Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சட்டமன்றத்திற்கு தாமதமாக வரும் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.500 அபராதம்: வசுந்தரா அதிரடி உத்தரவு

Posted: 12 Jul 2014 11:06 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறும் போது அவைக்கு தாமதமாக வரும் பா.ஜ.க.எம்.எல்.ஏ.க்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அம்மாநில முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் அம்மாநிலத்தில் சட்டமன்ற

அதிமுக.வுக்கு துணை சபாநாயகர் பதவி: சுமித்ரா மகாஜன் ஆலோசனை

Posted: 12 Jul 2014 10:54 PM PDT

மத்தியில் பாரதீய ஜனதா 283 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன்ஆட்சி அமைத்து உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்தது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற வேண்டுமானால் மொத்த இடங்களில்

திருப்பதியில் அலைமோதிய கூட்டம்: ஒரே நாளில் 44 ஆயிரம் பக்தர்கள் வருகை

Posted: 12 Jul 2014 10:41 PM PDT

திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் கட்டுங்கடங்காமல் இருந்தது. அதிகாலை முதல் மாலை 6 மணி வரை 57,340 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

போராட்டத்தில் பலியான 25 அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: சந்திரபாபு நாயுடு

Posted: 12 Jul 2014 10:36 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு வடக்கு விஜயவாடாவில் ஆந்திர பிரதேச அரசு ஊழியர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் அவருக்கு பல்வேறு பழங்கள் அடங்கிய மாலையை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அணிவித்தனர். நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஆந்திர பிரதேசத்தை இன்னும் 10 ஆண்டுகளில் சிறந்த மாநிலமாக

கவுன்சிலர் கடத்தி சிறைவைப்பா?: ஜெகன்மோகன் ரெட்டி பங்களாவில் சோதனை

Posted: 12 Jul 2014 10:29 PM PDT

ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்பான ஜில்லா பிரிஷ்த், மண்டல பிரிவுத் தலைவர் தேர்தல் நடந்தது. நெல்லூர், பிரகாசம் மாவட்டத்தில் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியினர், அதிகாரிகள் மற்றும் போலீசார் துணையுடன் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வன்முறை குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு பல்வேறு விதிமுறைகளை விதித்து இன்று தேர்தல்

72 வயது மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த முதியவர்

Posted: 12 Jul 2014 10:15 PM PDT

கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள காஞ்சாங்கோடு பள்ளிகரை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 80). இவரது மனைவி சந்திராவதி (72). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திராவதி வயதான காலத்தில் தனியாக வெளியே சென்ற தனது கணவர் எங்காவது விழுந்து விட்டாரோ என்று பதறிபோய் அவரை பல இடங்களிலும் தேடினார்.

பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டார்

Posted: 12 Jul 2014 09:43 PM PDT

பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு பிரேசில் நாட்டின் வட கிழக்கு கடற்கரை நகரமான போர்டாலிசாவில் நாளையும், நாளை மறுநாளும் (14, 15–ந்தேதி) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். அவருடன் மத்திய வர்த்தகத்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன், தேசிய பாது காப்பு ஆலோசகர், ஏ.கே. தோவால், வெளியுறவுச் செயலாளர் சுஜாதாசிங், நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக்குழுவும் செல்கிறது. டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடியின் விமானம் இன்று இரவு ஜெர்மனியின் பெர்லின் நகரம் சென்றடைகிறது. அங்கு இன்று இரவு தங்கிவிட்டு நாளை காலை அங்கிருந்து பிரேசிலின் போர்டாலிசா புறப்படுகிறார். முன்னதாக பெர்லினில் தங்கி இருக்கும் போது அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்திக்க மோடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் கால் பந்து இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி மோதுவதை நேரில் பார்க்க ஏஞ்சலா மெர்கெல் பிரேசில் சென்று தங்கி உள்ளார்

நிதி நிலைமை மேம்படும்போது மேலும் வரிச்சலுகைகள்: அருண் ஜெட்லி

Posted: 12 Jul 2014 08:02 PM PDT

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, 2014-15 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் கடந்த 10-ந் தேதி தாக்கல் செய்தார். அப்போது அவர் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். அவர், சேமிப்புகளுக்கான 80-சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தி அறிவித்தார். வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு ரூ.1½ லட்சம் வரை வரிச்சலுகை

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத வயது சலுகை கோரி ராஜ்நாத்சிங் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jul 2014 02:55 PM PDT

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள், வயது சலுகை கோரி, ராஜ்நாத்சிங் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு, அடுத்த மாதம் 24-ந் தேதி நடக்கிறது. முன்பு, இத்தேர்வை ஒரு விண்ணப்பதாரர் 4 தடவை மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்தது.

காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்

Posted: 12 Jul 2014 08:52 AM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண்ணை அவளது காதலனும் அவன் சகோதரியும் சேர்ந்து உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிராரி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், அதே கிராமத்தில் வசிக்கும் மனோஜ் குமார் (24) என்ற வாலிபரை காதலித்துள்ளார். கடந்த சில

உண்ணாவிரத போராட்டம் எனக்கு உதவவில்லை: கெஜ்ரிவால்

Posted: 12 Jul 2014 08:28 AM PDT

உண்ணாவிரத போராட்டம் தனக்கு உதவி செய்யவில்லை என்றும், அதனால் கடைசியாக அரசியலுக்கு வந்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் தினக்கூலி அடிப்படையில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் கவுரவ ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கை ஏற்கப்படாததால் கவுரவ

ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் மொழி பேசும் பா.ஜனதா: சுக்லா கடும் தாக்கு

Posted: 12 Jul 2014 07:38 AM PDT

பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் மொழியை பேசுவதாக முன்னாள் மந்திரி ராஜீவ் சுக்லா கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பா.ஜனதா தலைவர்கள், குறிப்பாக யஷ்வந்த் சின்கா எதிர்ப்பு தெரிவித்தார். இப்போது

கோவா மாநில ஆளுநர் பொறுப்பை ஏற்றார் மார்கரெட் ஆல்வா

Posted: 12 Jul 2014 07:14 AM PDT

ராஜஸ்தான் கவர்னரான மார்கரெட் ஆல்வா இன்று கோபா மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித் ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். கோவா மாநில காங்கிரஸ் தலைவர் ஜான் பெர்னாண்டசும் பங்கேற்றார்.

இயற்கை உணவு உற்பத்தியில் வடகிழக்கு மாநிலங்கள் முதலிடம்- வி.கே.சிங்

Posted: 12 Jul 2014 06:35 AM PDT

வடகிழக்கு மாநிலங்கள் இயற்கை உணவுகளை தயாரிப்பதில் உலகளவில் முதல் இடத்தை பெறும் என்று வடகிழக்கு மாநில மேம்பாட்டுத்துறை மந்திரி வி.கே. சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஏற்கனவே இயற்கை உணவுகளை அதிக அளவில் தயாரிக்கும் திறன் வடகிழக்கு மாநிலங்களுக்கு உள்ளது. எனினும், இயற்கை உணவு என்ன என்பது விவசாயிகளுக்கு

கற்பழிப்பை தடுக்க பள்ளி-கல்லூரிகளில் செல்போனுக்கு தடை: கர்நாடக எம்.எல்.ஏக்கள் குழு

Posted: 12 Jul 2014 06:20 AM PDT

பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு மற்றும் இதர குற்றங்களை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக எம்.எல்.ஏக்கள் குழு அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் இந்த பரிந்துரைக்கு மாநில பெண்கள் அமைப்பும், குழந்தைகள் நல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. செல்போன்களை தடை செய்வதன் மூலம் ஸ்மார்ட் போன் மூலமாக சமூக

இமயமலையில் உலகின் உயரமான ரெயில்வே மேம்பாலம் கட்டும் இந்தியா

Posted: 12 Jul 2014 05:38 AM PDT

இமயமலையில் ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமுள்ள உலகின் உயரமான ரெயில்வே மேம்பாலத்தை இந்தியா கட்டுகிறது. இதன் கட்டுமான பணி 2016ல் நிறைவடையும் என்று தெரிகிறது. வில்வளைவாக கட்டப்படும் இந்த மேம்பாலம் கட்டிமுடிக்கப்படும் போது 359 மீட்டர் உயரத்தை எட்டிவிடும். தற்போது சீனாவில் உள்ள பைபெஞ்சியாங் ஆற்றில் உள்ள ரெயில்வே மேம்பாலம் 275 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் போது சீனா

பா.ஜனதா பாராளுமன்ற குழு மாற்றியமைப்பு: இரு அவைகளுக்கும் மோடியே தலைவர்

Posted: 12 Jul 2014 04:41 AM PDT

பா.ஜனதா பாராளுமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜனதா பாராளுமன்றக் குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மக்களவை பா.ஜனதா

ஈராக்கில் இருந்து மேலும் 29 கேரள நர்சுகள் நாடு திரும்பினர்

Posted: 12 Jul 2014 04:38 AM PDT

உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள ஈராக்கில் இருந்து 29 கேரள நர்சுகள் இன்று நாடு திரும்பினர். தியாலாவில் உள்ள பகுபா அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றிய இந்த நர்சுகள் அனைவரும் சார்ஜா வந்து, அங்கிருந்து இன்று காலை கொச்சிக்கு வந்து சேர்ந்தனர்.

கந்து வட்டி கொடுமையால் தற்கொலை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 12 Jul 2014 04:34 AM PDT

கேரளாவில் அதிக வட்டி கேட்டு மிரட்டும் கந்து வட்டி வியாபாரிகளை ஆப்ரேஷன் குபேரன் என்ற பெயரில் கேரள காவல் துறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இப்படி கைது செய்யப்பட்டவர்களில்

செவ்வாய் கிரக ஆராய்ச்சி: மங்கள்யான் இலக்கை எட்ட இன்னும் 75 நாள்

Posted: 12 Jul 2014 04:06 AM PDT

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் விண்கலத்தை ஏவியது. கடந்த 8 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் இன்னும் 75 நாட்கள் மட்டும் தான் பூர்த்தி செய்யவேண்டும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™