Tamil Star |
- எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!
- மதிமயங்கச் செய்யும் இப்படியொரு ஓவியங்களை யாராவது மிஸ் பண்ணுவாங்களா?
- புடவையில் பெண்ணின் அசத்தலான டப்பாங்குத்து!
- சூப்பர்மேனாக மாறிய அமெரிக்க காவல்துறை அதிகாரி!
- குத்துப் பாட்டுகளைப் பார்த்தால் எனக்கே ஆடத் தோன்றுகிறது! கே.பாலச்சந்தர் பேச்சு
- ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடிய அனிருத்!
- குடும்பத்தாரை பழிவாங்கத் துடிக்கும் ஷகீலா!
- விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்!
| எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்! Posted: 03 Jul 2014 07:59 AM PDT
உடல் எடை குறைப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது. அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது. இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? நெல்லிக்காயுடன் பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. நெல்லிக்காயை அப்படியே உண்ணலாம் அல்லது நசுக்கி ஜூஸாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸில் பல பயன்கள் அடங்கியுள்ளது. இதுப்போக முடியை திடமாக்க, சருமத்தின் அமைப்பை மேம்படுத்த மற்றும் சருமத்தில் ஒளி வீசிடவும் கூட அவை உதவி புரிகிறது. ஆனாலும் கூட இப்போது நெல்லிக்காய் ஜூஸால் ஏற்படும் உடல் எடை குறைப்பு பயனைப் பற்றி மட்டுமே பார்க்கப் போகிறோம். உடல் எடையை குறைக்க உதவும் மாதுளைப்பழம்! உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். உடல் எடை குறைப்பில் எப்படி இது உதவி புரிகிறது என்பதை இப்போது பார்க்கலாமா? உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவும் என பல ஆய்வுகள் நம்ப வைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடலின் மெட்டபாலிச வீதம் குறைவாக இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். மெட்டபாலிச மேம்பாட்டினால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அதனால் உடலின் மெட்டபாலிச வீதத்தை அதிகரிக்க உதவுகிறது நெல்லிக்காய் ஜூஸ். உடலின் புரதம் கூட்டுணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது. எவ்வளவு புரதம் உடைகிறதோ, அந்தளவிற்கு கூடுதல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலின் மெட்டபாலிச வீதம் அதிகரிக்கிறது. அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் உதவுகிறது. உடல் எடை அதிகரிப்பதற்கு நச்சுத்தன்மையின் தேக்கமும் ஒரு காரணமாகும். அதனால் உடல் எடையை பராமரிப்பதற்கு குறிப்பிட்ட இடைவேளையில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஒரு முகாமை உங்கள் உடல் நடத்த வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும் குணங்களை நெல்லிக்காய் ஜூஸ் கொண்டிருக்கிறது. இவ்வகையான நச்சுக்கள் உங்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். மேலும் ஒட்டுமொத்த உடல் எடையும் அதிகரிக்கும். அதனால் உடல் எடையை அதிகரிக்க செய்யும் இவ்வகையான நச்சுக்களை நீக்க நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் பயன்படுகிறது. சீரான முறையில் நெல்லிக்காய் ஜூஸை பருகி வந்தால், உங்கள் உடலின் செரிமான வீதம் சீராக இருக்கும். அதே போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக்களை நீக்கி உடல் எடையை குறைக்க செய்யும். நெல்லிக்காய் என்பது புத்துணர்ச்சி அளிப்பதில் சக்தி வாய்ந்ததாகும். அதாவது உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் தேவையான நேரத்தில் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கவும் இது உதவும். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸை பருகினால், உடலமைப்பின் ஆற்றல் சக்தி மேம்படும். எந்தளவுக்கு ஆற்றல் சக்தியுடன் உங்கள் உடல் உள்ளதோ, அவ்வளவு வேகத்தில் உடல் எடை குறையும். ஈடுப்பாடின்மை உடல் எடை அதிகரிப்பை உண்டாக்கி விடும். அதனால் நெல்லிக்காய் ஜூஸ் பருகி உடலை எப்போதும் முழு ஆற்றல் திறனுடன் வைத்திருங்கள். நெல்லிக்காயை கொண்டு உடல் எடை குறைப்பதால் கிடைக்கும் பயனில் இதுவும் ஒன்றாகும். நெல்லிக்காய் ஜூஸ் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும். இது போக பல உடல்நல பயன்களையும் அது கொண்டுள்ளது. இவைகளால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்கும். உடல் எடை குறிப்பும் அதில் ஒரு அங்கமாகும். கனிமங்கள், வைட்டமின்கள் (குறிப்பாக வைட்டமின் சி) மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை நெல்லிக்காய் ஜூஸ் அளிப்பதால், உடல் திடமாக கட்டுக்கோப்புடன் விளங்கும். அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸை சீராக குடிக்க வேண்டும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மதிமயங்கச் செய்யும் இப்படியொரு ஓவியங்களை யாராவது மிஸ் பண்ணுவாங்களா? Posted: 03 Jul 2014 07:48 AM PDT |
| புடவையில் பெண்ணின் அசத்தலான டப்பாங்குத்து! Posted: 03 Jul 2014 07:45 AM PDT |
| சூப்பர்மேனாக மாறிய அமெரிக்க காவல்துறை அதிகாரி! Posted: 03 Jul 2014 04:16 AM PDT
அமெரிக்காவில் உள்ள Minnesota என்ற பகுதியை சேர்ந்த 52 வயது Zachary Hill என்பவர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று சாலையில் தனது கார் சென்று கொண்டிருந்தபோது தனக்கு முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததையும், அதன் உள்ளே டிரைவர் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்ததையும் பார்த்தார். உடனே தன்னுடைய காரை நிறுத்திவிட்டு எரியும் கார் அருகே வந்த Zachary Hill, காரின் கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு திறக்கவில்லை. உடனே எவ்வித ஆயுதமும் இல்லாமல் காரின் கதவை தனது கையாலே ஒரு பக்கமாக வளைத்து நெளித்தார். மிகவும் உறுதியான அந்த கதவை அவர் எப்படி தனது கையாலேயே வளைத்தார் என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம். சூப்பர்மேன் படங்களில் மட்டுமே வரும் இப்படி ஒரு காட்சியை அந்த பகுதி மக்கள் நேரடியாக பார்த்தனர். அதன்பின்னர் காரினுள் சிக்கியிருந்த Bob Renning என்பவரை வெளியே இழுத்து காப்பாற்றினார். மிகவும் தைரியமாக எரியும் காரினுள் இருந்த டிரைவரின் உயிரை காப்பாற்றிய காவல்துறை அதிகாரியை அந்த பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். அந்த பகுதியின் ஹீரோவாக அவர் ஒரே நாளில் மாறிவிட்டார். அவரை தற்போது அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் சூப்பர்மேன் என்றே அழைக்கின்றனர். காரினுள் சிக்கியிருந்த டிரைவரை மீட்க உண்மையான சூப்பர்மேன் போல செயல்பட்டதால் அவருடைய செயலை நினைத்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| குத்துப் பாட்டுகளைப் பார்த்தால் எனக்கே ஆடத் தோன்றுகிறது! கே.பாலச்சந்தர் பேச்சு Posted: 03 Jul 2014 04:11 AM PDT
தற்கால சினிமாவில் குத்து பாடல்கள் தவிர்க்க முடியாததாகி விட்டதாகத் தெரிவித்துள்ள இயக்குநர் கே.பாலச்சந்தர், விரைவில் ரிலீசாக உள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் வரும் குத்துப் பாடல்களைப் பார்த்தால் தனக்கே ஆடத் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார். பரத்-நந்திதா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி.' இந்த படத்தை இயக்குநர் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது. டிரைலரை தொழில் அதிபர் நல்லி குப்புசாமி வெளியிட, டைரக்டர் சரண் பெற்றுக்கொண்டார். அதேபோல், பாடல்களை டைரக்டர் கே.பாலசந்தர் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார். பொதுவாக, குத்து பாடல்கள் எனக்கு பிடிக்காது. ஆனால், ஜனங்கள் ரசிக்கிறார்கள். இந்த படத்தில் 3 குத்து பாடல்கள் உள்ளன. அதைப்பார்த்தபோது, நானே ஆடலாம் போல் தோன்றியது. தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் இந்தக்கால தலைமுறைக்கு தகுந்த மாதிரி படம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால், சினிமாவில் குத்து பாடல்கள் தவிர்க்க முடியாததாகி விட்டது. தயாரிப்பாளர்களில் ஆர்.பி.சவுத்ரி, தீவிரமான சினிமா பித்தர். அவர் 86 படங்களை தயாரித்து இருக்கிறார். 86 டைரக்டர்களை அவர் அறிமுகம் செய்து இருக்கிறார். இது, தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பெரிய உந்து சக்தி தெரியுமா? தயாரிப்பாளர்கள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். திரையுலகுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறோம்? என்று எல்லா தயாரிப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்'' என இவ்வாறு அவர் உரையாற்றினார். விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் பரத், சிபிராஜ், பிருத்வி, தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, கருணாகரன், நடிகை நந்திதா, டைரக்டர் சரண், பட அதிபர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.எஸ்.சீனிவாசன் ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக பட அதிபர் புஷ்பா கந்தசாமி வரவேற்று பேசினார். டைரக்டர் எல்.ஜி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடிய அனிருத்! Posted: 03 Jul 2014 04:05 AM PDT
இயக்குநர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்துக்காக, ஏ.ஆர். ரகுமான் இசையில், இளம் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்துள்ளார். இளைய இசையமைப்பாளர்களில் யுவன்ஷங்கர் ராஜா, தமன், விஜய் ஆண்டனி, அனிருத், இமான் ஆகியோர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகின்றனர். அந்த வகையில், டி.இமான் இசையில் என்னமோ ஏதோ படத்திலும், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வடகறி படத்திலும் அனிருத் பாடியிருந்தார் அதைத் தொடர்ந்து இப்போது, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்திற்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அனிருத். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்தின் வேலைகள், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விக்ரம், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். தனக்கு ஒரு பாடல் பாடி தர வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான், சொன்னதும், கத்தி பட வேலைகளை அப்படியே போட்டு விட்டு, ரஹ்மானின் இசையில் ஓடோடிச்சென்று பாடிக்கொடுத்திருக்கிறார் அனிருத். இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமானோடு எடுத்துக் கொண்டு புகைப்படத்தை பதிவேற்றி, அவர் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் ஷங்கரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும், ஷங்கர் இதைத் தெரிவித்துள்ளார். என் மனம்கவர்ந்த இசையமைப்பாளரின் இசையில் பாடியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று தனது மனநிலையை பகிர்ந்து கொண்டுள்ளார் அனிருத். ஷங்கர் சாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குடும்பத்தாரை பழிவாங்கத் துடிக்கும் ஷகீலா! Posted: 03 Jul 2014 04:01 AM PDT
அடுத்த பிறவியிலும் இதே குடும்பத்தில் பிறந்து அவர்களை பழிவாங்க வேண்டும் என்று கவர்ச்சி நடிகை ஷகீலா தெரிவித்துள்ளாராம். மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் கவர்ச்சி நடிகை ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத்தில் ஷகீலா படங்கள் ரிலீஸாகிறது என்றால் அந்த நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட பெரிய நடிகர்களே தயங்கினர். தற்போது கிடைக்கும் வேடங்களில் நடித்து வரும் அவர் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். கன்னட நடிகர் சுதீப் பிக் பாஸ் 2 என்ற ரியாலிட்டி ஷோவை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் ஷகீலா கலந்து கொண்டுள்ளார். மீண்டும் பிறக்க முடிந்தால் நான் மறுபடியும் ஷகீலாவாகவே பிறக்க விரும்புகிறேன். அதுவும் மீண்டும் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன் என்று ஷகீலா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். ஏன் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் குடும்பத்தாரால் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். அவர்கள் என்னை படுத்தியபாட்டுக்கு அவர்களை பழிவாங்க போகிறேன் என்றார் ஷகீலா. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது அதை பார்த்து ஷகீலாவின் குடும்பத்தார் என்ன செய்யப் போகிறார்களோ?This posting includes an audio/video/photo media file: Download Now |
| விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்! Posted: 03 Jul 2014 03:52 AM PDT
சினிமாவில் நடிக்க வரும் அனைத்து நடிகர்களும் வித்தியாசமான கதையிலும், கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்று கூறிவருவார்கள். அப்படி சொல்பவர்கள் எல்லாம் தைரியமாக செய்தவில்லை. ஆனால் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வெற்றி பெற்று ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வரிசையில் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் எடுத்திருக்கும் வேடத்தை பார்க்கும் போது என்ன இதுவா விஜய் சேதுபதி என்று பகீரென்று ஆகிறது. 55 வயதான நோயாளியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. தான் ஒரு ஹீரோ என்பதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி.இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பு வேலையோடு, வசனமும் எழுதுகிறாராம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







