Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றிய மாநகர முதல்வருக்கான வேட்பாளர் விவாதம்!

Posted: 15 Jul 2014 11:32 PM PDT

debate

debateகனடியத் தமிழ்க் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநகர முதல்வர்களிற்கான வேட்பாளர் விவாதம் கனடிய தேசிய அரங்கில் கனடிய தமிழர்களிற்கு மிகுந்த நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் சகல பிரதான ஊடகங்களினாலும் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்பட்ட இந்த விவாதத்தில் மண்டபம் நிறைந்த பல்லின மக்கள் கலந்து கொண்டதோடு கனடியத் தமிழ்க் காங்கிரஸின் முயற்சிக்கான தமது நன்றியறிதலையும் தெரிவித்திருந்தனர். கனடியத் தமிழர் காங்கிரஸால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநகர முதல்வருக்கான வேட்பாளர்கள் விவாதம் இது என்பதை கடந்த சில நாட்களாகவே எடுத்தியம்பி வந்த கனடிய ஊடகங்கள் இந்த விவாதத்தில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு ஆட்கொள்ளப்பட்ட தற்போதைய முதல்வர் ரொப் போட், போதைப்பொருள் மீள்வாழ்வுச் சிகிச்சைக்குப் பின்னர் கலந்து கொண்ட விவாதமாக இது இருந்ததால் அதீத முக்கியத்துவத்தை இந்த விவாததிற்குக் கொடுத்ததோடு, கனடிய மைய அரசியல் மற்றும் மாகாண ஆட்சியாளர்கள், அரசியலாளர்களால் இந்த விவாதம் உண்ணிப்பாகக் கவணிக்கப்பட்டது. அவ்வாறன கவணிப்பைப் பெற்ற இந்த விவாதம் ஸ்காபரோ என்ற நகரில் இடம்பெற்ற போதும் இது கனடியத் தமிழ் காங்கிரஸ் என்ற தமிழர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதும், அதில் கனடியர்கள் உள்ளிட்ட பல்லினத்தவர்களும் பெருமளவில் பங்கு கொண்டதும் ஊடகங்கள் மற்றும் அரசியலாளர்களின் கவணத்தை பெற்ற விடயமாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்லினத்தவர்களின் பங்குபற்றுதலுடன் தமிழர்களின் தலைமைத்துவத்தைக் கொண்டுவருவதில் கனடிய தமிழ்க்காங்கிரஸ் அமைப்பு ஒரு வரலாற்று வெற்றியை இன்றைய விவாதத்தின் மூலம் தமிழர்களிற்கு ஈட்டிக் கொடுத்திருந்தது. கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தமிழர்களிற்கான காத்திரமான ஒரு அரசியல் தலைமை என்ற நிலையில் இருந்து மேம்பட்டு பல்லின சமூகத்தினரை கனடியத் தமிழ்ச் சமூகத்தின் நிகழ்வுகளில் இணைப்பதற்கான முன்மாதிரியாக வருடாவருடம் பல நிகழ்வுகளை நடாத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இராட்சத ஆபிரிக்க நத்தைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் விமானநிலையத்தில் இடைமறிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது!

Posted: 15 Jul 2014 11:16 PM PDT

snail

snailU.S. சுங்க அதிகாரிகள் ஒரு கூடையில் நிறைக்கப் பட்டிருந்த 67-உயிருள்ள இராட்சத நத்தைகளை கைப்பற்றியுள்ளனர். இந்த நத்தைகள் நைஜீரியாவிலிருந்து கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவருக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பரிசோதனையாளர்களினால் இடைமறிக்கப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மெல்லுடலிகள் உலகிலேயே மிக பெரிய நத்தைகள். இவை 8-அங்குல நீளத்திற்கு வளரக்கூடியவை. தீங்கு விளைவிக்க கூடிய ஒட்டுண்ணிகள் மட்டுமல்லாது மூளைக்காய்ச்சல் நோயை ஏற்படுத்த கூடியவை என்பதனால் இவற்றிற்கு யு.எஸ்.சில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை வாசிங்டனிலுள்ள மத்திய மெல்லுடலிகள் நிபுணர்களிற்கு அனுப்ப பட்டு தடை செய்யப்பட்ட இனம் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் தீக்கிரையாக்கப்பட்டன. சில சமயங்களில் யு.எஸ். சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் ஒன்று அல்லது இரண்டு நத்தைகள் பயணிகளின் பொதிகளில் ஊர்ந்து வருவதை கண்டுள்ளனர். ஆனால் இவ்வளவு தொகையாக காண்பது இதுவே முதல் தடவை என கூறப்பட்டுள்ளது. இவற்றினால் உள்நாட்டு தாவரங்களிற்கும் தீவிரமான தீங்கு விளையும் எனவும் கூறப்பட்டது. நத்தைகளை பெற இருந்தவர் எந்த வித தண்டனையையும் எதிர் நோக்க மாட்டார் ஆனால் என்ன காரணத்திற்காக தனி நபர் ஒருவருக்கு இவ்வளவு தொகையான நத்தைகள் தேவைப் பட்டதென்பதை கண்டறிய அதிகாரிகள் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசலாம்! விமல் வீரவன்ச கருத்து

Posted: 15 Jul 2014 12:01 AM PDT

wimal_mahinda

wimal_mahindaதென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி என்று கூறப்படும் சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயத்தை தலையீடு என்று எண்ணவில்லை, அது ஒரு கலந்துரையாடலே என்று இலங்கையின் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிந்திய செவ்வி ஒன்றில் சிறில் ரமபோஸா வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தமையானது, இனப்பிரச்சினை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமே என்றும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். ரமபோஸாவை மத்தியஸ்தர் என்ற நிலையில் அரசாங்கம் பார்க்கவில்லை. அதற்கான உறுதிமொழி தமக்கு வழங்கப்பட்டுள்ளது. அது மீறப்படுமானால் அந்த வேளையில் தமது கட்சி தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார். தமது கட்சி ஏற்கனவே அரசாங்கத்திடம் வழங்கியுள்ள 12 அம்சக் கோரிக்கைகளில் 4 வது அம்சமாக வெளிநாட்டு தலையீடுகளை ஏற்பதில்லை என்ற விடயம் அடக்கப்பட்டுள்ளது. அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதை தமது கட்சி எதிர்க்கப் போவதில்லை என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™