Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அவதூறு பேச்சு: துவாரக சங்கராச்சாரியார் மீது சாய்பாபா பக்தர்கள் வழக்கு

Posted: 03 Jul 2014 10:54 PM PDT

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடியில் இறைவனின் அவதாரமாக, கண்கண்ட தெய்வமாக வீற்றிருந்து சாய்பாபா அருள்பாலித்து வருகிறார். அவர் யார்? அவரது பெற்றோர்கள் யார்? அவர் எங்கிருந்து சீரடிக்கு வந்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சீரடியில் இந்துக்கள், முஸ்லிம்களின் பணி விடைபெற்று வாழ்ந்த அவர் 1918–ம் ஆண்டு சமாதி ஆனார். அவர் சமாதி ஆலயத்தில் தினமும்

காஷ்மீரில் புதிய ரெயில் வழி தடத்தை மோடி தொடங்கிவைத்தார்

Posted: 03 Jul 2014 10:39 PM PDT

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு இன்று முதன் முதலாக காஷ்மீர் மாநிலத்துக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார். தனி ராணுவ விமானத்தில் சென்ற அவரை விமான நிலையத்தில் காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். காஷ்மீரில் ஜம்மு மாவட்டத்தில் கத்ரா–உதம்பூர் இடையே ரூ.1150 கோடி செலவில் புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல்: 74 நகராட்சிகளை தெலுங்குதேசம் கட்சி கைப்பற்றியது

Posted: 03 Jul 2014 10:17 PM PDT

ஆந்திராவில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதிலும் தெலுங்குதேசம் கட்சி அதிக இடங்களை

திருப்பதி கோவிலில் பாதுகாப்பு: ஆள் இல்லாத விமானம் மூலம் கண்காணிப்பு

Posted: 03 Jul 2014 10:16 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் திருமலையில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருமலை வளாகம் முழுவதையும் ஆள் இல்லா விமானம்

வகுப்பறையில் உல்லாசமாக இருந்த ஆசிரியர்: கல்வி அதிகாரியிடம் புகார்

Posted: 03 Jul 2014 10:06 PM PDT

சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா மண்டலம் சங்கசமுத்திரம் பஞ்சாயத்து மாமில்லவாரி பள்ளி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் 120 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரெட்டியப்பா (வயது 38). அவர், நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பறைக்கு எதிரே உள்ள வராண்டாவில் மாணவ–மாணவிகளை அமர வைத்து தெலுங்கு மொழிப்பாடம்

மோசமான வரவேற்பை பெற்றது இந்தியாவில் தான்: ஏர் ஏசியா

Posted: 03 Jul 2014 07:53 PM PDT

மலேசியாவின் குறைந்த கட்டண சேவை நிறுவனமான ஏர் ஏசியா கடந்த மாதம் இந்தியாவில் தனது விமான சேவையைத் தொடங்கியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கும், கோவாவிற்கும் இரண்டு விமான சேவைகள் இந்நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 13 ஆண்டுகளுக்குமுன் 2,00,000 பயணிகளுடன் இருந்த இந்த விமான நிறுவனத்தின் சேவை தற்போது 51 மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. தங்களது இந்திய செயல்பாடு குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டோனி பெர்னா

பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் செல்கிறார்

Posted: 03 Jul 2014 05:05 PM PDT

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அதன்பிறகு முதன்முதலாக இன்று (வெள்ளிக்கிழமை) அவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஒரு நாள் பயணமாக செல்கிறார். இன்று காலை தனி விமானத்தில் அவர் ஜம்மு போய்ச் சேருகிறார். அங்கிருந்து நேராக கத்ரா நகருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.

புதிய கவர்னர்கள் நியமனம் எப்போது? உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதில்

Posted: 03 Jul 2014 04:39 PM PDT

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்ததும், நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட சில மாநில கவர்னர்களை பதவி விலகுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள்: பிரதமர் நரேந்திர மோடி

Posted: 03 Jul 2014 03:53 PM PDT

இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக புதிதாக 4 நோய் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:- குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், அனைவருக்கும் சுகாதார வசதிகள்

இலங்கை மந்திரி அடுத்த வாரம் டெல்லி வருகிறார்

Posted: 03 Jul 2014 02:37 PM PDT

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகளான நிலையிலும், தமிழர்கள் வாழ்வில் இன்னும் விடியல் பிறக்கவில்லை. அவர்கள் இன்னும் முள்வேலிக்குள் வாழ்கிற நிலைதான் உள்ளது. சிங்களர்களுடன் சம மதிப்பு, சம மரியாதை, சம அந்தஸ்துடன் கண்ணியமாக வாழ்கிற நிலை உருவாக வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு ஆகும்.

இந்திய விமானப்படை வெளியிட்ட 3டி மொபைல் கேம்

Posted: 03 Jul 2014 01:50 PM PDT

அடுத்த தலைமுறை இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிய 3டி மொபைல் கேம் ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தியன் ஏர் போர்ஸ். 'கார்டியன்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ்' என்ற அந்த மொபைல் கேமை விமானப்படை தளபதி சுகுமார் இன்று வெளியிட்டார்.

கட்டிட விபத்து: சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க சட்டம் கொண்டு வரவேண்டும்-வெங்கையா நாயுடு

Posted: 03 Jul 2014 01:13 PM PDT

சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 55-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் சமீபத்தில் டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததிலும் பலர் உயிர் இழந்தனர்.

பட்ஜெட் பற்றி ஆலோசனை: ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

Posted: 03 Jul 2014 12:28 PM PDT

பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசினார். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். பட்ஜெட், பிரேசில் நாட்டில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஆ.ராசா, கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு

Posted: 03 Jul 2014 11:46 AM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்காக ஆதாயம் தேடித் தரும் வகையில், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக ரூ.200 கோடி வழங்கப்பட்டதாக மத்திய அமலாக்கப்பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

வாய்தவறி பேசிவிட்டார் டபாஸ் பால்: ஜனாதிபதியின் மகன் சொல்கிறார்

Posted: 03 Jul 2014 07:51 AM PDT

மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடுமையாகத் தாக்கி பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டபாஸ் பால், மார்க்சிஸ்ட் கட்சியினரை கொலை செய்ய வேண்டும் என்றும், அக்கட்சி பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்றும் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டபாஸ் பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவரை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், வெறும் மன்னிப்புடன் திரிணாமுல் காங்கிரஸ் அவரை விட்டுவிட்டது.

எங்கே போனது ரூ.800 கோடி, கும்பமேளாவில் தொலைந்ததா?: அகிலேசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

Posted: 03 Jul 2014 07:40 AM PDT

உலகில் ஆன்மிகவாதிகள் மிக அதிகமாக கூடும் கும்பமேளா விழாவிற்காக தனது பங்காக செலவிட வேண்டிய 800 கோடி ரூபாயை உ.பி. அரசு செலவிடாததை அம்மாநில தணிக்கை துறை கண்டுபிடித்துள்ளது. அம்மாநில அரசு சார்பில் வெறும் 11 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. மத்திய அரசு 1150 கோடி ரூபாய் செலவழித்த நிலையில் தனது பங்கான 800 கோடி ரூபாயை அகிலேஷ் அரசு செலவு செய்யாமல் இருந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கேள்வியெழுப்பிய அம்மாநில எதிர்க்கட்சிகள் 800 கோடி ரூபாய் பணம் எங்கே போனது. அது கும்பமேளாவில் காணாமல் போனதா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை: சுப்ரமணிய சாமி புது குண்டு

Posted: 03 Jul 2014 06:46 AM PDT

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. உடல்நலக் குறைவு காரணமாக சுனந்தா சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதிக டோஸ் கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஓட்டலில் வைத்து சுனந்தாவுக்கும், சசிதரூக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் சசிதரூர் காங்கிரஸ் கூட்டத்துக்கு சென்று விட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

ஷீலா தீட்சித் வசித்த அரசு பங்களாவில் 31 ஏ.சி.

Posted: 03 Jul 2014 06:35 AM PDT

டெல்லி மாநில முதலமைச்சராக ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது அவரது வீட்டில் 31 ஏ.சி.க்களும், 25 ஹீட்டர்களும் பொருத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் தீட்சித்தின் நெ-3, மோதிலால் நேரு மார்க் மாளிகையில் இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு தான் தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வீட்டில் 21 ஏ.சி.க்களும், 15 ஏர் கூலர்களும், 25 ஹீட்டர்களும், 16 ஏர் பியூரிபயர்களும், 12 கெய்சர்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து: காஷ்மீரின் லெஹ் விமான நிலையத்தில் பயணிகள் தவிப்பு

Posted: 03 Jul 2014 06:18 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் லெஹ் விமான நிலையத்தில் விமானங்களுக்காக காத்திருந்த சுமார் 2000 பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர். விமான நிலையத்தில் நீண்ட நேரம் சிக்கித்தவித்த பயணிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். விமான நிறுவனங்களுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற துணை சபாநாயகராகிறார் மு.தம்பிதுரை

Posted: 03 Jul 2014 05:37 AM PDT

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க 37 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய மூன்றாவது பெரிய கட்சியாக அக்கட்சி இடம்பிடித்தது. ஒரு கட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி அதிமுகவுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ எதிர்க்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்குமாறு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™