மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஈராக் போராளிகளிடம் சிக்கி 1 மாதமாக தவிப்பு: 39 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்
- யார் இந்த வைதிக்?: மோடி அரசுக்கு தலைவலி ஏற்படுத்திய புதிய சாமியார்
- ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி
- அம்பிரீஸ் சிங்கப்பூர் சிகிச்சை செலவு ரூ.1.16 கோடி: கர்நாடக அரசு செலவை ஏற்றது
- நிலக்கரி பேர ஊழல்: 14 புதிய வழக்குகள் தொடர சி.பி.ஐ. முடிவு
- ஹபீஸ் சயீத்தை சந்தித்தவர் ஆர்எஸ்எஸ் ஆள் அல்ல: ராம் மாதவ் மறுப்பு
- காணாமல் போன திரிணாமுல் தலைவர் பிணம் வயலில் இருந்து தோண்டி எடுப்பு
- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி மனு
- ரூ.20 கோடிக்கு டெல்லி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சி: கெஜ்ரிவால்
- டீசல் மொத்த விற்பனை விலை ஒரு ரூபாய் குறைப்பு
- தீவிரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு
- ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்: தேசிய மாநாட்டு கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- விவசாயியாக பிறக்கக்கூடாது: தற்கொலை செய்த தந்தை மகனிடம் கடைசியாக பேசிய வார்த்தை
- ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: சதானந்த கவுடா
- மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்: இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை
- மும்பை அருகே மூழ்கத்தொடங்கிய கப்பலில் இருந்த 11 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய ரெயில்வே சார்பில் 90 சிறப்பு ரெயில்கள்
- அகிலேஷ் பயணம் செய்ய மெர்சிடிஸ்-லேண்ட் குருய்சர் கார்கள்; பெண்கள் ஆணையத்திற்கோ பட்ஜெட் குறைப்பு
- கங்கையில் கழிவுகளைக் கலக்கும் 48 தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு
| ஈராக் போராளிகளிடம் சிக்கி 1 மாதமாக தவிப்பு: 39 இந்தியர்களை மீட்பதில் சிக்கல் Posted: 15 Jul 2014 10:54 PM PDT ஈராக்கில் ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டையால் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது. இதனால் அங்கு பணி புரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் நாடு திரும்பி வருகிறார்கள். ஆனால் சில நிறுவனங்கள் இந்தியர்களை திருப்பி அனுப்ப மறுத்து அவர்களது பாஸ்போர்ட், விசா போன்றவற்றை கைப்பற்றி வைத்துள்ளது. |
| யார் இந்த வைதிக்?: மோடி அரசுக்கு தலைவலி ஏற்படுத்திய புதிய சாமியார் Posted: 15 Jul 2014 10:48 PM PDT மோடி அரசுக்கு தலைவலி ஏற்படுத்திய வைதிக் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் இப்போது பரபரப்பாக பேசப்படும் நபர் வேத பிரதாப் வைதிக். பத்திரிகையாளரான இவர் இதுவரை பல பிரமுகர்களை சந்தித்துள்ளார். அப்போதெல்லாம் அவரை பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. திடீர் என்று வைதிக்கும், பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது. இதுதான் பரபரப்பை |
| ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி Posted: 15 Jul 2014 10:31 PM PDT இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரெயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கிறார்கள். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்பவே இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கிடைக்கும். |
| அம்பிரீஸ் சிங்கப்பூர் சிகிச்சை செலவு ரூ.1.16 கோடி: கர்நாடக அரசு செலவை ஏற்றது Posted: 15 Jul 2014 10:24 PM PDT நடிகர் அம்பிரீஸ் கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை மந்திரியாக உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அம்பிரீசுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். தனி ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவரை சிங்கப்பூர் கொண்டு சென்றனர். அவருடன் மனைவி சுமலதா 3 டாக்டர்கள் உடன் சென்றனர். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அவருக்கு |
| நிலக்கரி பேர ஊழல்: 14 புதிய வழக்குகள் தொடர சி.பி.ஐ. முடிவு Posted: 15 Jul 2014 09:39 PM PDT நிலக்கரி பேர ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 18–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது. 64 இடங்களில் நிலக்கரி எடுப்பது தொடர்பாக நடந்த பேரம் |
| ஹபீஸ் சயீத்தை சந்தித்தவர் ஆர்எஸ்எஸ் ஆள் அல்ல: ராம் மாதவ் மறுப்பு Posted: 15 Jul 2014 08:51 PM PDT மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை மூளையாக இருந்து இயக்கியவன், ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தாய் நிறுவனமான ஜமாத் உத் தவாவின் தலைவன். இந்த ஹபீஸ் சயீத்தை, பாகிஸ்தானுக்கு பத்திரிகையாளர் என்ற முறையில் சக பத்திரிகையாளர்களுடன் சென்ற யோகா குரு பாபா ராம்தேவின் |
| காணாமல் போன திரிணாமுல் தலைவர் பிணம் வயலில் இருந்து தோண்டி எடுப்பு Posted: 15 Jul 2014 05:21 PM PDT மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 24-வது பர்கானா மாவட்டத்தை சேர்ந்தவர், சுனில் ஹல்தார் (50). திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவராக உள்ள இவர், நேற்று முன்தினம் இரவு கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. |
| தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 15 Jul 2014 01:24 PM PDT 3 கல்லூரி மாணவிகள் பலியான தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொடைக்கானல் 'பிளசன்ட் ஸ்டே' ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை |
| கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி மனு Posted: 15 Jul 2014 12:56 PM PDT கச்சத்தீவு, இந்தியாவின் ஒருபகுதி என அறிவித்து தமிழக மீனவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி சார்பில் எதிர்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த ஜூலை மாதம் தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில், சுப்ரீம் கோர்டடில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா- |
| ரூ.20 கோடிக்கு டெல்லி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சி: கெஜ்ரிவால் Posted: 15 Jul 2014 11:24 AM PDT டெல்லி முதல் மந்திரி நாற்காலி 'சுட்டு விட்டதால்' பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியை வீழ்த்தி எம்.பி.யாகும் ஆசைக் கனவுடன் அவரை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு, மூக்கை உடைத்துக் கொண்டார். 3 மாத காலமாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிரசாரம் செய்தும், அவர் எதிர்பார்த்த பலன் |
| டீசல் மொத்த விற்பனை விலை ஒரு ரூபாய் குறைப்பு Posted: 15 Jul 2014 11:06 AM PDT ரெயில்வே துறை, மாநில அரசுகள் நடத்தி வரும் போக்குவரத்து கழகங்கள் ஆகியவற்றின் தேவைக்காக விற்கப்படும் டீசலின் மொத்த விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.09 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. |
| தீவிரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு Posted: 15 Jul 2014 09:23 AM PDT பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது. தீவிரவாதம் எந்த வடிவத்தில் உருவானாலும் அது மனித குலத்திற்கு எதிரானதாகும். இனியும் வேடிக்கை பார்த்தால் கடும் விளைவுகள் ஏற்படும். |
| ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்: தேசிய மாநாட்டு கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted: 15 Jul 2014 08:24 AM PDT ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேசிய மாநாட்டுக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் செயல் தலைவர் உமர் அப்துல்லா தலைமையில் இன்று நடைபெற்றது. |
| விவசாயியாக பிறக்கக்கூடாது: தற்கொலை செய்த தந்தை மகனிடம் கடைசியாக பேசிய வார்த்தை Posted: 15 Jul 2014 06:29 AM PDT ஆந்திர மாநிலத்தில் வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகனிடம் கடைசியாக பேசும்போது விவசாயியாக மட்டும் பிறக்காதே என்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: சதானந்த கவுடா Posted: 15 Jul 2014 05:44 AM PDT ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை என்று மத்திய மந்திரி சதானந்த கவுடா தெரிவித்தார். மக்களவையில் இன்று ரெயில்வே பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா பேசியதாவது:- |
| மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்: இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை Posted: 15 Jul 2014 05:34 AM PDT அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது. |
| மும்பை அருகே மூழ்கத்தொடங்கிய கப்பலில் இருந்த 11 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு Posted: 15 Jul 2014 04:49 AM PDT மும்பை அருகே நங்கூரம் உடைந்ததால் மூழ்கத் தொடங்கிய கப்பலில் சிக்கித் தவித்த 11 ஊழியர்களை கடலோர காவல் படையினர் காப்பாற்றி கரைசேர்த்தனர். மும்பையில் இருந்து 1900 மில்லியன் இரும்பு துகள்களை ஏற்றிச் சென்ற |
| விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய ரெயில்வே சார்பில் 90 சிறப்பு ரெயில்கள் Posted: 15 Jul 2014 04:40 AM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய ரெயில்வே 90 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முன்பதிவு வசதி கொண்ட 52 ரெயில்களும், முன்பதிவு செய்யப்படாத 38 ரெயில்களும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. |
| அகிலேஷ் பயணம் செய்ய மெர்சிடிஸ்-லேண்ட் குருய்சர் கார்கள்; பெண்கள் ஆணையத்திற்கோ பட்ஜெட் குறைப்பு Posted: 15 Jul 2014 04:34 AM PDT உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில் அம்மாநில அரசு பெண்கள் ஆணையத்திற்கான நிதியை குறைத்துள்ளது. அதே சமயம் அம்மாநில முதல்வரான அகிலேஷின் சொகுசு பயணத்திற்காக மெர்சிடிஸ் மற்றும் இரண்டு லேண்ட் குருய்சர் கார்கள் வாங்கப்பட்டது அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| கங்கையில் கழிவுகளைக் கலக்கும் 48 தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு Posted: 15 Jul 2014 02:19 AM PDT இந்தியாவின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் நரேந்திர மோடி பதவியேற்றபோது கங்கையை சுத்தப்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையிலும், அதனுடைய துணை நதிகளிலும் ஏற்கனவே சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுவரும்போதும் நேற்றைய கூட்டத்தில் இது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன. அப்போது மொத்தம் 764 மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |