ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முகப்பொலிவு காணீரோ !
- சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்...
- பேசக்கூடாத மனிதர்கள்
- சம்பளத்தை அப்படியே அம்மாகிட்ட கொடுக்கணும்......!
- வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா
- விளம்பர வாசகம்!
- நிலவொளியில் பனித்துளிகள் ... நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
- மன நோய்களும் பரிகாரங்களும்
- நாய் வால் !
- கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
- “அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும்’
- தெரிஞ்சுக்கோங்க...
- நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...
- ஒரு குறும்பு !
- அபிஷேகச் சாறு பலன் !
- முன்னோர் வழிபாடு முக்கியம் !
- திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - ஈகரை நேரடி தரவிறக்கம்.
- தெரிந்து கொள்வோம்...
- கலையுலக இமயம் சிவாஜி கணேசன்
- அழுகையை ரசித்தல்
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
- நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்
- உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்
- பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (291)
- யானை ! கவிஞர் இரா .இரவி !
- அருள்மொழி - பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம்
| Posted: 14 Aug 2014 04:00 PM PDT முகப்பொலிவு காணீரோ ! முக(ப்பு) பொலிவு அதிகம் பெற , முனைப்புடன் செயல் பட்டவரே , இன்று ஈகரை உறவுகளுக்கு ஈன்றனையோ சுதந்திர தின பரிசாய் . சிறந்ததோர் பரிசென பார்ப்பவர் கூற பரந்த அளவில் புதிய பதிவுகள் அதிகம் அலசப்பட்ட தலைப்புக்கள் அதிகம் பார்த்த பதிவுகள் பதிந்தவர் கணக்கை பார்த்து, பரவசம் ஆகி , தன்வச சரக்கை பதித்திட , வழித்தடம் வகுத்தீரோ ? வாழ்த்துகள் சிவா ! ரமணியன் |
| சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்... Posted: 14 Aug 2014 02:46 PM PDT 68 வது சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள் ![]() நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்.. நண்பர்களே.. இந்நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை உணர்ந்து செயல்பட உறுதி ஏற்போம் ... பா.பார்த்தசாரதி, |
| Posted: 14 Aug 2014 01:46 PM PDT உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தங்களுடைய தேவைகளைப் பெறுவதற்கு தகுந்த மொழிகளைக் கொண்டுள்ளன. அதே போலத்தான் மனிதனும் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மொழிகளைக் கையாள்கிறான். மௌனத்தையும் மொழியாக்கியவன் மனிதன். தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவன் எந்த எல்லையையும் தாண்டத் தெரிந்தவன். வாயால் பேசித்தான் எந்தத் தேவையையும் பெற முடியும் என்பதில்லை. கண்களால் காதல் பரிமாற முடியும். உதடுகளால் காமத்தை தெரிவிக்க முடியும். பெருமூச்சால் ஏக்கத்தை வெளிப்படுத்த முடியும். ... |
| சம்பளத்தை அப்படியே அம்மாகிட்ட கொடுக்கணும்......! Posted: 14 Aug 2014 01:34 PM PDT நன்றி-முகநூல் |
| வாசகர்களின் துணையோடு சவாலில் ஜெயிப்பேன்! - ஓவியர் வேதா Posted: 14 Aug 2014 11:11 AM PDT - கல்கி குழுமத்தோடு கைகுலுக்கி பயணிக்கும் வாசகர்களுக்கு வேதா என்கிற வேதகணபதியின் ஓவியங்கள் மிகவும் பரிச்சயம். இப்போது பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்துக்கு வண்ணங்களால் புதிய அலங்காரம் செய்யத் தொடங்கிவிட்டார் வேதா. இந்த ஓவிய அனுபவம் எப்படியானது? அவர் கடந்து வந்த பாதை எத்தகையது என்பதையெல்லாம் அவரிடம் கேட்டதிலிருந்து... முதல் ஓவியம், எங்கே, எப்போது உங்களை வந்தடைந்தது? - எட்டாவது படிக்கும்போது சயன்ஸ் நோட்டில் படம் வரையாமல் போயிட்டேன். வாத்தியார் கோபப்பட்டு ஒரு அறை விட்டார். அன்று அவர் அறைந்ததில்தான் ... |
| Posted: 14 Aug 2014 10:51 AM PDT விளம்பர வாசகம்! " சமீபத்தில் ரசித்த விளம்பர் வாசகம்!" " உள்ளூர் ' ஜிம் ' ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாசகம் : ' எங்கள் கிளப் பயிற்சியில் நீங்கள் விரும்பிய உடற்கட்டு ஏற்படாவிட்டால், உங்கள் பழைய உடற்கட்டு திருப்பி தரப்படும் !' |
| Posted: 14 Aug 2014 10:16 AM PDT நிலவொளியில் பனித்துளிகள் ... நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! durainandakumar1969@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. அலைபேசி : 94446 40986 மின்னஞ்சல் : bookudaya@rediffmail.com விலை ரூபாய் 70. அன்னை இராஜேஸ்வரி பதிப்பக த்தின் சார்பாக தரமாக நேர்த்தியாக அச்சிட்டு வழங்கி உள்ளனர் .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு மிக நன்று .ஹைக்கூ கவிஞரும் , ஹைக்கூ ஆய்வாளரும் விஞ்ஞானியுமான நெல்லை சு .முத்து ... |
| Posted: 14 Aug 2014 08:52 AM PDT மன நோய்களை உணர்த்தக்கூடிய கிரக அமைப்புகள். தனி மனித வாழ்க்கை எவ்விதம் அமையப்போகிறது என்பதை கோள்கள் உணர்த்துகின்றன. ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளின் பலன்களை ஜோதிடம் உணர்த்துகிறது. வெற்றி தோல்வி, நல்லது கெட்டது, பாவம் புண்ணியம் இதுபோன்ற பலன்கள் பெரும்பாலும் மனிதனின் மனநிலையை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. உயிரைக் கொல்லுதல் பாவம் என்ற நிலையில் அனைவரும் இருந்தாலும் எந்த உயிரினம் என்பதில் வேறுபாடு உண்டு. பசுவைக் கொன்றால் பாவம் என்ற நிலை ஆட்டிற்கு இல்லை. இது தான் ஒருவருக்கொருவர் ... |
| Posted: 14 Aug 2014 07:40 AM PDT நாய் வால் ! நாயின் வாலை நிமிர்த்த ஒருவன் விரும்பினான் . வால் அளவுக்கு ஒரு இரும்புக் குழாய் செய்து, அதற்குள் நாயின் வாலை நுழைத்து, ஒரு தூணில் பிணைத்தான் . ஒரு ஆண்டுகாலம் தூணோடு சேர்த்து இணைக்கப்பட்டிருந்த அந்த வாலுக்கு விடுதலை அளிக்க பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தான். ஊருக்குப் பெரிய மனிதர் ஒருவர் விழாவிற்குத் தலைமை ஏற்றார் . அவனுடைய விசித்திர விழாவைக் காண பெருங்கூட்ட்ம் கூடியிருந்தது . இரும்புக் குழாயை உருவிப் பார்த்தபோது -- நாய் வால் வளைந்துதான் இருந்தது! அதோடு இரும்புக்குழாயும் வளைந்து ... |
| Posted: 14 Aug 2014 07:04 AM PDT குதர்க்கம் இன்றும் - நெருஞ்சி முள்ளில் நடக்கிற போது பரதன் குலத்தோர் செருப்பை பறித்துக் கொள்கிறார்கள் |
| “அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும்’ Posted: 14 Aug 2014 06:52 AM PDT - - சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் இம்மாத இறுதியில் முடிவடையும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். - அனைத்து சோதனைகளும் முடிவடைந்த பின் அக்டோபர் முதல் வாரத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - —————— |
| Posted: 14 Aug 2014 06:37 AM PDT தெரிஞ்சுக்கோங்க... * திருக்குறளை முதன் முதலில் ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றியவர்கள் இரண்டு புலவர்கல். திருத்தணி விசாகப்பெருமாளையர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர். இந்த ஒப்பற்ற தொண்டினை இவர்கள் செய்யாவிடில் திருக்குறள் அழிந்தே போயிருக்கும். * காலையில் பிரட் ஆம்லெட், மதியம் பிரைட் ராஸ்; இரவில் நூடுல்ஸ், பீட்சா, இடையிடையே பர்கர், பப்ஸ், சிப்ஸ் என இன்றைய தலைமுறை மேற்கத்திய உணவுப்பழக்கத்திற்கு மாறி வருகிறது. இவற்றை கொஞ்சமாக சாப்பிடாலே போதும், அதிக கலோரிகள் கிடைக்கும் என்ற தவறான ... |
| நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... Posted: 14 Aug 2014 06:32 AM PDT நண்பர்களே... உங்கள் பார்வைக்கு... முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன் நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள். |
| Posted: 14 Aug 2014 06:19 AM PDT ஒரு குறும்பு ! " சமீபத்தில் உங்களுக்குப் புன்னகையை வரவழைத்த ஒரு குறும்பு ?" " என் மாணவர்கலிடம், கரும்பலகையில் தினமும் ஏதாவது ஒரு பொன்மொழியை எழுதும்படி கூறியிருந்தேன். அன்றைய தினம் ஆங்கிலப்பாடத் தேர்வு நாள். வினாத்தாள்களுடன் வகுப்பறைக்குள் நுழைந்தேன். அங்கு கரும்பலகையில் என்னை வரவேற்ற பொன்மொழி... ' இன்று எனக்குத் தேர்வு. ஆனால், அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், ஒரு காகிதம் மட்டுமே எனது எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது ' -- தாமஸ் ஆல்வா எடிசன்.!" |
| Posted: 14 Aug 2014 06:10 AM PDT அபிஷேகச் சாறு பலன் ! விநாயகருக்கு பழச் சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்வதால் உண்டாகும் பலன்: கரும்புச்சாறு -- புத்திரப்பேறு. எலுமிச்சைச்சாறு -- தோஷம் விலகும். மாதுளம்பழம் -- செல்வம் கிடைக்கும். நார்த்தை பழம் -- வியாதிகள் நீங்கும். மாம்பழம் -- திருமண காரியங்கள் நடக்கும். சாத்துக்குடி -- வீரம் பெருகும். |
| Posted: 14 Aug 2014 06:09 AM PDT முன்னோர் வழிபாடு முக்கியம் ! இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று வரையறுக்கிறது. இம்மூன்று வழிபாடுகளை முறைப்படி செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும், எள்ளளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டுமொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும். மூன்று முக்கியம்: வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழிசெய்பவை மூன்று வழிபாடுகளாகும். அவை: குலகுரு வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முலமுன்னோர் வழிபாடு. தென்புலத்தார். இறந்து போன முன்னோரைப் ' பிதிரர் ' என்பர். ... |
| திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - ஈகரை நேரடி தரவிறக்கம். Posted: 14 Aug 2014 03:53 AM PDT திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் திருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் ... |
| Posted: 14 Aug 2014 03:35 AM PDT தெரிந்து கொள்வோம்... சின்னப்பிள்ளை அம்மாள்..! அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார். பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு ... |
| Posted: 14 Aug 2014 03:23 AM PDT இயற் பெயர்: விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் பிறப்பு: அக்டோபர் 1 1927 தமிழ்நாடு, சீர்காழி, இந்தியா இறப்பு: ஜூலை 21 2001 (வயது 74) சென்னை தாய்: ராஜாமணி அம்மாள் தந்தை: சின்னையா மன்றாயர் துணைவியார்: கமலா அம்மாள் குழந்தைகள்: சாந்தி, தேன்மொழி, ராம்குமார், பிரபு. அண்ணன்: ... |
| Posted: 14 Aug 2014 02:53 AM PDT அழுகையை ரசித்தல் அபத்தம் என்பர் அம்பி வளர்ந்தால், அழகு அழிந்திடும் என அழுதிடும் அழகு சிலையின் அழுகையை ரசிக்காது இருப்போமா? ரமணியன் This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 14 Aug 2014 01:47 AM PDT * . அழகை ரசிக்கும் நதி…!! * ,இரவில் குளிக்கின்றன நதியில் விளையாடி வெட்கப்படாமல் விண்மீன்கள். * நீருக்குள் தெரிகிறது கரையில் மரங்கள் பூக்களின் அழகை ரசிக்கும் நதி. * குளிர்ந்தக் காற்று நீரில் அலைகள் நதியில் மிதக்கும் படகுகள். * |
| நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும் Posted: 13 Aug 2014 11:47 PM PDT 'தி இந்து' தமிழ் நாளிதழைப் (21-01-2014) புரட்டிக் கொண்டே வந்தேன். என்னையா புரட்கிறாய் என்று அந்த நாளிதழ்க்கு என் மேல் கோபம் வந்து விட்டது போலும்! அதிலிருந்த ஒரு செய்தி என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. தலைப்பு இது தான்: 'அமைச்சர் வருமுன் குடமுழுக்கு; சிவாச்சாரியார் பணியிடை நீக்கம்!' செய்தி இது தான்: "புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றியாண்டவர் கோயிலில் திங்கள் கிழமை மக்கள் வருவதற்கு முன்னதாகவே குடமுழுக்கை நடத்தியதாக சிவாச்சாரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்." முதல் ... |
| Posted: 13 Aug 2014 09:32 PM PDT உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள் 1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்.... 2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு ... |
| பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் Posted: 13 Aug 2014 09:07 PM PDT - பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் பிறப்பு (அக்டோபர் 16, 1881 மகிபாலன் பட்டி, தமிழ்நாடு இறப்பு அக்டோபர் 24 1953 (அகவை 72) சமயம் இந்து பெற்றோர் முத்துகருப்பன், சிவப்பி ஆச்சி வாழ்க்கைத் துணை மீனாட்சி - பண்டிதமணி என அழைக்கப்பட்ட மு. கதிரேசச் செட்டியார் (அக்டோபர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) ஏழு மாதங்கள் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். - வடமொழி நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் சொன்னவர். - சிறந்த ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (291) Posted: 13 Aug 2014 08:56 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 13 Aug 2014 08:11 PM PDT - கரிய நிறம் கொண்ட வெள்ளை உள்ளம் ! கரும்பு தந்தால் விரும்பி நன்றாய் உண்ணும் ! - உருவத்தில் பெரியது கண்கள் மட்டும் சிறியன ! உணவில் சைவம் மட்டுமே என்றும் உண்ணும் ! - பூச்சிகள் செல்லாமலிருக்க காதுகளை ஆட்டும் ! பூவுலகில் அனைவரும் விரும்பிடும் அற்புத விலங்கு! - நின்றாலும் அழகு நடந்தாலும் அழகு ! நினைத்தாலும் அழகு பார்த்தாலும் அழகு ! - மதம் பிடிக்காதவரை குழந்தையாக இருக்கும் ! மதம் பிடித்தாலோ மதம் பிடித்த மனிதனாகிவிடும் ! - மிகப்பெரிய யானையை கோவில் பாகன் மிக மோசமாக ... |
| அருள்மொழி - பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் Posted: 13 Aug 2014 08:05 PM PDT – உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும். - இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
