Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Mi 3 ஸ்மார்ட்போன் ரூ.14,000 விலையில் அறிமுகம்!

Posted: 25 Jul 2014 06:19 AM PDT

Xiaomi-Mi-3

Xiaomi-Mi-3Xiaomi நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போனான Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனை ரூ.14,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ள்து. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனை தவிர ஒரு சார்ஜர் மற்றும் USB கேபிள் அடங்கும் ஒரு மிக எளிய பெட்டியில் வருகிறது. மேலும், இது இயர்ஃபோன் கொண்டு வரவில்லை. அலுமினிய மெக்னீசியம் அலாய் ஃப்ரேம் பூசப்பட்ட 3 லேயர்களை கொண்ட தெர்மல் கிராஃபைட் இணைக்கப்பட்ட நல்ல தரமான பிளாஸ்டிக் பேக் பேனல் கொண்டுள்ளது. ஒற்றை சிம் போன் வழக்கமான அளவிலான சிம் அட்டைகள் ஆதரிக்கிறது. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போன் உலோக சாம்பல் நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த போனில் மூன்று கலர் டெம்பரேச்சர் மோட்கள் (வார்ம், ஸ்டாண்டர்ட் மற்றும் கூல்) மற்றும் இரண்டு சசுரேஷன் (ப்ரில்லியன்ட் மற்றும் ஸ்டாண்டர்டு) ஆகியவற்றை வழங்குகிறது. தீம் அப்ளிக்கேஷன்களான, பல்வேறு தொகுப்பு கொண்ட ஐகான்கள், வால்பேப்பர்கள், அப்ளிக்கேஷன் ஸ்விட்சர், ஃபான்ட் ஸ்டைல், சாவுண்ட்ஸ், லாக் ஸ்கிரீன் ஸ்டைல் மற்றும் சிஸ்டம் அப்ளிக்கேஷன் போன்ற இலவச தீம்கள் வழங்குகிறது. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனில் Adreno 330 ஜி.பீ.யூ மற்றும் நான்கு க்ரைத் 400 CPU கோர்களை கொண்ட 2.3GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 SoC இயங்கும். திரையில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் பேனல் டிஸ்ப்ளே உள்ளது. டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் Exmor யூனிட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. மேலும், ரேம் 2GB, 16GB உள்ளடங்கிய சேமிப்பு, 3050mAh பேட்டரி, NFC, Wi-Fi, b / g / n / AC, ப்ளூடூத் 4.0 மற்றும் எ-ஜிபிஎஸ் உடன் GLONASS ஆகியவை உள்ளடக்கியுள்ள்து. microSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 இயங்குகிறது. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போன் விவரக் குறிப்புகள்: 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் பேனல் டிஸ்ப்ளே, Adreno 330 ஜி.பீ.யூ, 2.3GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 SoC, டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் Exmor யூனிட் கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ரேம் 2GB, microSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு, NFC, Wi-Fi b / g / n / AC, ப்ளூடூத் 4.0, எ-ஜிபிஎஸ் உடன் GLONASS, ஆண்ட்ராய்டு 4.4.2, 3050mAh பேட்டரி.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி சாருடன் நடிப்பது நீண்ட நாள் கனவு டூயட் பாடலில் தீர்ந்தது!

Posted: 25 Jul 2014 06:07 AM PDT

rajini-anushka

rajini-anushkaசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லிங்கா படத்தில் அவருடன் ஒரு காதல் பாடலில் நடித்ததன் மூலம் தன் நெடு நாள் ஆசை நிறைவேறியதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். பெங்களூரில் 40 நாட்கள் படமாக்கப்பட்ட ரஜினியின் லிங்கா குழு, கடந்த சில வாரங்களாக ஹைதராபாதில் நிலை கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளிப்புறப் படப்பிடிப்பிலிருந்து அன்னப்பூர்ணா ஸ்டுடியோவுக்கு இடம்பெயர்ந்தது இந்தக் குழு. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், நிச்சயம் ரஜினி பிறந்த நாளன்று வெளியாக வேண்டும் என்பதில் குழுவினர் தீவிரமாக உள்ளனர். ரஜினியும் ஓய்வின்றி தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்தப் படத்தில் ஒரு ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷியும், இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடித்து வருகிறார். இவர்களில் சோனாக்ஷி ஏற்கெனவே இரு பாடல் காட்சிகளில் ரஜினியுடன் நடித்து முடித்துவிட்டார். அவரது இறுதிக் கட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இள வயது ரஜினிக்கு ஜோடியாக வரும் அனுஷ்காவின் காட்சிகள்தான் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. ரஜினி - அனுஷ்கா பங்கேற்கும் ஒரு பாடல் காட்சி சமீபத்தில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. ரஜினி சாருடன் நடிப்பது நீண்ட நாள் கனவு. அது லிங்காவில் எனக்கு நிறைவேறியது. அவருடன் டூயட் பாடலில் ஆடியது மறக்க முடியாத அனுபவம், என்று தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.

This posting includes an audio/video/photo media file: Download Now

கூகுள் ப்ளஸ்ஸிலும் கால் பதித்தார் நடிகர் விஜய்!

Posted: 25 Jul 2014 06:02 AM PDT

vijay-google-plus

vijay-google-plusபேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ்ஸிலும் கால் பதித்தார் விஜய். சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்றவற்றை முன்பெல்லாம் திரையுலகினர் திரும்பிக் கூடப் பார்க்காமல் இருந்தனர். ஒரு கட்டத்தில், இந்த சமூக வலைத்தளங்கள்தான் எதிர்கால மீடியா என்பது உறுதியானது. இந்த உண்மை புரிய ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல சினிமா பிரபலங்கள் ட்விட்டர், பேஸ்புக்கில் நுழைய ஆரம்பித்தனர். குறிப்பாக ட்விட்டரில் இல்லாத திரைப் பிரபலங்களே இல்லை என்றாகிவிட்டது. எந்த சமூக வலைத் தளங்களிலும் இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியே ட்விட்டருக்கு வந்துவிட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், தான் எந்த தளத்தில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக இதுவரை காட்டிக் கொள்ளாமல் இருந்தார். ஆனால் ட்விட்டரில் முதலில் கால் பதித்தார். பின்னர் பேஸ்புக்குக்கும் வந்துவிட்டார். இரண்டிலுமே அவரைப் பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் அவர் கூகுள் ப்ளஸ் தளத்திலும் அடி வைத்துள்ளார். அவரது சில புகைப்படங்கள் அந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. விஜய்யின் சமூக வலைத் தளப் பக்கங்கள்: பேஸ்புக்: https://www.facebook.com/ActorVijay ட்விட்டர்: https://twitter.com/Vijay_cjv கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/111719954424922134590/posts

This posting includes an audio/video/photo media file: Download Now

மலைப்பாம்பின் கோரப்பசிக்கு உயிரோடு உணவாகும் முதலை!

Posted: 25 Jul 2014 05:47 AM PDT

Caught-On-Camera-Snake-Devours-Crocodile-After-5-Hour-Battle

Caught-On-Camera-Snake-Devours-Crocodile-After-5-Hour-Battle

This posting includes an audio/video/photo media file: Download Now

யப்பா போதும்டா சாமி…. இதற்கு மேலும் ரசிக்க முடியாது இந்த பெண் செய்ற காரியத்தை!

Posted: 25 Jul 2014 05:44 AM PDT

Girl-Being-Bitten-by-Aggressive-Water-Snakes

Girl-Being-Bitten-by-Aggressive-Water-Snakes

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த சாரதியோட தில்லைப் பாருங்க… அப்படியே திகைத்துப் போவீங்க!

Posted: 25 Jul 2014 05:35 AM PDT

Idiot-on-railway-tracks

Idiot-on-railway-tracks

This posting includes an audio/video/photo media file: Download Now

பொண்ணுங்களா இதுங்க?… பாருங்க நீங்களும் இதையே தான் கேட்பீங்க!

Posted: 25 Jul 2014 05:27 AM PDT

japanese-school-girl-chase

japanese-school-girl-chase

This posting includes an audio/video/photo media file: Download Now

பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா: 2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்கள்!

Posted: 25 Jul 2014 12:40 AM PDT

cwg

cwgஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில், பளுதூக்குதல் மற்றும் ஜூடோ ஆகிய விளையாட்டுக்களில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளனர்.

முதல் நாளிலேயே 7 பதக்கங்களை வென்று அவர்கள் அசத்தியுள்ளனர். 20-வது காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் பதக்க பட்டியலை பளுதூக்கும் வீராங்கனைகள் தொடங்கி வைத்தனர்.

48 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான சஞ்ஜிதா குமுக்சன், ஸ்நாட்ச் மற்றும் கிளீன் அண்டு ஜெர்க் பிரிவுகளில் அதிகபட்சமாக 173 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

இதே எடைப் பிரிவில் மற்றொரு மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு சாய்கோம் 3 கிலோ குறைவாகத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் பளூதூக்கும் போட்டி 56 கிலோ பிரிவில் இந்தியவீரர் சுகென் தேய், தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் கணேஷ் மாலி, வெண்கலம் வென்றார்.

இதே போல் மகளிர் 48 கிலோ ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்துக்கான மோதலில், இந்திய வீராங்கனை சுஷிலா லிக்மபாம், உள்ளூர் வீராங்கனை ரெனிக்சை எதிர்கொண்டார்.

சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட்ட ரெனிக்ஸ், சுஷீலா-வை ஒரே அடியாக இப்போன் முறையில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அஸ்ஸாமைச் சேர்ந்த சுஷீலாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதே போல் ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் சனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஜூடோ போட்டிகளில் 2 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,2 வெண்கலம் பெற்று 4வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து 6தங்க பதக்கங்களுடன் மொத்தம் 17 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.ஆஸ்திரேலியா,5 தங்கபதக்கங்களுடன் மொத்தம்15 பதக்கங்களூடன் இரண்டாவதாக உள்ளது.

ஸ்காட்லாந்து 4 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 9 பதக்கங்கள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

117 நிமிடங்கள் துடித்த கொடுமை.. அமெரிக்க மரண தண்டனையால் சர்ச்சை!

Posted: 25 Jul 2014 12:34 AM PDT

usa-flag

usa-flagஅமெரிக்காவில் ஒரு மரண தண்டனைக் குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட விஷ மருந்து வேலை செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவர் 117 நிமிடங்கள் உயிர்ப் போராட்டம் நடத்தி மிகவும் கொடூரமாக தனது முடிவை சந்திக்க நேரிட்டது.

இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரண தண்டனையை ஒழிக்கக் குரல் கொடுத்து வரும் அமைப்புகள், ஆர்வலர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும். இப்படி ஒரு கொடூரமான முறையில் ஒருவரின் உயிரைப் பறித்த செயல் மிகவும் கொடுமையானது என்றும் அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

அரிசோனா கோர்ட் ஒன்று, ஜோசப் உட் என்பவருக்கு மரண தண்டனை கொடுத்தது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதையடுத்து அரிசோனா சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஜோசப்புக்குப் போடப்பட்ட விஷ மருந்து வேலை செய்ய கிட்டத்தட்ட 2 மணி நேரம் எடுத்துக் கொண்டதால் அந்தக் குற்றவாளி கடுமையான உயிர்ப் போராட்டத்துக்குள்ளானார். மூச்சுத் திணறியும், கடுமையாக அவஸ்தைப்பட்டும் அவர் உயிரிழந்துள்ளார்.

அரிசோனா மாகாண ஆளுநர் ஜேன் ப்ரூவர், இதுகுறித்துக் கூறுகையில் மரண தண்டனைக்கான காலம் அதிகமாகியிருப்பது கவலை தருகிறது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றார்.

அதேசமயம், ஜோசப் சட்டப்பூர்வமாகவே தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அதில் சட்டவிரோதம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தண்டனையானது அமெரிக்காவின் 26வது மரண தண்டனையாகும். அதேசமயம், அரிசோனாவில் கடந்த அக்டோபர் மாதத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட முதல் தண்டனை இது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒபாமாவுக்கு எதிராக வழக்கு: நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த முடிவு!

Posted: 25 Jul 2014 12:24 AM PDT

obama

obamaஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக வழக்கு தொடருவது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த அந்த நாட்டின் விதிமுறை கமிட்டி ஒப்புதல் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் வழக்கு தொடர ஆதரவு அளிக்கும்பட்சத்தில் ஒபாமா சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. அதிபர் ஒபாமாவின் கனவுத் திட்டமான ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு பாலிசி அக்டோபரில் அறிமுகமானது. புதிய காப்பீடு திட்டம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இத்திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையவில்லை. இந்நிலையில், ஏற்கனவே உள்ள பழைய மருத்துவக் காப்பீடுகள் காலாவதியாவதாக அந்தந்த காப்பீட்டு நிறுவனங்கள் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன. இதன்காரணமாக அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒபாமா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்கு தொடுக்க குடியரசு கட்சி திட்டமிட்டுள்ளது. அதிபர் மீது வழக்கு தொடர அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர் ஒப்புதல் தேவை. எனவே நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை வாக்கெடுப்புக்கு விட வேண்டியது அவசியம். தொழில்நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு உரிய நடைமுறைகளை செய்து கொடுக்காமல் ஒபாமா காலம் தாழ்த்திவிட்டதை கண்டித்து இந்த வழக்கு தொடுக்கப்பட உள்ளதாக குடியரசு கட்சி தெரிவிக்கிறது. நாடாளுமன்றத்தின் மொத்த சபையும் இந்த வழக்குக்கு ஆதரவாக வாக்களிக்கும்பட்சத்தில் பெடரல் நீதிபதிக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கை ஏற்பதா இல்லையா என்பதை நீதிபதி முடிவு செய்வார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்களை ஏமாற்றியவர் கொழும்பில் கைது!

Posted: 25 Jul 2014 12:13 AM PDT

arrest

arrestதிருமணம் செய்வதாக ஏமாற்றி 17 யுவதிகளிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தொடர்பில் யுவதியொருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக உத்தியோகத்தர்களால் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இணையத்தளம் ஊடாக திருமண யோசனைகளை முன்வைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த யுவதிகளை ஏமாற்றி அவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் சில யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை மோசடிக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 யுவதிகளின் படங்களும் சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாயிருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புலிகளின் பாதிப்பை மறப்போம்- ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம்: ஜனாதிபதி

Posted: 25 Jul 2014 12:07 AM PDT

ltte_mahinda

ltte_mahindaநாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தனிப்பட்டவர்களின் நோக்கங்களுக்காக இடம்பெற்றவை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் ஒன்றில் தீவிரவாத குழுக்களால் அல்லது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற இஸ்லாமிய நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டு மக்களைக் காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று சுட்டிக்காட்டினார். இலங்கைக்கென்று தனியான கலாசாரம் இருக்கிறது. அதனை பாதுகாக்க வேண்டும். விடுதலைப்புலிகளால் நாடு பாதிக்கப்பட்டது. அதனை மறக்க வேண்டும். அவ்வாறான நிலை மீண்டும் உருவாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம்- ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரியவருகிறது. ஊவா மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.வி.பியின் கடந்த கால செயற்பாடுகளின் அடிப்படையில் அந்த கட்சியை விமர்சிக்க வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா முன்வைத்த யோசனை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் டிலான் பெரேரா, ஜே.வி.பியினர் 1988-89 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட கொலைகள் பற்றி தொடர்ந்தும் பேசுவதன் மூலம் மக்கள் மத்தியில் ஜே.வி.பி மீது வெறுப்பை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார். இப்படியான விமர்சனங்களை முன்வைத்தால், முன்னர் ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினராக இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அன்றைய செயற்பாடுகள் தொடர்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என ஜனாதிபதி கூறியுள்ளதுடன் அப்படியான விமர்சனங்களை செயய வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட போவதில்லை!- விமல் வீரவன்ச

Posted: 25 Jul 2014 12:01 AM PDT

Wimal_weerawansa

Wimal_weerawansaஎதிர்வரும் ஊவா மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒருவருக்கு ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமானால் தாம் பிரிந்து போட்டியிடப் போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் ஏற்கனவே ஆளும் கட்சி, தேசிய சுதந்திர முன்னணியுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிச் செயற்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒருவனின் வாய்க்குள் 232-பற்கள் உலக சாதனை!

Posted: 24 Jul 2014 11:56 PM PDT

teeth

teethஇந்தியாவைச் சேர்ந்த Ashik Gavai என்ற வாலிபன் தனது கீழ் தாடை வீக்கம் காரணமாக மும்பாய் JJ வைத்தியசாலைக்கு சென்றுள்ளான். 17-வயதுடைய இந்த வாலிபனின் பற்களில் ஒரு சிக்கலான கட்டி ஏற்பட்டிருக்கலாமென கருதப்பட்டது. நீண்ட காலமாக தாடை வீக்கத்தினால் துன்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை வைத்தியர்கள் சத்திரசிகிச்சை ஒன்றை செய்தனர். சத்திரசிகிச்சை ஏறக்குறைய 7-மணித்தியாலங்கள் நீடித்தது. இது ஒரு சாதாரணமான சத்திரசிகிச்சை என ஆரம்பத்தில் வைத்தியர்கள் கருதினர். ஆனால் ஆரம்பித்த பின்னர் தாடை எலும்பிற்குள் பல முத்து போன்ற பற்கள் காணப்பட்டுள்ளன. அதேபோல் 232 பற்கள் இருந்துள்ளன. அத்தோடு கடினமான பாறை போன்ற படிமானம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதனை பல்மருத்துவ கருவியினால் அகற்ற முடியவில்லை என பல் வைத்திய தலைமை அதிகாரி அறிவித்தார். தானோ அல்லது தனது குழுவினரோ இத்தகைய ஒரு நிலைமையை இதுவரை காணவில்லை எனவும் இது ஒரு உலக சாதனை என்றும் கூறியுள்ளார். முழு பற்களையும் அகற்ற தாங்கள் தங்களாலா முயற்சிகளை செய்ததாகவும் இருந்தும் சில தேங்கிவிட்டதாகவும் அவை மீண்டும் வளரக்கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படலாமெனவும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™