Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சுவர் இடிந்து பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: சந்திரபாபு நாயுடு

Posted: 06 Jul 2014 11:05 PM PDT

செங்குன்றம் அருகே எடப்பாளையம் கிராமத்தில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியானார்கள் இவர்களில் 9 பேர் ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள். விபத்தை அறிந்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சியடைந்தார். சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிடுமாறு நெல்லூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆந்திராவில் இருந்து அதிகாரிகள் குழு விபத்து நடந்த எடப்பாளையம் கிராமத்துக்கு விரைந்து வந்தனர்.

மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை

Posted: 06 Jul 2014 11:03 PM PDT

மலையாள படவுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மஞ்சு வாரியர். இவர் புகழின் உச்சியில் இருந்தபோது, பிரபல நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் சினிமாவில் நடிப்பதை கைவிட்டு விட்டு குடும்ப வாழ்க்கையில் தீவிரம் காட்டினார். ஆனால் அவரது மண வாழ்க்கையில் நீண்ட நாள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. கணவர்

திருப்பதி கோவிலில் பாதுகாப்பை கோட்டை விடும் கண்காணிப்பு அதிகாரிகள்

Posted: 06 Jul 2014 10:37 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் திருப்பதியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால், கோவில் பாதுகாப்பை கண்காணிப்பு அதிகாரிகள் அடிக்கடி கோட்டை விடுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். நேற்று ''ஆக்டோபஸ் படை'' அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இது அம்பலமானது.

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 கல்லூரி மாணவர்கள் கைது

Posted: 06 Jul 2014 10:33 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள பல்வாக்கேரி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக 23 வயதான ஆசிரியை ஒருவர் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசி வந்தார். மொசித் என்ற கல்லூரி மாணவன் ஆசிரியையை ஏமாற்றி யாரும் இல்லாத வீட்டுக்கு அழைத்து சென்றான். அங்கு அவரது வாயை மூடி கற்பழித்தான்.

கேரள மாநிலத்தில் கடத்தல் தங்கத்தை பதுக்கிய 2 வாலிபர்கள் கொலை

Posted: 06 Jul 2014 10:26 PM PDT

அரபு நாடுகளான துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, குவைத் ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விமான நிலையங்களில் அதிகாரிகள் உஷாராக இருந்தாலும், கடத்தல்காரர்கள் தினம், தினம் புதுப்புது யுக்திகளை கையாண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவைகளில் பல கடத்தல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டாலும், தங்க கடத்தல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அலுவலகத்தை ரூ.10 கோடியில் மாற்றி அமைக்கிறார் சந்திரபாபு நாயுடு

Posted: 06 Jul 2014 10:14 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே 9 ஆண்டுகள் முதல்–மந்திரியாக இருந்து உள்ளார். ஐதராபாத் நகர வளர்ச்சியில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தியதன் மூலம் ''ஹைடெக் முதல்வர்'' என்று கூட அழைக்கப்பட்டார். மூடப்பழக்கங்களில் கூட நம்பிக்கையில்லாதவர். 10 ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த பின்பு இப்போது மீண்டும் முதல்– மந்திரியாக பதவி ஏற்று இருக்கும் அவரது செயல்பாடு முற்றிலும் மாறுபட்டு விட்டது. வாஸ்து மீது தீவிர நம்பிக்கை உள்ளவராக மாறி விட்டார். ஆஸ்தான ஜோதிடரான ஒருவரை வைத்து இருக்கும் சந்திரபாபு நாயுடு, ஜோதிடர் சொல்வதை அடிபிறழாமல் செய்கிறார் என அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட ரூ.40 கோடி லஞ்சமாக கேட்ட பிரதமரின் மகன்

Posted: 06 Jul 2014 08:57 PM PDT

சட்டமன்ற மேலவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு 40 கோடி ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று அப்பதவிக்கு போட்டியிட விரும்பிய நபரிடம் கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி பேரம் பேசிய ஆடியோ 'சி.டி.' ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள நான்கு இடங்களை நிரப்பும் வகையில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக சமீபத்தில்

குஜராத் கவர்னர் கம்லா பெனிவால் மாற்றம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: காங்கிரஸ்

Posted: 06 Jul 2014 05:17 PM PDT

குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது அவருடன் மோதலில் ஈடுபட்ட அம்மாநில ஆளுநர் கம்லா பெனிவால் மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 87 வயதாகும் பெனிவாலின் பதவிக்காலம்

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதை சபாநாயகர் முடிவு செய்வார்: வெங்கையா நாயுடு

Posted: 06 Jul 2014 04:41 PM PDT

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அந்த கட்சி, இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்காக போராடி வருகிறது

ஈராக்கில் இருந்து மேலும் 2,200 இந்தியர்கள் நாடு திரும்ப விருப்பம்

Posted: 06 Jul 2014 04:12 PM PDT

ஈராக்கில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து உள்ளது

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

Posted: 06 Jul 2014 03:00 PM PDT

16-வது பாராளுமன்றத்தின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 14-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 28 அமர்வுகளில் 168 மணி நேரம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும்

சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலி: சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி

Posted: 06 Jul 2014 02:47 PM PDT

சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த 28-ந் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆந்திராவைச் சேர்ந்த 37 தொழிலாளர்கள் உள்பட 61 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள், நேற்று திருவள்ளூர் மாவட்டம்

கிராமத்தில் 32 ரூபாய்-நகரத்தில் 47 ரூபாய் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல: ரங்கராஜன்

Posted: 06 Jul 2014 02:39 PM PDT

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தொடர்பாக சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரையில் கோளாறு உள்ளதாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனவே இது குறித்து விசாரிக்க முன்னாள் பொதுக்குழு ஆலோசனைக்குழு

மும்பையில் கடலில் மூழ்கி ஆறு பேர் பலி

Posted: 06 Jul 2014 12:39 PM PDT

மும்பையிலுள்ள செம்பூரிலிருந்து சுற்றுலாவிற்கு வந்த 15 பேரில் ஆறு பேர் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. சுற்றுலா வந்த 15 பேரில் 12 பேர் மட்டும் கடலில் குளிக்க சென்றுள்ளனர். அதில் 12 பேர் கடலில் மூழ்க நேரிட்டது

மோசமான நிலையில் நாட்டின் பொருளாதாரம்: ராஜ்நாத்சிங் பேட்டி

Posted: 06 Jul 2014 12:31 PM PDT

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கேள்வி

இந்தியாவில் உள்ள 10 பேரில் 3 பேர் ஏழைகள்: ரங்கராஜன் குழு

Posted: 06 Jul 2014 11:29 AM PDT

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தொடர்பாக சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரையில் கோளாறு உள்ளதாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனவே இது குறித்து விசாரிக்க முன்னாள் பொதுக்குழு ஆலோசனைக்குழு

மும்பையில் வசிக்கும் தாவூத் இப்ராகிம் சகோதரி மாரடைப்பால் மரணம்

Posted: 06 Jul 2014 10:15 AM PDT

மும்பையில் வசித்து வந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசினா பார்க்கர் மாரடைப்பால் இன்று மாலை மரணமடைந்தார். தெற்கு மும்பையில் வசித்து வந்த அவருக்கு தற்போது 55 வயதாகிறது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து

குஜராத் கவர்னர் கம்லா பெனிவால் மிசோரமிற்கு மாற்றம்

Posted: 06 Jul 2014 09:35 AM PDT

குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது அவருடன் மோதலில் ஈடுபட்ட அம்மாநில ஆளுநர் கம்லா பெனிவால் மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 87 வயதாகும் பெனிவாலின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. புதிய ஆளநர் நியமிக்கப்படும் வரை ராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ள மார்கிரெட் ஆல்வா குஜராத் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக சேர்த்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மிசோரம் மாநில ஆளுநராக உள்ள வக்கோம் புருஷோத்தம்மன் நாகாலாந்து மாநில ஆளுநராக

பிரதமர் மோடி இரட்டை வேடம் போடுகிறார்: சச்சின் பைலட் குற்றச்சாட்டு

Posted: 06 Jul 2014 07:34 AM PDT

உணவுப் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சச்சின் பைலட் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- பாரதீய ஜனதா கட்சி தனி மெஜாரிட்டியில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், 56 இஞ்ச் மார்பு கொண்ட பிரதமரால் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி விலைவாசியை குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பிரதமரும் அவருடைய கட்சியும் முன்பு எதிர்கட்சியாக இருந்தபோது கூறிய கருத்திலிருந்து தற்போது மாற்றி பேசுகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் டீச்சரை கற்பழித்த மாணவன்: வீடியோ எடுத்து மிரட்டல்

Posted: 06 Jul 2014 06:36 AM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 23 வயது இளம்பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். பல்வாகேரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை இரவு டீயூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மூன்று பேர் அவரை கடத்தி சென்று கற்பழித்துள்ளனர். அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™