Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜேர்மனி vs ஆர்ஜெண்டீனா அணிகளின் வெற்றிவிகிதம் : ஓர் அலசல் பார்வை

Posted:

தென் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற எந்தவொரு உலக கோப்பை காற்பந்து தொடரிலும் ஒரு ஐரோப்பிய அணி சாம்பியன் ஆனதில்லை எனும் வரலாற்றை இன்று மாற்றி எழுதுமா ஜேர்மனி?


Read more ...

ஒரு தயாரிப்பாளர், ரெண்டு நடிகைகள்

Posted:

இனிஷியலை பெயருக்கு முன்னால் கொண்ட அந்த பிரபல வெற்றிப்பட தயாரிப்பாளர் தனது கஸ்டடியில் இருந்த இரண்டு நடிகைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டாராம்.


Read more ...

நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஆஸி வெளிப்படுத்த வேண்டும்; கோரிக்கை முன்வைப்பு!

Posted:

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடக் கோரிக்கைகளை முன்வைத்துச் செல்லும் இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றமை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள திருகோணமலை தமிழ் சிவில் சமூக அமைப்பு, அவ்வாறு திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை அவுஸ்திரேலியா வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளது. 


Read more ...

தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விரும்பவில்லை: மங்கள சமரவீர

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் இராணுவ அதிகாரியான ஜீ.ஏ.சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் நியமித்துள்ளதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜேர்மனி, ஆர்ஜன்டினா மோதல்: வெற்றிக் கனவின் இறுதித் தருணம்!

Posted:


கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. ஜேர்மனி என்கிற இராணுவ கூட்டிணைப்புள்ள அணிக்கு எதிராக என்னுடைய இரண்டாவது விருப்ப அணியான ஆர்ஜன்டினா இன்று இறுதிப் போட்டியில் ஆடுகிறது. முதல் விருப்ப அணியான பிரேசில் பெரும் சோகத்தை மட்டுமே பரிசளித்துவிட்டு விடைபெற்றுவிட்டது. ஆக, இப்போதைக்கு ஆர்ஜன்டினாவின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்க்கும் காற்பந்தாட்ட ரசிகனால் இது எழுதப்படுகிறது. அதற்காக மெஸ்ஸி புகழ் பாடுவது மட்டுமே நோக்கம் கிடையாது. அதைத் தாண்டியும் பேசலாம்.


Read more ...

தென்னாபிரிக்க முயற்சிகள் வெற்றிபெறுமா?! (நிலாந்தன்)

Posted:

தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதியும், விசேட தூதுவருமாகிய சிறில் ரமபோசா இலங்கை வந்து போயிருக்கிறார். ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழு அதன் செயற்பாட்டை தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் அவருடைய விஜயம் நிகழ்ந்திருக்கிறது. மற்றொரு தென்னாபிரிக்கரான நவிப்பிள்ளையின் வருகையை எரிச்சலோடு எதிர் கொண்ட அரசாங்கம், ரமபோசாவை அமைதியாக வரவேற்றிருக்கிறது. 


Read more ...

பிரேசிலுக்கு மீண்டும் மோசமான தோல்வி; 3வது இடமும் இல்லை!

Posted:

உலகக் கோப்பைக் காற்பந்தாட்டப் போட்டிகளில் 3வது இடத்துக்காக பிரேசிலுக்கும், நெதர்லாந்துக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

உடல் ஆரோக்கியத்திற்கு பயன் தரும் அரியவகை மூலிகைகள்

Posted:

மனிதர்கள் அன்றைய காலங்களில் இயற்கையான மூலிகை வகைகளையே நோயை குணப்படுத்தும் மருந்துகளாக உபயோகித்து வந்தது நாம் அறிந்ததே.


Read more ...

புதிய வேலை வாய்ப்புக்களை அடையாளம் காண புதிய இணைய தள வசதி:மத்திய அரசு

Posted:

திறமையுள்ளவர்களுக்கு உதவும் வகையில் புதிய வேலைவாய்ப்புக்களை அடையாளம் கண்டு, விண்ணபிக்க ஏதுவாக, மத்திய அரசு புதிய இணையத் தளத்தை தொடங்கியுள்ளது.


Read more ...

சென்னை பாரிமுனையில் உள்ள வங்கிக் கட்டிடத்தில் தீ விபத்து!

Posted:

சென்னை பாரிமுனையில் உள்ள வங்கிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


Read more ...

சிரியாவுக்கான ஐ.நா இன் புதிய விசேட தூதர் தேர்வை வரவேற்கும் அமெரிக்கா!

Posted:

சிரியாவுக்கான ஐ.நா இன் புதிய விசேட தூதுவராக மூத்த இராஜ தந்திரியான ஸ்டஃப்ஃபான் டே மிஸ்டுரா என்பவரை நியமித்தததை அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி வரவேற்றுள்ளார்.


Read more ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர்!

Posted:

பிரிக்ஸ் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இன்று பிரேசில் புறப்படுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

கறுப்புப் பண மீட்புக்குழு நடவடிக்கைகளுக்கு 6.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!:அருண்ஜெட்லி

Posted:

கறுப்புப் பண மீட்புக்குழு நடவடிக்கைகளுக்கு 6.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் ராக்கெட் தாக்குதலில் 19 இராணுவத்தினர் பலி

Posted:

வெள்ளி சூரிய உதயத்துக்கு முன்பு கிழக்கு உக்ரைனில் உள்ள இராணுவப் பாசறை மீது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ராக்கெட்டு தாக்குதலில் குறைந்தது 19 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலியாகியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் யூரிய் ஸ்டெட்ஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜூன் 9 முதல் இதுவரை 255 சுன்னி முஸ்லிம் கைதிகளைக் கொலை செய்துள்ளது ஈராக் இராணுவம்

Posted:

ஈராக்கின் பாதுகாப்புப் படையும் ஷைட்டி முஸ்லிம்களின் போராளிக் குழுக்களும் இணைந்து கடந்த மாதம் ஜூன் 9 தொடக்கம் இதுவரை 255 சுன்னி முஸ்லிம் கைதிகளுக்கு சட்டத்துக்கு விரோதமான முறையில் மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


Read more ...

உலகின் மிக ஆக்கப்பூர்வமான சிலைகள் மற்றும் சிற்பங்கள் : புகைப்படங்கள்

Posted:

உலகின் ஒவ்வொரு நகரங்களிலும் கம்பீரமான நினைவுச்சின்னங்கள், அதிசயமான சிற்பங்கள் மற்றும் கலைச் சிலைகள், என பல உள்ளன. ஒவ்வொன்றும் ஓர் கதை சொல்லனவாகவும் உள்ளன.


Read more ...

ஜப்பானின் ஃபுக்குஷிமாவுக்கு அண்மையில் 6.8 ரிக்டர் வலிமையான நிலநடுக்கம்!:சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு ...

Posted:

சனிக்கிழமை காலை வடக்கு ஜப்பானின் ஹொன்சு தீவு பகுதியில் 11 Km ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. விசாரணை; இந்தியா ஆதரிக்காது: இந்திய வெளியுறவுத்துறை!

Posted:

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் இறக்கும் அதிர்ச்சி சம்பவம்!

Posted:

மேற்குவங்கத்தில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அடுத்தடுத்து பச்சிளம் குழந்தைகள் இறக்கும் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று வருகிறது.


Read more ...

மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானாவில் முழு அடைப்பு!

Posted:

மத்திய அரசின் போலாவரம் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தெலுங்கானாவில் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.


Read more ...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் எண்ணமில்லை!:ரவிசங்கர் பிரசாத்

Posted:

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் எண்ணமில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


Read more ...

நிர்பயா அமைப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்!: மேனகா காந்தி

Posted:

மாநிலங்கள் தோறும் அமைக்கப்படும் நிர்பயா அமைப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.


Read more ...

காரைக்காலில் மாங்கனித் திருவிழா!:மாங்கனி இறைத்து பக்தர்கள் வழிபாடு!

Posted:

காரைக்காலில் வருடம் தோறும் ஆணி மாதத்தில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நேற்று இந்த மாங்கனித் திருவிழா தொடங்கியது.


Read more ...

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாஜகவைப் பலப்படுத்துவதே முதற்பணி!:அமித் ஷா

Posted:

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாஜகவைப் பலப்படுத்துவதே தமது முதற்பணி என்று, குஜராத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் அமித் ஷா.


Read more ...

தமிழகத்தில் மண்ணெணெய் பற்றாக்குறை 55 சதவிகிதமாக உள்ளது:மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!

Posted:

தமிழகத்திற்கு தற்போது மண்ணெணெய் பற்றாக்குறை 55 சதவிகிதமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

"வாங்க மக்கா வாங்க" : பிரபலமாகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் காவியத் தலைவன் திரைப் பாடல்

Posted:

வசந்தபாலனின் காவியத்தலைவன் திரைப்படத்திற்கான 'வாங்க மக்கா வாங்க' பாடலின் முழு நீள ஆடியோவை வெளியிட்டுள்ளார்  ஏ.ஆர்.ரஹ்மான்.  நேற்று முன் தினம் யூடியூப்பில் வெளியிடப்பட்ட இந்த ஆடியோ பாடலை இதுவரை 80,179 பேர் கேட்டுள்ளார்கள்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™