந்து ஒரு 1GHz டூயல் கோர் மீடியாடெக் (MT6572M) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் LED ஃபிளாஷ் கொண்ட 3.2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் ரோம் 4GB அடங்கும். மேலும், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16GB சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் மட்டும் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் மெஷர்ஸ் 125.3x63.8x10.1mm மற்றும் 109.3 கிராம் எடையுடையது. Maxx AXD21 MSD7 Smarty ஸ்மார்ட்போனில் 1450mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3 ஜி, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-USB ஆகிய இணைப்பு விருப்பங்கள் வருகிறது. Maxx AXD21 MSD7 Smarty ஸ்மார்ட்போன் அம்சங்கள்: இரட்டை சிம், 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA கொள்ளளவு தொடுதிரை, ரேம் 512MB, 1GHz டூயல் கோர் மீடியாடெக் (MT6572M) ப்ராசசர், LED ஃபிளாஷ் கொண்ட 3.2 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ரோம் 4GB , microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16GB சேமிப்பு, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3 ஜி, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 1450mAh பேட்டரி, 109.3 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™