Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இவங்க செய்றது தந்திரமா?… பழக்க தோஷமா?

Posted: 06 Jul 2014 11:00 PM PDT

How-To-Stop-A-Baby-Crying-With-Nine-Inch-Nails

How-To-Stop-A-Baby-Crying-With-Nine-Inch-Nails

This posting includes an audio/video/photo media file: Download Now

பந்தா என்ற பெயரில் பறக்கும் இன்றைய இளைஞர்கள்!

Posted: 06 Jul 2014 10:56 PM PDT

INSANE-DEATHDEFYING-MOPED-STUNTS-by-Two-Crazy-Talented-Riders

INSANE-DEATHDEFYING-MOPED-STUNTS-by-Two-Crazy-Talented-Riders

This posting includes an audio/video/photo media file: Download Now

பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் 'மிஸ்டு கால்' விளம்பர சோதனை!

Posted: 06 Jul 2014 10:51 PM PDT

face-book

face-bookபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் அதன் யூசர்களை விளம்பரதாரர்களுடன் இணைக்க உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோரின் வசதிக்காக, புதிய பட்டன் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டனை கிளிக் செய்த உடன் பிராண்ட் விளம்பரதாரருக்கு அழைப்பு சென்றுவிடும், பின்னர் அவர்களிடமிருந்து மறு அழைப்பு பெறுவதற்காக ஒரு புதிய வகை சோதனையில் இணையதள சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மறு அழைப்பு பெறும்போது ஷாப்பிங் தள்ளுபடி பற்றிய அனைத்து தகவல்களையும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆடியோவின் மூலம் வழங்குகிறது. இதனை 'மிஸ்டு கால்' விளம்பரம் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சோதனையிட்டு பின்னர் மற்ற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் யூசர்கள் உள்ளதால், இந்த மிஸ்டு கால் விளம்பர சேவையை அறிமுகப்படுத்தி போஸ்புக் நிறவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்க பிரேசில், இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த விளம்பர சேவையை சோதனையிட உள்ளது. பேஸ்புக்கில் 84% ல் 1.28 பில்லியன் பயனர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வெளியில் இருந்து பயன்படுத்தும் பயனாளிகள் ஆவர். ஆனால் சர்வதேச சந்தைகளில் பேஸ்புக் பயன்படுத்தும் யூசர்களின் சராசரி வருவாய் அமெரிக்கா மற்றும் கனடாவை விட கணிசமாக குறைவாக உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெனால்டி ஷூட்டில் வென்றது நெதர்லாந்து!

Posted: 06 Jul 2014 10:46 PM PDT

penalti

penaltiகோஸ்டா ரிகா அணியுடனான கால் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட்டில் போராடி வென்ற நெதர்லாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. சால்வடார், பான்டி நோவா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், பலம் வாய்ந்த நெதர்லாந்து அணிக்கு ஈடு கொடுத்து விளையாடி அசத்தினர் கோஸ்டா ரிகா வீரர்கள். நெதர்லாந்து முன்கள வீரர்கள் அர்ஜென் ராபென், திர்க் குயிட், மெம்பிஸ், ராபின் வான் பெர்ஸி ஆகியோர் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தியும், கோஸ்டா ரிகாவின் பாதுகாப்பு அரணை தகர்க்க முடியாமல் திணறினர். நெதர்லாந்தின் பல முயற்சிகளை கோஸ்டா ரிகா கோல் கீப்பர் கெய்லர் நவாஸ் அபாரமாக செயல்பட்டு முறியடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியிலும் இதே நிலை நீடித்ததால் கூடுதல் நேரம் (15+15 நிமிடம்) வழங்கப்பட்டது. நெதர்லாந்தின் ஸ்னிஜ்டர், வான் பெர்ஸி கடுமையாக முயற்சித்தும் கோஸ்டா ரிகா கோல் கீப்பரை ஏமாற்றி பந்தை வலைக்குள் திணிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கோஸ்டா ரிகாவுக்கு கிடைத்த சில அருமையான வாய்ப்புகளையும், நெதர்லாந்து கோல் கீப்பர் ஜேஸ்பர் சில்லெசன் முறியடித்தார். ஆட்டத்தின் 121வது நிமிடத்தில் கோல் கீப்பர் சில்லெசனுக்கு பதிலாக மாற்று கோல் கீப்பர் டிம் குரூலை களமிறக்கினார் நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால். கூடுதல் நேரத்தின் முடிவிலும் 0-0 என சமநிலை நீடித்ததால், பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து அணியின் கோல் கீப்பராக செயல்பட்ட டிம் குரூல் அற்புதமாக 2 வாய்ப்புகளை தடுத்து அசத்தினார். கோஸ்டா ரிகா வீரர்கள் பிரையன் ரூயிஸ், மைக்கேல் உமானா ஆகியோர் அடித்த பெனால்டி வாய்ப்புகளை குரூல் பாய்ந்து தடுக்க, நெதர்லாந்து அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. கடைசி வரை சளைக்காமல் போராடியும், துரதிர்ஷ்டவசமாக பெனால்டி ஷூட் அவுட்டில் வெளியேறிய கோஸ்டா ரிகா வீரர்கள் கண்ணீர் மல்க விடை பெற்றனர். அந்த அணியின் கோல் கீப்பர் கெய்லர் நவாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜூலை 9ம் தேதி சா பாலோ மைதானத்தில் நடைபெற உள்ள 2வது அரை இறுதியில் அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

மரடோனாவை முந்துவாரா மெஸ்ஸி!

Posted: 06 Jul 2014 10:41 PM PDT

messy

messyஅர்ஜென்டினா அணியின் ஈடு இணையற்ற நட்சத்திரமாக போற்றப்படுபவர் டீகோ மரடோனா. அந்த அணி 2 முறை உலக கோப்பையை கைப்பற்றியதில் அவரது பங்கு மகத்தானது. அவருக்கு பிறகு அர்ஜென்டினா ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார் லயனல் மெஸ்ஸி. ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டங்களில் அமர்க்களப்படுத்தினாலும், தாய்நாட்டு அணிக்காக உலக கோப்பையில் மெஸ்ஸி பெரிதாக சாதிக்கவில்லையே என்ற ஆதங்கம் அவரது ரசிகர்களை வாட்டி வந்தது. இந்த நிலையில், பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை தொடரில், அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை 4 கோல் அடித்துள்ளார். தங்க காலணி விருதுக்கான போட்டியில் இருந்த முன்னணி வீரர்களில் நெய்மர் (4), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (6)ஆகியோருக்கான வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் மற்றும் மெஸ்ஸி (தலா 4) இடையே போட்டி அதிகரித்திருக்கிறது. நெதர்லாந்தின் அர்ஜென் ராபென், வான் பெர்ஸியும் ரேசில் இருக்கிறார்கள். கோல்டன் பூட் வேட்டை ஒரு பக்கம் இருந்தாலும், மரடோனா போல அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தால் மட்டுமே மெஸ்ஸியும் மகத்தான வீரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு கேப்டன் மெஸ்ஸியின் ஆட்டமும் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. அவரை கோல் அடிக்காமல் முடக்குவதற்காகவே குறைந்தபட்சம் மூன்று வீரர்கள் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கும் நிலையிலும், பந்தை அற்புதமாக சக வீரர்களுக்கு கடத்திக் கொடுத்து கோல் அடிக்க உதவி வருகிறார். 'பாலைவனத்தில் எங்களுக்கு கிடைத்த பசுஞ்சோலை மெஸ்ஸி' என்று பாராட்டுகிறார் பயிற்சியாளர் சாபெல்லா. இன்னும் இரண்டு ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தினால் மூன்றாவது முறையாக அர்ஜென்டினா உலக கோப்பையை முத்தமிடலாம் என்ற நிலையில், மெஸ்ஸியின் மந்திரம் தொடர்ந்து பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேலை தருவதாக அரபு நாட்டு இந்தியர் உறுதி!

Posted: 06 Jul 2014 10:35 PM PDT

Nurse

Nurseஈராக்கில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில், தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி, பின்னர் பத்திரமாக நாடு திரும்பிய 46 இந்திய நர்ஸ்களுக்கும் வேலை தருவதாக ஐக்கிய அரசு எமிரேட்டை சேர்ந்த பிரபல இந்திய தொழிலதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் பேசியுள்ளதாக துபாய், எகிப்து மற்றும் இந்தியாவில் மருத்துவமனைகளை நடத்திவரும் என்.எம்.சி. ஹெல்த்கேர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான டாக்டர் பி.ஆர். ஷெட்டி தெரிவித்தார். கடன் வாங்கி ஈராக் சென்று, போரால் பாதிக்கப்பட்ட, கேரளத்தைச் சேர்ந்த 45 நர்ஸ்கள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா ஆகியோருக்கு, அவர்கள் விரும்பினால் தகுந்த இடத்தில் வேலையை ஏற்பாடு செய்வதாக சாண்டியிடம் ஷெட்டி கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரமாண்ட மாலுடன் முழு ஏசி நகரம்!

Posted: 06 Jul 2014 10:32 PM PDT

AC-City

AC-Cityஉலகின் மிகப்பெரிய வணிக மையம், கேளிக்கை பூங்கா, ஹோட்டல், மருத்துவமனைகள், தியேட்டர்களை உள்ளடக்கிய முற்றிலும் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட நகரம் உருவாக்கப்படும் என துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அறிவித்துள்ளார். துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா 163 மாடிகளுடன் 828 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 37 மாடிகளுடன் 192 மீட்டர் உயரம் கொண்ட துபாய் மால் உலகின் முக்கிய வணிக வளாகங்களுள் ஒன்றாக உள்ளது. மேலும், நவீன தொழில் நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வகையில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உலகின் மிகப்பெரும் வணிக மையத்துடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட நகரம் அமைக்கப்படும் என துபாய் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் "உலகின் மிகப்பெரிய கேளிக்கை பூங்காவை உள்ளடக்கிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரத்தை நாங்கள் அமைக்க உள்ளோம். 7 கி.மீ நீளம் கொண்ட இந்த நகரத்தில், 44 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். அதன் மேல் பரப்பு கண்ணாடிகளால் அமைக்கப்படும். கோடை காலங்களில் அந்த நகரம் முற்றிலும் குளிரூட்டப்படும். குளிர்காலங்களில் கண்ணாடி திறந்து வைக்கப்படும். அனைத்து காலங்களிலும் பல்வேறு நாட்டு மக்களை ஈர்க்கும் சுற்றுலா தலமாக விளங்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதற்காகத்தான் நாங்கள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரத்தை கோடை காலத்திற்காக அமைக்க உள்ளோம். மால் ஆஃப் த வேர்ல்டு என்ற பெயரில் நாங்கள் அமைக்க உள்ள வணிக வளாகத்திற்கு, ஆண்டுக்கு 18 கோடி பார்வையாளர்கள் வருவார்கள் என நம்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரும் வர்த்தக கண்காட்சியை 2020ம் ஆண்டு துபாய் நடத்த உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிந்தரின் குடும்பத்திற்குள் நெருக்கடி! தயாராகுங்கள் தமிழர்களே: மனோ கணேசன் அவசர அழைப்பு

Posted: 06 Jul 2014 10:13 PM PDT

Mana-Maginta

Mana-Magintaதமிழர்களை சமாதானத்திற்கு அழைக்கும் மகிந்த, சிங்கள மக்களிடம் நாட்டை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார். அவரது இரட்டை வேடம் என்பதை அறிந்த உலகநாடுகளின் அழுத்தங்களினால் பாரிய நெருக்கடிக்குள் மகிந்தரின் ஆட்சி தள்ளப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் அழைப்பு மணி மற்றும் தென்னாபிரிக்காவின் வரவின் சிக்கலில் இலங்கை அரசு, சர்வதேச விசாரணைகளில் சாட்சியாளர்களின் பாதுகாப்பை சர்வதேசம் உறுதிப்படுத்தும் வட்ட மேசை நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒருதலைப்பட்சமான விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! தலைவர் பிரதிபா மஹானமஹேவா

Posted: 06 Jul 2014 10:06 PM PDT

prathiba-mahanamahewa

prathiba-mahanamahewaஒருதலைபட்சமான விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானமஹேவா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு சவால் விடுக்க முடியும். இந்த விசாரணைகளின் முதன்மை சாட்சியாளர்களாக விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்த 285,000 தமிழ் மக்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகளில் அரசாங்கம் பங்கேற்காமை வரவேற்கப்பட வேண்டியது. நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள ஒரு சிலருக்கு மட்டுமே இந்த விசாரணைகளில் பங்கேற்க முடிகின்றது. இவ்வாறு சாட்சியமளிப்போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே. எந்தவொரு விசாரணைகளினதும் வெற்றி நேரில் கண்ட சாட்சியாளர்களின் பங்களிப்பின் ஊடாகவே உறுதியாகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கைக்கு எதிரான குற்றம் சுமத்தும் நோக்கிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன. நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பலர் ஐக்கிய நாடுகள் அதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்களை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மஹானமஹேவா தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விசாரணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்!

Posted: 06 Jul 2014 10:00 PM PDT

pak-srilanka-flag

pak-srilanka-flagஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தங்களது நாடுகளில் இடமளிக்க முடியாதென தெற்காசிய நாடுகள் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் தங்களை அனுமதிக்காவிடின் தெற்காசிய நாடுகளுக்குச் சாட்சியாளர்களை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணைக் குழுவின் நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜாஹங்கீர் அவரது சொந்த நாடான பாகிஸ்தான் அரசிடமும் இந்தக் கோரிக்கைகைய விடுத்திருந்தார். ஆனால் அந்த நாடு கூட அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, இறுதிக்கட்ட போரின் போது பங்கேற்ற சிறிலங்காவின் இராணுவ உயர் அதிகாரிகளிடமும் விசாரணைகள் மேற்கொள்வதென விசாரணைக் குழு மேற்கொண்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கின்றது! அமைச்சர் ஜயரட்ன கருத்து

Posted: 06 Jul 2014 09:57 PM PDT

USA-Srilanka

USA-Srilankaஇலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக தாவரவியல் பூங்கா அமைச்சர் ஜயரட்ன ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்கா மேற்குலக நாடுகளுடன் இணைந்து கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க பல்வேறு சதித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மக்களை பயன்படுத்தி சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கப்படும் ஒர் தருணம் என்பதனை நீங்கள் மறந்து விடக் கூடாது. அண்மையில் அமெரிக்கத் தூதுவர் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை பிரசுரித்திருந்தார். வாக்களிப்பது எப்படி என்பது குறித்து மக்களை தெளிவுபடுத்த அரச சார்பற்ற நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்காக 2000 லட்ச ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கு வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அல்ல. இந்த அரசாங்கத்தின் வாக்காளர் பலத்தை மலினப்படுத்துவதே இந்த செயறதிட்டத்தின் உள்நோக்கமாகும் என ஜயரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

துர்கம் பிரதேசப் போலிசார் விடுக்கும் எச்சரிக்கை!

Posted: 06 Jul 2014 09:51 PM PDT

hydro

hydroரொறன்ரோவில் – Durham என அழைக்கப்படும் பிரதேசத்தில் பல வீட்டுரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகதத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அவர்கள் ஹைட்டோவிற்கு கிட்டத்தட்ட 1000 டொலர்கள் வரையில் செலுத்தவேண்டியிருக்கின்றது எனவும் அதற்கான பணத்தை அனுப்பாவிடின் அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது என அவர்கள் பயமுறுத்தப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் வீட்டடைமையாளர்கள் மட்டுமல்ல தொழில் உரிமையாளர்களுக்கும் இவ்வாறான பயமுறுத்தல்கள் தொலைபேசி மூலகமாகக் கிடைத்திருக்கின்றன எனவும் போலிசார் தெரிவித்திருக்கின்றனர். Durham பிரதேசப் போலிசார் இவ்வாறன பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தாம் அவற்றைப் பரிசீலனை செய்துவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். தொலைபேசி மூலமாக மிரட்டுபவர்கள் பொதுமக்களின் credit card or prepaid credit card போன்றவற்றைப் பாவித்து உடனடியாக குறிப்பிட்ட பணத்தைச் செலுத்தும்படியும் அவ்வாறு அவர்கள் செய்யாவிடின் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்பம் எனப் பயமுறத்தி வருகின்றார்கள் எனத் தெரிவித்திருக்கின்றார்கள். குறிப்பிட்ட இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுவதற்கான வகையில் தமது தொலைபேசியில் answering machine and toll-free numberபோன்ற நடைமுறைகளை அமைத்திருக்கின்றார்கள் எனப் போலிசார் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறான பயமுறுத்தும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால் பணத்தினைச் செலுத்துவதற்கு நடவடிக்கை செய்வதற்கு முன்பாக கடந்த மாதத்தின் னைப் பரிசீலனை செய்யும்படி மக்கள் கேட்கப்படுகின்றார்கள். அத்துடன் 1-888-579 FREE யுடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவிக்கும்படியும் போலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™