Tamil Star |
- காமன்வெல்த் துவக்க விழா கிளாஸ்கோ நகரில் கலர் ஃபுல்லாக துவங்கியது!
- அலுவலகத்தில் அரங்கேறும் கூத்தைப் பார்த்தீர்களா?…. பாவம் முதலாளி!
- நூலிழையில் உயிர் தப்பும் மனிதரின் விறுவிறுப்பான காட்சி!
- மில்லினியம் வோக் Q455 ஸ்மார்ட்போன் ரூ.7,999 விலையில் அறிமுகம்!
- விமானம் விழுந்து நொறுங்கி விமானி உள்பட 116 பேர் பலி!
- ‘மதம் மாறுங்கள்.. இல்லையேல் மரணம்’ கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்!
- அதிகாரிகளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் கட்டாய ஓய்வில் அனுப்பும் ராஜபக்ஷ அரசு!
- கட்சியை அழிக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தும் பசில்!
- போர் நிறுத்தம் செய்ய மாட்டோம்: ஹமாஸ் அதிரடி அறிவிப்பு!
- பேட்மேன் வடிவ பனிப்பாறை : அலைமோதும் சுற்றுலாப்பயணிகள்!
- கோப்பியில் கிரீம், சீனிக்கு பதில் பட்டர்!
| காமன்வெல்த் துவக்க விழா கிளாஸ்கோ நகரில் கலர் ஃபுல்லாக துவங்கியது! Posted: 24 Jul 2014 07:20 AM PDT
துவக்க விழாவில் 2000 கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று முதல் ஆக. 3ம் தேதி வரை நடைபெறுகின்றன. 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டிகளின் துவக்க விழா கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போட்டிகளை துவக்கி வைத்தார். இங்கிலாந்து பிரதமர் கேமரூன், ஸ்காட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சல்மாண்ட் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட முக்கிய பிரமுகர்கள் துவக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். கிராமி விருது பெற்ற பாப் பாடகர்கள் ராட் ஸ்டூவர்ட், சூசன் பாயல், ஆமி மெக்டொனால்ட் ஆகியோரின் பாடல்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின. கிளாஸ்கோவில் உள்ள செல்டிக் பார்க் மைதானத்தில் நடந்த இந்த துவக்க விழா நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். மேலும் இந்த மைதானத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமும், 11 மீட்டர் உயரமும், 38 டன் எடையும் கொண்ட இந்த திரையில் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. துவக்க விழாவில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய மூவர்ண கொடியை 2012 லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற விஜயகுமார் ஏந்தி வர, இந்திய வீரர்கள் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த முறை ஹோம் டீம் அட்வான்டேஜுடன் களம் இறங்கிய இந்திய வீரர்கள் பதக்க பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தனர். இந்த முறை 2ம் இடம் இங்கிலாந்துக்கு என்பது உறுதியாகி விட்டதால், 3ம் இடத்தை பிடிப்பதில் இந்தியா, கனடா இடையே கடும் போட்டி நிலவக் கூடும். ஸ்குவாஷில் தீபிகா பல்லிகல் நிச்சயம் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குத்துச்சண்டை, மல்யுத்தம், பாட்மிண்டன், ஹாக்கி, பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் உள் ளிட்ட போட்டிகளிலும் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த முறை டென்னிஸ், வில்வித்தை ஆகிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. பாட்மிண்டன் வீராங்கானை சாய்னா நெய்வால் காயம் காரணமாக பங்கேற்க இயலாமல் போனதும் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அணிவகுப்பில் இந்தியாவுக்கு முதலிடம் கடந்த 2010 காமன்வெல்த் போட்டிகளை நடத்திய நாடு என்பதால் நேற்று துவக்க விழாவில் நடந்த அணி வகுப்பில் இந்தியா முதலாவதாக வந்தது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அலுவலகத்தில் அரங்கேறும் கூத்தைப் பார்த்தீர்களா?…. பாவம் முதலாளி! Posted: 24 Jul 2014 07:12 AM PDT |
| நூலிழையில் உயிர் தப்பும் மனிதரின் விறுவிறுப்பான காட்சி! Posted: 24 Jul 2014 07:05 AM PDT |
| மில்லினியம் வோக் Q455 ஸ்மார்ட்போன் ரூ.7,999 விலையில் அறிமுகம்! Posted: 24 Jul 2014 06:56 AM PDT
Celkon நிறுவனம் புதன்கிழமை அன்று இந்திய சந்தையில் Celkon மில்லினியம் வோக் Q455 பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரூ.7,999 விலையில் தொடங்கப்பட்டது. மில்லினியம் வோக் Q455 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) காத்திருப்பு ஆதரவுடன் வருகிறது. இதில் 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் qHD ஐபிஎஸ் ஒஜிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரேம் 1GB உடன் இணைந்து ஒரு 1.2GHz குவாட் கோர் பிராட்காம் BCM23550 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மில்லினியம் வோக் Q455 ஸ்மார்ட்போனில் ஃப்ளாஷ் ஆதரவு கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 1.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. சாதனத்தில் microSD அட்டை வழியாக 64 ஜிபி விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு ஆதரிக்கிறது. கைபேசியில் பல்வேறு இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், (ஹாட்ஸ்பாட் செயல்பாடு உட்பட) Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும். மில்லினியம் வோக் Q455 ஸ்மார்ட்போனில் 2000mAh li அயன் பேட்டரி கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மெஷர்ஸ் 136.5x68x7.9mm மற்றும் 130 கிராம் எடையுடையது (பேட்டரி உடன்). கைபேசியில் ப்ராக்சிமிட்டி சென்சார், லைட் சென்சார் மற்றும் ஜி சென்சார் கொண்டுள்ளது. Celkon மில்லினியம் வோக் Q455 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் qHD ஐபிஎஸ் ஒஜிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.2GHz குவாட் கோர் பிராட்காம் BCM23550 ப்ராசசர், ஃப்ளாஷ் ஆதரவு கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 1.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 64 ஜிபி விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, 3 ஜி, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 2000mAh li அயன் பேட்டரி, 130 கிராம் எடை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விமானம் விழுந்து நொறுங்கி விமானி உள்பட 116 பேர் பலி! Posted: 24 Jul 2014 06:44 AM PDT
விமானம் நொறுங்கியதில் விமானிகள் 2 பேர், ஊழியர் 4 பேர், பயணிகள் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்டவுடன் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது இந்த மாதத்தில் நடக்கும் 2வது பெரிய உயிரிழப்பு சம்பவம் ஆகும். நெதர்லாந்து தலைநகரில் இருந்து சென்ற மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில் கடந்த 17-ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் உயிரிழந்தனர். மலேசியாவுக்கு சொந்தமான மற்றொரு விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பில்ஜிங் சென்ற போது மார்ச் 8ம் தேதி மாயமானதும் குறிப்பிடத்தக்கது. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பரபரப்பு அடங்குவதற்குள் அல்ஜீரியாவை சேர்ந்த மற்றொரு விமானம் திடீரென விபத்துக்குள்ளானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ‘மதம் மாறுங்கள்.. இல்லையேல் மரணம்’ கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்! Posted: 24 Jul 2014 06:40 AM PDT
ஈராக்கில் பல்வேறு நகரங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதில் மொசூல் நகரில் இருந்த 1800 ஆண்டு பழமை வாய்ந்த தேவாலயத்தை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், 'மதம் மாறுங்கள்.. இல்லாவிட்டால் மரணம் தான்' என்று கிறிஸ்தவர்களை தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் அரசு அமைந்துள்ளது. அங்கு கடந்த 2 மாதமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்களை நடத்தி பல்வேறு நகரங்களை கைப்பற்றி உள்ளனர். அந்த நகரங்களை மீட்க ஈராக் ராணுவம் போராடி வருகிறது. இதற்கிடையில், தீவிரவாதிகள் தாங்கள் கை பற்றிய பகுதிகளை இணைத்து தனிநாடாக அறிவித்து ராணுவ அமைப்பையும் ஏற்படுத்தினர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மொசூல் நகரமும் ஒன்று. இங்கு கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அங்கிருந்த 1800 ஆண்டு பழமையான தேவாலயத்தை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்துள்ளனர். சர்ச்சில் இருந்த பொருட்களையும் கைப்பற்றி அழித்துள்ளனர். மேலும், 'மதம் மாறுகிறீர்களா.. அல்லது மரணம் அடைகிறீர்களா..' என கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் மொசூல் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகாரிகளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் கட்டாய ஓய்வில் அனுப்பும் ராஜபக்ஷ அரசு! Posted: 24 Jul 2014 06:22 AM PDT
2015 ஆம் ஆண்டு நடத்த உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து, ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் தமக்கு அடிபணியாத அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளை பலவந்தமாக ஓய்வுபெற செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு அடிபணியாத தலைமை அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் ராஜபக்ஷவினர் தயாராகி வருகின்றனர். அண்மைக்காலமாக இந்த நிலைமையை எதிர்நோக்கி இருக்கும் முக்கிய அதிகாரி பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் என தெரியவந்துள்ளது. அவரை கட்டாயம் ஓய்வில் அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத குழுக்களினால் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்ட இனவாத மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் ஏற்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து பக்கசார்பற்ற வகையில் சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் மா அதிபர் மேற்கொண்ட முயற்சியே இதற்கு காரணம் எனப் பேசப்படுகிறது. இதனை தவிர மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் தேர்தல் பணிகளில் பொலிஸார் ஈடுபடுவதை எதிர்த்தமை, அரசாங்க முக்கியஸ்தர்களின் சட்டவிரோத வர்த்தகங்களை தடுக்க பொலிஸாரை ஈடுபடுத்தியமை என்பனவும் பொலிஸ் மா அதிபரை கட்டாய ஓய்வில் அனுப்பும் அரசாங்கத்தின் முயற்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டிலேயே முடிவடைய உள்ளது. எனினும் அவரை கட்டாய ஓய்வில் அனுப்ப அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு நகரில் நடக்கும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தி, போராட்டகார்களின் கண்கள் வெளியில் வரும் வரை தாக்குதல் நடத்த உத்தரவிடும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஓய்வுபெறும் வயதை பூர்த்தி செய்துள்ள நிலையிலும் அவருக்கு மூன்றாவது முறையும் பணிநீடிப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்தின் அரசியல் தேவை தெளிவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி சுதந்திரமாக கடமையை செய்ய முடியாத படி கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக எவருக்கும் அறிவிக்காமல் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார். பாதுகாப்பு தலைமை அதிகாரிகள் அண்மையில் ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் மா அதிபர் அதில் கலந்து கொள்ளவில்லை தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் ஆசையால் விரயமாகும் பொது நிதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட தேவைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மிஹின் லங்கா நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 440 கோடி ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது என பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தெரியவந்துள்ளது. குறித்த விமான நிறுவனம் 2013 ஆம் ஆண்டு சுமார் 287 கோடி ரூபா இழப்பை சந்தித்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. அதேவேளை மிஹின் லங்கா நிறுவனம் கடந்த ஏப்ரல் இறுதி வரை அரச வங்கிகளுக்கு 28 கோடியே 80 லட்சம் ரூபா கடனை செலுத்த வேண்டியிருந்ததாக அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான அரையாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கட்சியை அழிக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தும் பசில்! Posted: 24 Jul 2014 06:15 AM PDT
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியை அழிக்கும் வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில், தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்ட நபர்களுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு பதவிகளும், சிறப்புரிமைகளை வழங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார். இதில் ஒரு நடவடிக்கையாக தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி, சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொடவிற்கு கொலோன்ன தொகுதியின் இணை அமைப்பாளர் பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக சனி ரோஹன கொடித்துவக்கு பணியாற்றி வருகிறார். அவர் சரிவர செயற்படுவதில்லை எனவும் தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயதிஸ்ஸ ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவாளர் எனக் காரணம் கூறப்பட்டு இந்த புதிய இணைப்பாளர் நியமனம் மேற்கொள்ப்பட உள்ளது. இதனை தவிர மேலும் இரண்டு தேசிய சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான பதவியை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களை சுதந்திரக் கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகளில் அமைச்சர் பசில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது குறித்து வீரவன்ஸ கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| போர் நிறுத்தம் செய்ய மாட்டோம்: ஹமாஸ் அதிரடி அறிவிப்பு! Posted: 24 Jul 2014 02:56 AM PDT
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸா, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 15 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இதுவரை ஆகாயம் மார்க்கமான தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது. இதுவரை நடந்த போரில் பாலஸ்தீனத்தில் 649 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 32 ராணுவ வீரர்களும், 3 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இருதரப்பினரும் போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல், காஸா பகுதியில் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. சபையின் மனித உரிமை பிரிவு தலைவர் நவீபிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையே போர் நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இல்லை என்று ஹமாஸ் இயக்க தலைவர் ஹாலித் மெஷால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– நாங்கள் போரை நிறுத்த வேண்டுமென்றால் எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை இஸ்ரேல் விலக்கி கொள்ள வேண்டும். எகிப்து இடையேயான ரபா எல்லையை திறக்க வேண்டும். இஸ்ரேல் ஜெயிலில் உள்ள பாலஸ்தீனர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இதை செய்யாமல் நாங்கள் போர் நிறுத்தம் செய்ய முடியாது. அதை மீறினால் எங்கள் மக்களின் உயிர் தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். என்று அவர் கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேட்மேன் வடிவ பனிப்பாறை : அலைமோதும் சுற்றுலாப்பயணிகள்! Posted: 24 Jul 2014 02:47 AM PDT
இந்த பேட்மேன் பனிப்பாறையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவேகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. கனடாவில் உள்ள Newfoundland என்ற இடத்தில் Round Lake, Ontario என்ற பகுதியில் தோன்றிய பனிப்பாறை அப்படியே அச்சுஅசலாக பேட்மேன் போலவே உள்ளது. பேட்மேன் முகமூடி அணிந்தால் எப்படி இருக்குமோ அதேபோன்று தற்செயலாக அமைந்துள்ளது. இதனை முதன்முதலில் பார்த்த Little Bay, Newfoundland என்ற பகுதியை சேர்ந்த Mike Parsons என்பவர் இந்த பேட்மேன் பனிப்பாறையை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவை நூற்றுக்கணக்கானோர் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பேட்மேன் பனிப்பாறையை பார்க்க கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்து பார்வையிடுவதாகவும் கூறப்படுகிறது. Mike Parsons ஏற்கனவே இதுபோன்ற அதிசயமான பல புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கோப்பியில் கிரீம், சீனிக்கு பதில் பட்டர்! Posted: 24 Jul 2014 02:38 AM PDT
"மக்கள் அதிக சக்தி உள்ளவர்களாக உணர்கின்றனர். மூளைத்திறன் அதிகரிப்பு, குறைவான பசி, நிறை குறைகின்றது- குறைப்பதற்கு கஸ்டபடுபவர்களிற்கு. இதற்கெல்லாம் காரணம் பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு."என பதிவு செய்யப்பட்ட நல உணவு வல்லுநரும், healthysimplelife.com பதிவருமான Cassie Bjorkகூறியுள்ளார். இந்த கோப்பிக்கு தேவையானவை: 2-கப் சூடான கோப்பி 2-மேசைக்கரண்டி உப்பில்லாத புல்லுண்ணும் பட்டர் மற்றும் 2-மேசைக்கரண்டி MCT எண்ணெய்-இது இயற்கையாக தேங்காய் எண்ணெயில் காணப்படும். புல்லுண்ணும் பட்டர் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய் கொலஸ்ராலோலை கட்டுப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் அத்துடன் எச்சரிக்கையாக வைத்திருக்கவும் உதவும் என பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஆனால் இது குறித்து வைத்தியர்கள் சந்தேகப் படுவதாகவும் கூறப்படுகின்றது. கிரீம் மற்றும் சீனியுடன் 1-கப் கோப்பியும் 2-பட்டர் குரொசான்சிற்கும் பதிலாக 2-அவுன்ஸ் பட்டருடன் 1-கப் கோப்பி அருந்துவது சாதகமானதாக இருக்க முடியுமென இலநோயிஸ் வடக்குவெஸ்ரன் பல்கலைக்கழக இதய நோய் மருத்துவர் Dr. Kannan Mutharasan. தெரிவித்துள்ளார். நான் யாருக்கும் இதை பரிந்துரைக்கமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











