Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முதலிடத்தில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

Posted: 29 Jul 2014 03:19 AM PDT

VIP

VIPதமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக முதலிடத்தில் உள்ளது தனுஷின் வேலையில்லா பட்டதாரி. கடந்த வாரம் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தனுஷுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிப் படமாக இது பார்க்கப்படுகிறது. சென்னையிலும் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரியே முதலிடத்தில் உள்ளது. வேலையில்லா பட்டதாரி வேலையில்லா பட்டதாரி வெளியாகி பத்து நாட்களாகிறது. இந்த நாட்களில் மொத்தம ரூ 21 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ 3.5 கோடி வசூலாகியுள்ளது வேலையில்லா பட்டதாரிக்கு. சதுரங்க வேட்டை நட்டு என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ள சதுரங்க வேட்டை ஒரு ஆச்சர்ய ஹிட் படம். மனோபாலாவின் முதல் தயாரிப்பாக வந்துள்ள இந்தப் படம், வேலையில்லா பட்டதாரிக்கு இணையாக ஓடிக் கொண்டிருக்கிறது. திருமணம் எனும் நிக்காஹ் ரம்ஜான் ஸ்பெஷலாக கடந்த வியாழக்கிழமை வெளியான படம் திருமணம் எனும் நிக்காஹ். போட்டிகளே இல்லாத சூழல். படம் சிறப்பாக வந்திருந்தால் வசூலை அள்ளியிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை இழந்து, மூன்றாமிடத்தில் உள்ளது இந்தப் படம். அரிமா நம்பி விக்ரம் பிரபு நடித்துள்ள அரிமா நம்பி வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. ஓரளவு நல்ல வசூலையும் பார்த்துவிட்டது. இருக்கு ஆனா இல்ல கேஎம் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் இருக்கு ஆனா இல்ல. தமிழ் சினிமாவின் சமீபத்திய ட்ரெண்டான பேய்க் காமெடி. பார்க்கக் கூடிய அளவுக்கு இருந்தாலும், ஏகப்பட்ட படங்கள் ரிலீஸானதில் இந்தப் படத்துக்கு மூச்சுத் திணறிவிட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடுத்த படம் அறிவித்தார் பாரதிராஜா!

Posted: 29 Jul 2014 03:11 AM PDT

bharathiraja

bharathiraja'அன்னக்கொடி' படத்திற்கு பிறகு தான் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

இப்படத்திற்கு 'நேற்றைக்கு மழை பெய்யும்' என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தின் கதையை இயக்குனர் அகத்தியன் எழுதியுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக இயக்குனர் சேரன் நடிக்கிறார். கதநாயாகியை இன்னும் பாரதிராஜா முடிவு செய்யவில்லை.

இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பாரதிராஜா தீவிரமாக உள்ளார். காதல்தான் படத்தின் மையக்கரு. ஆகஸ்ட் 3-ந் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடுகிறார் பாரதிராஜா.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் அன்னக்கொடி. இந்தப் படம் சரியாகப் போகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களை இயக்கப் போவதாக பாரதிராஜா அறிவித்திருந்தார்.

அதில் முதல் படம்தான் இந்த நேற்றைக்கு மழை பெய்யும்!

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ரியா ஆனந்த்… பிஸியோ பிஸி!

Posted: 29 Jul 2014 03:04 AM PDT

priya-anand

priya-anandஅரிமா நம்பியைத் தொடர்ந்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. தமிழில் ஒரு காலத்தில் தோல்விப் பட நடிகையாகப் பார்க்கப்பட்டவர் ப்ரியா ஆனந்த். அவர் அறிமுகமான வாமனன் படம் தொடங்கி அடுத்தடுத்து படங்கள் சரியாகப் போகாத நிலையில், அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான படங்களில் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அரிமா நம்பி வெளியானது. இந்தப் படம் வர்த்தக ரீதியாக நல்ல வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் வெளியாகின்றன. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இரும்புக் குதிரை படம் வெளியாகிறது. இதில் பிரான்சுக்குப் போகும் பாண்டிச்சேரி பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் வெளியாகிறது. இதில் விமலுக்கு ஜோடியாக, மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் ப்ரியா. இந்தப் படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வை ராஜா வை படம் வெளியாகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர் உள்ளிட்ட குழுவினர் கைது!

Posted: 28 Jul 2014 11:49 PM PDT

illegal_immigrants

illegal_immigrantsஅமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாகக் குடியேற முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினரை போலிஸார் கைது செய்துள்ளனர் என அங்கிருந்து வெளியாகும் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மெக்சிக்கோவில் இருந்து ரியோ கிராண்ட் பகுதி ஊடாக நுழைய முயன்ற இந்தக் குழுவினரை கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை தாம் கைது செய்தனர் என போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் வயதான ஆண்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

மெக்ஸிக்கோவின் ஊடாக டெக்ஸாஸுக்கு சட்டவிரோதமாக பிரவேசிப்போரில் ஆசிய நாட்டவரே அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்…

Posted: 28 Jul 2014 11:42 PM PDT

shutterstock

shutterstockஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது.

ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது.

ஆயுர்வேதம் என்றால் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் என்பது நிதர்சனமான உண்மை.

ஆயுர்வேத சிகிச்சைகள் உங்களை இயற்கைக்கு மிக அருகில் கொண்டு செல்லும். மேலும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை நோயாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். நல்ல அழகான வாழ்க்கை முறையில் வாழ்ந்திட கீழ்கூறிய ஆயுர்வேத டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

வறுத்த, எண்ணெய் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கேரளாவின் பாரம்பரிய அவித்த வாழைப்பழத்தை உங்கள் நொறுக்கு தீனிகளில் சேர்த்துக் கொள்ளலாம். அப்பளங்களை பொறித்து எடுக்காமல் லேசாக வறுத்தாலே போதுமானது.

சூரிய உதயத்திற்கு முன் காலையில் வேகமாக எழுந்திருப்பது, பகலில் தூங்காமல் இருப்பது அல்லது இரவு நீண்ட நேரம் தொலைகாட்சி பார்க்காமல் இருப்பது போன்ற இதர வாழ்க்கை முறை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இந்த கொள்கைகளை ஒரு மாத காலம் கடைப்பிடித்தால், உடல் நல எடை குறைப்பிற்கு அது ஒரு பாதை வகிக்கும். மேலும் எளிய உணவுகள் மற்றும் உடல ரீதியான சுறுசுறுப்பான வாழ்க்கை முறை போன்றவைகளே ஆரோக்கியமாக இருப்பதற்கான ரகசியங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கம்ப்யூட்டர் கிராஷ் -ஆவது எதனால்?

Posted: 28 Jul 2014 11:38 PM PDT

computer-crash

computer-crashகம்ப்யூட்டர் கிராஷ் -ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும், அல்லது அப்படியே திரைக்காட்சி முடங்கிப் போய்விடும். கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்சனை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வெரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்றுபோகும். இவ்வாறு ஏற்படுகையில் start -> settings -> control panel -> system -> Device manager எனச் சென்று பார்த்தால், பிரச்சனை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக்குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ-ஆர்-க்யூ என காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்சனை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்சனைக்குரிய சாதனத்தை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும். ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்பொம். ஆனால், ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாதபோது Fatel expection error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் Waitstate நிலையைச் சற்று உயர்த்தலாம், அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம். ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்களை கொண்டு நீக்கலாம். வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும்போது Fatel OE expection and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனை தவிர்க்க வீடியோ டிஸ்பிளேமின் ரெசல்யூகளைக் குறைக்கவும், start settings control panel Display settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும், அதே போல் கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும். வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனை தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கொடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே, இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கு காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே காரணம். மேலும், கம்ப்யூட்டரிக் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேளைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாக காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்சனை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்கு செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்தி பின் மீண்டும் இயக்கவும். சாஃப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாஃப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றை சரியாக அன்இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு இந்த சாஃப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்கு கொண்டு வரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேனில் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப்படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் ஏரர் (Kernal error) என்று ஒரு பிரச்சனை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனை காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டருந்தாலும் அதிக வெப்ப பிரச்சனை ஏற்படும். எனவே சிபியு விண் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும். கம்ப்யூட்டருக்கு செல்லும் மின் ஒட்டத்தினை சீராகத் தரும் சாதனங்களை கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதலையிடமிருந்து மயிரிழையில் உயிர்பிழைத்த வாலிபர்!

Posted: 28 Jul 2014 11:22 PM PDT

Man-Nearly-Snapped-up-by-Crocodile-As-He-RUNS-over-Its-Back-Idiot-Jumps-Over-A-Crocodile

Man-Nearly-Snapped-up-by-Crocodile-As-He-RUNS-over-Its-Back-Idiot-Jumps-Over-A-Crocodile

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படியொரு வித்தியாசமான பிரட் ஆம்லெட்டை யாராவது மிஸ் பண்ணுவாங்களா?

Posted: 28 Jul 2014 11:19 PM PDT

Bread-Omelet

Bread-Omelet

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த சாரதியோட திறமையை நிச்சயம் பாராட்டியே ஆகனும்!

Posted: 28 Jul 2014 11:09 PM PDT

Fuel-truck-sharp-U-turn

Fuel-truck-sharp-U-turn

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™