Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


செல்போனில் ‘சார்ஜ்’ இல்லாவிட்டால் அமெரிக்காவுக்குள் கொண்டு செல்ல முடியாது

Posted: 07 Jul 2014 11:37 PM PDT

mobile-phone

mobile-phoneசார்ஜ் இல்லாத செல்போன்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க விமான நிலைய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் குண்டு தயாரிக்கும் நபர் விமான நிலைய ஸ்கேனர்களில் சிக்காத வகையில் வெடிகுண்டை தயாரித்து வருவதை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ அண்மையில் கண்டுபிடித்தது. இதையடுத்து அமெரிக்க விமான நிலையங்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சார்ஜ் போடாத செல்போன்கள், லேப்டாப்களை விமானங்களில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் செல்போன்களில் சார்ஜ் உள்ளதா என்று விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை செய்வார்கள். சார்ஜ் இல்லாத போன்கள் வெடிகுண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கிலாந்தின் ஹீத்ரூ, மான்செஸ்ட்ர் மற்றும் கேட்விக்கில் இருந்து அமெரிக்கா கிளம்பும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பு அவர்களின் செல்போனில் சார்ஜ் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளர். யாராவது செல்போனில் சார்ஜ் இல்லாமல் வைத்திருந்தால் அவர்கள் அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுவதால் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 100 விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அமெரிக்கா கடந்த வாரம் கேட்டுக் கொண்டுள்ளது. அல் கொய்தா அமைப்பின் இப்ராஹிம் அல் அசிரி தயாரித்த குண்டுகள் மெட்டல் டிடெக்டர்கள், பாடி ஸ்கேனர்களில் சிக்காத அளவுக்கு அவை கச்சிதமாக செய்யப்பட்டுள்ளதாக சிஐஏ அதிகாரிகள் நம்புகிறார்கள். ஏமனில் உள்ள அல் கொய்தா அமைப்பில் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து குடிமகன்கள் உள்ளனர். அதனால் தான் இங்கிலாந்தில் இருந்து கிளம்பும் பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு ஆகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க நாடான கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: மூதாட்டி, குழந்தை பலி!

Posted: 07 Jul 2014 11:34 PM PDT

guatemala

guatemalaகவுதமாலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர், 32 பேர் காயம் அடைந்தனர். மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இந்நிலையில் கவுதமாலா மற்றும் மெக்சிகோ எல்லை அருகே திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பியூர்டோ மாடெரோ பகுதியின் வடகிழக்கில் 2 கிமீ தொலைவில் ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கவுதமாலாவில் உள்ள சான் மார்கோஸ் பகுதி தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு மூதாட்டியும், குழந்தையும் பலியாகியுள்ளனர். கட்டடம் குலுங்கி இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை இடிபாடுகளில் சிக்கி பலியானது. நில அதிர்வால் மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது தவிர 32 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் 41 வீடுகள் கடும் சேதமும், 17 வீடுகள் மிதமான சேதமும், 22 வீடுகள் லேசான சேதமும் அடைந்துள்ளன. மேலும் 44 பள்ளிக்கூடங்கள் சேதம் அடைந்துள்ளன. சேதம் அடைந்த வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு சான் மார்கோஸில் 7.4 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது 48 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரேசில் – ஜெர்மனி இன்று மோதல்!

Posted: 07 Jul 2014 11:25 PM PDT

Brazil

Brazilபெலோ ஹரிசான்டே: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் முதலாவது அரை இறுதியில், பிரேசில் - ஜெர்மனி அணிகள் இன்று மோதுகின்றன. பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி நடந்து வரும் 20வது உலக கோப்பை கால்பந்து தொடர், அரை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக மோதின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த 16 அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. கால் இறுதிக்கு முந்தைய சுற்று மற்றும் கால் இறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இறுதிப் போட்டியில் மோதவுள்ள அணிகளை தீர்மானிப்பதற்கான அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பெலோ ஹரிசான்டே, மினெய்ரோ ஸ்டேடியத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில், பிரேசில் - ஜெர்மனி அணிகள் களமிறங்குகின்றன. நாளை நடைபெறும் 2வது அரை இறுதியில் அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. போட்டியை நடத்தும் பிரேசில் அணி ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஜெர்மனியும் 3 முறை சாம்பியன் என்பதால், இந்த அணிகள் மோதும் அரை இறுதி ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்த நெய்மர், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு விலகி உள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 2 மஞ்சள் அட்டை பெற்றதால் கேப்டன் தியாகோ சில்வாவும் ஜெர்மனி அணிக்கு எதிரான அரை இறுதியில் விளையாட முடியாதது நெருக்கடியை அதிகரித்துள்ளது. எனினும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மற்ற வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதுடன் நெய்மருக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பதாக பயிற்சியாளர் ஸ்கோலரி தெரிவித்துள்ளார். நெய்மருக்கு பதிலாக வில்லியன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தியாகோ சில்வாவுக்கு பதிலாக டேவிட் லூயிஸ் கேப்டனாக செயல்படுவார். ராமிரெஸ், பெர்னார்டு, ஹெர்னானெஸ் ஆகியோருக்கும் வாய்ப்பளிப்பது குறித்து பிரேசில் அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும், சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த ஆட்டங்களில் தோற்றதில்லை என்ற புள்ளி விவரமும் பிரேசில் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், கடந்த 24 ஆண்டுகளாக உலக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் ஜெர்மனி, 4வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் நடப்பு தொடரில் விளையாடிய 5 ஆட்டங்களில் 4 கோல் அடித்துள்ளார். தங்க காலணி விருதை பெறுவதற்கான வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவர் என்பதால், அவரது ஆட்டத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கேப்டன் பிலிப் லாம், ஹம்மெல்ஸ், குளோஸ் ஆகியோரும் பிரேசில் அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள். ஜெர்மனி கோல் கீப்பர் மேனுவல் நியூயரை எமாற்றி கோல் அடிப்பதும் பிரேசில் வீரர்களுக்கு சவாலாகவே இருக்கும். பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த அரை இறுதி ஆட்டம், ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரை இறுதியில் டி மரியா இல்லை!

Posted: 07 Jul 2014 11:20 PM PDT

Angel-di-moriya

Angel-di-moriyaபெல்ஜியம் அணியுடனான கால் இறுதியில் காயம் அடைந்த அர்ஜென்டினா அணி முன்கள வீரர் ஏஞ்சல் டி மரியா, நெதர்லாந்து அணியுடன் நாளை நடைபெற உள்ள அரை இறுதியில் விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் அணியுடன் நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், டி மரியா அடித்த அபாரமான கோல் அர்ஜென்டினா அணிக்கு வெற்றியை தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது. பிரேசில் அப்பீல் நடுவரின் தவறான கணிப்பு காரணமாகவே கேப்டன் தியாகோ சில்வாவுக்கு 2வது மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதனால், முக்கியமான அரை இறுதியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்கள் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். எனவே, தவறாக மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால் அந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு 'பிபா'வின் தொழில்நுட்பக் குழுவிடம் பிரேசில் அணி சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நெய்மரின் எலும்பு முறிவுக்கு காரணமான கொலம்பியா வீரர் ஜுவன் ஸுனிகாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் பிரேசில் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையை சேர்ந்த 41 பேரை திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா!

Posted: 07 Jul 2014 11:15 PM PDT

srilanka

srilankaசட்ட விரோதமாக நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த 41 பேரை ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படையினர், கடந்த மாத இறுதியில் தங்கள் நாட்டின் கடல் எல்லை பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். கோகோஸ் தீவுகள் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும் படியாக படகு ஒன்று வருவதை கண்டனர். இதையடுத்து, அந்தப் படகை மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலிய படையினர், அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், தஞ்சம் அடைவதற்காக ஆஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தினர். இதில், இலங்கையிலிருந்து வந்தவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகளிடமே ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து ஆஸ்திரேலியாவின் குடியுரிமை துறை அமைச்சர் மோரிசன் கூறுகையில், "இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக வந்த 41 பேர் இலங்கை அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் இலங்கையின் மட்டகளப்பு துறைமுகம் அருகே ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் இலங்கையும் ஆஸ்திரேலியாவும் நல்ல ஒத்துழைப்புடன் செயல்படுகிறது" என்றார். இந்த 41 பேரில் 37 பேர் சிங்களர்கள் மற்ற 4 பேர் தமிழர்கள். 153 இலங்கை அகதிகளைதிருப்பி அனுப்ப தடை இதற்கிடையே புதுச்சேரியிலிருந்து கடந¢த ஜூன் 13ம் தேதி புறப்பட்டுச் சென்று, நடுக்கடலில் தத்தளித்த 48 தமிழர்கள் உள்ளிட்ட 153 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா மீட்டது. இவர்களை திரும்பவும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று மனித உரிமை வழக்கறிஞர் ஜார்ஜ் நியூஹவுஸ் ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு செல்வது இலங்கையில் சட்டப்படி குற்றமாகும். அதற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இலங்கை சிறையில் இதுபோன்றவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். அதனால் இவர்களை இலங்கையிடம் ஒப்படைக்கக் கூடாது" என்று வாதிட்டார் நியூஹவுஸ். அதையடுத்து இது குறித்து தகுந்த முடிவு எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை அகதிகளை பத்திரமான இடத்தில் வைத்திருக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தன்னார்வு நிறுவனங்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு எச்சரிக்கை!

Posted: 07 Jul 2014 11:10 PM PDT

UN-Logo

UN-Logoதன்னார்வு நிறுவனங்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று செயற்படக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது செயலாளரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், குறித்த எச்சரிக்கை தொடர்பில் கவனமாக ஆராய்வதாக குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல் உட்பட்ட செயல்கள் மூலம் தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளை மீறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீசா வழங்குவது குறித்து பிரச்சினை கொள்ளத் தேவையில்லை! ஞானசார தேரர் அறிவிப்பு

Posted: 07 Jul 2014 11:06 PM PDT

galagodaatte-gnanasara

galagodaatte-gnanasaraஅண்மைக்காலத்தில் பிரித்தானிய வீசாவுக்கு தாம் விண்ணப்பிக்கவில்லை. எனவே பிரித்தானிய அரசாங்கம் தமது வீசா தொடர்பில் பிரச்சினை கொள்ளத் தேவையில்லை என்று பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அளுத்கமை சம்பவங்களுக்கு முன்னர் தாம் பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பித்திருந்த போது அது நிராகரிக்கப்பட்டது. எனவே அந்த நிராகரிப்புக்கும் அளுத்கம சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று ஞானசார தேரர் குறிப்பிட்டார். ஞானசார தேரர் பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பிக்கும் போது பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று அண்மையில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது பதிலளித்த அமைச்சர் ஒருவர், பிரித்தானிய சட்டங்களுக்கு உட்பட்டு குறித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையிலேயே ஞானசாரரின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மக்கள் பட்டினியில் வாடுகின்றனர்! பாலித தெவரப்பெரும கருத்து

Posted: 07 Jul 2014 11:01 PM PDT

palitha-thevaraperuma

palitha-thevaraperumaநாட்டு மக்கள் பட்டினியில் வாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் பேருவளையில் நட்சத்திர ஹோட்டலில் கூத்தடிக்கின்றனர். மக்கள் ஒரு வேளை சாப்பாடு இன்றி அல்லலுறுகின்றனர் அரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபா, ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபா. 500 கிராம் மரக்கறி வாங்கியவர்கள் தற்போது அதனை 250 கிராமாக குறைத்துக் கொண்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி எறியும் இந்த அரசாங்கம் மக்களுக்காக எதனையும் செய்வதில்லை. அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாக பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

திரைப்பட பள்ளி துவங்குகிறார் பாரதிராஜா!

Posted: 07 Jul 2014 03:01 AM PDT

bharathiraja

bharathirajaமூத்த இயக்குநர் பாரதிராஜா, அடுத்த தலைமுறை கலைஞர்களுக்காக, திரைப்பட பள்ளியொன்றை சென்னையில் துவங்க உள்ளார்.

பதினாறு வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, திக்..திக்..திக் மற்றும் பல கிராமத்து காவியங்களை அளித்தவர், தேசிய விருதுக்கு சொந்தக்காரரான, இயக்குநர் பாரதிராஜா.

இவர், சென்னையில் திரைப்பட பள்ளியொன்றை துவங்க உள்ளார். நேற்று முதல் அந்த பள்ளிக்கான பூர்வாங்க வேலைகள் துவங்கியுள்ளன.

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணத்தை தோண்டியெடுக்க வேண்டும் என்பதற்காக நான் திரைப்பட பள்ளி துவங்கவில்லை.

சமூகம் எனக்கு அளித்த பாடங்களை அந்த சமூகத்துக்கே திருப்பி கொடுப்பதற்காகத்தான் இந்த திரைப்பட பள்ளியை துவங்கியுள்ளேன்.

இதிலிருந்து லாபம் சம்பாதிப்பது எனது நோக்கம் கிடையாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

எம்.எஸ். பாஸ்கர் குறித்து காட்டுத் தீயாக பரவிய வதந்தி.. திரையுலகினரே பரப்பியதாக பரபரப்பு!

Posted: 07 Jul 2014 02:57 AM PDT

ms-bhaskar

ms-bhaskarநகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் குறித்து நேற்று இரவு பரபரப்பான செய்தி பரவியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பரபரப்புச் செய்தியை திரையுலகைச் சேர்ந்த சிலரே பரப்பியதால் பரபரப்பும் கூடியது. ஆனால் இது வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று இயக்குநரும், சக நகைச்சுவை நடிகருமான மனோ பாலா கூறியுள்ளார். பாஸ்கர் குறித்து ஏன் இப்படி வதந்தி பரவியது என்று தெரியவில்லை. சகலகலா வல்லவன் என்று கூறும் அளவுக்கு பல்துறை திறமையாளர் எம்.எஸ்.பாஸ்கர். ஆரம்பத்தில் இவர் டப்பிங் கலைஞராக வலம் வந்தார். பின்னர் டிவியில் நடிகராக அறிமுகமானார். பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம் முதல் வில்லன் வரை டிவியில் கலக்கியுள்ளார். ஆனால் சினிமாவில் புகுந்தபோது காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக எங்கள் அண்ணா படத்தில் வடிவேலு, பாண்டியராஜன், பிரபுதேவா ஆகியோருக்கு இணையாக இவர் உள்ளே புகுந்து காமெடியில் கலக்கியது அனைவரையும் கவர்ந்தது. பிரகாஷ் ராஜ் படங்களி்ல இவருக்கு வித்தியாசமான ரோல்களைக் கொடுத்து நடிப்புத் திறமைக்கு நல்ல வேலை கொடுப்பார். அதேபோல பல படங்களில் இவரது நடிப்பு ஏ கிளாஸ் ஆக இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு எம்.எஸ். பாஸ்கர் குறித்து பரபரப்பான தகவல் பரவியது. திரையுலகைச் சேர்ந்த சிலரே இதை வெளியிட்டதால் பரபரப்பு கூடியது. ஆனால் விசாரித்துப் பார்த்தபோது அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது இந்த வதந்திக்கு நடிகரும், இயக்குநருமான மனோபாலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எம்.எஸ். பாஸ்கர் உயிரோடுதான் இருக்கார். தயவு செய்து தவறான தகவலைப் பரப்பாதீர். அவருக்குக் குடும்பம் இருக்கிறது என்று கூறியுள்ளார் மனோபாலா.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜூலை 13ல் 60 வயதைத் தொடுகிறார் வைரமுத்து!

Posted: 07 Jul 2014 02:48 AM PDT

vairamuthu

vairamuthuகவிஞர் வைரமுத்துக்கு 60 வயதாகப் போகிறது. ஜூலை 13ம் தேதி அவர் தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். வழக்கமாக தனது பிறந்த நாளை கவிஞர்கள் நாளாக கொண்டாடுவார் வைரமுத்து. இந்த முறை கலை இலக்கியத் திருவிழாவாக கோவையில் கொண்டாடப் போகிறார். ஜூலை 13ம் தேதியன்று கோவையில் நடைபெறும் இந்த திருவிழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். கலை இலக்கிய விழாவுக்கு அப்துல் கலாம் தலைமை தாங்குகிறார். அதைத் தொடர்ந்து மணி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து பத்மபூஷண் விருது பெற்றமைக்கான பாராட்டு விழாவும் நடைபெறும். உலகத் தமிழர்களும், தமிழறிஞர்களும் இதில் பெரும் திரளாக பங்கேற்கவுள்ளனர். விழாவுக்கு முன்பு 12ம் தேதி தமிழ் சார்ந்த விழிப்புணர்வு தமிழ் நடைப் பேரணி ஒன்றும் நடத்தப்படவுள்ளதாம். அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயம் ஆக்குங்கள், தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும், நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக வேண்டும் என்பது இந்தப் பேரணியின் நோக்கங்களாம். வழக்கமாக வைரமுத்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி தவறாமல் பங்கேற்பார். இந்த முறை கோவையில் நடைபெறும் விழா என்பதால் உங்களைத் தொந்தரவு செய்யவில்லை என்று வைரமுத்து கூற, அதை கருணாநிதி ஏற்றுக் கொண்டாராம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க த்ரிஷா திட்டம்!

Posted: 07 Jul 2014 02:34 AM PDT

Trisha

Trishaத்ரிஷா இனி மரத்தை சுத்தி சுத்தி பாட்டுப் பாடி டான்ஸ் ஆடும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டாராம். த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் தமிழ் தவிர தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது கன்னட படத்திலும் நடிக்க உள்ளார். (த்ரிஷா கேலரி) இந்நிலையில் த்ரிஷா தனது கதாபாத்திரங்கள் குறித்து நினைத்து பார்த்துள்ளார். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தான் நடித்துள்ள கதாபாத்திரங்களை நினத்துப் பார்த்தால் எதுவும் வெயிட்டான கதாபாத்திரம் இல்லை என்று நினைக்கிறார் த்ரிஷா. த்ரிஷா இத்தனை ஆண்டுகளில் ஹீரோவுடன் மரத்தை சுத்தி சுத்தி பாட்டு பாடி டான்ஸ் ஆடும் கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். போனது போகட்டும் இனியாவது பெயர் சொல்லும் அளவுக்கு நல்ல வெயிட்டான கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்று த்ரிஷா முடிவு செய்துள்ளார். நயன்தாராவும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா ஜெயம் ரவியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள பூலோகம் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் பெயர் சொல்லும்படி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™