Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


விவாகரத்து வழக்கு: ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.400 கோடி ஜீவனாம்சம்

Posted: 29 Jul 2014 10:54 PM PDT

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானேவும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இருவரும் 2000–ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தி நடிகர் அர்ஜூன் ரம்பாவும் சுசானேயும் நெருக்கமாக பழகுவதே இவர்கள் தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது. இருவரும் விவாகரத்து செய்து கொள்வதை ஹிருத்திக்ரோஷனே அதிகார பூர்வமாக அறிவித்தார். விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.

காங்கிரஸ்–தே.காங்கிரஸ் மீண்டும் கூட்டணி ஏற்படுமா?: சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு

Posted: 29 Jul 2014 10:39 PM PDT

மராட்டிய மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மராட்டியத்தில் காங்கிரஸ் வசம் உள்ள ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தீவிரமாகி உள்ளது. இதற்காக பா.ஜ.க.–சிவசேனா கூட்டணி இப்போதே தேர்தல் பணியில் ஈடுபட தொடங்கி விட்டன.

ஜனவரி மாதம் போப் இலங்கை செல்கிறார்: தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வற்புறுத்துகிறார்

Posted: 29 Jul 2014 10:36 PM PDT

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், உலக அமைதிக்காக குரல் கொடுத்து வருகிறார். தென்கொரியா மீது அணு ஆயுதப்போர் நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்தபோது, அதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததுடன் அதற்காக சிறப்பு வழிபாடும் நடத்தினார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு அவர் சென்றிருந்தபோது

சகாரன்பூரில் 5 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்வு: பிற்பகலில் வீடுகளில் இருக்க உத்தரவு

Posted: 29 Jul 2014 10:17 PM PDT

உத்தர பிரதேச மாநிலம் சகாரன்பூரில் இரு சமுதாயத்தினர் இடையே கடந்த சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அது பெரிய கலவரமாக வெடித்தது. இதில் 165 கடைகள், 42 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சகாரன்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் மோதலில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு கிடைக்குமா?: 2 நாட்களில் முடிவு - சுமித்ரா மகாஜன்

Posted: 29 Jul 2014 10:10 PM PDT

பாராளுமன்றத்தில் ஒரு கட்சி எதிர்க்கட்சிக்குரிய அந்தஸ்தை பெற வேண்டுமானால், அந்த கட்சிக்கு குறைந்தபட்சம் 54 எம்.பி.க்கள் இருக்க வேண்டும். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால் அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

சிறப்பாக செயல்படும் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி: மோடி முடிவு

Posted: 29 Jul 2014 10:02 PM PDT

நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு நேர்மையான நிர்வாகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக மத்திய மந்திரிகளுக்கும், பா.ஜனதா எம்.பி.க்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பா.ஜனதாவில் 150–க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது

Posted: 29 Jul 2014 09:51 PM PDT

திருவனந்தபுரத்தில் உள்ள சில பள்ளி, கல்லூரிகள் அருகே ஒரு கும்பல் நின்று கொண்டு ரகசியமாக மாணவர்களுக்கு கஞ்சா உள்பட போதை பொருட்களை விற்பதாக திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனருக்கு பல்வேறு புகார்கள் சென்றன

ஆந்திராவில் அனைத்து விவசாயிகளுக்கும் ஐ–பேடு இலவசம்: சந்திரபாபு நாயுடு

Posted: 29 Jul 2014 09:19 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினார்கள். அவர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஆந்திராவில் விவசாயத்தை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் ஐ–பேடு என்ற சாதனம் இலவசமாக வழங்கப்படும். எல்லோருக்கும் உணவு, வேலை வாய்ப்பு, முன்னேற்றம் பொது நலம் பற்றி

கர்நாடக வனப்பகுதியில் மாயமான சென்னை என்ஜினீயர் மீட்பு: 14 பேர் மீது வழக்கு

Posted: 29 Jul 2014 04:21 PM PDT

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சர்க்லேஷ்புரா அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிஸ்லே வனப்பகுதி உள்ளது. இது மாநிலத்திலேயே மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதி நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதியாக கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. மேலும் இங்கு புலி, சிறுத்தை, யானை உள்பட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.

பாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி.க்களின் செயல்பாடுகளை கண்காணிக்க மேலிடம் முடிவு

Posted: 29 Jul 2014 03:15 PM PDT

பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தற்போது பா.ஜனதாவுக்கு 320–க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக எம்.பி.க்களின் வருகை பதிவேடு, சபைகளில் அவர்கள் எழுப்பும் கேள்விகள், விவாதங்களில் அவர்களின் பங்கேற்பு போன்றவை இதில்

மரபணு மாற்று பயிர்கள் பற்றி அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை: மத்திய மந்திரி தகவல்

Posted: 29 Jul 2014 03:04 PM PDT

இந்தியாவில் சில குறிப்பிட்ட நெல், கத்தரி, பருத்தி உள்பட 15 வகையான மரபணு மாற்று பயிர்களை சோதனை முறையில் பயிர் செய்ய உயிரிதொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையமான மரபணு பொறியியல் அனுமதிக்குழு அனுமதி அளித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

சமாஜ்வாடி அரசு இந்தியாவுக்கு அவப்பெயரை தேடித்தந்து விட்டது: பா.ஜனதா, காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 29 Jul 2014 12:57 PM PDT

அமெரிக்காவின் வெளியுறவு இலாகா ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடைபெறும் மதக்கலவரங்கள் மற்றும் அவை தொடர்பான பிரச்சினைகள், படுகொலைகள் குறித்து சர்வதேச மதச் சுதந்திரம் என்ற பெயரில் அறிக்கையை பாராளுமன்றத்தில் வெளியிடுவது வழக்கம். 2013-ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி அண்மையில் வெளியிட்டார்.

கற்பழிப்பு, கொலை வழக்குகளை பேச்சுவார்த்தையில் சமரசம் செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 29 Jul 2014 12:26 PM PDT

வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து கொண்டதால், வழக்கு விசாரணையை கைவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் வந்தன. இந்த மனுக்களை நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

மரபணு மாற்ற விதை உற்பத்தி திட்டம் நிறுத்திவைப்பு: மோடிக்கு ஆடிட்டர் குருமூர்த்தி நன்றி

Posted: 29 Jul 2014 06:54 AM PDT

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மனித ஆரோக்கியத்திற்கு எதிரானது என்று நாடெங்கும் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த போது அதற்கான தடையில்லா சான்றிதழில் கையெழுத்திடாமல் மண்ணைக் காத்தார். பன்னாட்டு கம்பெனியின் இந்த உற்பத்தி முயற்சிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்காத காரணத்தால் அவர் பதவி விலக நேர்ந்தது. இந்நிலையில் அத்துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற வீரப்ப மொய்லி உடனடியாக அக்கம்பெனிக்கு ஆதரவாக தடையில்லா சான்றிதழை வழங்கி உத்தரவிட்டார். இதன் மூலம் அந்நிறுவனம் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை, அரிசி, சோளம், ஆமணக்கு மற்றும் பருத்தி ஆகிய பொருட்களின் விதைகளை உற்பத்தி செய்யவும், விற்கவும் முடியும். மரபணு மாற்றம்

ரம்ஜான் சிறப்பு தொழுகையில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி: 35 பேர் காயம்

Posted: 29 Jul 2014 06:37 AM PDT

குஜராத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்ற மைதானத்தின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 2 பேர் இறந்தனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேசானாநகரில் உள்ள மைதானத்தில் இன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் சுற்றுச்சுவர் ஓரம் கழற்றி விடப்பட்ட காலணிகளை மாட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சுவரின் 20 அடி நீளமுள்ள பெரிய பகுதி திடீரென இடிந்து விழுந்து அவர்களை அமுக்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 வயது சிறுவன் மற்றும் 62 வயது முதியவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 35க்கும் மேற்பட்டோர்

அரவிந்த் கெஜ்ரிவால் பழைய வீட்டிற்கு திரும்பினார்

Posted: 29 Jul 2014 06:23 AM PDT

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே குழுவில் இருந்து பிரிந்து ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கியவர் அரவிந்த் கெஜ்ரிவால். கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியையும் பிடித்தார். முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு, அரசு அதிகாரியான அவரது மனைவிக்கு வருவாய்

இமாச்சலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

Posted: 29 Jul 2014 06:08 AM PDT

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா அருகே உள்ள கராடா என்ற இடத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானார்கள். சிம்லாவிலிருந்து சவேரா கட் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது பசந்த்பூர் பகுதியில் உள்ள காதர் கட் எனும் இடம் அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 400 மீ ஆழமுள்ள இப்பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததாக தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்ததால் பேருந்து விபத்தை சந்திக்க நேரிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் மிக உயரமான ரெயில்வே பாலம்: கட்டுமான பணிகள் தொடங்கின

Posted: 29 Jul 2014 06:05 AM PDT

மணிப்பூரில் உள்ள நோணி பகுதியில் ஜிரிபாம்- துபுல் இடையே மிக உயரமான ரெயில்வே பாலம் அமைய இருக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது. ஐரோப்பாவில் 139 மீட்டர் உயரத்தில் பெல்கிரேடு- பார் ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ள மலா- ரிஜேகா பாலமே இதுவரை உலகில் மிக உயரமான ரெயில்வே பாலமாக இருந்து வருகிறது.

உ.பி.யில் நிலப்பிரச்சினையில் இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை

Posted: 29 Jul 2014 05:49 AM PDT

உத்தரபிரதேச மாநிலம் சகரான்பூர் மாவட்டத்தில் இன்றும் நிலப்பிரச்சினையில் 22 வயது இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சகரான்பூர் மாவட்டம் டியோபாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சல்மான் (வயது 22). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷாஜத் என்பருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது.

டபாஸ் பால் மீது வழக்கு: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திரிணாமூல் காங். அப்பீல்

Posted: 29 Jul 2014 05:32 AM PDT

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல வங்காள மொழி நடிகருமான டபாஸ் பால் (வயது 55) கட்சி கூட்டம் ஒன்றில் பேசும்போது, எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசியதுடன், தங்கள் கட்சியினரை தாக்கினால் மார்க்சிஸ்ட் கட்சி பெண் உறுப்பினர்களை பாலியல் பலாத்காரம் செய்யும்படி தமது கட்சி இளைஞர்களிடம் கூறுவேன் என்றும் கூறியிருந்தார். மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு தீங்கு செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து தொண்டர்களை உசுப்பேற்றிய பால், வேறு வகையான மிரட்டல்களையும் விடுத்ததாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™