Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நஸ்ரியா!

Posted: 12 Jul 2014 02:20 AM PDT

ajith-nazria

ajith-nazriaஅஜீத் என்னுடைய மனதிற்கு பிடித்த ஹீரோ என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார். அவருடன் நடிக்க முடியாவிட்டாலும் ஒருமுறையாவது நேரில் பார்த்து பேச ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமீபத்தில் விஜய் விருது விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார் நஸ்ரியா. அவரிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டதற்கு, அஜீத் என்று கூறினார். நஸ்ரியாவுக்கு, அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக, அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் நஸ்ரியா காதலில் விழுந்ததை அடுத்து, அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது. இதனால், நஸ்ரியாவின் அஜீத்துடன் நடிக்கும் கனவு, நனவாகவில்லை. ஆனாலும், அஜீத்தை, ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என, ஆசைப்படுகிறார், நஸ்ரியா. இதனை விருது விழா மேடையிலும் தெரிவித்துள்ளார் நஸ்ரியா. ஒரு ரசிகையாக, அஜீத்துடன் மனம் விட்டு பேசும் நேரத்துக்காக காத்திருக்கிறார். இந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜீத்.

This posting includes an audio/video/photo media file: Download Now

300 ஏக்கர் ரோஜாத் தோட்டத்தில் விக்ரம் டூயட்!

Posted: 12 Jul 2014 01:06 AM PDT

Ai-movie

Ai-movieஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் பற்றி நாளுக்கு ஒரு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. படம் ரிலீஸ் ஆக தயாராக உள்ள நிலையில் ஐ படத்தினைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியள்ளன. ஐ படத்தில் குத்துச்சண்டை வீரராக விக்ரம் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ஐ ஒரு விளையாட்டை பற்றிய படம் அல்ல. சாதாரண மனுஷன் அமானுஷ்ய சக்தி பெற்றவனாக மாறி என்ன செய்கிறான் என்கிற கதை. அது மாய மந்திரமோ, தெய்வ சக்தியோ அல்ல, விஞ்ஞான ரீதியாக கிடைக்கும் அமானுஷ்ய சக்தி என்ற தகவல்கள் கசிந்துள்ளன. விக்ரம் 50 கிலோ கொண்ட ஒல்லி பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், அந்நியன் ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர நான்கு கெட்அப்கள் இருக்கிறது. விக்ரமிற்கு நியூசிலாந்தை சேர்ந்த வேட்டா நிறுவனம் மேக்-அப் போட்டிருக்கிறது. விக்ரம் மேக்அப் போட்டுக் கொண்டால் அது கலையாமல் இருக்க மைனஸ் டிகிரி குளிர் வேண்டுமாம். இதற்கென்றே ஒரு ஆள் மட்டும் அமர்ந்து கொள்கிற தனி பிரிசரை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மேக்அப் செலவு மட்டும் 5 கோடி. விக்ரமிற்கு நியூசிலாந்தை சேர்ந்த வேட்டா நிறுவனம் மேக்-அப் போட்டிருக்கிறது. விக்ரம் மேக்அப் போட்டுக் கொண்டால் அது கலையாமல் இருக்க மைனஸ் டிகிரி குளிர் வேண்டுமாம். இதற்கென்றே ஒரு ஆள் மட்டும் அமர்ந்து கொள்கிற தனி பிரிசரை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மேக்அப் செலவு மட்டும் 5 கோடி. கொடைக்கானலில் 300 ஏக்கரில் விதவிதமான ரோஜாக்களை பயிரிட்டு வளர்த்து வெவ்வேறு காலகட்டங்களில் படப்பிடிப்பு நடத்தி ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்களாம். ஒரு பாடலில் மிருகங்களைப் போல கெட் அப்பிலும் வருகிறாராம் விக்ரம். மொத்தம் 5 பாடல்கள், அதில் "என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்..." என்கிற பாடலை ஏ.ஆர்.ரகுமானும், இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை பாடல் ஒன்றை அனிருத்தும் பாடி உள்ளனர். இரண்டு வருடங்கள், நான்கு மாதங்கள் ஆகியிருக்கிறது படத்தை உருவாக்க. சீனாவில் 2 மாதங்கள் தங்கியிருந்து 40 சதவிகித படத்தை எடுத்திருக்கிறார்கள். சீனா சண்டைக் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அந்தரத்தில் நடக்கும் சைக்கிள் சண்டையும், ஒரிசாவில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படத்தின் ஹைலெட்டாக இருக்கும். சீன சண்டைக்கு ஒரு மாதமும், ஒரிஸா சண்டைக்கு 25 நாளும் ஆகியிருக்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி. இந்திய மொழிகள் 6, உலக மொழிகள் 14 என 20 மொழிகளில் ரிலீசாகிறது ஐ என்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கதையை சொந்தக் காசில் படமெடுக்கும் சிம்பு

Posted: 12 Jul 2014 12:25 AM PDT

-idhu-namma-aalu

-idhu-namma-aaluசிம்பு சொந்தமாக தயாரிக்கும் இது நம்ம ஆளு படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய முன்னாள் காதலி நயன்தாரா உடன் ஜோடி சேர்ந்துள்ளது அனைவரும் அறிந்த விசயம்தான். ஆனால் இந்தப் படத்தில் நயன்தாராவின் காதல் கதையும் இணைந்துள்ளது என்பதுதான் புதிய செய்தி. தன்னுடைய சொந்தக் கதையையே இப்போது இது நம்ம ஆளு படத்தில் திணித்து படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு நயன்தாரா இடையே ஏற்பட்ட காதல் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலித்தது குறுகிய காலம்தான் என்றாலும், அப்போது அவர்கள் லிப்லாக் செய்த போட்டோக்கள் இன்றைக்கும் இணையதளங்களில் சூடாக பரப்பப்பட்டு வருகின்றன. இந்த போட்டோக்கள்தான் சிம்பு - நயன்தாரா இடையேயான காதல் முறிவுக்கு காரணமாக இருந்தது. நயன்தாராவுடனான காதல் பிரிவுக்குப் பின்னர் சில ஆண்டுகளில் ஹன்சிகாவை பிக்கப் செய்தார் சிம்பு. ஹன்சிகா உடனான காதல், சந்திப்பு, போட்டோக்களையும் அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு மேலும் இணையதளங்களுக்கு தீனி போட்டார் சிம்பு. இதற்கிடையே பிரபுதேவா உடன் திருமணம் வரை போன நயன்தாராவின் காதல் முறிந்த உடன் ஆறுதல் தரும் வகையில் இது நம்ம ஆளு படம் மூலம் ஜோடி சேர்ந்தார் சிம்பு. அது ஹன்சிகா உடனான காதல் முறிவுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. திடீரென்று சிம்பு உடன் காதல் எதுவும் இல்லை என்று அறிவித்தார் ஹன்சிகா. இதையடுத்து தன்னுடைய முதல் காதலியான நயன்தாராவுடன் மீண்டும் காதல் வளர்த்துக்கொண்டிருக்கிறார் சிம்பு. அதற்காகவே தனது சொந்த காசில் இது நம்ம ஆளு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு-நயன்தாராவின் காதலை பேஸ் பண்ணியே கதை நகர்த்தப்பட்டுள்ளதாம். அதோடு, இடையினில் புகுந்த ஹன்சிகாவின் காதலையும் சொல்லியிருக்கிறார்களாம். அதனால்தான், அப்படத்தின் டீசரில் உங்களுக்கு யாரை பிடிக்கும்? என்று நயன்தாரா, சிம்புவைப்பார்த்து கேட்க, உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று அவர் சொல்வார். அதற்கு இதே பதிலை எத்தனை பேர்கிட்டதான்டா சொல்லுவே என்று சூரி ரிப்பீட்டு அடிப்பார்.அடுத்து, நயன்தாரா, அந்த பொண்ணுக்கும் உங்களுக்கிடையே எதற்காக லவ் பிரேக்அப் ஆனது? என்று கேட்பார். இதற்கு சிம்பு பதில் சொல்ல முடியாமல் தவிக்க, மாட்னான்டா சிலம்பரசன் என்று சூரி கமெண்ட் கொடுப்பார்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

கௌபாய் ரஜினி: சோனாக்ஷியுடன் டூயட்!

Posted: 12 Jul 2014 12:20 AM PDT

sonakshi-sinha-confirms-working-with-rajinikanth

sonakshi-sinha-confirms-working-with-rajinikanthலிங்கா படத்தில் ரஜினிகாந்த் கௌபாய் கெட் அப்பில் சோனாக்ஷி சின்கா உடன் டூயட் நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரட்டை வேடத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா , அனுஷ்கா ஜோடி சேர்ந்துள்ளனர். லிங்கா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எப்போதும் ரஜினி படம் என்றால் மற்ற படங்களை விட விரைவில் பாடல்களைக் கொடுத்து விடும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு மட்டும் சற்று நேரம் அதிகம் எடுத்துக் கொண்டு பாடல்களைக் கொடுத்துள்ளார். படத்தின் அனைத்து காட்சிகளும் ஓரளவு முடிந்த வேளையில் தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப் பட உள்ளன. 'லிங்கா' படத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் யூத்தாகவே தோன்றுகிறாராம் ரஜினி. எனவே சோனாக்ஷி மற்றும் அனுஷ்காவுடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்குமாம். படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமும், நிகழ்காலமும் வருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம் சம்பந்தமான காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்தனர். கடந்த 8ஆ‌ம் தேதியோடு ஹைதராபாத் ஷெட்யூல் நிறைவு பெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இந்த ஷெட்யூ‌லில் டாக்கி போர்ஷனுடன் பாடல் காட்சி ஒன்றையும் எடுக்கின்றனர். ரவிக்குமார் எதிர்பார்த்ததைவிட அற்புதமான பாடல் டியூனை தந்துள்ளாராம் ரஹ்மான். அந்த உற்சாகத்தில் சென்னை ஷெட்யூல்‌லில் பாடல் காட்சியை படமாக்குவது என்று முடிவு செய்துள்ளனர். இந்தப் பாடலில் நான்கு கெட்டப்களில் தோன்றும் ரஜினி ஒரு கெட்டப்பாக கௌபாய் வேடத்தில் சோனாக்ஷி சின்ஹாவுடன் டூயட் ஆடுகிறாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படியொரு சூழ்நிலையில் உங்களது Reaction என்னவாக இருக்கும்?

Posted: 12 Jul 2014 12:00 AM PDT

Dropping-The-Wallet-in-Public-Social-Experiment

Dropping-The-Wallet-in-Public-Social-Experiment

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™