Tamil Star |
- வாகனம் பராமரிக்க சில டிப்ஸ்..
- இந்த குட்டீஸின் குரலை கேட்டுப் பாருங்க…. மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்!
- ஏமா பொண்ணுங்களா?…. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!
- குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!
- ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்க எச்சரிக்கை!
- சுங்க திணைக்களத்தில் விதிக்கப்படும் அபராதங்கள் குறைவு: ஆங்கில ஊடகம் குற்றச்சாட்டு!
- விமானத் தாக்குதல்: இலங்கை அரசு கவலை!
- ஏர்லைன்ஸ் சுட்டு வீழ்த்த்தப்பட்ட சம்பவத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் பலி: பிரதமர் ஹார்ப்பர் இரங்கல்!
- கனடாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு!
- கியுபெக் சுற்றுலா பேரூந்து விபத்திற்குள்ளாகியது. இளம் பெண் பரிதாப மரணம்!
- அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் யூலை 20 2014 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல்!
| Posted: 19 Jul 2014 07:23 AM PDT
வாகனங்களை வாரம் ஒருமுறை வீட்டிலேயே வாட்டர் வாஷ் செய்யவேண்டும். இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன்ஸ் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா, பேட்டரியில் டிஸ்டில்டு வாட்டர் அளவு சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட் இருந்தாலும், காலையில் முதல் தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது கிக் ஸ்டார்ட் செய்வது நல்லது. இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும். குறிப்பிட்ட தூரம் வாகனம் ஓடி முடித்ததும், வாகன தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் இன்ஜின் ஆயிலை மாற்றுவது நல்லது. இது, இன்ஜின் ஆயுளை நீடிக்கும். கிளட்ச் லீவரை கியர் மாற்ற மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போது லேசாக கிளட்ச் லீவரை பிடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இதன்மூலம், இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தி முழுவதும் வீலுக்கு செல்லாமல் வீணாகும். பைக்கில் செயின் ஸ்பிராக்கெட் அதிக இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருக்கக் கூடாது. இப்படி இருந்தால் பற்கள் தேய்ந்துபோகும். இன்ஜின் இழுவை சக்தி அதிகரித்து மைலேஜ் குறையும். டயர் அடிக்கடி பஞ்சர் ஆனால் அது பலவீனம் அடைந்துவிட்டது என அர்த்தம். உடனே மாற்றிவிடுவது நல்லது. டயர்களின் பட்டன் தேய்ந்து சமதளமாக டயர் மாறும்வரை ஒட்டுவது ஆபத்து.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த குட்டீஸின் குரலை கேட்டுப் பாருங்க…. மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்! Posted: 19 Jul 2014 07:08 AM PDT |
| ஏமா பொண்ணுங்களா?…. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! Posted: 19 Jul 2014 07:03 AM PDT |
| குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! Posted: 19 Jul 2014 02:24 AM PDT
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காஸா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த 8ம் தேதி தொடங்கிய போர், ஐநா முயற்சியால் 5 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தரைவழி தாக்குதலை மீண்டும் நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டதால், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் தீவிரப்படுத்தியுள்ளது. பீரங்கி தாக்குதலில் 23 அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. தரைவழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்தால் மோசமான விளைவுகளை இஸ்ரேல் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே ஹமாஸ்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் கொண்டு வர ஐநா முயற்சி எடுத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பு போர் காரணமாக வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்க எச்சரிக்கை! Posted: 19 Jul 2014 02:19 AM PDT
உக்ரைனில் 298 பேர் பலியாக காரணமான மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா இந்த எச்சரிக்கையை விடுத்தார். உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு கொடுப்பது தொடர்ந்தால் அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்று அவர் நேரடியாக எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்திய அவர், விசாரணைக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் தெரிவித்தார். ரஷ்யாவும் உக்ரைனும் இணைந்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் வல்லமை அந்நாடுகளுக்கு உண்டு என்றும் ஒபாமா சுட்டிக்காட்டினர். அதே நேரம் உக்ரைனில் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார். ரஷ்யாவின் ஆதரவு இல்லாமல் கிளர்ச்சியாளர்களால் செயல்பட முடியாது என்று கூறிய அவர், தேவையான ஆயுதங்களை வழங்கி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். தகுந்த பயிற்சி மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் இது போன்ற தாக்குதலை நிகழ்த்திவிட முடியாது என்றும் ஒபாமா கூறினார். கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் அதற்கு ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். விமான எதிர்ப்பு ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுங்க திணைக்களத்தில் விதிக்கப்படும் அபராதங்கள் குறைவு: ஆங்கில ஊடகம் குற்றச்சாட்டு! Posted: 19 Jul 2014 02:07 AM PDT
அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை இதற்கு ஆதாரமாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குற்றச்செயல்களை அதிகரிக்கவே உதவும் என்றும் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு கடத்தி செல்லப்படவிருந்த 2 கோடியே 65 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன எனினும் அதனை வைத்திருந்தவர் வெறும் 25 ஆயிரம் ரூபா அபராதத்தில் விடுவிக்கப்பட்டார். 24 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்தே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்த தங்கக்கட்டிகள் கடந்த வியாழக்கிழமையன்று கைப்பற்றப்பட்டன பெங்களுருக்கு செல்ல அவர் தயாரானபோதே அவை கைப்பற்றப்பட்டன. குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட சுங்க அதிகாரிகள் அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது இதன்போது தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| விமானத் தாக்குதல்: இலங்கை அரசு கவலை! Posted: 19 Jul 2014 01:06 AM PDT
மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளாகி, அப்பாவி உயிர்கள் பலியானமைக்கு இலங்கை அரசாங்கம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன், ஆழ்ந்த கவலையினையும் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மலேசியன் விமானம் எம்.எச் 17 கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனையடுத்து, விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, விபத்தில் பலியானவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் ஒழிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தலைசிறந்த நிபுணர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியத் தலைநகர் மெல்பேர்னில் நடைபெறும் 20வது சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்ற போதே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏர்லைன்ஸ் சுட்டு வீழ்த்த்தப்பட்ட சம்பவத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் பலி: பிரதமர் ஹார்ப்பர் இரங்கல்! Posted: 19 Jul 2014 12:55 AM PDT
நேற்று முன்தினம் மலேசியன் விமானம் எம்.எச் 17 கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனையடுத்து, விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில், கனடியர் ஒருவர் பலியான விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை மலேசியா ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் சீனியர் அதிகாரி Huib Gorter இன்று அளித்த பேட்டியில் 'உக்ரைன் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்த 154 டச்சு பயணிகள், 27 ஆஸ்திரேலிய பயணிகள், 23 மலேசிய பயணிகள், 11 இந்தோனேஷிய பயணிகள் 6 இங்கிலாந்து பயணிகள், 4 ஜெர்மனி பயணிகள், 4 பெல்ஜியம் பயணிகள், 3 பிலிப்பைன்ஸ் பயணிகள் மற்றும் ஒரு கனடா பயணி ஆகியோர்கள் பலியானதாக கூறியுள்ளார். மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு கனடா பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தவிமான வீழ்த்தப்பட்டது குறித்து நடைபெறும் விசாரணைக்கு கனடா உதவி செய்ய தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். விமான சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பத்தில் பலியான கனடா பயணியின் குடும்பத்திற்கு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு! Posted: 19 Jul 2014 12:47 AM PDT
அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்க வேண்டாம் என கனடா கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என கனேடிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் தீபக் ஒபராய் கோரியிருந்தார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவதுடன் ஜனநாயக நெறிமுறைகள் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கான கனேடிய தூதரகத்திற்கு அரச சார்பற்ற நிறுவனங்களே தகவல்களை வழங்கி வருவதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலான புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கியுபெக் சுற்றுலா பேரூந்து விபத்திற்குள்ளாகியது. இளம் பெண் பரிதாப மரணம்! Posted: 19 Jul 2014 12:43 AM PDT
கனடா- கியுபெக் சுற்றுலா பேரூந்து 55-பயணிகளுடம் நியு யோர்க் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை போய்க் கொண்டிருந்த சமயம் ஒரு பக்கம் சரிந்து புரண்டுள்ளது. இதனால் 14-வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் ஹட்சன் வடக்கு நியு யோர்க்கிற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. Chelssy Mercier என்ற இளம் பெண் தனது தாயாருடன் பயணம் செய்துள்ளார் என நியு யோர்க் பொலிசார் தெரிவித்துள்ளார். பேரூந்து புரண்டபோது இப்பெண் பேரூந்தில் இருந்து எறியப்பட்டு பேரூந்திற்கு அடியில் சிக்குண்டுள்ளாள். பேரூந்தின் ஒரு பகுதி அவளின் மேல் ஏறியபடி நின்று விட்டது என அதிகாரிகளின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது. மற்றய பயணிகளில் பலர் உள் மார்பு காயங்கள், உடைந்து சிதறியதால் ஏற்பட்ட வெட்டு காயங்கள் மற்றும் உடைந்த எலும்புகள் போன்ற காயங்களிற்கு உட்பட்டுள்ளனர். பயணிகளிற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்கவும் தகவல்களை சேகரிக்கவும் அதிகாரிகள் முயன்று வருகின்றனரென கனடிய மாநில அமைச்சர் லின் யெலிச் தெரிவித்துள்ளார். விபத்திற்கான காரணத்தை பொலிசார் புலன்விசாரனை செய்து வருகின்றனர். பாரம் தூக்கியை உபயோகித்து பேரூந்தை தூக்கி பெண்ணை காப்பாற்ற அருகிலிருந்தவர்கள் முயன்றதாகவும் ஆனால் அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் சம்பவ இடத்தை அடைந்த போது அவள் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 19 Jul 2014 12:37 AM PDT
உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் (Albert Campbell Square – Scarborough Civic Center) யூலை 20.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் Professor Daniel Ferenstein (President, International Association of Genocide Scholars) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் வழமைபோன்று தமிழ் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு கலை பண்பாட்டுக் கழகம் விளையாட்டுத்துறை மற்றும் 25 ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் இணைந்து இந்நிகழ்வை நடாத்தவுள்ளார்கள். 1983 யூலை ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 30 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது.தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் நிலங்களை அபகரிப்பதில் மிகவும் மும்மரமாகச் செயற்பட்டார்கள். அதன் உச்சக்கட்ட நடவடிக்கையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கம் தமிழர் நில அபகரிப்பு என்பதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இலக்காக தமிழர் மண்ணைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது ஒன்றும் புதிய விடயமில்லையெனினும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில அபகரிப்பின் தீவிரம் மிகுந்த அச்சத்தைத் தருவதாக அமைகின்றது. அதனால் அவர்களின் அம்முயற்சியை முறியடிப்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் முக்கிய கடமை மட்டுமன்றித் தேசியக் கடமையுமாகும். யூலை 83இல் படுகொலை செய்யப்பட்ட எம்முறவுகளை நினைவுகூர்வதுடன் போர்க்குற்றங்கள் குறித்துச் சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்நேரத்தில் அதற்குரிய ஆதரவை முற்றுமுழுதாக வழங்குவதுடன் போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேசக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, இராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும் சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கின்ற இவ்வேளையில் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு தமிழின அழிப்பையும் ஐ.நா, தலைமையில் தமிழீழ சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பையும் முன் நிறுத்தி இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களாய் ஒன்றாய் இணைந்து வரலாறு படைப்போம் வாரீர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










