Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted: 24 Jul 2014 10:56 PM PDT

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தவழக்கில் நளினிக்கு முதலில் தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டது. அதன்பின் ஆயுளாக அது மாற்றப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஆயுள்தண்டனை கைதிகள் நீண்ட காலம் ஜெயில் இருப்பதாலும், வழக்கு தாமதம் ஏற்பட்டதாலும் அவர்களை

அனைவரும் மோடிக்கு ஆதரவு கொடுத்தால் இந்தியா இந்து நாடாகும்: மந்திரி பேச்சு

Posted: 24 Jul 2014 10:44 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடியை வாழ்த்தி கோவா சட்டசபையில் பாராட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது கோவா மாநில மந்திரி தீபக் தவ்லிகார் பேசும் போது, பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா ஒரு பெரிய இந்து நாடாக வளர்ச்சி பெறும் என்று நான் நம்புகிறேன். இந்த இலக்கை நோக்கி மோடி பணியாற்றி

பஸ் மீது ரெயில் மோதல்: 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை மாரடைப்பால் மரணம்

Posted: 24 Jul 2014 10:34 PM PDT

பள்ளி பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 2 குழந்தைகளை பறி கொடுத்த தந்தை மாரடைப்பில் மரணம் அடைந்தார். இந்த விபத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த சகோதர–சகோதரிகள் உயிரிழந்தனர். குண்டேடு பல்லி கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் சரண், தங்கைகள் திவ்யா, வித்யா ஆகிய 3 குழந்தைகள் பலியானார்கள். இஸ்லாம்பூரைச் சேர்ந்த அண்ணன்– தங்கையான வருன்,

186 எம்.பி.க்கள் மீதான வழக்கு: விரைவாக முடிக்க மோடி உத்தரவு

Posted: 24 Jul 2014 10:22 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது, ''நான் பிரதமரானால் கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் மீதான விசாரணையை ஓராண்டுக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்'' என்று கூறி இருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி நேற்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பி.க்கள் மீதான

கற்பழிப்பு புகாரில் காதலன் கைதானதால் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted: 24 Jul 2014 10:20 PM PDT

திருவனந்தபுரத்தை அடுத்த வெஞ்ஞாறுமூடு பகுதியை சேர்ந்தவர் மோகனன். இவரது மனைவி பிந்து. இவர்களின் மகள் மினி (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களின் பக்கத்து வீட்டில் மணிலால் (21) என்ற வாலிபர் குடியிருந்து வந்தார். இவர் அடிக்கடி மினியை சந்தித்து பேசினார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மேலும் மினியின் வீட்டிற்கு சென்றும் மணிலால் பேசிக்கொண்டிருப்பார். சம்பவதன்று மணிலால், மினி வீட்டிற்கு சென்ற போது அங்கு அவரது பெற்றோர் இல்லை. இதனை பயன்படுத்தி அவர் மினியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு ரெயில்வே சார்பில் ரூ.2 லட்சம் உதவித்தொகை

Posted: 24 Jul 2014 08:13 PM PDT

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பள்ளி பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் இறந்த குழந்தைகள் உள்பட 18 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா அறிவித்தார். பாராளுமன்றம் மற்றும் மேல்-சபை ஆகியவற்றில் இதுபற்றி சதானந்த

நிதாரி கொலை-சுரீந்தர் கோலியின் மறு ஆய்வு மனு தள்ளுபடி: தூக்கு உறுதி

Posted: 24 Jul 2014 04:12 PM PDT

உத்தரபிரதேசம் மாநிலம் நிதாரியில் 2006-ம் ஆண்டு 19 சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டு சாக்கடை கால்வாயில் வீசப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி தொழில் அதிபர் மொகீர்ந்தர்சிங், அவரது வேலைக்காரர் சுரீந்தர் கோலி ஆகியோரை கைது செய்தனர். இருவருக்கும் சி.பி.ஐ. கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதில் மொகீந்தர்சிங்

இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல்

Posted: 24 Jul 2014 12:45 PM PDT

நமது நாட்டில் 1999-ம் ஆண்டு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணைய சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் துறையில் தனியார் துறை நுழைந்தது. இந்தச் சட்டம் இன்சூரன்ஸ் துறையில் 26 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கும் அனுமதி அளிக்கிறது. ஆனால் இன்சூரன்ஸ் துறையை

ரெயில் மோதி பள்ளி குழந்தைகள் பலி: பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி இரங்கல்

Posted: 24 Jul 2014 12:20 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பள்ளிக்கூட பஸ் மீது ரெயில் மோதி பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

காதலை எதிர்த்த சகோதரனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்

Posted: 24 Jul 2014 10:36 AM PDT

வடமேற்கு டெல்லியில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரனை காதலனுடன் சேர்ந்து அவனது சகோதரி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் தேஜ்யாஷ் (வயது 19). இவரது சகோதரி நவ்ப்ரீத் கவுர். இவரும் வருண் சவுகான் (வயது 27) என்பவரும்

பிகானர் சிறைச்சாலையில் பயங்கர மோதல்: 3 பேர் கொலை

Posted: 24 Jul 2014 09:13 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் இரு பிரிவினரிடையே இன்று திடீரி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். நாட்டுத் துப்பாக்கியாலும் சுட்டனர். இந்த மோதலில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

நேபாளத்தில் போதை மருந்து கடத்திய 5 இந்தியர்கள் கைது

Posted: 24 Jul 2014 08:51 AM PDT

நேபாளத்தில் போதை மருந்து கடத்திய 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாளத்தில் அதிகரித்து வரும் போதை மருந்து கடத்தலைத் தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தலைநகர் காத்மண்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 5

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மீனா அகர்வாலா மரணம்

Posted: 24 Jul 2014 08:48 AM PDT

அசாம் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகி மற்றும் சமூக ஆர்வலரான மீனா அகர்வாலா தனது 90-வது வயதில் இன்று மரணம் அடைந்தார். மீனா அகர்வால் 1924-ம் அண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி நாகேந்திர நாத்- ஹேம்லதா பருஹா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் சிறுவதிலேயே நடனம் மற்றும் இசை ஆகியவற்றை பிரபலமான கலாகுரு பிஷ்னு பிரசாத் ரபாவிடம் இருந்து கற்றுக்கொண்டவர்.

அசாமில் கனமழை: 42 கிராமங்கள் பாதிப்பு- 25 ஆயிரம் பொதுமக்கள் வெளியேற்றம்

Posted: 24 Jul 2014 08:15 AM PDT

அசாமில் பெய்துவரும் கனமழையால் 42 கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. 25 ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றறப் பட்டுள்ளனர். அசாமில் பெய்துவரும் மழையால் தேமாஜி, லக்மிம்பூர், சோனித்பூர் மற்றும் ஜோர்காட் ஆகிய மாவட்டங்களில் உள்ள 42 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாணமை வாரியம் தெரிவித்துள்ளது. நேமாதிகாட் மற்றும் துப்ரியில் பிரம்மபுத்திரா

வெற்றியை எதிர்த்து வழக்கு: சோனியாவுக்கு உ.பி. ஐகோர்ட் நோட்டீஸ்

Posted: 24 Jul 2014 07:33 AM PDT

தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்திக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் ரமேஷ் சிங் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், "சோனியா காந்தி இதுவரை

கற்பை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய கணவன் குடும்பம்

Posted: 24 Jul 2014 05:45 AM PDT

மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணின் கற்பை நிரூபிக்க, பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பூனம் என்ற பெண் (25), 2007ம் ஆண்டு குணால் என்பவரை திருமணம்

கேரளாவில் மின்சாரம் தாக்கி 3 ஊழியர்கள் பலி

Posted: 24 Jul 2014 04:51 AM PDT

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மண்ணுத்தி பகுதியில் ஒருவர் புதியதாக ஒரு வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களான ஷிபு (வயது 27), சுரேஷ் (32) மற்றும் ஒப்பந்தத்தாரர் ஜிபி (30) உள்பட 7 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை: 28-வது குழு புறப்பட்டது

Posted: 24 Jul 2014 04:50 AM PDT

அமர்நாத் யாத்திரை செல்லும் 28-வது குழு இன்று பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

மும்பையில் மூத்த போலீஸ் அதிகாரி மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாடல் அழகி

Posted: 24 Jul 2014 04:44 AM PDT

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், மூத்த அதிகாரி தன்னை கற்பழித்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், ஐ.பி.எஸ். அதிகாரியான சுனில் பராஸ்கர் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பதவி வகித்தபோது தன்னை

மும்பை இளைஞரின் வாயிலிருந்து 232 பற்களை நீக்கி மருத்துவர்கள் சாதனை

Posted: 24 Jul 2014 04:44 AM PDT

மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த ஆஷிக் கவை(17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் வாயின் வலது பக்கத்தில் வீக்கம் இருப்பதாக அங்குள்ள ஜே.ஜே மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவனது வலது தாடையின் கீழ்ப் பக்கத்தில் இரண்டாவது கடைவாய்ப் பல்லைப் பாதிக்கும் அளவில் ஒரு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™