மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய நிலவறைகளை பார்வையிட்ட ஜனாதிபதி
- ஆந்திராவில் புதிய தலைநகருக்காக அரசு உண்டியல் வசூல்
- உத்தரகாண்டில் 4 நாட்களாக இடைவிடாத மழை: 6000 பேர் தவிப்பு
- கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஷீலா தீட்சித் அறிவிப்பு
- தொடர் கற்பழிப்பு சம்பவங்கள்: கர்நாடக அரசுக்கு, சதானந்த கவுடா எச்சரிக்கை
- ஜனாதிபதியின் பெயரைக்கூட தெரியாத பீகார் ஆசிரியை
- பீகாரில் போலீஸ் துப்பாக்கி சூடு: 2 பேர் சாவு
- டெல்லியில் பா.ஜனதா ஆட்சியமைக்க ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை: காங்கிரஸ்
- பிரதமரின் நிவாரண நிதியில் குழந்தைகள்-ஏழைகளுக்கு முன்னுரிமை: மோடி வலியுறுத்தல்
- விவாகரத்து வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு
- இஸ்ரேலை கண்டித்து காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி
- பதான் பாலியல் வழக்கு: சிறுமிகளின் உடல்களை தோண்டியெடுத்து ஆய்வு செய்ய சி.பி.ஐ. முடிவு
- கேரளாவில் பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண் கொலை: 3 பேர் தலைமறைவு
- மேற்கு வங்காளத்தில் மூளையழற்சி நோய்க்கு 47 பேர் பலி
- சுஷ்மா சுவராஜ் முயற்சியால் சவுதி அரேபிய சிறையில் வாடிய 40 இந்தியர்கள் விடுதலை
- 21 கோடி பேர் வசிக்கும் உ.பி.யில் கற்பழிப்பு குறைவு: முலாயம்சிங் கருத்து
- பெங்களூரில் 6 வயது மாணவி கற்பழிப்பு: பள்ளியில் பெற்றோர் 3–வது நாளாக முற்றுகை
- அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க 1,398 யாத்ரீகர்களுடன் 23-வது குழு புறப்பட்டது
- தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்
- திருவனந்தபுரத்திற்கு ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
| பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய நிலவறைகளை பார்வையிட்ட ஜனாதிபதி Posted: 19 Jul 2014 10:18 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் கேரளா சென்றார். முதல்நாள் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இரவு கேரள கவர்னர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி |
| ஆந்திராவில் புதிய தலைநகருக்காக அரசு உண்டியல் வசூல் Posted: 19 Jul 2014 09:53 PM PDT ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திராஎன 2 மாநிலமாக பிரிக்கப்பட்டது. தலைநகர் ஐதராபாத் தெலுங்கானாவுடன் சேர்க்கப்பட்டதால் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய தலைநகரை மத்திய அரசு குழு ஆய்வு |
| உத்தரகாண்டில் 4 நாட்களாக இடைவிடாத மழை: 6000 பேர் தவிப்பு Posted: 19 Jul 2014 09:45 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பேரழிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். கேதார்நாத் கோவில் சேதம் அடைந்தது. மலைப் பாதைகள் மண்சரிவு ஏற்பட்டு கடுமையாக சேதம் அடைந்தது. அங்கு நிவாரணப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்றது. மலைப் பாதைகள் சீரமைக்கப்பட்டு |
| கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஷீலா தீட்சித் அறிவிப்பு Posted: 19 Jul 2014 09:25 PM PDT பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பிறகு அந்த அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட சில கவர்னர்களை |
| தொடர் கற்பழிப்பு சம்பவங்கள்: கர்நாடக அரசுக்கு, சதானந்த கவுடா எச்சரிக்கை Posted: 19 Jul 2014 04:05 PM PDT ''தொடர் கற்பழிப்பு சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசு தலையிடும்'' என்று கர்நாடக அரசுக்கு மத்திய மந்திரி சதானந்த கவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரின் 6 வயது மகள் நேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெங்களூர் வர்த்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குன்டதஹள்ளி கேட் அருகே வர்த்தூர்-ஹரலூர் மெயின்ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வரும் நேகாவுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியரும், காவலாளியும் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. |
| ஜனாதிபதியின் பெயரைக்கூட தெரியாத பீகார் ஆசிரியை Posted: 19 Jul 2014 09:30 AM PDT மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு ஆசிரிய-ஆசிரியைகள் பாடத்திட்டங்கள் மட்டுமின்றி பொது அறிவிலும் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், பீகாரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பிரதீபா பாட்டீலை ஜனாதிபதி என்றும், ஸ்மிருதி இரானியை கவர்னர் என்றும் கூறியது கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. |
| பீகாரில் போலீஸ் துப்பாக்கி சூடு: 2 பேர் சாவு Posted: 19 Jul 2014 09:06 AM PDT பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் இறந்தனர். மாவோயிஸ்ட் தீவிரவாதி என்ற சந்தேகத்தின்பேரில் மதன்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் இன்று பிற்பகல் மதன்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் அருகில் திரண்டு ஆர்ப்பாட்டம் |
| டெல்லியில் பா.ஜனதா ஆட்சியமைக்க ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை: காங்கிரஸ் Posted: 19 Jul 2014 08:21 AM PDT டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களைப் பிடித்தபோதிலும் ஆட்சியமைக்க போதிய உறுப்பினர்கள் இல்லாததால் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. எனவே, இரண்டாவது இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. ஆனால், லோக்பால் விவகாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக முதல்வர் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதையடுத்து சட்டசபை முடக்கப்பட்டுள்ளது. |
| பிரதமரின் நிவாரண நிதியில் குழந்தைகள்-ஏழைகளுக்கு முன்னுரிமை: மோடி வலியுறுத்தல் Posted: 19 Jul 2014 07:57 AM PDT டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் செயல்பாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியை நிர்வகிக்கும் வழிமுறைகளில் பல்வேறு தரமான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் மோடி யோசனை தெரிவித்தார். |
| விவாகரத்து வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு Posted: 19 Jul 2014 05:34 AM PDT பொதுவாக விவாகரத்து வழக்கு என்றாலே பாதிக்கப்படும் மனைவியின் வாழ்வாதாரத்திற்காக கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிடுவதையே பார்த்திருக்கிறோம். ஆனால், கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்கும் தீர்ப்பு என்பது மிக அரிதாகவே இருக்கும். |
| இஸ்ரேலை கண்டித்து காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி Posted: 19 Jul 2014 04:42 AM PDT காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடந்த போராட்டத்தின்போது வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். காசாவில் உள்ள போராளிகளை அழிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்திய இஸ்ரேல் ராணுவம், முதலில் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது. தற்போது முன்னேறிச் சென்று தரைவழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான மக்கள் |
| பதான் பாலியல் வழக்கு: சிறுமிகளின் உடல்களை தோண்டியெடுத்து ஆய்வு செய்ய சி.பி.ஐ. முடிவு Posted: 19 Jul 2014 03:35 AM PDT உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் கடந்த மே மாதம் 27-ம் தேதி காணாமல் போனார்கள். 14 மற்றும் 15 வயது கொண்ட அந்த சிறுமிகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கொடூரமாக கொலை செய்து அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். |
| கேரளாவில் பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண் கொலை: 3 பேர் தலைமறைவு Posted: 19 Jul 2014 02:58 AM PDT கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் அப்துல் (வயது 56). இவரது மகள் அசீனா (27). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அசீனா மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது பெற்றோர் அவருக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த பயனும் இல்லாததால் மகளை வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர். |
| மேற்கு வங்காளத்தில் மூளையழற்சி நோய்க்கு 47 பேர் பலி Posted: 19 Jul 2014 02:28 AM PDT 'ஜப்பான் மூளையழற்சி' நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த 47 பேர் பரிதாபமாக பலியாகினர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிலிகுரி மாவட்டம் மற்றும் வடக்கு வங்காளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 36 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக |
| சுஷ்மா சுவராஜ் முயற்சியால் சவுதி அரேபிய சிறையில் வாடிய 40 இந்தியர்கள் விடுதலை Posted: 19 Jul 2014 12:46 AM PDT இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியின் போது தொழிலாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். அதற்கு கண்டனம் தெரி வித்து போராட்டம் நடத்தினார்கள். எனவே, இந்திய தொழிலாளர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் |
| 21 கோடி பேர் வசிக்கும் உ.பி.யில் கற்பழிப்பு குறைவு: முலாயம்சிங் கருத்து Posted: 19 Jul 2014 12:25 AM PDT உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்து ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் மிக பெரிய மாநிலமான உ.பி.யில் 21 கோடி மக்கள் தொகை உள்ளது. இங்கு கற்பழிப்பு சம்பவங்கள் மிகவும் குறைவாகத்தான் உள்ளது |
| பெங்களூரில் 6 வயது மாணவி கற்பழிப்பு: பள்ளியில் பெற்றோர் 3–வது நாளாக முற்றுகை Posted: 19 Jul 2014 12:13 AM PDT பெங்களூரில் எலட் விப்ஜியார் என்ற தனியார் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 2–ம் வகுப்பு 6 வயது சிறுமி கடந்த வாரம் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று சிறுமி வகுப்பறையில் குறும்புத்தனமாக நடந்து கொண்டதால் வகுப்பறையை விட்டு வெளியேறச் சொல்லி ஆசிரியர் தண்டனை கொடுத்தார். அருகில் உள்ள உடற் பயிற்சி கூடத்தில் தனியாக அடைத்து |
| அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க 1,398 யாத்ரீகர்களுடன் 23-வது குழு புறப்பட்டது Posted: 19 Jul 2014 12:08 AM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்திரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்திரீகர்களின் முதல் குழுவினர் |
| தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் Posted: 18 Jul 2014 11:34 PM PDT உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகில் உள்ள நிதாரி கிராமத்தைச் சேர்ந்தவன் சுரீந்தர் கோலி. இவன் ஏராளமான சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பிறகு கொலை செய்தவன். இவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| திருவனந்தபுரத்திற்கு ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 18 Jul 2014 11:24 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா சென்றார். திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் பாதுகாப்பு பணியும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |