மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மேம்படுத்தப்பட்ட பிரஹ்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
- கை ரிக்ஷா இழுத்தவரை ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்த்திய கடின உழைப்பு
- காளஹஸ்தி கோவிலில் பிரசாதம் தட்டுப்பாடு: பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
- ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு மத்திய அரசுப்பதவி
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் 15–ந்தேதி கூடுகிறது
- அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மானியவிலை சிலிண்டர் ரத்தாகிறது: மத்திய அரசு பரிசீலனை
- மதுக்கடைகளில் வெங்காயம், உருளைக்கிழங்கு விற்பனை: டெல்லி அரசின் சூப்பர் திட்டம்
- குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர் கைது
- கெயில் நிறுவனம் தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்க தடை நீடிப்பு
- ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
- சில்லறை வர்த்தகத்தில் அனுமதியில்லை: இந்தியாவிலிருந்து நடையை கட்டும் பிரெஞ்சு நிறுவனம்
- குஜராத் சட்டமன்றத்தில் அம்மாநில அரசு மீது சங்கர் சிங் வகேலா சரமாரி குற்றச்சாட்டு
- 2ஜி வழக்கு: ஆ.ராசாவிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது
- ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்
- ஷரியத் கோர்ட்டுகள் செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முஸ்லிம் மத குருமார்கள் எதிர்ப்பு
- பைக் வாங்குவதற்காக மனைவியை விற்ற மோசக்கார கணவன்
- பத்தாம் வகுப்பு மாணவன் விரட்டியதால் துண்டை காணோம், துணியை காணோம் என ஓடிய திருடன்
- ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் பா.ஜனதாவில் இணைகிறார்
- கொலை வழக்கில் முன்னான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சகோதரர் குற்றவாளியாக சேர்ப்பு
- கோவா விமான நிலையத்தில் 19.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
| மேம்படுத்தப்பட்ட பிரஹ்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி Posted: 07 Jul 2014 11:10 PM PDT மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட மேம்படுத்தப்பட்ட 'பிரஹ்மோஸ்' ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. 300 கிலோ எடையுள்ள போராயுதங்களை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை முந்தைய 'பிரஹ்மோஸ்' ரக ஏவுகணைகளை காட்டிலும் வடிவமைப்பிலும், செயல்திறனிலும் மேம்படுத்தப்பட்டது ஆகும். |
| கை ரிக்ஷா இழுத்தவரை ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்த்திய கடின உழைப்பு Posted: 07 Jul 2014 10:29 PM PDT அரியானா மாநிலத்தின் யமுனா நகரில் உள்ள தம்லா கிராமத்தை சேர்ந்தவர், தரம்வீர் கம்போஜ்(51). 1986-ம் ஆண்டு தனது தந்தையுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் 23 வயது இளைஞராக வீட்டை விட்டு வெளியேறிய தரம்வீர், பழைய டெல்லிக்கு வந்து வேலை தேடி திரிந்தார். அவர் எதிர்பார்த்ததை போல் எந்த வேலையும் கிடைக்காததால் வாடகைக்கு கை ரிக்ஷா இழுத்து வயிற்றுப் பிழைப்பை ஓட்டி வந்தார். ஆட்களை ஏற்றிக் கொண்டு வியர்க்க, விறுவிறுக்க ரிக்ஷாவை இழுத்தபடி, ஜனாதிபதி |
| காளஹஸ்தி கோவிலில் பிரசாதம் தட்டுப்பாடு: பக்தர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 07 Jul 2014 10:13 PM PDT ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள வாயு லிங்கேஸ்வரர் கோவில் பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாக விளங்குகிறது. மேலும் ராகு–கேது பரிகார தலமாகவும் உள்ளது. திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காளஹஸ்தி கோவிலுக்கு செல்வது உண்டு. அந்த வகையில் திருப்பதியில் பக்தர்கள் அதிகரிக்கும் |
| ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு மத்திய அரசுப்பதவி Posted: 07 Jul 2014 10:04 PM PDT சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். அவர் தலைமை நீதிபதியாக இருந்த போது முக்கியமான வழக்குகளில் பல அதிரடி தீர்ப்புகள் கூறினார். அதில் தூக்கு கைதிகளின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி காலதாமதமாக முடிவு எடுத்ததால் அவர்களது தண்டனையை ரத்து செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும். |
| 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் 15–ந்தேதி கூடுகிறது Posted: 07 Jul 2014 09:41 PM PDT சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றம் 1990–ம் ஆண்டு ஜுன் மாதம் 2–ந்தேதி உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக நீதிபதி என்.பி.சிங், உறுப்பினர்களாக என்.எஸ்.ராவ், சுதீர் நாராயண் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்த விசாரணையின் அடிப்படையில், 1991–ஜூன் 25–ந்தேதி காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது. |
| அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மானியவிலை சிலிண்டர் ரத்தாகிறது: மத்திய அரசு பரிசீலனை Posted: 07 Jul 2014 09:22 PM PDT மத்திய அரசு தற்போது அனைத்து வருவாய் பிரிவினருக்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. 12 சிலிண்டர்களுக்கும் அதிகமாக கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்படுவோருக்கு மானியம் அல்லாத முழு விலையில் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகிறது. இதே போல் மண்எண்ணை, பெட்ரோல்– டீசல் போன்றவற்றுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு நிதிச்சுமை |
| மதுக்கடைகளில் வெங்காயம், உருளைக்கிழங்கு விற்பனை: டெல்லி அரசின் சூப்பர் திட்டம் Posted: 07 Jul 2014 08:55 PM PDT அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில், டெல்லி அரசும் 70 நடமாடும் மலிவு விலை காய்கறி வேன்கள் மூலம் டெல்லியின் 250 பகுதிகளில் நாள்தோறும் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை மொத்த விலைக்கே விற்பனை செய்து வருகிறது. |
| குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர் கைது Posted: 07 Jul 2014 08:25 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா நகர் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் 11 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை தனியாக படுத்திருந்தார். மக்கள் நடமாட்டம் ஓய்ந்த நேரத்தில் அவளை நெருங்கிய ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை போலீஸ் கான்ஸ்டபிள் விகாஸ் என்பவர் அந்த சிறுமியை கற்பழிக்க முயன்றார். தூக்கத்தில் இருந்த சிறுமி பதறிப் போய் |
| கெயில் நிறுவனம் தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்க தடை நீடிப்பு Posted: 07 Jul 2014 08:11 PM PDT மத்திய அரசின் கெயில் நிறுவனம் கேரளா, கர்நாடகா இடையே இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்திற்காக தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன. இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். |
| ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Posted: 07 Jul 2014 05:14 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறி கடந்த பிப்ரவரி 18-ந் தேதி இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு |
| சில்லறை வர்த்தகத்தில் அனுமதியில்லை: இந்தியாவிலிருந்து நடையை கட்டும் பிரெஞ்சு நிறுவனம் Posted: 07 Jul 2014 04:54 PM PDT சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதியில்லை என்ற அரசின் முடிவால் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான கேர்ரேபோர் இந்தியாவிலிருந்து |
| குஜராத் சட்டமன்றத்தில் அம்மாநில அரசு மீது சங்கர் சிங் வகேலா சரமாரி குற்றச்சாட்டு Posted: 07 Jul 2014 03:53 PM PDT குஜராத் மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சங்கர் சிங் வகேலா அம்மாநில அரசு மீது குற்றச்சாட்டுகளை புள்ளிவிவரங்களுடன் சரமாரியாக அள்ளி வீசினார். நாட்டில் கடுமையான வறட்சி நிலவும் |
| 2ஜி வழக்கு: ஆ.ராசாவிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது Posted: 07 Jul 2014 02:18 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியமாக தன்னை சேர்க்கக் கோரி ஆ.ராசா தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்கனவே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கியிருந்தார் |
| ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் Posted: 07 Jul 2014 12:16 PM PDT தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்பு 2014-15-ம் ஆண்டுக்கான முதல் ரெயில்வே பட்ஜெட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறது. மத்திய ரெயில்வே மந்திரி சதானந்தா கவுடா இந்த பட்ஜெட்டை தாக்கல் |
| ஷரியத் கோர்ட்டுகள் செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முஸ்லிம் மத குருமார்கள் எதிர்ப்பு Posted: 07 Jul 2014 12:07 PM PDT டெல்லியை சேர்ந்த வக்கீல் விஸ்வலோசன் மாதன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் கோர்ட்டுகள் நாட்டின் நீதி துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன |
| பைக் வாங்குவதற்காக மனைவியை விற்ற மோசக்கார கணவன் Posted: 07 Jul 2014 11:36 AM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் தினமும் கற்பழிப்பு சம்பவம் நடக்கின்றதென்று பார்த்தால் மத்தியப்பிரதேச மாநிலமும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டியுள்ளது. தான் பைக் வாங்கவேண்டும் என்பதற்காக கட்டிய மனைவியை 50000 ரூபாய்க்கு மோசக்கார கணவன் |
| பத்தாம் வகுப்பு மாணவன் விரட்டியதால் துண்டை காணோம், துணியை காணோம் என ஓடிய திருடன் Posted: 07 Jul 2014 10:44 AM PDT நேற்று மாலை போபால் நகரில் 8.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிக்கொண்டு ஓட முயன்ற திருடனை பத்தாம் வகுப்பு மாணவன் விரட்டிப் பிடிக்க முயன்றபோது, திருடிய பொருட்களை வீசி எறிந்த அவன் துண்டை காணோம், துணியை காணோம் |
| ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் பா.ஜனதாவில் இணைகிறார் Posted: 07 Jul 2014 09:18 AM PDT ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான ராம் மாதவ் (49) பா.ஜனதா கட்சியில் இணைய உள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பே அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்காக முறைப்படி ஒப்புதல் |
| கொலை வழக்கில் முன்னான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சகோதரர் குற்றவாளியாக சேர்ப்பு Posted: 07 Jul 2014 08:29 AM PDT ஜல்கான் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் சகோதரர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.ஜி. பாட்டீல் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். ஐகோர்ட் உத்தரவினையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. முக்கிய குற்றவாளியாக முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் சகோதரர் கஜேந்திர நாராயண் பாட்டீல், முன்னாள் எம்.எல்.ஏ. உல்காஸ் பாட்டீல் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று கொலை செய்யப்பட்ட வி.ஜி.பாட்டீலின் மனைவி வலியுறுத்தினார். ஆனால், அவர் 2007ல் |
| கோவா விமான நிலையத்தில் 19.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 07 Jul 2014 07:51 AM PDT கோவா விமான நிலையத்தில் ரூ.5.5 கோடி மதிப்பிலான 19.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கத்தார் நாட்டில் இருந்த இன்று அதிகாலை கோவா விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்தான் அதிகாரிகளையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவுக்கு இவ்வளவு தங்கம் சிக்கியுள்ளது. விமானத்தில் வந்த பயணிகளை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி, சுமை தூக்கும் ஊழியர் பிரகாஷ் மனோத்கியிடம் பேரம் பேசி ஒரு பெட்டியை கொடுப்பதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து சந்தேகமடைந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |