Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரசிகர்களை திரட்டும் நடிகர் விஜய்: அரசியலில் களமிறங்க திட்டம்?

Posted:

அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் நடிகர் விஜய், அடுத்த மாதம், மதுரை தமுக்கம் மைதானத்தில் இதற்காக பிரமாண்ட விழா நடத்த தீர்மானித்திருக்கிறார். தீவிரமாகஅரசியலில் இறங்குவதற்கு, இந்த விழாவை அவர் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதால், அரசியல் அரங்கில், இந்த விழா குறித்து பரபரப்பாக பேசுகின்றனர்.

இதுகுறித்து, ...

விமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஜெயம்ரவி!

Posted:

ஜெயம் ரவியைப்பொறுத்தவரை ரொம்ப யதார்த்தமான மனிதர். சினிமா மேடைகளில் மனதில் பட்டதை ஓப்பனாக சொல்லி விடுவார். அதேப்போல், தான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை சார் என்று அழைக்காமல் அண்ணன் என்றே உரிமையோடு அழைப்பார். இதனால்தான் ஜெயம் ராஜாவுக்கு மட்டுமின்றி அவரை வைத்து படம் இயக்கிய அத்தனை இயக்குனர்களுக்குமே தம்பியாக இருந்து ...

கோடிகளில் புரளும் சாட்டிலைட் உரிமை வியாபாரம்...!

Posted:

ஒரு படத்தை ஆரம்பிக்கும் போதே அதன் வியாபார எல்லையைக் கருத்தில் கொண்டுதான் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஆரம்பிப்பது வழக்கம். இந்த ஹீரோவிற்கு இவ்வளவு வியாபாரம், இந்த இயக்குனருக்கு இவ்வளவு வியாபாரம், இந்த இசையமைப்பாளருக்கு இவ்வளவு வியாபாரம் என கணக்கு வைத்துக் கொள்வார். ஆனாலும், அநேக சமயங்களில் ஹீரோக்கள் மட்டுமே வியாபாரத்தை ...

தணிக்கைக்குழு உறுப்பினராக பிஸியானார் நடிகை குயிலி!

Posted:

சினிமாவில் நடித்து வந்த நடிகை குயிலிக்கு சென்சார் போர்டில் மெம்பராகும் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் பிஸியாக நடித்து வந்த குயிலி, அத்தனை பிஸியிலும் சென்சாருக்கு படம் திரையிடப்படும்போது தனக்கு அழைப்பு வந்தால் தவறாமல் கலந்து கொள்வார். தற்போது வாரம் வாரம் சுமார் 4 படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல சென்சார்போர்டு ...

வயதான நடிகர்களுக்கும் கதை எழுதுங்கள் - கமல் வேண்டுகோள்!

Posted:

சினிமாவில் நாளுக்கு நாள் இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக நிறைய இளம் கதாசிரியர்கள் அறிமுகமாகி சாதித்து வருகின்றனர். அவர்களுக்கு கமல்ஹாசன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, இன்றைய இளம் கதாசிரியர்கள், இளைஞர்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், வயதான நடிகர்களுக்கும் சேர்த்து கதை எழுதுங்கள் என கமல்ஹாசன் ...

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்கு யு சான்றிதழ்! உற்சாகத்தில் பார்த்திபன்!

Posted:

ஆர்.பார்த்திபன் இயக்கி வந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கடந்த வாரம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியது! கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்ததும் உற்சாகமடைந்த பார்த்திபன் ஆகஸ்ட் மாதம்1 தேதி அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். இதைன் ரெவிஸ் ...

பிரேக் கொடுத்த இயக்குநருக்கு கை கொடுத்த ஜெய்

Posted:

யூத், பகவதி தொடங்கி ஜெய் பல படங்களில் நடித்தாலும், அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது சுப்பிரமணியபுரம் மற்றும் எங்கேயும் எப்போதும் படங்கள்தான். சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய் தவிர வேறு பலரும் நடித்ததால் அப்படத்தின் வெற்றியை அவர் மட்டுமே அறுவடை செய்ய முடியாதநிலையில், எங்கேயும் எப்போதும் படம்தான் அவரை ஸோலோ ஹீரோவாக வெற்றி ...

விஷ்ணுவை வெறுப்பேற்றி வரும் தயாரிப்பாளர்

Posted:

முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றி விஷ்ணுவுக்கு ஏராளமான புதுப்பட வாய்ப்புகளை தேடிக் கொடுத்திருக்கிறது. வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு இதுவரை அரை டஜன் படங்களில் நடித்துவிட்டார். அவர் நடித்த படங்களில் நீர்ப்பறவை போன்ற சில படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததே தவிர வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி அடைந்ததில்லை. எனவே ...

அப்பா வேடங்களை தவிர்க்கும் கெளதமின் அப்பா கார்த்திக்!

Posted:

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான நவரசநாயகன் கார்த்திக், அதையடுத்து அக்னிநட்சத்திரம், மெளனராகம் போன்ற படங்களில் நடித்தபோது உச்சத்தில் இருந்தார். அப்போதெல்லாம் ஒருநாள்கூட அவர் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு செல்ல மாட்டார். அப்படியே சென்றாலும் வயிற்று வலி, தலைவலி என்று ஏதாவது காரணத்தை சொல்லிவிட்டு ...

தனுசுக்கு நம்பிக்கைக் கொடுத்த தண்டச்சோறு செண்டிமென்ட்!

Posted:

தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களில் வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிக்கொண்டு திரியும் வேடத்தில்தான் நடித்திருக்கிறார். குறிப்பாக, பொல்லாதவன், படிக்காதவன், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் அவருக்கு அப்பாக நடித்திருந்த ரகுவரன், கே.விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் அவரை தண்டச்சோறு என்றுதான் அழைப்பார்கள்.

அந்தவகையில் ...

மீடியாக்களைக் கண்டு தெறித்து ஓடும் ப்ரியாஆனந்த்!

Posted:

அரிமா நம்பி படத்திற்கு முன்புவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார் ப்ரியாஆனந்த். அதோடு, தனக்கு பிறகு வந்த லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா, நந்திதா போன்ற நடிகைகள் தனக்கான பட வாய்ப்புகளை கைப்பற்றி வருவதால், திரைக்குப்பின்னால் அவர்களை எதிர்த்து போராடுவதே அவருக்கு ஒரு பெரிய வேலையாக இருந்து ...

மலையாள சினிமா தயாரிப்பாளர் குடும்பத்துடன் படுகொலை!

Posted:

மலையாளத்தில் சோபார்னிகா பிலிம்ஸ் சார்பில் பல படங்களை தயாரித்தவர் சந்தோஷ்குமார். இவர் ஸ்வேதாமேனன் நடித்த ரதிநிர்வேதம், அமலாபால் நடித்த நீலத்தாமரா உள்பட ஏராளமான படங்களை விநியோகம் செய்தவர். அதோடு, துபாயில் தொழில் அதிபராகவும் இருந்தார். பல தொழில்கள் நடந்து வந்ததால், கேரளாவுக்கும், துபாய்க்கும் பறந்து ...

தமிழ் படங்களை பார்க்க பிரத்யேக இணையதளம் துவக்கம்!

Posted:

இன்றைய நவநாகரீக உலகில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வெகமாக செல்கிறது. தியேட்டரில் போய் படம் பார்த்த காலம் போய் இப்போது செல்போனிலேயே படங்களை பார்க்கும் காலமாகிவிட்டது. தற்போது சினிமாவில் இருப்பவர்களை தங்களது படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் டிடிஎச்., போன்றவற்றில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போது ...

த்ரிஷ்யம் தயாரிப்பாளருக்கு இந்தி இயக்குனர் ஏக்தா கபூர் நோட்டீஸ்

Posted:

மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான படம் த்ரிஷ்யம். தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு எதிராக பிரபல இந்தி இயக்குனர் ஏக்தா கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்தப் படம் பிபோர் அண்ட் ஆப்டர் என்ற ஆங்கில ...

சிவரகசியம் புதிய தொடர்: லிங்குசாமி தொடங்கி வைத்தார்

Posted:

சீரியல் இயக்குனர் நித்தியானந்தம் தற்போது புதியதோர் உலகம் செய்வோம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அடுத்து மீண்டும் சிவரகசியம் என்ற சீரியலை இயக்குகிறார். இதில் ஜெகன்மோகினி படத்தில் நடித்த நரசிம்மராஜு, மகாலட்சுமி (ரக்ஷிதா), அழகு, ராஜா நடிக்கிறார்கள். அபிராமி ராமநாதன் தயாரிக்கிறார். இதன் துவக்க விழா நடந்தது. இயக்குனர் ...

குத்தாட்ட நடிகையானர் மீனாட்சி!

Posted:

பிங்கி சர்க்கார் என்ற கோல்கட்டா மாடல் அழகி கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சி ஆனார். அதன் பிறகு அகம் புறம், பெருமாள், ராஜாதி ராஜா படங்களில் நடித்தார். அவர் கடைசியாக நடித்தது கரு.பழனியப்பனின் மந்திர புன்னகை. அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் 2 வருட இடைவெளிக்கு பிறகு வந்து ஹீரோயின் வாய்ப்பு ...

ஹாலிவுட் படம் தயாரிக்கிறார் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்

Posted:

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரன் அதாவது எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் பிரபாகரன் ஹரிகரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்குள்ள ஹாலிவுட் ஸ்டூடியோவில் சினிமா கற்றிருக்கும் அவர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: நான் ...

ஹீரோ ஹீரோயின் இல்லாமல் படம் இயக்குகிறார் ஜேம்ஸ் வசந்தன்

Posted:

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தற்போது வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். இது முழுக்க முழுக்க ஹாலிவுட் டைப்பிலான மியூசிக்கல் மூவி என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

அவர் மேலும் கூறியதாவது: பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய ...

ஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம்: ஸ்ரீப்ரியா, சுரேஷ் பாலாஜி இணைந்து தயாரிக்கிறார்கள்

Posted:

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கி இருந்தார். அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னடத்தில், பி.வாசு இயக்கினார், அங்கும் சூப்பர் ...

தெலுங்குப் பட வாய்ப்பு...மனைவி ஆசையை நிறைவேற்றிய ஜிப்ரான்... !

Posted:

'வாகை சூடவா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் 'ரன் ராஜா ரன்' என்ற தெலுங்குப் படம் மூலம் அங்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தமிழில் இவர் இசையமைத்த "வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி" ஆகிய படங்களில் 'குட்டிப்புலி' மட்டுமே ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும், திடீரென கமல்ஹாசனின் மனம் கவர்ந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™