Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மேற்கு வங்காளம் அரசு ஆஸ்பத்திரிகளில் புதிதாக 20 தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்க திட்டம்

Posted: 25 Jul 2014 10:54 PM PDT

ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கு துரிதமாக சிகிக்சை அளிக்க 20 தீக்காய சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக அந்த மாநில பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் சசி பஞ்சா கூறியுள்ளார். மேலும், ''ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் பல்வேறு தீக்காயங்களுக்கு உட்படுபவர்களுக்கு இந்தப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சை பிரிவுகள் அரசு

ஆதிவாசி சிறுமிகள் விபசாரத்திற்கு விற்பனை: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் புகார்

Posted: 25 Jul 2014 10:53 PM PDT

கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும், சில சிறுமிகள் விபசார புரோக்கர்களுக்கு விற்கப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. பத்திரிகை மற்றும் டெலிவிஷன்களில் இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் மாநில

4 மாவட்டங்களை இணைத்து ஆந்திரா புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு ஆலோசனை

Posted: 25 Jul 2014 10:52 PM PDT

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதையடுத்து ஐதராபாத் அந்த மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. ஆந்திராவுக்கு புதிய தலைநகரை தேர்வு செய்ய சிவராமகிருஷ்ணா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. இக்குழுவினர் ஆந்திராவின் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகிறது. விஜயவாடா – குண்டூர் இடையே புதிய தலைநகர் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தலைநகர் அமைக்க 30 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. விஜயவாடா அருகே அந்த இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க 639 யாத்ரீகர்களுடன் 30-வது குழு புறப்பட்டது

Posted: 25 Jul 2014 10:28 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோவிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். அதனைத்தொடர்ந்து பல குழு காஷ்மீரில் இருந்து பயணத்தை தொடர்ந்துள்ளது.

உயர்மட்ட குழு கூட்டம்: காங். நிர்வாகிகள் வராததால் சோனியா அதிருப்தி

Posted: 25 Jul 2014 10:19 PM PDT

டெல்லியில் காங்கிரஸ் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி உயர்மட்ட குழு நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கூட்ட நேரம் 10 மணிக்கு மாற்றப்பட்டு அதுவும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்டபடி காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி

உத்தரகாண்ட் இடைத்தேர்தல்: 3 தொகுதியிலும் காங்.வெற்றி

Posted: 25 Jul 2014 10:12 PM PDT

உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் தார்காலா, தொய்வாலா, சோமேஷ்வர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த 3 தொகுதிகளுக்கும் கடந்த 21–ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. உத்தரகாண்ட் முதல்வராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஹரீஷ் ராவத் மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக தார்காலா தொகுதி எம்.எல்.ஏ. ஹரீஷ் தாமி ராஜினாமா

ரெயில் விபத்தில் 16 குழந்தைகள் பலி: சோகத்தில் மூழ்கிய 4 கிராமங்கள்

Posted: 25 Jul 2014 10:06 PM PDT

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயி பேட்டையில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை கடந்த பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரெயில் மோதியதில் 16 குழந்தைகள் பலியானார்கள். மேலும் பஸ் டிரைவர் மற்றும் கிளீனரும் உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த 20 குழந்தைகள் ஐதராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் பிரமுகர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல்: எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது

Posted: 25 Jul 2014 10:03 PM PDT

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் பிலிப் வர்கீஸ் (வயது 46). துபாயில் தொழில் அதிபராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சிக்கு வந்தார். அப்போது இவரது நண்பர் ஒருவர் மூலம் ருச்சனா என்ற பெண் அறிமுகம் ஆனார். ஒருசில நாட்களிலேயே அந்த பெண் பிலிப் வர்கீசுடன் தனியாக லாட்ஜுகளில் தங்கும் அளவுக்கு நெருக்கமானார். பிலிப் வர்கீசும் அந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். அதன் பிறகு அவர், மீண்டும் துபாய்க்கு சென்றுவிட்டார். அங்கு போன பின்பு அவருக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. அதில் பேசியவர் பிலிப் வர்கீசும், ருச்சனாவும் லாட்ஜில் உல்லாசமாக இருந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு சி.டி.யாக இருக்கிறது என்றும், இதை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி தர வேண்டும் எனவும் மிரட்டினார்.

நோன்பு இருந்தவருக்கு கட்டாய உணவு: சிவசேனா எம்.பி. மீது மோடி அதிருப்தி

Posted: 25 Jul 2014 09:53 PM PDT

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சமையல் பொறுப்பாளர் தாமதமாக வந்தார். மேலும் அங்கு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த சப்பாத்தியும் தரமானதாக இல்லை. இதனால் ஆவேசம் அடைந்த சஞ்சய் ராவத் எம்.பி. அங்கிருந்த சமையல் ஊழியர்களை அழைத்து கண்டித்தார். மேலும் ஒரு சப்பாத்தியை எடுத்து நீயே சாப்பிடு என்று ஒரு ஊழியரின் வாயில் சஞ்சய் ராவத் எம்.பி. திணித்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மூணாறு வனப்பகுதியில் 40 கிலோ சந்தன கட்டை கடத்திய சின்ன வீரப்பன் கைது

Posted: 25 Jul 2014 09:44 PM PDT

கேரள மாநிலம் மூணாறு அருகே காந்தலூர் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து காந்தலூர் டி.எப்.ஓ. ஸாபி வர்கீஸ் உத்தரவின் பேரில் வனத்துறையினர் தமிழக எல்லை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அளிஞ்சி வனப்பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் சென்றனர்.

இலங்கை இனப்படுகொலை: ஐநா விசாரணை குழுவுக்கு விசா வழங்க அதிமுக வலியுறுத்தல்

Posted: 25 Jul 2014 09:22 PM PDT

பாராளுமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவர் எம்.தம்பித்துரை பாராளுமன்ற கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசிக்கிறார்கள். விசாரணைக்காக வரும்

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் மீட்கப்படுவது உறுதி: ஜெட்லி

Posted: 25 Jul 2014 08:05 PM PDT

பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடன் பரஸ்பர நிதி மீது 20 சதவீத வரி, ஏப்ரல் 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் பல உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, கடன் பரஸ்பர நிதி மீதான 20 சதவீத வரி, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஜூலை 10-ந் தேதி முதல் அமலுக்கு

காஷ்மீர்: போராளிகள் கையெறி குண்டு வீச்சில் போலீஸ்காரர் பலி

Posted: 25 Jul 2014 07:32 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்போர் நகரில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தை இடைமறித்த போராளிகள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கற்களோடு சேர்த்து பறந்து வந்த ஒரு

இளம் பெண்கள் மீதான திராவகம் வீச்சு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Posted: 25 Jul 2014 02:33 PM PDT

இளம் பெண்கள் மீதான திராவகம் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீசு அனுப்பவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நாடு முழுவதும் இளம்பெண்களுக்கு எதிரான திராவகம் வீச்சு சம்பவங்கள்

மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்குரிய கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருட்டு: சென்னை வாலிபர் கைது

Posted: 25 Jul 2014 02:26 PM PDT

சென்னையை சேர்ந்தவர் டி.பிரபு. இவர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தன்னை எம்.பி.ஏ. பட்டதாரி என்று சொல்லிக் கொள்கிறவர் ஆவார். பிரசித்தி பெற்ற மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தக்கூடிய அரசு இணைய தளங்களுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மைக்ரோசாப்ட் தயாரிப்புகளின் 'புராடக்ட் கீ' என்று சொல்லப்படக்கூடிய 'கோடு' ரகசியங்களை திருடி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி கோர காங்கிரசுக்கு தகுதி இல்லை: முகுல் ரோஹத்கி கருத்து

Posted: 25 Jul 2014 01:39 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் (55 எம்.பி.க் கள்) பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சி என்ற வகையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 60 இருப்பதாலும் காங்கிரசுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

மேற்கு வங்காளத்தில் ‘ஜப்பான் மூளையழற்சி’ நோய் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வு

Posted: 25 Jul 2014 01:18 PM PDT

மூளையழற்சி நோய் மற்றும் 'ஜப்பான் மூளையழற்சி' நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்காளம் மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. பாக்டீரியா கிருமிகளின் தொற்றால் ஏற்படும் ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தலைவலி, காய்ச்சல், சோர்வு, களைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

கார்கில் போர் வெற்றி தினம்: எவ்வித சவால்களையும் சமாளிக்க ராணுவம் தயார்-விக்ரம் சிங்

Posted: 25 Jul 2014 12:48 PM PDT

காஷ்மீர் எல்லைப்பகுதியான கார்கிலில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்கும் நோக்கில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்த இந்த போரின் இறுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த அனைத்து பகுதிகளையும் இந்தியா மீட்டது. சிறப்பு வாய்ந்த இந்த கார்கில் போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம்

ரெயில் விபத்தில் இறந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்

Posted: 25 Jul 2014 12:36 PM PDT

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரெயில் மோதியதில் 14 மாணவ-மாணவிகள், டிரைவர், கிளீனர் என மொத்தம் 16 பேர் பலியானார்கள். 20 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

மேற்கு வங்காளத்தில் பெட்ரோல் குண்டுகள் வெடித்து 4 வாலிபர்கள் பலி

Posted: 25 Jul 2014 11:43 AM PDT

மேற்கு வங்காளம் மாநிலம், மால்டா மாவட்டத்தின் கோபால்புரா பகுதியில் ஒரு கொட்டகை வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வெடித்துச் சிதறியதில் 4 வாலிபர்கள் உடல் சிதைந்து பலியாகினர். ரகசியமாக பெட்ரோல் குண்டுகள் தயாரித்து வந்த அந்த இடத்தில் எதிர்பாராத விதமாக குண்டுகள் வெடித்ததில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™