Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பில்லி, சூனியம் விரட்டிய போது சாமியார் அடித்துக் கொல்லப்பட்டார்

Posted: 27 Aug 2014 03:54 PM PDT

திருவண்ணாமலை கீழ்நாத்தூரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சுரேஷ் (வயது 35). அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சுரேசுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் அவருக்கு தோஷம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பில்லி, சூனியத்தை விரட்டி தோஷம் கழிப்பதற்காக விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த சாமியார் அரிகிருஷ்ணன் (45) என்பவரை அழைத்து வந்தனர். பின்னர் சுரேசுக்கு தோஷம் கழிப்பதற்காக மேலத்திகான் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு ...

மக்களைப் படிக்க வைக்க வேண்டிய அரசு குடிக்க வைத்துக்கொண்டிருக்கிறது!

Posted: 27 Aug 2014 03:51 PM PDT

'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கையாகும். கள்ள மதுபானம் அருந்தி மோசமாக பாதிக்கப்படும் மக்களின் சமூக பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் உறுதியான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக சீரிய கொள்கையை (டாஸ்மாக்) செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூக விரோதிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் சேருவதை கட்டுப்படுத்துவதிலும் அரசு கருவூலத்துக்கு வருவாய் சென்றடைவதையும் உறுதி செய்கிறது'' ...

குடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே!

Posted: 27 Aug 2014 03:49 PM PDT

இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வது என்பது இன்றியமையாத ஒன்று. இன்றைய பொருளாதார நெருக்கடி உள்ள உலகில் ஓரளவுக்குத் தாக்குபிடிக்க இருவரது சம்பளமும் முக்கியம். மேலும், இன்று பெண்களும் ஆணுக்கு நிகராக எல்லா துறை களிலும் சிறந்து விளங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களது படிப்பு மற்றும் திறமையை வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகளை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கச் சொல்வது சரியான செயலாக இருக்க முடியாது. வீட்டு பட்ஜெட் போடுவதிலிருந்து முதலீடு தொடர்பான எந்தவொரு முடிவை எடுப்பதுவரை பெண்களை இணைத்துக் ...

வீண்கோபம் வேண்டாம்

Posted: 27 Aug 2014 03:48 PM PDT

வீண்கோபம் வேண்டாம் கோபம் நம்மில் காணப்படும் ஒரு குறை. கோபத்திலே எதை ஆரம்பித்தாலும், அது அவமானத்தில்தான் முடியும். யாருக்கு வேண்டுமானலும் கோபம் வரலாம். ஆனால், சரியானவரிடம்-சரியான காரணத்துக்கு சரியான நேரத்தில்-சரியான வித்ததில் கோபம் வருவது கடினம். கோபம் வரும்போதெல்லாம் அது ஒரு காயத்தை ஏற்படுத்தாமல் போகாது என்பது முன்கோபிகளிடம் மாட்டி அவதிபட்டவர்களுக்குத்தான் தெரியும். ஒரு தந்தை தன் கோபக்கார மகனைத் திருத்த முயன்று தோற்றுப்போனார். கடைசியாக, மாதத்தின் முதல் தேதியில் அவனிடம் 31 கட்டங்கள் போடப்பட்ட ...

உலகச் செய்திகள்!

Posted: 27 Aug 2014 03:42 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

எபோலா - செய்தித் தொகுப்புகள்

Posted: 27 Aug 2014 03:41 PM PDT

சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ...

கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு

Posted: 27 Aug 2014 03:39 PM PDT

முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி மீது மதுரை புறநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மு.க.அழகிரியை தலைவராக கொண்ட அறக்கட்டளையின் சார்பில் மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி இயங்கி வருகின்றது. அப்பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை தயா கல்லூரிக்காக மு.க.அழகிரி அபகரித்து விட்டதாக இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் கருணாநிதி மதுரை புறநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு ...

விபத்தால் இருவர் காயம்..

Posted: 27 Aug 2014 03:37 PM PDT

வவுனியா ஏ9 வீதியில் விபத்து பெண் உட்பட இருவர் காயம் வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் காயங்களுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர் இவ் விபத்தானது மோட்டார் சைகிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது இவ்விபத்தில் எஸ். சாரங்கன் மற்றும் என் ஜெயசூரியா என்பவர்களே காயமடைந்ததாக தெரியவருகின்றது மேலதிகார விசாரணையை வவுனியா பொலிசார் நடாத்திவருகின்றனர். நன்றி ...

போகோ தொலைக்காட்சி வலைப்பக்கத்தில் தமிழில் பார்க்கும் வசதி உள்ளதா?

Posted: 27 Aug 2014 03:34 PM PDT

போகோ தொலைக்காட்சி வலைப்பக்கத்தில் தமிழில் பார்க்கும் வசதி உள்ளதா?

தெரிந்தால் உதவுங்கள் நண்பர்களே .

அறிமுகம்: பல ஆண்டுகளாக கவிதை எழுதும் புதுக்கவிஞன்

Posted: 27 Aug 2014 03:32 PM PDT

பெயர்: வைத்தியநாதன் , வைத்தி என்று நண்பர்கள் அழைக்கிறார்கள்
சொந்த ஊர்: சென்னை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பன் மூலம்
பொழுதுபோக்கு: படிப்பது, கவிதை எழுதுவது
தொழில்: Software Consultant
மேலும் என்னைப் பற்றி:  ஆன்மிக நாட்டம் உண்டு

சொல்லாதே யாரும் கேட்டால்!

Posted: 27 Aug 2014 02:14 PM PDT

பண்டைக் காலத்தில் வயதில் இளைஞனான ஓர் அரசன் இருந்தான். அவன் எப்போதும் இன்ப வாழ்விலேயே மூழ்கி இருந்தான். இதனால் அரசியல் வாழ்வில் பல தொல்லைகள் ஏற்பட்டன. அரசன் எதிர்பார்த்தபடி கவலையில்லாமல் இன்பம் துய்க்க முடியவில்லை. இன்பம் நாடிய இடமெல்லாம் துன்பமும், கவலையும் பெருகின. ஒருநாள்- அரசன் தலைநகரிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள காட்டில் வேட்டையாடச் சென்றான். வழியில் ஒரு விறகு வெட்டி, விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அருகே அவன் மனைவி, வெட்டிய விறகை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். இருவர் முகத்திலும் ...

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Posted: 27 Aug 2014 12:11 PM PDT

புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, சில பகுதிகளை கைப்பற்றி, அதை, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள, அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிலரை தங்கள் பயங்கரவாத பணிக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'இந்தியன் முஜாஹிதீன்' எனப்படும் இந்தியாவைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைமறைவு நிர்வாகிகள் சிலர், இந்திய இளைஞர்கள் சிலரை, மத்திய ஆசிய நாடுகளில் செயல்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் ...

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

Posted: 27 Aug 2014 11:26 AM PDT

சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம். 1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ...

100 படங்களுக்கு மேல் எழுதிய சினிமா கதாசிரியர் மா.ரா.மரணம்

Posted: 27 Aug 2014 11:22 AM PDT

பழம்பெரும் சினிமா கதாசிரியர் மா.ரா. சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. தேவர் பிலிம்சில் கதாசிரியராக இருந்தவர், மா.ரா. இவருடைய முழு பெயர், மா.ராமச்சந்திரன். மா.ரா. என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தார். இவருடைய வீடு சென்னை வேளச்சேரியில் உள்ளது. கடந்த 10-ந் தேதி காலையில் இவர் குளிப்பதற்காக சென்றபோது, வழுக்கி விழுந்தார். அதில், அவருடைய கை எலும்பு முறிந்தது. தலை, கால் ஆகிய இடங்களிலும் பலத்த அடிபட்டது. சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை ...

அடைக்கலம் தேடி!

Posted: 27 Aug 2014 11:00 AM PDT

பல நேரங்களில் அழுகையோடு வரும் என்னை ஆசுவாசப் படுத்தி ஆறுதல் அளிக்கிறாய்! கனிவான உன் பேச்சில் கவலைகளை மறந்து களிப்புடன் சிரிக்கிறேன்! தாய் மடிக்கு அடுத்த படியாய் எனக்கே எனக்காய்... எனக்காகவே இருப்பது நீ மட்டும் தான்! என்னை நானே கண்டு கொள்ள என் வளர்ச்சியை கண்டு வியந்து விழி விரிக்க வாய்ப்பளிக்கிறாய்! பரபரப்பான வாழ்க்கையில் பறந்து பறந்து வேலை செய்தாலும் உன்னுடன் அளவளாவும் பத்து நிமிடங்கள் உண்மையிலேயே சொர்க்கம்! முகஸ்துதிக்காக சொல்லவில்லை... பொன் பொருளை வழங்குவதில் ...

ஒரு பக்க கதைகள்

Posted: 27 Aug 2014 10:57 AM PDT

உண்மை நிர்மலா கேட்டாள். ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே...' பின்னே என்னடி... கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா? பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு. போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும். முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு. வசுமதி ...

பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்???

Posted: 27 Aug 2014 10:54 AM PDT

பெரியாரின் இளமைப் பருவ சுவாரஷ்யங்கள்??? பெரியாரின் இளமைப்பருவம் குறித்து ஆர். முத்துகுமார் தனது பெரியார் புத்தகத்தில் சில சுவாரஷ்யமான தகவல்களைக் கொடுக்கிறார். "கிருஷ்ணசாமி (பெரியாரின் அண்ணன்) சாத்வீகமான சிறுவன். அப்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சுப் பேசமாட்டான். ஆனால் ராமசாமியோ அண்ணனுக்கு நேர் எதிர். வால் முளைக்காத குறைதான். சதாசர்வக் காலமும் சேட்டை செய்வதுதான் ராமசாமியின் உத்தியோகம். ஐந்து வயது ஆவதற்குள் ராமசாமியின் சேட்டைகள் ஈரோட்டில் ஏகப் பிரபலம். ஊர்ப் பிரமுகரின் மகன் என்பது கூடுதல் ...

முட்டை! - சிறுவர்கதை

Posted: 27 Aug 2014 10:51 AM PDT

தோப்பில் ஏராளமானத் தென்னை மரங்கள் காணப்பட்டன. வேலியோரத்தில் உயரமாக வளர்ந்திருந்த தென்னை மரம் ஒன்றில், குருவி கூடு கட்டி வசித்து வந்தது. வேலியோரப் பகுதியில் வசித்து வந்த ஓணான் அந்த தென்னை மரத்தின் மீது ஏறியது. மரத்தின் உச்சியில் இருந்த குருவிக்கூட்டை வந்தடைந்தது. கூட்டில் முட்டையுடன் இருந்த குருவியானது ஓணானைக் கண்டதும் திடுக்கிட்டது. ""குருவியே, நீ மரியாதையாகக் கூட்டை விட்டுப் பறந்து சென்று விடு. இல்லையென்றால் நீ இட்டு வைத்திருக்கும் முட்டை களை உடைத்துக் குடிப்பதோடு மட்டுமல்லாமல், உன்னையும் ...

விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி?

Posted: 27 Aug 2014 10:36 AM PDT

தமிழ்ப் படங்களில், கதாநாயகிகள் 'வயதுக்கு வருவதாக' அமைக்கப்படும் காட்சி களைப் பார்க்கும்போது, இயக்குநருக்கு உண்மையிலே இந்த விஷயம் தெரியாதா அல்லது ஒரு பெண்ணிடமாவது கேட்டு இந்த மாதிரி காட்சிகளை எடுக்க மாட்டார்களா என்றும் தோன்றும். திரைப்படத்தில் காட்டுவதைப் போல் நட்டநடு சாலையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதாநாயகி கத்துவது, வலி வந்தவுடன் நாயகனின் முகம் அவள் நினைவுக்கு வருவது எல்லாம் உண்மையில் எங்கும் நடப்பதில்லை. பெரும்பாலான பெண்கள், பருவ வயதை நெருங்கியவுடனே, வயதுக்கு வந்தவுடனே உடம்பில் என்ன ...

கணபதி நம் குணநிதி!

Posted: 27 Aug 2014 10:34 AM PDT

ஆக., 29 - விநாயகர் சதுர்த்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான கடவுள் விநாயகர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்கிற வழியெல்லாம் ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, சாலையோரம் என, எல்லா இடங்களிலும் அமர்ந்திருக்கும் இவரே, நமக்குத் துணையாக வருபவர். இவருக்கு பிரமாண்ட கோவில் வேண்டாம்; நினைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தில், மஞ்சள் பொடி, களிமண் என எதில் பிடித்து வைத்தாலும், அதில் ஆவாஹனம் ஆகி, நமக்கு அருள்பாலிப்பார். ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், ...

தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

Posted: 27 Aug 2014 10:33 AM PDT

இந்தோனேசியா போன்ற நாடுகளில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுதல் பற்றியும், தாய்மார்களுக்கு பால் கட்டி கொண்டால், எப்படி பராமரிப்பது என்பது பற்றியும், சொல்லிக் கொடுப்பதற்கு, தனி அமைப்புகள் இருப்பது, எத்தனை பேருக்கு தெரியும்.அந்தளவுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் அறிந்து செயல்படுகின்றனர் அங்கே. அதற்கிணையாக இங்கே, அந்த பணியை, பெண்ணின் குடும்பத்தினர் சிறப்புற செய்து வருகின்றனர். அவர்கள் தான், பிரசவித்த பெண்ணுக்கு, தாய்ப்பால் எப்படி கொடுப்பது என்பதை சொல்லித் தருகின்றனர் என்கிறார், சென்னை, எழும்பூர் ...

அரசு பள்ளியில் அவலம்: 2 ஆசிரியர்கள்.. 3 மாணவர்கள்...!

Posted: 27 Aug 2014 10:32 AM PDT

கமுதி : கமுதி அருகே 3 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் பணியில் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காடாமாங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாங்குளத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 3 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் 4ம் வகுப்பிலும் மற்ற இருவர் 5ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். மூன்று மாணவர்கள் மட்டுமே படிக்கும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், 2 உதவியாளர்கள் என 5 பேர் பணியில் உள்ளனர். ...

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி குன்கா கடும் எச்சரிக்கை

Posted: 27 Aug 2014 10:29 AM PDT

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டோர் மனு அளித்து வருகின்றனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு குறித்து நீதிபதி கருத்து தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டுச் சதி என்ற வார்த்தையை நீக்கக் கோரி ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு மனு அளித்திருந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பை உடனே வழங்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர்நீதி ...

உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26

Posted: 27 Aug 2014 10:28 AM PDT

மாறி வரும் நகர்ப்புற கலாச்சாரத்தில் செல்ல பிராணிகளுக்கு அன்பு காட்டும் சமூகம் உருவாகி வருகிறது. இன்றும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும். அதேசமயத்தில் தனது எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ரத்த சொந்தங்கள் ...

கால்டுவெல் இறந்த தினம்: 28-8-1891

Posted: 27 Aug 2014 10:25 AM PDT

கால்டுவெல் என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே. இவர் 1814-ம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் ...

சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும்

Posted: 27 Aug 2014 10:24 AM PDT

சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் - சினிமாவில் செல்லுபடியாகுமா குழந்தைத் தொழிலாளர் சட்டம்? சினிமாவில் 18 வயதுக்குக் குறைவான பெண்களைக் கதாநாயகிகளாக நடிக்க வைப்பதற்குத் தடை கேட்டு, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கடந்த 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும், அந்த மனு உன்னிப்பாக கவனிக்க வேண்டியதே! மனு தாக்கல் செய்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளரும் ஆசிரியருமான முத்துச்செல்வி என்ன சொல்கிறார்? ''குடும்பம், பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் ...

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Posted: 27 Aug 2014 10:20 AM PDT

இறந்துவிட்டது போல் நாடகமாடி 3 மாதமாக வேறு பெண்ணுடன் ரகசியமாக வாழ்ந்து வந்த ஆம் ஆத்மி தொண்டர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். டெல்லி புறநகரான நொய்டா பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் சர்மா. தகவல் அறியும் ஆர்வலமான இவர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக உள்ளார். 38 வயதான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காரில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இந்த நிலையில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட மோகன் சர்மா உயிருடன் இருப்பது அன்மையில் தெரிய வந்தது. அவர்தான் இறந்ததாக நாடகமாடி வேறு ஒரு பெண்ணுடன் வசித்தது போலீஸ் ...

நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்!

Posted: 27 Aug 2014 10:02 AM PDT

நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு, இதய நோய்கள், சிறுநீரக பாதிப்புகள், பக்கவாதம் மற்றும் கண் பார்வை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை, பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பர். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம். அதனால், பல் விஷயத்திலும், அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, சமீபத்திய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டைப்-1 மற்றும் டைப் -2, நீரிழிவு நோயாளிகள், 2,500 பேரிடம், ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அப்போது, ...

நிலைத்த ஆனந்தம் எது?

Posted: 27 Aug 2014 09:57 AM PDT

மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. அபபொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப் பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம், நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா? யோசித்துப் ...

விப்ரதனும், விநாயகரும்!

Posted: 27 Aug 2014 09:55 AM PDT

'செய்த பாவமெல்லாம் பரிபூரணம் உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே...' - என்பது பெரியோர் வாக்கு. இதன் அர்த்தம், அறிந்தும், அறியாமலும் நாம் செய்த பாவங்கள், ஆத்ம ஞானம் பெற்ற ஞானியின் பார்வைபட்டால் நீங்கி விடும் என்பதாகும். நந்துரம் எனும் நகரத்தை ஒட்டி இருந்த காட்டில், கொடும் கொலை பாதகச் செயல்களைச் செய்து வந்த விப்ரதன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான்; காட்டு விலங்குகள் கூட அவனைக் கண்டால் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். அந்தப் பக்கமாக யார் வந்தாலும், அவர்களைக் கொன்று, உடைமைகளைக் கவர்வதே அவனது தொழில். ஒருநாள், ...

மது ! கவிஞர் இரா .இரவி !

Posted: 27 Aug 2014 09:51 AM PDT

மது ! கவிஞர் இரா .இரவி ! குடிக்க குடிக்க உயிர் குடிக்கும் மது ! திரவ வடிவில் உள்ளது திராவகத்தை விட கொடியது மது ! இன்று மட்டும் என்று தொடங்கி என்றும் என்றாகும் மது ! துக்கம் மறக்க என்பாய் துக்கத்தில் முடிக்கும் மது ! வன்முறையின் காரணி வம்புகளின் ஆரம்பம் மது ! ஒழுக்கத்தின் எதிரி ஒழுக்கக்கேட்டின் நண்பன் மது ! . சிற்றின்பம் என்பாய் பெருந்துன்பம் தரும் மது ! முதலில் கோப்பை மோதல் பின் நண்பர்கள் மோதல் மது ! தேசப்பிதா வெறுத்தது பித்தனாய் ...

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014

Posted: 27 Aug 2014 09:48 AM PDT

நகரம்: இஞ்சியோன், தென் கொரியா குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் துவக்க விழா : செப்டம்பர் 19 நிறைவு விழா : அக்டோபர் 4 முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் ...

ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன்

Posted: 27 Aug 2014 09:46 AM PDT

இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். 'இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?' மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான். "எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?" கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு. "அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. ...

விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம்

Posted: 27 Aug 2014 09:39 AM PDT

ஸ்ரீபெரும்புதூர்: மவுலிவாக்கம், 11 மாடி கட்டட வழக்கில் தொடர்புடைய, எட்டு பேர் மீது, சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கட்டட விபத்திற்கு, விதிமீறல்கள் தான் காரணம் என, விசாரணைகுழுவினர் தெரிவித்துள்ளனர். சென்னை, மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம், 28ம் தேதி, 11 மாடி அடுக்குமாடி கட்டடம், இடிந்து விழுந்தது. இதில், 61 பேர், உடல் நசுங்கி இறந்தனர். 27 பேர், காயங்களுடன் மீட்கப்பட்டனர். ...

குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவி கூடாது: உச்ச நீதிமன்றம்

Posted: 27 Aug 2014 09:36 AM PDT

குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சர்களாக்குவதை பிரதமர், மாநில முதல்வர்கள் தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குற்றப் பின்னணி உள்ளவர்களை மத்திய அமைச்சர்கள் ஆக்குவதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவை நேரடியாக பிறப்பிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என கூறியதோடு, குற்றப் பின்னணி ...

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!-சுவாமி சுகபோதானந்தா

Posted: 27 Aug 2014 09:26 AM PDT

இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்' என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!' புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளைத் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமான‌ இளைய ...

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு

Posted: 27 Aug 2014 09:25 AM PDT

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பியூன்கள் தவிர அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான சொத்து விவரங்கள் அளிக்க செப்டம்பர் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கான புதிய படிவத்தில், அரசு ...

சிறுகதை உத்திகள்

Posted: 27 Aug 2014 08:59 AM PDT

சிறுகதை உத்திகள் இந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம். சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் ...

அல்வா துண்டு யாருக்கு?

Posted: 27 Aug 2014 07:41 AM PDT

அல்வா துண்டு யாருக்கு? "போய்யா! ஒரே போர் அடிக்குது.." என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர்! சரி..."போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்? சுருக்கமாக சொன்னால் நம் மனதுக்கு பிடிக்காத செயல்களை .... வேறு வழி தெரியாமல் செய்யும்போது தான் நமக்கு போரடிக்கிறது. நம் மனதுக்கு பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் நமக்கு போரடிக்காது. "உன் மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் இருந்தால், அதை செய்வதற்கு நேரத்தை தள்ளி போடாதே.... ...

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Posted: 27 Aug 2014 07:29 AM PDT

- 1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?   1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல் - ----------------------------------------- -    2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை? - 1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து  4) பயம் - ---------------------------------------- - 3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் ...

சிரிப்பால் விளைந்த தீமை'

Posted: 27 Aug 2014 07:26 AM PDT

சிரிப்பால் விளைந்த தீமை' 1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும் என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர் விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன காரணம்: "சிலர் மணிவிழா என்று 'மணி' திரட்டும் விழாவாகச் செய்து கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை."சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் ...

விடுகதைகள்..

Posted: 27 Aug 2014 06:48 AM PDT

விடுகதைகளை கண்டுபிடிக்கவும்.. 1)வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான் .பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எரிந்தன் ... அவன் யார் 2)கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை வாங்கியவனும் உபயோகிக்கவில்லை உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அவன் யார்...... 3)பூவோடு பிறந்து நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான் அவன் யார்.... 4)பிறக்கும் போது வால் உண்டு இறக்கும் போது வால் இல்லை .... 5)நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™